Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 3 June 2014

குலம், கோத்திரம் – சில அடிப்படை விஷயங்கள்

நாம இன்னைக்கு வரலாற்று புஸ்தகத்துல படிக்கும் இந்தியா என்பது ஐரோபியர்கள் நமக்கு வைத்த பேர். நம்ம பழமையான பெயர் பாரதம். கொங்க வெள்ளாளர்களின் கல்யாணங்களில் பாடப்படும் கம்பர் எழுதிய மங்கல வாழ்த்தில் நாவிதர் “பாரத தேசம் பண்புடன் வாழி” என்று வாழ்த்துவர்.
இப்படி பாரத வர்ஷத்தை ஆட்சி செய்த சத்திரியர்கள் அனைவரும்,
சூரிய வம்சம், சந்திர வம்சம், அக்னி வம்சம் ஆகிய மூன்று வம்சத்தை சேர்ந்தவர்களே.
பண்டைய கால தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சேரர்கள் அக்னி வம்சத்தையும், சோழர்கள் சூரிய வம்சத்தையும், பாண்டியர்கள் சந்திர வம்சத்தையும், சேர்ந்வர்கள்.
கொங்கதேசம் இயற்கையும் அதிலிருந்து உருவான நாகரீகத்தையும் அடிப்படையாக கொண்டு உருவானவை. இப்படி ராஜ்ஜியம் உருவாக்கி நாகரீக வாழ்க்கை தொடங்கிய பொழுது, பெரும் பஞ்சம் ஏற்படவே மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதற்காக கங்கைகரையில் மாயவரால் தோற்றுவிக்கபட்டவர்களே கங்கா குல வெள்ளாளர்கள் என்று
“மரபாள சூளாமணி” நூல் கூறுகிறது. போதாயனர் என்னும் மகரிஷியால் வெள்ளாமை பயிற்றுவிக்கப்பட்டு, வழி வழியாக குலதொழிலாக செய்து வருகின்றனர்.
ஆதியில், கோசல தேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரிய வம்சத்து அரசி கங்கையில் நீராடுகையில் குழந்தை பிறந்தது. கங்கை அளித்த மகன் என்பதால் அவனை கங்கத்தான் என்று அழைத்தனர். இவனுக்கு மரபாளன் என்று பெயரும் சூட்டி போதாயனர் மகரிஷி சகல விஷயங்களையும் பயிற்றுவித்தார். இம்மரபாளன் வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கபடுகின்றனர். இவர்களை அவந்தி தேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால், தெற்கே காஞ்சி நகரையும், அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாக்கி சோழதேசத்தின் வடபகுதியான தென்பெண்ணை ஆற்றின் வட பகுதியில் வாழ்ந்து வருகையில், கரிகால சோழனது இரண்டாவது மகனும், தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை பிரித்து தொண்டைநாடு என்று பெயர் சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறை தவறி பிறந்த அவன், கொங்கர் வீட்டில் பெண் கேட்க, அவனுக்கு பெண் கொடுக்க விருப்பமில்லாமல் கருநாயை கட்டி வைத்துவிட்டு, கொங்கர்கள் வடதிசை நோக்கி இடம் பெயர்ந்தனர். அப்பொழுது வெள்ளாளர்களின் அரசனான சேரமான் அவர்களை தடுத்து, வனப்பிரதேசமான தனது தேசத்திற்கு குடியேறுமாறு திரும்ப தென்திசைக்கே வரவழைத்து, கங்கை குலத்தவருக்கு நாடுகளையும், காணிகளையும் ஏற்படுத்தி, உரிமை கொடுத்து சாசனங்கள் எழுதி கொடுத்தார்.
கொங்கு காணி பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி 48,000 வெள்ளாளர்களும், பசுங்குடி 12,000 செட்டிமார்களும், காஞ்சிபுரத்திலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தை 24 நாடுகளாக அமைத்துக் கொண்டு, தம்முடைய குலகுருக்களோடு குடியேறினார்கள் என்கிறது மரபாள சூளாமணி.
கங்க வெள்ளாளர்கள் என்பது பின்னாளில் மருவி, கொங்க வெள்ளாளர் என்றானது.
இன்று,
மொடவாண்டி கவுண்டர், தொண்டு வெள்ளாளர், பால வெள்ளாளர், நரம்புகட்டி கவுண்டர், திருமுடி கவுண்டர், சங்கு வெள்ளாளர், பூசாரி கவுண்டர் பவளங்கட்டி வெள்ளாளர் ரத்தினகிரி கவுண்டர் போன்ற பிற சாதிகளை குழப்பி கொங்க வெள்ளாளராகிய நம்முடன் சேர்த்து கொங்கு வேளாளர் என்று சர்க்கார் பெயரிட்டுள்ளது. கொங்க மங்கல வாழ்த்தில்
“கங்கா குலம் விளங்க கம்பர் சொன்ன வாழ்த்துரையை” என்ற வரி மூலம் நாம் இதை புரிந்து கொள்ளலாம்.
கொங்கு என்ற சொல் 18 கொங்க குடிகள்(68 ஜாதிகள்) வாழும் பிரதேசத்தை குறிக்கும்.
குலங்கோதுதல் :
கொங்க வெள்ளாளர் கல்யாணங்களில் “குலங்கோதுதல்” என்னும் சீர்னு ஒண்ணு இருக்கும்.
குலம் + கோத்திரம் + ஓதல் = குலங்கோதுதல்
கல்யாணத்தின் போது மாப்பிளை, பெண்ணின் குலம் கோத்திரத்தை சொல்லுதல் என்று பொருள். இன்னைக்கு நம்மில் பலபேருக்கு குலம், கோத்திரம் என்பதற்கே விளக்கம் தெரிவதில்லை.
கோத்திரம் என்பதை தான் இயல் தமிழில் கூட்டம்னு சொல்லுவாங்க.
கோத்திரம் என்றால் ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வரும் ஆண்வழி வர்க்கம் (Paternal Lineage). ஆதலால் ஒரே கோத்திரத்தில் பிறப்பவர்கள் அண்ணன் தம்பி, அக்கா, தங்கச்சி முறையுள்ளவர்கள். அந்த காலத்தில் நாம் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்ததால், அந்த குடும்பம் விரிவடைந்த போது கோத்திரமாக மாறியது. நீண்ட கால பரம்பரையின் முதன்மையானவரின் பெயரே கூட்டம். உதாரணமாக ஓதாலன் என்பவரது மக்கள் ஒதால கோத்திரம்.
குலம் என்பது, ஒரு ஜாதிக்குள் இருக்கும் பல கோத்திரங்களை சேர்த்து மொத்தமாக சொல்வது. இந்த குலம், கோத்திரம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சில அடிப்படை கல்யாண விதியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஒரே கோத்திரதிற்குள் கல்யாணம் பண்ண கூடாது. ஒரே குலத்திற்குள் உள்ள மற்றொரு கோத்திரத்திற்குள் தான் கல்யாணம் பண்ணோணும்.
குலம் மாறி கல்யாணம் செய்ய கூடாது. ஒரே குலத்திற்குள்(கங்கா குலம்) தான் பண்ண வேண்டும். இது காலங்காலமாக நாடு முழுக்க இருக்கும் ஒரு வழிமுறை.
கோயிலில் அர்ச்சனை செய்யும் போது ஐயர் என்ன குலம்னு கேட்டா கங்கா குலம் என்றும், என்ன கோத்திரம்னு கேட்டால் தங்களது கூட்ட பெயரான ஒதாலன் என்று சொல்வதுதான் முறை.