Tamil News | Pudhiyaboomi News

Wednesday 23 May 2012

சடையப்ப வள்ளல்

சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். சடையப்ப வள்ளல் 12ஆம் நூற்றாண்டில் கொங்கு வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பண்ணை குல வேளாளர் இவரின் சமாதி இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு கதிராமங்கலம் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.

வள்ளல் சடையப்பக் கவுண்டர் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்று கம்பர் கூறுவார். கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.


கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. 

சடையப்ப வள்ளலை யார் நாடி வந்தாலும் இல்லையென்று சொன்னது கிடையாது, கேட்பர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் குணம் அவரிடம் இருந்தது. அவர் வீட்டு அருகில் ஒரு பாம்புப் புற்று இருந்தது அந்தப் புற்றுக்கும் தவறாமல் இவர் பால் வார்த்து வந்தார். இது போல் தனக்குமில்லாமல் எல்லாவற்றையும் தானம் செய்தபின் ஒரு நாள் அவரிடம் வழங்க ஒன்றுமே இல்லாத நிலையும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் நம் இறைவன் அவரைச்சோதிக்க விரும்பினார்.

சோதிக்கும் நேரமும் வந்தது. அவர் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. மிகவும் ஆவலுடன் சடையப்ப வள்ளல் ஓடிப்போய்ப் பார்க்க, இரண்டு புலவர்கள் தங்கள் புலமையைக் காட்டியபடி சடையப்ப வள்ளர் மேல் மிக அழகாகப் பல பாடல்களைப் புனைந்தனர். 'அவர்களுக்குப் பரிசாக எதாவது தர வேண்டுமே, என்னிடம் தான் ஒன்றுமில்லையே' என்று ஏங்கி அவர்களை அமர வைத்து வீட்டின் பின் புறமிருந்த பாம்புப்புற்றின் அருகே சென்றார். தன் கையை அந்தப் புற்றுக்குள் விட்டார். உள்ளே இருந்தது ஒரு நாகம். அந்த நாகம் சடைய்யப்பரின் கையில் ஒரு மாணிக்கத்தைக் கக்கியது. மனமகிழ்ந்து ஓடிப்போய் ஒரு புலவருக்குப் பரிசாக அதை அளித்தார். ஆனால் மறு புலவருக்கு என்ன செய்வது? எதைப் பரிசாகக் கொடுப்பது? மனம் வெதும்பிப்போனார். செய்வதறியாது திகைத்தார். நேராக அந்தப் புற்றுக்குள் கையைவிட்டு பாம்புக்கடிப்பட்டு இறந்து போகலாம் என்று எண்ணித் திரும்பவும் புற்றின் பக்கம் ஓடி அதற்குள் கையை விட்டார்.

உள்ளே இருந்த நாகம் பார்த்தது. இத்தனை நாள் விடாமல் நம்க்குப்பால் ஊற்றி வருகிறான் இவன். இவனைக் கடிப்பதா?" என்றெண்ணித் தன்னிடமிருந்த மாணிக்கக்கல்லை அவரது கையில் கக்கிவிட்டு இறந்து போனது. தனக்குப்பால் ஊற்றிய புண்ணியவானுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தது. அப்படியே அசந்துபோய் நின்றார் சடையப்பவள்ளல். புலவர்கள் மறைந்து போக இறைவன் காட்சி கொடுத்தார். 


"உன்னைச் சோதிக்கவே நான் வந்தேன், இழந்த செல்வம் உனக்குத் திரும்பிக் கிடைகட்டும். அமோகமாக வாழ்வாயாக" என்று ஆசிகள் வழங்கினார். பாம்புக்கும் மோக்ஷம் கிடைத்துவிட்டது.

கொங்கு நாடு வரலாறு


                     கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு .தேன் பூந்தாது , குரங்கு என்று பொருள் உண்டு. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மறுத்த நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். "குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்" என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள்.
                     "கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" (குறுந் 1 ) என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான் கூறியுள்ளது. இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும்,"கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்" (சிறுபா 184) எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு ௨.வே.ச. உரைகூறினார். "கொங்கு முதிர்நறு விழை" (குறிஞ் 83)  என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது. 

                                   சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்குநாடு என்றே நாடுகள் தமிழகத்தில் இருந்தன. பின் தொண்டைநாடு சேர்ந்தது. கொங்கு நாட்டைக் காடு கொடுத்தது நாடு ஆக்கியவன் கரிகாலன். கொங்கு நாட்டு மக்களை வைத்தே காவிரிக்குக் கரை கட்டினான், கல்லணை கட்டினான்.

                                      உலகில் மக்கள் தோன்றிய இடம் இலமோரியாக் கண்டம் என்றனர். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியினர் தமிழர்கள்.உலகில் பாரத நாடு புண்ணிய பூமி. பாரத நாடு பழம் பெரும் பூமி என்றார் பாரதி. கடலை ஆடையாக உடுத்திய பெண்ணிற்கு இந்திய முகம். முகத்தில் தமிழகம் நெற்றிப் பொட்டுத் தமிழகம் என்றார் சுந்தரம் பிள்ளை .
                                         வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்றனர். சங்க காலத்தி நாடு என்றே இருந்தன. சோழர் காலத்தில் மண்டலங்கள் ஆயின. கொங்கு மண்டலம் எனப்பட்டது. சோழ மண்டலம், சேர மண்டலம், பாண்டிய மண்டலம் என இருந்தன. சங்க காலத்திலேயே கொங்கு நாடு என்று இது வழங்கப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கொங்கர் எனப்பட்டனர். கிள்ளி வளவனை கோவூர் கிழார் பாடிய புறம்-373 ஆம்பாட்டில்,
                                           "மைந்தராடிய மயங்கு பெருந்தானைக் 
                                             கொங்குபுரம் பெற்ற கொங்குவேந்தே " 
என்று பாடினார்.கொங்கு குறுநில மன்னன் ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அண்ணல் யானை எண்ணில் கொங்கர்.
                                          "குடகடல் ஓட்டிய ஞான்றை  " (புறம் -130) 
என்று பாடினார்.
                                          "பல்யானை செல்செழுகுட்டுவனை ", 

பாடலைக் கெளதமனார் 
                                          "ஆகெழு கொங்கர் நாடகப்படுத்த
வெல்கெழுதானை வேருவருதோன்றல் (பதிற் -28) 

என்று பாடினர். இதில் குறிப்பிட்ட கொங்கர் தான் கொங்கு வேளாளர்கள் .பெருஞ்சேரல் இரும் பொறையை அரிசில் கிழார் பாடினார். கொங்கர்கள் ஆற்றல் மிக்க படையினர் என்றார். 
                                           "சேண் பரல்முரம்பி ணீர்ம் படைக் கொங்கர் 
                                             ஆபரந்தன்ன செலவில்"

கொங்கு வேளாளர்களின் பசுகூட்டங்களைப் போலவே அவர்களின் படைகளும் பரந்திருந்தன என்றார். சங்க காலப் பெருமை பெற்ற கொங்கு நாட்டைப் பிற்காலத்துச் சுந்தரரும் "கொங்குகிற் குறும்பில் குரக்குதளியாய் " எண்டே பாடினார். இளங்கோவடிகளும் கண்ணகியை, கொங்கச் செல்வி குடமலையாட்டி என்று புகழ்ந்தார். கண்ணகி கொங்கு நாட்டின் செல்வியாக, கற்புத் தெய்வமாக உள்ளாள்.கொங்கு நாட்டு வெளிர் பெருமக்கள் வழிபடுவதால் கொங்கச் செல்வி என்றார். கண்ணகியை மாரியம்மனாக கொங்கு நாட்டில் வழிபடுகின்றனர். 

கொங்கு மண்டலம்:    
          கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது.  பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் ஆண்டான். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலம் என்பர். கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. தற்கால அமைப்புப்படி கோவை, சேலம், கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன. 

கொங்கு 24  நாடுகள்:

1.  பூந்துறை நாடு                            -  ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள் 
2. தென்கரை நாடு                           -   தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்
3 . காங்கேய நாடு                           -   தாராபுரம், காங்கேயம் பகுதிகள்
4 .  பொங்கலூர் நாடு                     -  பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்
5 .  ஆரை நாடு                                  -  கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்
6   வாரக்கா நாடு                             -  பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்
7 .  திருஆவின் நன்குடி நாடு     -  பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்
8.  மணநாடு                                      -  கரூர், வட்டம்  தெற்கு பகுதி
9.  தலையூர் நாடு                           -  கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.
10 .  தட்டயூர் நாடு                         -  குளித்தலை வட்டம் 
11 .  பூவாணிய நாடு                     -  ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்
12 .   அரைய நாடு                          -  ஈரோடு, நாமக்கல், பகுதிகள்.
13.  ஒடுவங்கநாடு                        -  கோபி வட்டம்
14 .  வடகரைநாடு                         -  பாவனி வட்டம்
15 .  கிழங்கு நாடு                           -  கரூர், குளித்தலை வட்டம் 
16 .  நல்லுருக்கா நாடு                -   உடுமலைப்பேட்டை 
17 .  வாழவந்தி நாடு                     -  நாமக்கல் வட பாகம் , கரூர்
18 .  அண்ட நாடு                            -  பழனி வட்டம் , தென்கீழ்ப்பகுதி
19 .  வெங்கால நாடு                    -  கரூர் வட்டம் , கிழக்குப்பகுதி
20 . காவழக்கால நாடு                 -  பொள்ளாச்சி வட்டம் 
21 .  ஆனைமலை நாடு               -  பொள்ளாச்சி தென்மேற்கு
22 .  இராசிபுர நாடு                        - சேலம், ராசிபுரம், கொல்லிமலை 
23 .  கஞ்சிக் கோயில் நாடு         -  கோபி, பவானிப் பகுதி
24 .  குறும்பு நாடு                            -   ஈரோடுப் பகுதி

மலைகளும் கோட்டைகளும் : 

1 .  அவிநாசி                                  -  ஒதியமலை, குருந்தமலை
2 .  கோவை                                  -  சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,
                                                               பாலமலை,  பெருமாள் மலை                                       3 .  பொள்ளாச்சி                         -  ஆனைமலை, பொன்மலை
4 .  உடுமலைப்பேட்டை       -  திருமூர்த்தி மலை 
5 .  பல்லடம்                                 -  தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை
6 .  தாராபுரம்                                -  ஊதியூர்மலை, சிவன் மலை
7 .  ஈரோடு                                     -  சென்னிமலை, பெருமாள் மலை
8 .  கோபி                                        -  தவளகிரி, குன்றத்தூர்
9 .  பவானி                                     -  பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை
10. கொள்ளேகால்                      -  மாதேசுவரன் மலை
11 . திருச்செங்கோடு                 - சங்ககிரி, மோரூர்  மலை, திருச்செங்கோடு
12 . இராசிபுரம் -                                கொங்கணமலை, கொல்லிமலை 
13 . சேலம் -                                   - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி 
14 . நாமக்கல் -                              - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை 
15 . கரூர் -                            - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை 
16 . பழனி -                                      - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.    
கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர், விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர்,   நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி, சங்ககிரி - 1500 அடி, சதுரகிரி - 3048 அடி, கனககிரி - 3423 அடி, மகாராசக்கடை - 3383  அடி, தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி. இரத்தினகிரி - 2800 அடி, சூலகிரி - 2981 அடி, ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம். 

14  ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம்  நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின. 

நதிகளும், தலங்களும்:
                                      கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து,சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது. சரவண பவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆனு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு. திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம். அவிநாசி,நாமக்கல், பவானி,வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வேஞ்மாக்கூடல்,திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். `கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்` என்பது பழமொழி. கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங்  கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும். 

கொங்கு நாட்டை ஆண்டவர்கள்:   
                                    கரிகால சோழன் காலம் கி.மு 60 - 10 ஆகும் என்பர். இவனைப் பாடியவர்கள் கிளாத்தலையார், பரணர், கபிலர் என்பவர்களாம். இவன் வெண்ணிப் போரில் சேரனையும், பாண்டிய மன்னனையும் கொங்கு நாட்டு 11 வேளிர்களையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். கொங்கு நாட்டை நாடாக்கியவன்  இவன். இளஞ்சேட் சென்னி  அழுந்தூர்  வெள் மகளை  மணந்தான். கரிகாலன்  பிறந்தான் . கரிகாலன்  தாய் கொங்கு வேளாளப் பெண். இருங்கோவேள் என்ற  கொங்கு நாட்டு வெளிர்  அரசனை  அடக்கி  வைத்தான்.  
                          
கொங்கு நாட்டைக் காடு கெடுத்து நாடக்கினான். கொங்கு வேளாளர்களைத் தொண்டை நாட்டு 24 கோட்டங்களில் குடியேற்றினான் . இவனால்  குடியேற்றப்பட்டவர்கள்  தான்  தஞ்சைக்குச்  சென்று  தாராபுரம் குடிபுகுந்தனர். 


சேரன் செங்குட்டுவன் கொங்கு நாட்டை ஆண்ட பேரரசன். இவனது ஆட்சிக்காலம் - கி.பி. 150 - 205 . இவனைச்சிலம்பில் இளங்கோவடிகள் கொல்லியாண்ட குடவர்கோ என்று கூறிக் காப்பியத்தை நிறைவு செய்கின்றார். கொல்லிமலை கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகும். சோழ நாட்டின் வடமேற்கு எல்லையாகும். இந்தக் காலத்தில் தான் வல்வில் ஓரி என்ற குறுநில மன்னன் கொல்லி மலையை மீட்டுத் தனியாக ஆட்சி புரிந்தான். அதியமானும், தனியாட்சி செய்தான். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி மாநகர் கரூரும் தலைநகராக ஆக்கப்பட்டது. 


செல்வக் கருங்கோ வாழியாதன்,பெருஞ்செரலிரும்பொறை, இளஞ்செரலிரும்பொறை, மாந்தரஞ்செரலிரும்பொறை ஆகியோர் இத்தலைநகரிலிருந்து கொங்கு நாட்டை ஆண்டார்கள். பெருஞ்செரலும், இளஞ்செரலும், நாமக்கல் வேட்டாம் பாடியில் பாசறை அமைத்துத் தங்கினர். நாமக்கல் கொங்கு வேளாளர் பிட்டன்கொற்றனை , படைத்தலைவனாக வைத்திருந்தனர். கி.பி 130 - 180 இல் இவர்கள் கொங்கு நாட்டை ஆண்டனர். காரியுடன் சேர்ந்து முதலில் ஓரியைக் கொன்றனர். பின் அதியமானையும் கொன்றனர். கொல்லி மலை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால் பிட்டன் கொற்றனிடம் கொல்லி மலையை ஒப்படைத்தனர். 

                செங்கணான் கி.பி. 250 இல் சோழநாட்டை ஆண்டான். இவன் கொங்கர்களையும் வஞ்சிக் கோவையும் வென்றான் என்று சோழர் வரலாறு கூறும். இந்தக் கொங்கர்கள் கொங்கு நாட்டு வேளாளர்களே, சுந்தரர் செங்கணானை உலகமாண்ட தென்னாடன் குடகொங்கச் சோழன் என்று புகழ்ந்தார். மகேந்திர வர்மனும், அவன் மகள் நரசிம்ம வர்மனும் கொங்கு நாட்டு தழுவி ஆட்சி செய்தனர். நாமக்கல் பள்ளி கொண்ட பெருமாள் கோயில், நரசிம்மர் குடவரைக் கோயில் ஆகியவைகளை அமைத்தனர். ஆஞ்சநேயர் சிலையும் நரசிம்மன் காலத்தில் செய்யப்பட்டது. குணசீலன் நரசிம்மன் மைத்துனன் இதனைச் செய்தான். 

                  கி.பி. 800 இல் ஆதித்தசோழன் தஞ்சையில் முடிசூடிக்கொண்டான். கொங்கு நாட்டு ஆட்சியை மேற்கொண்டிருந்தான். கொங்கு நாட்டைப் பாண்டியனிடமிருந்து மீட்டான். கொங்குவேளாளர் இனத்தைச் சார்ந்த விக்கியண்ணன் இவனது படைத்தலைவன். இவனது மனைவிதான் கடம்பமாதேவி. இவனுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை ஆகியவற்றைப் பெரும் உரிமையும் நல்கியிருந்தான். செம்பியன் தமிழ்வேள் என்ற பட்டமும் கொடுத்தான். கி.பி. 1033 இல் இராசேந்திர சோழன் ஆட்சியில் கொங்குநாடு இருந்தது. இதனை கொங்க மண்டலம் எனப்பிரித்தான் என்று சோழர் வரலாறு கூறும். 

                                        முதல் ராசராசன் ஆட்சியில் கொங்குநாடு  இருந்தது. கொல்லிமலைக் கற்களைக் கொண்டுதான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். இவன் கி.பி.12 .8 .51 மூன்றாம் ராசராசனும் கொங்கு நாட்டை ஆண்டார்கள். இவன் காலத்தில் கொல்லிமலை நாடு அடங்கிய கொங்கு நாடு இவனது  ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். 13 ஆம் நூற்றாண்டில்  விஜய நகரப்பெரரசும் 13 , 16 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களும் கொங்கு நாட்டை ஆண்டனர் . இதன்பின் முகமதியர் ஆட்சியும், ஆங்கில ஆட்சியும் வந்தது. 

                            விஜய நகரப் பேரரசுக் காலத்தில் சாலிவாகன சகாப்தம் கி.பி 1443 இல் இராமதேவராயர் கொங்கு நாட்டை ஆண்டான் . மதுரைவரையிலும் இவன் ஆட்சி இருந்தது . திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு . சேந்த மங்கலம் , தாரமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பக் கோயில் மண்டபங்கள் கட்டப்பட்டன .இவன் கிருஷ்ணதேவராயர் மரபில் வந்தவன் . உலகப்புகழ் பெற்ற சிற்ப மண்டபங்கள் இவைகள் .எனவே கொங்குநாட்டிற்குச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதை அறிகிறோம் . கொங்குநாடும் கொங்கு வேளாளர்களும் தொன்மையான வரலாற்றிற்கும் , பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்பதை அறிகிறோம் பதிற்றுப்பத்து அகம் ,புறம் ஆகிய சங்க இலக்கியங்கள் சங்ககாலக் கொங்கு வேளாளர் தம்வரலாற்றைக் கூறுகின்றன என்பதை அறிகிறோம்.


கொங்குநாடு எல்லையும் இருப்பிடமும் :
               கொங்குநாடு தமிழகத்தின் வடமேற்கு பகுதியாகும் . இதன் எல்லையை அளவிட்டுக் கொங்குமண்டல சதகம் விரிவாகக்கூறும். அதன் விளக்கத்தை அறிவோம் . "வடக்கு பெரும்பாலை ,வைகாபவூர் தெற்கு , குடக்கு பொருப்பு வெள்ளிக் குன்று கிடக்கும் களித்தண்டலை மேவு காவிரி சூழ் நாட்டுக் குளிதண்டளையளவு கொங்கு "என்பது பாடல். கொங்கு நாட்டின் கிழக்கு எல்லை கொல்லிமலையும் , சேர்வராயன் மலையும் ஆகும். கொல்லிமலை சோழநாட்டின் எல்லையாக இருந்தாலும் , சேர நாட்டைச் சேர்ந்தது .தெங்கு வைகா ஊர், பழனிமலை , ஆனைமலை, வராகி மலையாகும். மேற்கு எல்லை நீலகிரி மலைத்தொடர், வெள்ளிமலை ஆகியவாகும் . வடக்கு எல்லை தலைமலை , பர்கூர் , தோப்பூர் மலைத் தொடர்களாம். கொங்கு நாட்டின் முக்கிய ஆறுகள் பவானி, நொய்யல், அமராவதி, மணிமுத்தாறு ஆகியனவாம்.
கொங்குநாட்டின் குடிமக்கள் :
                                        சங்க காலத்தில் கொங்கு நாட்டின் குடிகள் வேளிர், பூழியர், மழவர், வேடர் ஆகியோர்களாம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தாம் வெளீர் எனப்பட்டனர். கிழார் என்பவர்களும் இவர்களே ,பூழியர்கள் இடைக்குலமக்கள் ,மழவர்கள் வீரமிக்கவர்கள் ஓரியின் இனத்தவர்கள் வேடர்கள் வேட்டை ஆடுவோர் . கொங்கு மண்டல சதகம் 18 வகைக் குடியினரைப் பற்றிக் கூறுகின்றது .கொங்கு வேளாளர், வேட்டுவர் , நாவிதர் , செட்டியார் , முதலியார், சாணார், புலவர், தச்சர், குயவன், பண்டாரம், வண்ணான், சிவியர், ஓவியர், தட்டார், இடையன், கன்னார், கொல்லன், மலைக்காரர், வலையன் என்பவர்கள் ஆவர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் முதற்குடிமக்கள். இவர்களுக்கு மட்டுமே கொங்கு என்ற மொழி இன்றும் நிலைத்து இருக்கிறது.

கொங்கு வேளாளர் குலம்



1 . அந்துவன் குலம் :
                 கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது. அந்துவன் செரலிரும்பொறை என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன் மண உறவு வைத்துள்ள சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய அவசியம் இல்லை. அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக் கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி, அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலணி இடங்களாம்.

2. ஆதிக்குடி:
   முதற்குடியினர் இவர்களே. அந்துவன், ஆதி இரண்டுமே பழமையானகுடிகளாகும். ஆதியும் அந்தமும், அந்தாதிதொடர்களை அறிக. ஆதி முதன்மையானக் குடியாகும். இதன் காணிகள் கீரனூர், வெள்ளக்கிணறு, கோவை, அவிநாசி, கோபி,பாவனி ஆகிய வட்டங்களில் உள்ளன.

3 . ஆந்தைக்குலம்:  
                 வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து குடி பெயர்ந்து வந்தார்கள் என்பது கற்பனை . திருச்செங்கோட்டினை முதன்மையிடமாகக் கொண்டவர்கள். மோருர்நாட்டை, சூரிய காங்கேயன் வென்றதால் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். வேணாடர்களுக்கு வெற்றியைத் தேடிதந்தனர்.காங்கேயன் அகிலாண்டபுரம் அகத்தீச்சுவரர் ஆலயத்தின் முதல் மண்டபத்தை ஆந்தையர் கட்டினர். ஆந்தை குலத்து குழந்தைவேலன் குலோத்துங்கனுக்கு தொடையல் மாலை அணிவித்தான். கொன்றையாறு முத்தூர் பருத்திப்பள்ளி , மாணிக்கம் பாளையம் , பட்டணம் , பாலமேடு , தென்னிலை , தோளூர், பிடரியூர்,திண்டமங்கலம் , திருவாச்சி , கோதூர், வெள்ளக்கோவில் , கூத்தம்பூண்டி, குற்றாணி, ஒருவங்குறிச்சி, முறங்கம், கரியாண் குலம், பொன்பரப்பு, கொற்றனூர் ஆகிய ஊர்களில் ஆந்தை குலத்தினர் காணி கொண்டனர்.

4 . ஆடர்குலம் :

                "ஆடு ஆடு என்ப: என்கிறது புறம். ஆடு என்பதற்கு வெற்றி என்றே பொருள். வெற்றியே பெறுகின்ற ஆடர் குலத்தினர் கொங்கெங்கும் பரந்துள்ளனர். சென்னிமலையில் அதிகம் உள்ளனர்.

5 . ஈஞ்சன் குலம்:

                 கொங்கு நாட்டை வறண்ட பகுதிகளில், புறம்போக்கு நிலங்களில் ஈஞ்சி வளர்த்திருக்கும். மழை இல்லாத காலத்தில் கூட இது வளரும். அழியாமல் இருக்கும். எத்தகைய துன்பத்தையும் தாங்கி கொள்ளும் குடிமக்கள் ஈஞ்சன் குலத்தினர். ஈங்கூர் இவர்களின்  முதன்மை இடம் . தம்பிரான்பட்டியம்மன் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாம். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர், கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் பிற காணியிடங்களாம்.

6 . ஓதாலன் குலம்:

                   "ஓதுவது ஒழியேல்" என்றார் அவ்வையார். ஓதுகின்ற இறைவன் பெருமை கூறுகின்றவர்கள் ஒதாலர்கள்.வெள்ளத்தை அடக்கி ஆள்பவன் வெள்ளாளன். கரூர் வஞ்சி என்று சேரமன்னர்களால் அழைக்கப்பட்டது. தாராபுரம் சேரர் தலைநகரமாக இருந்தது. அந்த அரசனுக்கு, சோழன் பொன்கொடுத்தான். தன்மகளின் விருப்பப்படி 40000 வேளாளர்க் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பினான் என்பது கதைதான். குடிமக்கள் பொருளா ? சீதனம் கொடுக்க . வெள்ளாளர் கொங்கு நாட்டின் முதற்குடியினர் . ஒதாளன் குலத்தின் பிறவியின் படைத்தளபதியாக இருத்து போரிட்டான். வெற்றிப்பெற்றான் . சோழன் கொல்சேனை மன்றாடி என்ற பட்டம் கொடுத்தான் . வடுகநாதர் கோயில் , பத்தரசன்கோட்டை குடிமங்கலத்திலும் கோவில் கட்டியவர்கள் . சோழன் தோழன் பெருமாள் ஓதாலன் 17 ஆம் நூற்றாண்டில் கொடுமுடி பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். ஆண்ட பெருமான் அன்னமிட்டான் என்று சதகம் கூறும் . கண்ணபுரம், கரூர், கொற்றமங்களம், திருவாச்சிகொடுமுடி , பெருந்தொழவம், குண்டடம் ஆகிய ஊர்களின் காணி கொண்டனர். ஓதாலர் குல பெரிய பெருமாள் சின்ன தம்பிப் பாவலரைக்கொண்டு அழகுமலைக் குறவஞ்சி பாடவைத்தார்.

7 .கண்ணன் குலம்:

                       கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொங்கு நாட்டின் கண்ணாக விளங்கியவர்கள் கண்ணன் கூட்டத்தினர். கண்ணபெருமானை வணங்கியவர்கள் கண்ணன் குலத்தினர் . கண்ணன் ஆனங்கூர் காணிமுத்தையனை கொங்கு நாடதை விளக்கம் செய்தார், என்று அழகுமலைக் குறவஞ்சி கூறுகிறது. கொங்கு நாட்டை நன்கு பெருமையுடையதாக ஆக்கினான்.மூவேந்தருக்கும் எல்லை பற்றிய வேறுபாடு இருந்தது. முத்துச்சாமிக் கவுண்டர் மகன் நல்லத்தம்பி கவுண்டர் மதுக்கரை செல்லாண்டியம்மன்  கோவில் வழக்குதிர்த்து வைத்தான். மூவேந்தரும் மன்றாடிப் பட்டம் கொடுத்து கண்ணிவாடி என்ற ஊரின் தலைமையையும் கொடுத்தனர். கண்ணிவாழ ,கண்ணம்பாழ ஆனது இவன் கண்ணன் குலத்தினன். கண்ணன் குலத்தினர் முதல் காணி கண்ணிவாடிதான் . பொன்பரப்பு என்ற ஊரிலிருந்து நல்லதம்பி அமராவதி ஆற்றைக்கடந்து நத்தைக்காடைவூரில் தங்கினர் .சூரிய காங்கேயன் பிறந்தான் . மோரூரில்  காணி கொண்டு அதனை ஆட்சி செய்தான் .
இந்தவழி முறையில் வந்தவர் முத்துக்கவுண்டர் . இவர் இறந்தபோது மனைவியர் மூவரும் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினர்.தீப்பாய்ந்தம்மன் வீரமார்த்தியம்மன் என்றனர் .நாமக்கல் மோகனூர் சாலையில் இது உள்ளது . மோரூர் நாட்டுக் கண்ணன் குலத்தினர் நல்ல புள்ளியம்மனை வழிபடுகின்றனர் பதினாறு கோயில்களை இவர்கள் கட்டினர் . நன்றாகக் கருதி போற்றியம்மனை முளசிக் கண்ணன் குலத்தினர் வழிபடுகின்றனர் கண்ணிவாடி , காலமங்கலம் , கீழாம்படி,கொளாநல்லி, கோக்களை, சித்தோடு , உஞ்சணை, நசியனூர், தொக்கவாடி , மண்டபத்தூர் , காஞ்சிக்கோயில் , மணியனூர், மாவுருட்டி , சித்தாளந்தூர்,கூத்தா நத்தம், மோரூர், நல்லிபாளையம், மோழிப்பள்ளி, தகடைப்பாடி , மங்கலம் ஆகிய ஊர்கள் கண்ணன் குலத்தினரின் காணியிடங்களாம்.

8 . ஆவின் குலம் :

                     ஆவின் குலம், ஆவன் குலம் ஆனது . ஆ என்பதற்கு பசு என்று பெயர். ஆவினைப் பாதுகாபவர்கள் கொங்கு வேளாளர்கள் . இக்கூட்டத்தினர் காங்கேயத்தின் ஆநிரைகளை  மிகுதியாக வளர்த்த பெருமையால் பெயர் பெற்றவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்களாம்.

9 . கணவாளன் குலம்:

                    கணம் என்பதற்குக் கூட்டம் என்றும், தொகுப்பு என்றும் பொருள் உண்டு . கணநாதர், தேவகணம்-கடவுள் கூட்டம் . ஆண் தன்மையுடன் நல்ல குணத்தைப் பெற்றவனே கணவன் ஆகிறான். ஆண் தன்மையின் தொகுப்பினன் கணவன். கண்ணபுரத்தை முதன்மைக் காணியாகக் கொண்ட கணவாளன் குலத்தினர் கொங்கெங்கும்   பரவியுள்ளனர். அக்காலத்தில் ஊர்ப் பெருமக்கள் ஒன்று சேர்ந்து ஊரின் பொதுக்காரியன்களைச் செய்வர் . இவர்களையே பல்லவக் கல்வெட்டு கணப்பெருமக்கள் என்கிறது . கணநாதன் ஆன கணபதி - விநாயகன் மூலக்கடவுள் . முதன்மையான கூட்டத்தினரானவர்கள் கணவாளர்கள் ஆயினர் .திருச்செங்கோட்டில் பரசேகரி, இராசசேகரிவர்மன் கல்வெட்டுகள் கோயில் பணிகளை ஒன்று பட்டுச் செய்யும் பணியாளர்களை , கணப்பெருமக்கள் என்றனர். கணவாளன் குலத்து நல்லயக் கவுண்டன் தீரத்தைச் சதகநூல் போற்றும் . குன்றத்தூர் கோயில் பணிகளை யெல்லாம் கணவாளர்கள் செய்தனர் என அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.

10 . காடைக்குலம் :

                   கொங்கு நாட்டுப் பறவை காடை . பறவையின் பெயர்களை , குலப்பெயர்களாக வெள்ளாளர்கள் ஏற்றுள்ளனர். விலங்கு, பறவை, மரஞ்,செடி , கொடிகளைப் பாதுகாக்கும் ஒரே இனம் வெள்ளாளக் கவுண்டர்கள் தாம். இவர்களும் கொங்கின் குடி மக்களே . கரிகாலன் காலத்தில் காடுகெடுத்து நாடாக்கப்பட்டது. கொங்கு நாடு. எல்லாருந்தான் செய்தார்கள். காடு கெடுத்தவர் காடை ஆனது இல்லை . இவர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களும் இல்லை. காடல் காடை ஆனார் என்பதும் தவறு . மூவேந்தர் எல்லை சிக்கல் வந்த போது மதுக்கரை  செல்லாண்டியம்மன் கோயிலில் காடை குலத்தினரும், சந்தி செய்து வைத்தனர். விஜயநகரப் பேரரசு காலத்தில்கோயில் சிற்ப மண்டபங்கள் தமிழகத்தில் நிறைந்தன. பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமை பெற்று இருந்தனர். பூந்துறைப் புட்பவன நாதர் கோயில் பணியைச் செய்தார்கள்.
                            "காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வன் "
               மாடையும்  தெய்வ அமுதும் இட்டான் என்று கொங்கு மண்டலச் சதகம் கூறும். வாரணவாசி என்பான் அன்னக்கொடி கட்டி உணவளித்தனாம். சூரிய , சந்திரன் இருக்கும் வரை இது நடக்க வேண்டும் என எண்ணினான்.
              பூந்துறை  காடைக் குலத்துத் தலைவர் நன்னாவுடையார் பட்டம் பெற்றார் . இவர்கள் கொலை புரிந்த நன்னன் வழியினர் அல்லர். நன்மை  பல செய்த சிறப்பால் நன்னன் என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கரூர்ப்பசுபதி ஈசுவரர் கோயில் கலசம் குடமுழுக்கில் நீங்காதிருந்தது . இந்த நன்னா உடையார் வைத்தபின் நின்றதாம் . நல்ல குணமுடையோர் செயல் நன்றாகும் . நிலைக்கும் . மூவேந்தரும் நன்னா உடையார்க்கு , பூந்துறை நாட்டின் ஆட்சி உரிமையை வழங்கினர் . புகழ் நாவேற்றும் பூந்துறை நன்னாவுடையர் நால்வருக்கும் மூவேந்தர் சூட்டும்முடி என்ற பழம் பாடல் இதனை உணர்த்தும் .சோழர்  ஆட்சியில் இவர் குறுநில மன்னராக இருந்தார் . காங்கேய நாட்டுக் காடையூரை உருவாக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு . கீரனூர் , பில்லூர், பெருந்துறை , கோனூர், ஆத்தூர்,பவுத்திரம் ஆகிய ஊர்களின்  இவர்கள்  காணிகளாம். பிற குலத்திற்கு இல்லாத சிறப்பு இவர்களுக்கு உண்டு. காணி கொண்ட ஊர்ப் பெயருடன் சேர்த்து கொள்கின்றனர். பூந்துறைக் காடை, மேலைசார் காடை,கீழைச்சார்க்காடை, எழுதுமத்தூர் காடை,கீரனூர்க் காடை, அரசூர்க்காடை, பறற்பினிக்காடை , ப @@@@@ த்திரக்காடை,வையப்ப மலைக் காடை , கூடச் சேரிக்காடை, ஆனங்கூர்க் காடை என்று 18 காடைக் குலத்தினர் உண்டு.

11 . காரிக்குலம்:

                   காரி என்பது கருமை நிறக் குதிரை என்று பொருள் கூறினார் . உ.வே.சா. ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்றார். காரிக்குதிரைகளை வைத்திருந்த சிறப்பால் மலையமான் காரி எனப்பட்டான் . ஓரி நிறக்குதிரை வைத்த சிறப்பால் அவன் ஓரி  எனப்பட்டான்.  இவை காரணப் பெயர்கள் . காரி மழவர் குடியினன் . ஓரியுந்தான். காரி வழியினர் , காரிக்குலத்தார் அல்லர் . கருப்பின் கண்மிக்கது அழகு என்பர் . கருமை நிறமுடைய திருமால் காரி எனப்பட்டார் . சங்க காலத்தில் காரிக்கண்ணனார் என்ற கொங்கு வேளாளப் புலவர் இருந்தார் . அவர் வழியினரே காரிக் குலத்தவர் . உஞ்சணை, சேமூர், ஆனங்கூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி , நல்லிபாளையம், ஆகிய ஊர்களை காரிக் குலத்தினர் காணியாகக் கொண்டனர்..

12 . கீரன் குலம் :
                   சங்க காலப் புலவர்கள் பலர் நமது இனத்தினர். கீரன், நக்கீரன், கீரனார் இவையெல்லாம் இடு குறிப் பெயர்கள். கீர்+அன் என்று பிரித்தல் தவறு.  பொருளற்ற வேர்ச் சொல் தமிழில் இல்லை . நாமக்கல் வட்டத்தில் உள்ள கீரனூர் தான் கீரம்பூர் ஆகியது . நக்கீரரை, அந்தணர் என்று தவறாகக் கூறுகின்றனர் . கபிலர் தன்னை `அந்தணன் புலவன்` என்று செல்வக்கருங்கோவிடம் அறிமுகபடுத்திக் கொண்டான் . கீரன் மரபிலே வந்தவர்கள் கீரன் குலத்தினர் . காங்கேய நாட்டுக் கீரனூர் இவர்களின் முதற்காணியாகும். நசியனூர், கோடத்தூர், கண்ணிவாடி ஆகிய பிற ஊர்கள் இவர்களின் காணி ஊர்களாம் .

13 . குயிலர் குலம் :

                        செம்பூத்து ,காடை போலக் கொங்கு நாட்டுப் பறவைகளில் குயில் முக்கியமானது . குயில் கூவித் துயில் எழுப்பும் கொங்கு நாடு இது . வெள்ளாளன் கோழி கூவி துயில் எழுமாட்டன் . வைகறையில் இறை கிணறு . நீர்ப்பாய்ச்சும் வேலை கெடும் . குயில்தான் வைகறையில்முதலில் கூவும் பறவை. 4 மணிக்கே குயில் குவும் . வேடர்கள் குயில், காடைகளைக் கொன்று உண்பர் . குயில் குலத்தினர் குயிலைக் குலதெய்வமாக மதிப்பர் . கொங்கு நாடெங்கும் பரவலாகக் குயிலர் கூட்டத்தினர் உள்ளனர் .

14 . குழையர்குலம்:

                         வந்புலத்தை புன்செய் என்பர். மென்புலத்தை நய்செய் என்பர். வெள்ளாளர்கள் வெள்ளத்தை அடக்கி வாய்க்கால் அமைத்து புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக்குகின்றனர் . வன்னிலத்தை நீர் விட்டுக் குலைத்து நன்செய் நிலமாக்குவர் இல்லை . நிலத்தை மருத நிலமாக்கும் குழையர் குலத்தினர் மருத நிலத்தினரே அன்றி நெய்தல் நிலத்தினர் அல்லர் .குழையரே குழாயர் எனப்பட்டனர். குலையர்களின் முதர்காணி கோயிலூராகும். இவர்களே சேர மன்னர்களுக்குப் படை உதவி புரிந்தனர் . கொங்கு நாடெங்கும் இவர்கள் பரந்துள்ளனர். சேர அரசனுக்கு வேடர் , வேட்டுவர் , துன்பம் செய்தனர் , கோவிலூர் குழையர்குல குமாரத்தினமால் வேட்டுவர்களை வென்று இலவந்திக் கோட்டையைப் பிடித்தான் . சோழ அரசன் இந்த வெற்றி விழாவை நடத்தினான் . ஒதாளன் பொன்னர் , சாத்தந்தை , குழையர் , செம்பர் ஆகிய ஐம்பெரும் வெளிர்களுக்கும் மன்றாடி பட்டம் கொடுத்தான். மன்றாடி என்பதற்குப் போரில் வெற்றி பெரும் வீர்ம்மிக்கவர்கள் என்று பொருள் . மன்றத்தில் வாதாடி வெல்வோரையும் மன்றாடி என்பர் .பழைய மன்றாடி போலும் என்று பெரிய புராணம் கூறும் . குழையர்களின்  கோவிலூர் குளித்தலை வட்டத்தைச் சார்ந்தது . குழையர்  குலத்தினர் வேத மன்றாடி பட்டமும் பெற்றார்கள் . பொங்கலூர் நாட்டின் புத்தரசன் கோட்டையை ஆட்சி புரிந்தனர் . காப்புளி அம்மனையும் , அங்கியம்மனையும் இவர்கள் வழிபட்டனர். கொங்கு பூந்துறை நாட்டில் விளக்கேத்தி என்ற இடத்தில் மாந்தரஞ்ச்சேரல் செய்த போருக்கு குழையர் உதவி செய்தனர். சேரல் கொளாநல்லியை அளித்தான் .இதில் குழவி அம்மனையும் மாரியம்மனையும் வைத்து வழிபட்டனர் . கொளா நிலையில் கோட்டை கட்டி கொடி, படை முரசோடு அரசு புரிந்தனர் .காவலியரை வென்று தென்கரை நாட்டையும் கைப்பற்றினர் . "காவல் குழார் கதித்த குலர் " என்று அக்காணிப்பாடல் கூறும் வேணாடர் இவர்களை வென்றனர் . அதன்பின் வடுகனூரிலும், பிற கொங்கு நாடெங்கும் இக்கூட்டத்தினர் சென்றனர் . வேள் அரசி குழையர் குழாயர் கொற்றனூர் , புத்தரசன் கோட்டை , குள்ளம்பாளையம் , கொளாநல்லி ஆகிய ஊர்களில் காணி கொண்டனர் .

15 . கூறைக்குலம் :

                      கொங்கு வேளாளர்கள் மணப் பெண்ணுக்கு கூறைப்புடவை எடுக்கின்றனர் . கூறை  என்பது இங்கே  மணப்புடவை என்பர் . புதுப்புடவை என்றும் , பட்டுப் புடவை என்றும் பொருள் தரும் .புதுமை, மணம்,பட்டு என்ற பொருளில் கூறை வருகின்றது . பட்டுப் புடவை கூறிட்டு நெய்வதால் அது கூறைப் புடவை ஆயிற்று . மணமிக்கப் புதுமையைப் படைப்போர் கூறை குலத்தினர் . வேணாட்டில் கூறை நாடு என ஒன்று உண்டு. அந்தக் கூறை நாட்டவரே கூறைக் குலத்தினர் என்றும் கூறுவர்.கூறைக்குலத்தவர் குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பது தவறு . கொங்கு மைந்தர்களே அவர்கள் . கூறைக் கூட்டத்தினரின் காணி இடம் தலையநல்லூர். தெய்வம் பொன்காளியம்மன். தலைய நல்லூர் கொங்கு நாட்டு ஊர். ஈரோடு , நசியனூர் , பெருந்துறை , சேலம், திருச்செங்கோடு , நாமக்கல் , ராசிபுரம் , பகுதிகளிலும் கூறைக் கூட்டத்தினர் வாழ்கின்றனர் . சென்னிமலை முருகனுக்கு விளக்கிட்டு நானில் முதல் விளக்கு வைக்கும் உரிமை கொண்டவர்கள் கூறைக் கூட்டத்தினர் . தலைய நல்லூரில் பங்காளி சண்டை வந்தது . அதனால் சிலர் நசியனூர் அருகில் ஓலைப்பாளையத்தில் பொன்காளியம்மன் கோவில் கட்டி வழிபட்டனர் . மதுரை நாயக்கன் மன்னன் கூறைப்பாளையத்தில்  குளத்து அமராவதிக் கவுண்டரை வரிவசூல் செய்ய வைத்தான் . 28 ஊர்களை இவர் பொறுப்பில் விட்டார். ஈரோடு, திருச்சி , அருகில் உள்ள கூர கூறைக் கூட்டத்தினர் அப்பத்தாள் , பாவாத்தாள், தெய்வங்களை வைத்தனர் . கூறைக் குல முத்தண்ணக் கவுண்டர் தீபாவளிக்கு எள் நெய்யும் புத்தாடையும் ஏழைகளுக்கும் வழங்கினார் என்று கந்தநாதசாமி சதகம் கூறுகிறது . 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாய்க்கன் காலத்தில் காறைக் கூட்டத்து தன்டிகைக் காளியண்ணன் , கொடுங்கூர் - கொடுமுடி மகுடேசருக்கு நாள்படி , நந்தாவிளக்கு , வழிபடு பொருள் கொடுத்தானாம் நந்தவனம் , அமைத்தானாம் . கொடுமுடிக் குறவஞ்சி கூறுகிறது. தலைய நல்லூர் , மின்னாம்பள்ளி , சோமூர், சோழன் மாதேவி , திருமால் நசியனூர் , வெள்ளியணை , மேச்சேரி , சௌதாபுரம், கொற்றனூர் பார்பதி, பிடாரியூர், மண்மலை , திண்டமங்கலம், நவணி,அரசிலாமணி , பொய்ப்புவியூர், காளம்பாடி, களங்காணி, ஆகிய ஊர்களை இவர்கள் காணியாகப் பெற்றுள்ளனர் .

16 . கோவேந்தர் குலம் :

                              கோ என்பதற்கு பல பொருள் உண்டு. கோ - அரசன் பசு, இறைவன் என்றெல்லாம் பொருள் உண்டு. கருங்கோ , பூரிக்கோ , என்ற அரசர்கள் இருந்தனர். கோ என்பதும் ஒரு பொருள் பன்மொழியாகும் . சிறப்பு குறித்தே ஒரு பொருள் பன்மொழி அமையும் . மீ மிசை , மேலே என்று பொருள் தரும் . ஒரு பொருள் பன்மொழியாகப் பதிற்றுப் பத்து கூறும் . பொங்கலூர்  இவர்களின் முதல் காணியாகும். "கோவேந்தர் பனங்காடை நற்குல வேளிர் வாழ்வுற்று இருக்கு பொங்கலூர்" என்று அழகு மலைக்  குறவஞ்சி கூறுகிறது. குடி மல்லம் மற்றொரு ஊராகும் . குடிமங்கை கோவேந்தர் குட்டிவேள் என்று அதே நூல் கூறுகிறது . நாளும் வழிபடுவோர் , செல்வந்தர் , மூவேந்தருக்கும் பல்லக்கு கொடுத்த பெருமை பெற்றவர்கள் , என்று அது போற்றும் . குடி மங்கலம் , இலக்காபுரம், நம்னேரி ஆகிய காணிகளை கொண்டவர்கள் இவர்கள் .

17 . சாத்தந்தைக் குலம் :

                              
   புறத்தில் நான்கு பாடல்கள் சாத்தன் பற்றி கூறுகிறது . கொங்கு நாட்டுப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் கொங்குக்கவுண்டர் . அந்துவன் சாத்தன் என்ற அரசனைப் பற்றி புறம் - 71  கூறுகிறது. பெரும் பெயர் சாத்தன் என்கிறது புறம் - 173  .  ஒல்லையூர் கிழான பெருஞ்சாத்தனை
புறம் 242 கூறுகிறது . வல்வேல் சாத்தன் என்கிறது அது . சாத்தன் + தந்தை என்பதே சாத்தந்தை ஆக்கும். சால் + தந்தை சாற்றந்தை என்றே ஆகும். இவ்வாறு பிரித்தல் தவறு. கொங்கு மண்டல சதகம் சாத்தந்தையார் முதற்காணி அத்திபநல்லூராகும். சாத்தந்தையம்மன் இவர்களின் குல தெய்வமாகும் . சோழன் சார்பில் சரவணமகீபன் வேட்டுவர்களை வென்று அள்ளாளப்புரி, உகையனூர் ஆகியவர்களைக் கைப்பற்றினான் சோழன் . "உலகுடைய மன்றாடிப் " பட்டம் நல்கினான் . வீரராஜேந்திரன் காலத்தில் பிள்ளான் தேவன் என்ற சாத்தந்தைக் குலத்தானுக்கு கொடுகூர் ஆட்சியை அளித்தான் கொடுங்கூர். கொடுமுடியாகும் . பூந்துறை வேட்டுவர்களை வென்றனர் .  சாத்தந்தையர். உலகபுரம், கனகபுரம் , தேவனாம்பாளையத்தையும் பெற்றனர் .சாத்தந்தைக் குலத்தில் கந்தான் காலிங்கராயன் ஊத்துக்குளி  பாளையப்பாட்டின் முதல்வன் இவன். வெள்ளோட்டில் ஆட்சி நிறுவியவன். இவன் வீரபாண்டியனின் அமைச்சனாக இருந்தான். காலிங்கராயன் வாய்க்காலை அமைத்து பூந்துறை நாட்டை வழமை செய்தான் . அது இன்றும்  காலிங்கராயன் வாய்க்கால் என்றே அவன் புகழ் பாடி ஓடிக்கொண்டிருக்கிறது . வெள்ளோடு முத்தையக் கவுண்டர் சந்திர சூரியர் உள்ளவரை சாத்தந்தைக் குலத்தவர் கம்பரின் தமிழுக்கு அடிமை என்று சாசனம் தந்தனர் . கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் சாத்தந்தைக் குலத்தவரே , வெள்ளோடு , நாகம்பள்ளி , கூகலூர், விஜயமங்கலம் , குன்றத்தூர் , அல்லலாபுரம், கூடலூர், உகையனூர், காங்கேயம், இலவமலை , பாலத்தொழு, கருவேலம்பாடி, காரைத்தொழு, அத்தாணி, அல்லிபுரம் , ஆகியன சாத்தந்தைக் குலத்தார் காணியூர்களாம்.

18 . செங்கண்ணன் குலம் :

                            கண்ணக்குலத்தார் வேறு, செங்கண்ணக் குலத்தார் வேறு, குளித்தலை வட்டரமான தென்கரை இராச கம்பீர வளநாட்டின் முதற்குடியாக  செங்கண்ணன் குலத்தினர் வாழ்ந்தனர் . சோழ வேந்தன் ,செங்கணான் மரபினன் என்றும் கூறலாம். கடம்பன் குறிச்சி, சிதம்பரம் சிராமலை ஆகியன பண்டைய காணிகளாம்.
இக்குல லிங்கக்கவுண்டன் ஆதித்த சோழன் காலடியில் வைத்தான் . `பல்லவராயர் ` என்ற பட்டத்தை சோழன் வழங்கினான் .கொங்கு நாட்டின் ஆளுமையையும் அளித்தான் . காங்கேய நாட்டுக் காணியாள் வேல கவுண்டர் . மகளைத்தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் . சீதனமாகக் கங்கேயத்தைப் பெற்றனர். தலைநகரை மாற்றினர் .காங்கேயத்தில் அகிலாண்டபுரம் அமைத்து அகிலாண்ட வல்லி அம்மனை வைத்து வழிபட்டனர் .கோட்டை கட்டி ஆட்சி புரிந்தனர் . அம்மன் கோவில் கட்டினான் . செங்கண்ணர் கொங்கு நாட்டை ஆண்ட போது சோழனுக்குத் திறை செலுத்தினர் ( கப்பம் ) குறுநில மன்னர்களான இவர்கள் பல்லவராயர் என்ற பட்டம் பெற்றனர். செங்கண்ணர்க் குலத்தினர் மெய்க்கீர்த்தி இதைத் தெரிவிக்கும் . யானை தேர்ந்த கரிகால் வளவனுக்கும் சூட்டி பெருமை பெற்றனர் . மதன செங்கண்ண குலமால் - மதியூகி சிற்றழுந்தூர் சிங்கையம் என்ற வாலசுந்தரக் கவி கூறுகின்றார் . காங்கேயப் பல்லவராயன் மகனுக்கு மணி பதித்த வண்டியை , சங்கிராமம் சோழன் அளித்தான் . அச்சிறுவன் தமிழ்ப் புலவருக்கு அளித்தானாம், இதனை , கார்மேகக் கோனார் கொங்கு மண்டல சதகத்தில் கூறினான் . அகிலாண்டபுரம், கொடுமுடி, கண்ணபுரம் , கடம்பன் குறிச்சி , இவர்களின் காணிகளாம்.

19 . செம்பன் குலம் :

                        செம்பன் - செம்மன் இரண்டும் ஒன்று தான் . கொங்கு வேளாளர்களின் செம்மையான குண இயல்புகளையும், நடத்தையும் உடைய சான்றோர்கள். இவர்களது முதற்காணி பொங்கலூர் நாடாகும் . சோழ மன்னர்களின் படைத்தலைவர்களாக இருந்து செம்மையாக நடந்துள்ளனர் . சோழன் கருத்துரைப்படி சேரனுக்குத் துணையாகப் படை உதவி செய்தனர் . செம்பியன் என்ற பட்டம் பெற்றனர். செம்பியன் என்ற சோழர்களின் சிறப்புப்
பெயர் இவர்களுக்கும் வந்தது.
                      
                         செம்பையூர்ச் செம்பன் கும்பலில் யானும் கூட்டென வரவே, செம்பன் காவலியர் செருக்கினை அடக்கித் தம்பணன் செம்பைத் தவத்தினிலிருந்தான் என்ற குறவஞ்சித் தொடரால் அறியலாம் . தொடுவாய்ப் போரில் ஓதாளன் , பொன்னர், சாத்தந்தை , குழையர் ,செம்பன் ஆகிய ஐந்து கவுண்டர்களும் சோழனிடம் பரிசு பெற்றனர். இவர்களது முதற்காணி , குளித்தலை வட்டத்து , செம்பாபுரி , பொங்கலூர் நாட்டிலும் இதே பெயரில் ஊரை அமைத்தனர். செம்பாதவரி , செம்பாபுரி அம்மன் செம்பாக் காளியம்மன் இவர்களின் தெய்வங்கள் இக்குலத்து அமராவதிக் கவுண்டன் கம்பருக்கு அடிமை முறி எழுதிக் கொடுத்தான் . காங்கேய நாட்டு பரஞ்சேர்வழி, கோவை கீரனம், மாதம்பட்டி , நாமக்கல் வட்டம் , மணலி ஆகிய இடங்களில் காணி கொண்டு கரியகாளியம்மனை வைத்து வழிபட்டு  வருகின்றனர் . சிலர் அவினாசி அப்பரையும் , காஞ்சிக் கோயில் சீதேவி அம்மனையும் வணங்கி வருகின்றனர். பூந்துறை கருமலையாண்டவனும், நசியனூர் மதுரகாளியம்மனும் கூட இவர்களின் தெய்வங்களாகும் . கரூர் , திருவெழுந்தூர்,பரஞ்சேர்வழி, புலியூர், செம்பை முசிறி , குளித்தலை ஆகிய இடங்களையும் காணியுரிமை பெற்றுள்ளனர்.

20 . செம்பூத்தான் குலம் :

                           கொங்கு நாட்டுப் பறவைகளில் செம்போத்து கருமையில் செம்மையானது .வெயில் நுழை பறியாக் குயில் நுழை பொதும் பரில் வாழ்வது . கொங்கு நாடெங்கும் மிக்க காணிகளைப் பெற்ற இவர்கள் புகழ் பூத்த செம்பூத்தர் எனப்பட்டனர். இது செம்பக்குலத்திலிருந்து ஒழிய காரணம் பெயரன்று . போத்து, பூத்து என்ற சொற்பொருள் தேவையில்லை .செம்பூத்தான் குழந்தை வோன் அன்னமிட்டுப் புகழ் பெற்றான் என்று சதகநூல் கூறும். இரத்தின மூர்த்தி எழுதிய விறலி விடு தூதும் , நல்லக் குமாரக் கவுண்டர் சிறப்பும் உணர்த்தும் . தீரன் எனும் ,செம்பூத்தன்என்ற குலத்திலகன் தென்பொதிகை கும்பன் எனும் நல்லக் கவுண்டர் என்று கூறுகிறது . செம்பூதன், செம்பூத்தர் , செம்போத்து , செம்பூத்தை செம்பூற்று, என்பன எல்லாம் ஒன்று தான் .செம்பூற்றுதிபன் என்று கல்வெட்டுத் தொடர் உள்ளது. செம்பூத்தான் குலத்தார்க்குரிய காணியூர்கள் பற்றிய காணிப்பாடல்கள் உண்டு . அதில் கூறப்பட்ட ஊர்களின் பட்டியல் தரப்படுகிறது. இரணபுரம் மண்டபத்தில் அத்தனூர் வயிரூசி,குமாரமங்கலம் , அந்தியூர் , இராமக்கூடல் , காடனூர், கண்ட குல மாணிக்கம்பாளையம் , கீரம்பூர், தாராபுரம் , தென்சேரி, விதரி அத்திபாளையம், சேமூர் ,மொஞ்சனூர் , கூடச்சேரி, கருமானூர், புல்லூர், சிவதை, வாழவந்தி , உத்தம சோழபுரம் , புத்தூர் திண்டமங்கலம், வைகுந்தம் , முடுதுறை,  கொற்றனூர் ஆகிய ஊர் செம்பூத்தனாரின் காணியூர்களாம். கொல்லிமலை சூழ்ந்து 88 ஊர்களுக்கும் செம்பூத்தார் காணியாளர்களாம்.

              "இனிய ஒன் கொல்லிமலை எண்பத் தெட்டூருக்கும்
                இறைவனே செம்பூதனே"

என்று காணிப்பாடல் கூறும்.

               வேட்டம்பாடி , வேலூர் , காதப்பள்ளி , வீசானம்,தோகைநத்தம் , தாராபுரம், தம்மம்பட்டி , தாளப்பதி , கொங்கணாபுரம், வாழவந்தி , தோளூர் , தாளப்பறி , ஆகிய ஊர்களும் , செம்பூத்தான் குலத்தினர் காணியூர்களாம்.

21 . செல்லன் குலம் :

                           குழந்தையைக் செல்லமாக வளர்ப்பவர்கள் வேளாளர் குழந்தைபோல் ஆனிரைகளையும், பயிர்களையும் செல்லமாக வளர்பவர்கள் செல்லன் கூட்டத்தினர் ஆயினர் . செல்லாக் காசாக இல்லாமல் வேளிர்களில் செல்லுகின்ற செல்வர்களாக இருப்பவர்கள் இவர்களே . பூந்துறை இணை நாடான பருத்திப்பள்ளி நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் இவர்கள் . செல்லன் குலத்தினர் `பருத்திப் பள்ளி ` நாடார் என்ற பட்டம் பெற்றவர்கள் . இராசிபுரம் , திருச்செங்கோடு சாலையில் வையப்பமலையில் இருந்து எட்டாவது கிலோ மீட்டர் தொலைவில் பருத்திப்பள்ளி உள்ளது . திருமணி முத்து ஆற்றங்கரையில் உள்ளது இவ்வூர் . அதன் அருகில் இருப்பள்ளி ஊரில் செல்லன் குலத்தில் இளையாக் கவுண்டன் இருந்தான் .ஏழு ஆண்மக்கள் பிறந்தனர். வேறு ஊர்களுக்குச் சென்று குடிபுகுந்தனர் . இவர்களின் வழியினர் எழுகரை செவ்வாய் குலத்தினர் என்று அழைக்கப்பட்டனர் . திருச்செங்கோட்டில் மடமும், மண்டபமும் கட்டினர். செங்குன்றை மையமாகக் கொண்டு பருத்திப்பள்ளி ,இருப்புலி கொன்னையாறு , கோக்கலை, இடையாறு ,அனுமன்பள்ளி , எழுமாத்தூர் , ஆகியவை செல்லங் குலத்தினரின் ஏழுகரை நாடுகளாம். 16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தாராபுரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்கி மீட்டாள் தேவராயர் முதலிக்காமிண்டன் பட்டமும் , பருத்திப்பள்ளி ஆட்சி அதிகாரத்தையும் நல்கினான். இருப்பள்ளிப் பள்ளு இதனை கூறும் . இளையாக் கவுண்டரின் ஏழுமகன்களில் ஒருவன் இவன். இவனது வழியினர் தான் பருத்திப் பள்ளிச் செல்லங்குலத்தினர். இவர்கள் நாட்டார் எனப்பட்டனர் . 24 நாடுகளையும் ஆளும் உரிமை பெற்றவர்கள்  இளையாக் கவுண்டர்களாக இருக்கின்றனர். எனவே ராசிபுர வட்டத்தின் நாட்டாக் கவுண்டர்கள் வேளாளக் கவுண்டர்களின் வழியில் வந்தவர்கள் என்பதற்கு இதுவே சான்றாகும் . காளிப்பட்டி நந்தர் கோட்டத்தைக் கட்டிய செல்லங்குலத்தார் காங்கேய நாட்டு வள்ளரையும் இரண்டாம் காணியாம்.

                               செம்பூத்தான் குலம் . கோத்திரம் , கூட்டம் என்பதெல்லாம் நன்கு தொன்மையானக் குலப் பெருமை உடையவர்கள் . இவர்கள் சங்ககால இலக்கியங்கள் ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் . ஈழத்துப் பூதன் சாத்தனார் . பூதஞ்சேந்தனார். நப்பூதனார் , மதுரைப் பூதன் இளநாகனார் . கோடை பாடிய பெரும்பூதனார் . சாத்தன் பூதனார் , பெரும் பூதன் கொற்றனார் முல்லைப் பூதனார் என்ற பெயர்கள் பூதன் என்பதற்குச் சான்றாகக் கூறுவர். இங்கெல்லாம் பூதன் என்ற சொல் ஐம்பூதத்து இயற்கைபோல் என்ற தொடர் பொருளையே குறிக்கும் . ஐந்து மூலங்களையே ஐம்பூதம் என்பர் . நிலம், நீர், தீ , வளி, விண்வெளி ஆகியன ஐம்பூதங்களாகும். உலகில் எல்லாம் இவைகளால் ஆக்கப்பட்டன செம்பூத்து , பறவை இடு குறிப்பெயர். செம்பூத்தான் குலத்தினர் வைத்துக் கொண்டனர். செம்போத்தைக் காண்பது நல்ல விரிச்சியாகும் . விரிச்சி - சகுனம் .இப்பறவை செம்போத்து , செங்காகம், செங்குயில், குக்கில் செண்பகம் , செண்பகப் பறவை என்று கூறப்படும் .

                    வேணாடர் தலைவன் பெரியான் கொற்றன் என்பவனுக்கு , செம்போத்து குலத்தான் அமைச்சனாக இருந்தானாம் . கொங்கு வளநாட்டுக்குப் பட்டியர் கூறும் , கொடுமணல் இலக்கியம் செம்பூதன் குலத்தைக் குறித்தது. அழகுமலைக் குறவஞ்சியும் , செம்யூர் என்று குறித்துள்ளது. வேளாளர் கீர்த்தியில் ,

                     "கற்புயர் செம்பூதத்தை குழற்" என்ற தொடர் உள்ளது .

             கொங்கு நாடெங்கும் பரவியுள்ள செம்பூத்தான் குலத்தினர்க்கு 88 ஊர்கள் காணி ஊர்களாம் . குன்றத்தூர் (குன்னத்தூர்) அருகில் பெரிய நாச்சியம்மன் கோவில் செம்பூத்தாரின் குலதெய்வமாகும். கரூர் வட்டம் நொய்யல் ஆற்றங்கரையில் பெரிய  சிறிய பொன்னாச்சியம்மன் கோவில்கள் அத்திபாளையத்தில் உள்ளது. சேரன் ஆட்டன் ஆத்தி ஆண்ட ஊர் இது. செம்பூத்தாரின் குல தெய்வம் இவை .பொன்னாச்சியம்மன் தலவரலாற்றை நாமக்கல் புலவர் தே.ப.சின்னசாமி அவர்கள் எழுதியுள்ளார் . பொன்னர் , சங்கர் மனைவியர்கள் தாம் பெரிய பொன்னாச்சியும் , சின்ன பொன்னாச்சியும் என்று எழுதியுள்ளார் . கீரம்பூர், எட்டிக்கையம்மனையும் , செம்பூத்தான் குலத்தினர் வழிபடுகின்றனர். 3000 குடும்பத்தினருக்கு எட்டுக்கையம்மன் குலதெய்வம் . இராசிபுரம் பாலைப்பாளையத்தில் ஆயாக் கோயிலைக் குலதெய்வமாகக் கொண்டனர் . சேலம் வட்டத்தில் கருப்பூர் வலசு , அத்தனூர் பனைப்பாளையம் , செம்பூத்தார்க்கு உரியது . பொங்கலூர் நாட்டில் வேடனூர், கரிய காளியம்மனையும் இவர்கள் வணங்குவர் . திருச்செங்கோடு பொன் மலை அருகில் மரப்பறையில் பொன்காளியம்மனை 500  செம்பூத்து குலத்தாரும் வழிபடுகின்றனர் வைகைப் பொன்மலை - வையப்பப் மலையில் உள்ள இறைவன் கோவில் அறங்காவலர் இவர்களே , வழிபாட்டில் முதல் மரியாதை இவர்களுக்குத்தான். கரூர் வட்டத்தில் காணி கொண்ட செல்லர்கள் கோட்டத்தூர், நன்செய்  இடையாறு ஆகியவற்றில் கோவிலைக் கட்டினர். பூந்துறை நாட்டு அனுமன்பள்ளி சின்ன அம்மன், பெரிய அம்மன் கோவிலை இவர்களே காணியாகக் கொண்டனர். கோவையில் துறவலூர் அண்ணன்மார் சுவாமியையும் அவனாசி, பல்லடம், கோவை வட்டத்து செல்லங்குலத்தார் கோப்பாத்தாள்  அம்மனை வணங்குவர். கோபி வட்டத்தார் நீளியம்மனையும், பருத்திப்பள்ளியின் அழகு நாச்சியம்மனையும் வணங்குவர். ஈரோடு வட்ட அஞ்சூரில் வாழ்வோர்  செகுடன் தாழியில் உள்ள கோப்பாத்தாளையும், வீரமாத்திர அம்மனையும் வழிபடுவர். அத்திப் பெண்ணுக்கு மத்தியில் வீழ்ந்த பெண்ணுக்கு பணமும், நிலமும், செல்லங்குலத்தார் அளித்தனர். நாராயணபுரம் அங்காள பரமேஸ்வரிக்கு அனுமன் பள்ளி செல்லங்குலத்தினர் அறக்கொடை அளித்தனர். துறவலூர் செல்லன்குலத்து செம்பெரியாக் கவுண்டன் மரத்தைப் பிடுங்கி வேட்டுவப் படையை அடித்து வென்றானாம். உம்மாத்தூர் நஞ்சராக உடையார் வெற்றி பெற்ற கவுண்டனுக்கு `மரம்பிடுங்கி செம்பெரிச்சிக் கவுண்டன்` பட்டம் அளித்தான் . அண்ணமார் சுவாமிகோவில் முற்பாட்டுக்காரன் மதிப்பையும் அளித்தான் . நாமக்கல் , முத்துகாபட்டி, அனுமன் பள்ளி,ஆனந்கூர் இருப்புலி , கபிலர் மலை, காரவல்லி,கோடத்தூர், கொன்றையாறு,எழுமாத்தூர், வள்ளியறைச்சல், கோக்கலை, நன்செய் கிடையாது கருமானார் மணப்பள்ளி,துறவலூர், தாராபுரம், மலையன்பாளையம் ,ஆகிய காணி ஊர்கள் செல்லக்குலக்காணியாம் .

22 . செவ்வாயர் குலம் :

                              செம்மையான வாய்ச் சொல்லை உடையவர்கள் . உண்மையாக உழைப்பவர்கள் .சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கொள்கையாளர்களையே செவ்வாயர் என்றனர்.  சே - செம்மை - ஆயர் இடையர் சேவாயர் - செவ்வாயர் ஆதல்தவறு. முல்லை நிலத்து ஆமேய்க்கும் இடையர்கள் ஆயர் எனப்பட்டனர். ஆயர் எப்படி வெள்ளாளக் கவுண்டர் ஆகமுடியும்? வீர ராஜேந்திரச் சோழன் பொன்னிவாடியில் கல்வெட்டைச் செய்தான் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக்  குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடையைக் குறித்துள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை , கொங்குப் புலவராக்கினறாம் . இதை பொன்னிவாடிப் பட்டயம் கூறும். சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகிய ஊர்கள் காணிகளாம்

23 . செவ்வந்திக் குலம் :
                        
பறவைகளையும் , பூக்களையும் , குலப்பெயர்களாகக் கொங்கு கவுண்டர்கள் வைத்தான் .செவ்வந்திப் பூவை இவர்கள் குலப்பெயராகக் கொண்டனர். காத்தாங்காணி செவ்வந்திக் குலத் தீத்தாக் கவுண்டன் கண்ணகுலத்து செங்கோட்டு வேலப்பக் கவுண்டனுக்கு, பெண் கொடுத்தான் . சீராக கோவில் உரிமை , முப்பாட்டு உரிமை கொடுத்தானாம் . அவ்வூர்ப் பட்டயம் இதைக் கூறும் . சேலம் மாவட்ட இலக்கியப்பாளையம் அருகில் இருப்புலிப்பெருமாள் கோயில் கல்வெட்டு செவ்வந்திக் குலத்தினர் அப்பகுதில் வாழ்ந்ததாகக் கூறும். இருப்புலி ,கொன்றையாறு (கொன்னையாறு) தேவனாங்குறிச்சி செவ்வந்திக் குலத்தாரின் காணியூர்களாம்.

24 . சேரன் குலம்:

                    சேர, சோழ பாண்டிய மன்னர்கள் கொங்கு நாட்டை அவ்வப்போது ஆண்டனர் . சேர நாட்டுக்குள் கொங்கு நாட்டை அடக்கி 250 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள் சேரர்கள் . அந்துவன் சேரர் வழிமுறையில் கலந்தவர்கள் அந்துவன் குலத்தினர் . கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். அவன் மாமன் இரும்பிடர்த்தலையர். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர் .  சேர, சோழ பாண்டியர் மூவருக்கும் பெண் கொடுக்க முடிசூட, வாள்கொடுக்க, உரிமை பெற்றவர்கள்  கொங்கு வேளாளர்கள். வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்தவர்களையே கொங்கு நாட்டு ஆட்சி நடத்த விட்டனர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றது புறம். தென்னாட்டுத் தமிழர் தாம் . சேர, சோழ பாண்டியர்கள் சேர மரபினர் கொங்கு நாட்டு வேளாளர்களுடன் நெருங்கிய தொடர்பினர் . பண்டைய நாளில் ஓரினமாக இருந்தவர்கள் . "கன்னடமும் , தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்துக்கும் எழுந்து ஒன்றுபல ஆயிடினும்" என்றார் மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை . கொங்கு வேளாளர்களே சேரமரபினர் ஆகி இருக்கலாம்

            1 . உரின யசேரனுக்கும் , கொங்கு வேளாளர் வெளியன் வேண்மான் மகள் நல்லினிக்குப் பிறந்தவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்              ( பதிற் I )


           2 . பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் நார் முடிச்சேரல் ( பதிற் II )
          
          3 . வேளாவிக் கோமான் தேவிக்கும் , நார் முடிச்சேரனுக்கும் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுக்கும் சேரலாதன்  ( பதிற் III )

          4 . அந்துவன் குலத்துப்  பொறையன் பெருந்தேவிக்குப் பிறந்தவன் செல்வக்கடுங்கோ வழியாதான் ( பதிற் IV )

         5 . செல்வக்கடுங்கோவிற்கும்,  வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை ( பதிற் V )  
 
         6 . குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செல்லைக்கும் பிறந்தவன் இளஞ்சேரலிரும் பொறை.

                      கடைச்சங்க கால எட்டுச்சேர அரசர்களில் ஆறுபேர் கொங்கு வேளாளப் பெண்களின் மக்கள் ஆவர் என்பதை பதிற்றுப் பத்து கூறுகிறது .இவர்களைப் பாடியவர்கள் பலரும் கொங்கு வேளாளர்களே . அதனால் சேரன் குலத்தினர் சேர மரபினர் எனலாம் . குளித்தலை வட்டம் மதில்கரைச் செல்லாண்டியம்மன் சேரர் குலத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலை ,கொற்றனூரிலும் கட்டினர். இந்தச் சேரன் குலப்பெண் கணவன் இறந்ததும் தீப்பாய்ந்து உடன் கட்டை ஏறினாள் . வீர மாத்தியம்மன் தீப்பாய்ந்தம்மன் நாமக்கல் நகரிலும் உள்ளது . சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர் . காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர் . நீலாம்பூர்  தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாக கொண்டனர்.சேரன் செல்வக் கடுங்கோவை கபிலர் சந்தித்த இடம் . நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர் . கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர் ,கோனூர், சிற்றாளத்தூர்,நாமக்கல் , சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம் .

25 . சேடன் குலம் :

                     சேடன் குலத்தினர் கொங்கு நாடெங்கும் பரவியுள்ளனர் . காடையூர் இவர்களின் முதற்காணியூராகும். நெகமம் , பொள்ளாச்சி வட்டங்களில் மிகுதியும் உள்ளனர் . ஒரு கதையுண்டு. காடையூரான் பொருளந்தைக் குலத்தாருக்கு வெள்ளையம்மாளை மணஞ்செய்து கொடுத்தான். தன் மகளுக்கு கால்காணி நிலத்தைச் சீராகக் கொடுத்தான் . பின்னாளில் உடன் பிறந்தார்கள் அதனைப் பிடுங்கிக் கொண்டனர். வெள்ளையம்மாள் நாட்டார் சபையில் முறையிட்டாள். இருமுனையில் சத்தியம் செய்தாள். கழுமுனை அவள் கையில் ஒட்டியது . பாண்டியன் வெள்ளையம்மாளுக்கு வேப்பமாலை அணிவித்துச் சிறப்பித்தான் .சகோதரர்கள் வெள்ளையம்மாளிடம் நிலத்தைக் கொடுத்து வெளியூர் சென்றனர் . இதைக் கார்மேகக் கோளார் சதகத்தில் பாடியுள்ளார் ."காடையில் சேடக்குலத்தான் மகள் மொய்யக் கழுவறைந்து, தெய்வப் பேறு பெற்றாள்" என்கிறது.

26 . செங்கண்ணிக்குலம்: 

                           செங்கண்ணக் கூட்டத்தில் பிரிந்த பங்காளிகள் செங்கண்ணிக்குலம் ஆயினர். மருதுறையில் வாழ் அன்பு மிகு சொல் குண்ணியை என்ற சாசனத்தொடர் குறிக்கும் . செங்கண்ணி, செங்குண்ணி எல்லாம் ஒன்றுதான் . செம்மையான குணங்கொண்டவர்கள் என்பது பொருள். காங்கேய நாட்டுப் பகுதிதான் மருதுறை! கரூர், நாமக்கல் , நெகமம் ,காங்கேயம் ,மருதுறை, மேழிப்பள்ளி, (மோழிப்பள்ளி) கரூர்ப்பட்டி வட்டூர், நல்லிபாளையம் ஆகிய ஊர்கள் , செங்கண்ணியரின் காணி ஊர்களாம். செங்குன்றியர் குலமும் இதில் அடங்கும்.

27 . சோமன் குலம் :

                      சோம சுந்தரன் சிவபெருமான் .சிவபெருமானை வணங்கும் சோமன் குலத்தினர், கொங்கு நாடெங்கும் பரவலாக இருப்பதால் முதற்காணி என்று சொல்வதற்கில்லை .

28 . சிலம்பன் குலம் :

                     சிலம்பு பற்றி புறம் - 36 , 85 , 116 ,158 ஆகிய நான்கு பாடல்களில் கூறப்பட்டுள்ளது .  "செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர் .... தன் ஆண் பொருநை வெண்மணல் சிதைய .... கழங்கிடல் தெற்றி ஆகும். ( புறம் - 36 ) என்று ஆலந்தூர் கிழார் கரூரில் பாடினார். இதை ஆடிய மகளிர் கொங்கு வேளாளப் பெண்களே ".

                     "அச்சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் பொருந்தி நின்று . ( புறம் - 85 ) என்று நக்கண்ணையார் பாடினார் ".


                    " பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் மயில் எழுந்து ஆலவும் ( புறம் -  116 ) என்று கபிலர் பாடுகின்றார்" . கொங்கு நாடு மலை கெழுநாடு. சிலம்பு என்பதற்கு மலை என்று பொருள் . மலை நாட்டு வேளாளர் சிலம்பின் குலத்தினர் ஆயினர். "கழைவளர் சிலம்பின் முதிரத்துக் கிழவன் இயல்தேர்க் குமண " ( புறம் - 158 ) என்று பெருஞ்சித்தரனார் பாடினார் . பாடியவர், பாட்பட்டவர் இருவரும் கொங்கு வேளாளக் கவுண்டர்களே . நாடும் கொங்கு நாடே .சிலம்பன் குலத்தினர் . சிலம்பன் என்றே பெயர் வைத்துக் கொள்கின்றனர். நாமக்கல், சிவிகையூர் , செங்கோடு இவர்களின் காணியூர்களாம்.

29 . சேரலன் குலம் :

                        மாந்தரஞ்சேரல் கரூர் வஞ்சி மாநகரை மற்றும் சேலத்தைக் தலைநகராகக் கொண்டான். இவனையே சேரலன் என்றனர் . சேரன் + தலம் - சேரலம் ஆகியது . சேரலத்தைக் காணிக்கையாகக் கொண்ட வேளாளர்கள் சேரலன் எனப்பட்டனர் . சேரர் தலம் - சேரலமாகி - சேலம் ஆனது. சேரலன் குலத்தினர் சேலம் , நாமக்கல் வட்டத்தில் உள்ளனர் .

30 . தனஞ்செயன் :
                 
தனம் + செல்வம் - எர்ச்செல்வமே செல்வம். பிற செல்வம் அழியும் என்று வேளாளர் புராணம் கூறும். ஏர்த்தொழில் செய் செல்வம் சேர்பவன் தனஞ்செயன் எனப்பட்டான் .  தனஞ்செயன் குலத்தினர் கொங்கு நாடெங்கும் பரந்து, பிரிந்து ,வாழ்வதால் காணி குறிப்பிடவில்லை .

31 . தூரன் குலம் :

                 தூர் என்பது நெல்பயிர் திரண்டிருப்பது . கிணறு ஏரியில் நிறைந்த சேற்றை அகற்றுவதற்கும் தூர் எடுத்தல் என்கிறோம் . வேளாண்மையில் தூர் கட்டி நெற்பயிர் வளர்த்தால் விளைச்சல் பெருகும். வரப்புயர நெல்உயரும் என்றார் அவ்வையார் . உழவுத்தொழிலை உழைப்பால் மிகுதிப்படுத்தி அதிக நெல் விளைச்சல் புரிந்தோர் தூரன் கூட்டத்தினர். துவரை தூரன் ஆகாது . கபிலர் பாடிய புறத்தில் வேளிருள் புலிகடிமால்,இருங்வேள் ஒருவன் , இவன் கொல்லிமலை அடி வாரத்தை ஆண்டவன். கபிலர் இங்கு வந்து பாரி மகளிரை மணந்து கொள்ளக் கேட்டார். இன்று சிவன் ஆண்ட ஊர் புலிக்கரட்டுப் புதூர் எனப்படுகிறது . இவனது புலிக்குத்திக்கல் சேலம் தொல்பொருள் துறையில் உள்ளது.
                துவரை நாட்டு வேளாளன் தூரர்கள் என்பது தவறு. மைசூரைச் சேர்ந்த ஊர் அது . கன்னட நாட்டுக் காமண்டியர்கள் கவுண்டர்கள் அல்லர் . ஈரோடு, வெள்ளக்கோயில் , நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் தூரன்பாடி. தூரன் பாடியே இவர்களின்  முதர்காணியாகும். தூரை குலம் தூரன் குலம் ஆனது . துவரை குலம் தூரன் குலம் ஆகாது . வெள்ளக்கோயில் அருகில் மரந்தை புரியில் தூரன் குலத்தினர் மாந்தீசன் கோவில் கட்டினர் . தூரன் என்னும் மாந்திரை என்ற தொடர் தூரன் குலத்தார் மாந்தரஞ்சேரலிடம் அமைச்சர்களாக இருந்தான் என்பதை உணர்த்தும். செங்கோட்டு அர்த்தனாரீசுவரர் கோவில் பனி தூரன் கூட்டத்தினர் செய்தனர் என திருப்பணிமாலை கூறும்.

                 காங்கேயம் சிவன் மலை முருகனுக்கு , தூரன் குலத்தினரில் குமார நாச்சிமுத்து அறப்பணி செய்தான் தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி  கரியகாளியம்மனையும் , வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும் ,மேழிப்பள்ளி , அண்ணாமாரையும் , குமாரமங்கலம்  அங்காளம்மனையும் தூரன் குலத்தினர் காணி தெய்வங்களாக வைத்துள்ளனர்.
குமாரமங்கலம் , பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு , வெங்கம்பூர், தோட்டணி, பழமங்கலம், வீரகனூர் , நல்லூர் கல்யாணி , காங்கேயம் ,பொன்முடி, தாழம்பாடி , அய்யம்பாளையம் , கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி , பச்சாபாளையம், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாம் .பெரியசாமித்தூரன் அக்குலத்திற்குப் பெருமை தந்தவர் . கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தவர்.

32 . தோடைக்குலம்:

                    குருவாத்துங்கனிடம் தோடைக்குலத்து காகுத்த நல்லான் தன் எடைக்கு எடை பொன் கொடுத்துத் தானம் செய்வித்தானாம். சோழன் இவனைப் பாராட்டினான் என்று வாலால சுந்தரக் கவி கூறுவர் இவர்களின் முதர்காணி பாப்பினி குலதெய்வம் பச்சை நாயகி அம்மன் . பேரூர் பட்டீசுவரன் பச்சை நாயகி அம்மன் கோவில் இவர்களின் தெய்வமாம் . பழநி, கூத்தம் பூண்டி அத்தனூர் அம்மன்  கோயிலும் தோடைக் குலத்தார்க்கு காணி உரிமையுண்டு . கஞ்சிக் கோயில் , பாப்பினி கன்னிவாடி , காலமங்கலம் , முழசி, கொளாநல்லி, நசியனூர் ,, மணியனூர் , கொன்றையாறு, தகடைப்பாடி , ஆலந்தூர் , பட்டணம், கலங்காணி ஆகிய ஊர்கள் இவர்களின் காணியூர்களாம் .

33 . நீருண்ணியர் குலம்:

                       ஊருணி கிணறு, அதுபோல் நீருண்ணியர்குலம் உள்ளது. ஊரில் உண்ணு நீர் கிணறு தோண்டி வைத்த சிறப்பால் இந்த வேளாளர்கள் நீருண்ணியர்குலம் எனப்பட்டனர். "மகிழ்வுடன் திகழ்பரவு நீருண்ணியை..." ஊரார் மகிழ்ந்திருக்க நீருணி அமைத்த இவர்கள் காங்கேய நாட்டு வள்ளியரச்சில் முதற்காணி கொண்டவர். ஆவும், மாவும் உண்ண நீர் வைத்தவர்கள். பொங்கலூர் நமன் ஏரியில் காணி கொண்டவர்கள் . பொன்னி வாடிப் பட்டயம் நீருண்ணியர் கருப்பக் கவுண்டர் குறிக்கப்பட்டார்.

                    தாரமங்கலத்தைக் கெட்டி முதலிகள் ஆண்டனர். 1274  இல் வாழ்ந்த வீர ராமநாதன் காலக்கல்வெட்டு நீருணி இளையான் முதலாக ஆறுபேர் .இளமீகரமுடைய நாயனாருக்கு தேவதானாம் செய்தானாம். 1261 இல் கொள்கை ஆண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு நீருணி இளையான் நல்ல உடையப்பன் பெற்றோர் பெயரில் சதுர்வேதி மங்கலம் `அமைத்தானாம் `. சதுர்வேதி மங்கலத்தில் செய்ய பெருமாள் ஏறி நீர் பாயும் நான் கெல்லையும் இறையிரியாகக் கொடுத்தான். பாப்பிணியும், வள்ளியறைச்சலும் நீருண்ணிக் குலத்தார் காணிகளாகும்.

34 . பனங்காடைக் குலம்:

                      காங்கேய நாட்டுக் காடை ஊரை உருவாக்கியவர்கள் காடைக் குலத்தினர். இவர்கள் பல ஊர்களுக்கும் சென்றனர். ஆத்தூர் , பவித்திரம், கீரனூர், பெருந்துறை ஆகிய ஊர்களுக்கும் சென்றனர். அதனால் ஆத்தூர், காடை, கீரனூர் காடை என்று பதினெட்டுக் காடையகப் பிரித்தனர். கொங்கேங்கும் பனைமரம் உள்ளது .எந்த வறட்சியையும் தாங்கி இருக்கும் பனை மரங்களை , புன்செய் நிலா வரம்புகளில் வைத்து வளர்ப்பது ஒரு கலையாகும் . பனமரத்துப்பட்டி , பனமரத்துப்பாளையம் ஆகிய ஊர்களை அறிந்தால் இதை உணரலாம். பனம்பூ சேரரின் அடையாளப் பூ !  பனைவளர்த்தக் காடையர் பனங்காடை ஆயினர்.
                 "ஆத்தூரில் இருக்கும் கொங்கு வேளாளரில் பனங்காடைக் கோத்திரம் , முத்து நஞ்சப்பக் கவுண்டர் மகன் சோழியப்பக் கவுண்டர் " என்று நல்லோர் 15 ஆம் நூற்றாண்டு பட்டயம் கூறும். எழுமாத்தூர் பனங்காடைக் குலத்தான் பொங்கியாக் கவுண்டன், சேவூர் வீரவிக்கிரம சோழியாக் கவுண்டரின் அவிநாசி, திருமுருகன் பூண்டி ஆகிய ஊர்களை 5000 பொன்கொடுத்துப் பதிவு செய்தானாம் . அவ்வூர்ச் சாசனம் இதைக் கூறும்.
                  மதுரை நாயக்கன் மன்னன் 24000 பொன் வரிகட்ட ஆணை சோழியாண்டருக்கு அனுப்பினான். இயலாமையால் விழித்தான் . எழுமாத்தூர் பனங்காடை பொங்கியாக் கவுண்டன் 5000 பொன்கொடுத்து உதவினான் . மருதுறை ஆந்தையன் செல்லப்பக் கவுண்டன் 5000 பொன் கொடுத்தான் . தக்க சமயத்தில் உதவியவர்களுக்கு இரு ஊர்களை பதிவு செய்து கொடுத்தான் . பனங்காடையர் பற்றி மெய்க் கீர்த்தி பற்றிப் பட்டயம், சிறப்பிக்கும். உறையூர்ச் சோழன் இராசேந்திரன் எழுமாத்தூர் பனங்காடை குலத்து முத்துக் காங்கேய கவுண்டர் மகன் பொன் கவுண்டருக்கு முடிசூட்டி வைத்தானாம் .சேலம் மாவட்டப் பனங்காடையர் ஒன்று சேர்ந்து செங்கோடு அர்த்த நாரீசனுக்கு நந்தவனம் அமைத்து மலரும், பாலும் கொடுத்தார்கள் என்று பூங்காப் பட்டயம் கூறும் .கொன்றையாற்றுப் பனங்காடையர், தனிப் புலவர்களை வைத்துக் கொண்டனர் . `பனங்காடை மெச்சன்` புலவன் பெயராகும். முதற்காணி பனை நிறைந்த கரூராம் ! சோழியம்மனை அவர்கள் வணங்கினர் எழுமாத்தூரார் பனங்காடையர் பொன்காளியம்மனை வழிபட்டனர். ஆத்தூர், எழுமாத்தூர், மருதுறை , கொடுமலை , பண்ணறை, முகுந்தனூர், திருமுருகன் பூண்டி ,அவிநாசி, பனங்காடையர் காணிகளாம்.

35 . பண்ணைக்குலம்:

                       கொங்கு வெள்ளாளன் ஆட்டுப்பண்ணை ,மாட்டுப் பண்ணைகளை வைத்துப் பாதுகாத்தவர்கள் . பெரிய நிலத்திற்குரியவன் பண்ணைக்காரன் எனப்பட்டான் . வயலில் பணி செய்வோன் பண்ணை ஆள் எனப்பட்டான் . பெருநிலக் கிழாரானவர் பண்ணைக் குலத்தினர் ஆயினர். பண்ணைக் குலத்தினர் சோழனுக்கு படைமக்களாக இருந்தனர். குளித்தலை வட்டம் ஆந்திப நல்லூரில் பண்ணையார் வாழ்ந்தனர் என்று வாலசுந்தரக் கவி கூறுவார். இருவருக்கு கொங்கு மண்டல சதகம்பாட இந்தப் பண்ணையார் உதவினராம். பண்ணைகோன் வெண்ணெய் நல்லூர் என்று நூற்பாயிரம் கூறம். பண்ணை குலத்தோர் பண்ணைக்கீரை உண்ணார். பண்ணைகுல சடையப்ப வள்ளல் இராமாயணம் பாடக் கம்பருக்கு உதவினான் . நாமக்கல் மாவட்டம் ஏழூர் மும்முடிச் சோழமண்டலம் எனப்பட்டது. இதுதான் பண்ணைக் குலத்தாரின் முதற்காணியூராகும் . ஏழூர் நாடு தலைநகராக இருந்தது . 3 ஊர்கள் அதில் அடங்கியிருந்தது . பல ஆண்டுகள் இதனை ஆண்ட காரணத்தால் நாட்டார் எனப்பட்டனர். ஏழூர் நாட்டுக் கவுண்டர்களின் குலதெய்வம் பண்ணையம்மன், கொங்கு 24  நாட்டார்களும் இவர்களை முன்னிலைப் படுத்தியே மணச் சடங்கைத் துவக்கினர். நாட்டுக்கல் வழிபாடு இதன் காரணமாகவே வந்தது. வெளியன் குலத்தார் ராசிபுரத்தில் இருந்தனர் . மோரூர் கண்ணன் குலத்தார், பருத்திப் பள்ளி செல்லன் குலத்தார் ஆகியோர்களுக்கு வெளியன் குலத்தார் பெண் கொடுத்தனர் ; கட்டினர். பொருளந்தையர் ஏழூரை ஏற்றதால், பண்ணையர் கொங்கெங்கும் பரவினர். பண்ணைக் குலத்துக் காலிங்கராயன் அவன் பெயரால் கால்வாய் அமைத்தான் . ஈரோடு வட்டத்தில் ஏழூர் , கீரம்பூர், அனுமன் பள்ளி , கரூர் , தும்மங்குறிச்சி, தாழம்பாடி , வாழவந்தி , ஆகிய ஊர்கள் பண்ணைக் குலத்தாரின் காணியூர்களாம்.

36 . பதரியர் குலம் :

                       பதரிக் குலத்தாரின் காணியூர் , காங்கேயம் , அகிலாண்டபுரம் ஆயிஅம்மன் இவர்களின் குலதெய்வம் . காங்கேய நாட்டுக்காணிப் பாடல் , `சாத்தந்தை, பதரி ..... ` என்று பட்டியலிடும் .
                      பதர் இன்றி நெல்விளைப்போர் பதரியர் எனப்பட்டனர் . பதர் இன்றி நெல் விளைவிப்போர் குறைவு . அதனாலோ என்னவோ பதரியர் பரவலாகச் சிலரே உள்ளனர் . கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஊர் காங்கேயம் . அதனைக் காணியூராகப் பெற்றவர்களே !

37 . பயிரன் குலம்:

                      பயிர் செய்து வாழ்வோன் பயிரன். கொங்கு வேளாளர்களில் பயிர்த் தொழிலையே நம்பி வாழ்கின்றவர்கள் . புறநானுற்றில் "நெடுமான் நெற்றின், பைம்பயறு உதிர்த்த " ( புறம் - 297 ) என்று தொடர் வருகிறது .பைம்பயறு - பாசிப்பயறு .பயறு வகைகளைச் சிறப்பாகப் பயிரிடும் குலத்தினர் பயிரன் குலத்தினர் என்றும் கூறலாம் . `படியளந்துண்ணும் பயிரன்` எனும் தொடர் இவர்கள் புகழ் கூறும் . அன்னக் கொடி உடையவர்கள் என்பர்.
                      சுந்தர பாண்டியன் கொங்கு நாட்டை ஆண்டான் . உத்தமச் சோழன் படையெடுத்து வந்தான். சேர , சோழ, பாண்டியர்களுக்கு இந்தக் கொங்கு நாட்டின் மீது எப்போதும் நாட்டம் இருக்கும் . கொங்கு நாடு காரணமாவே , மூவேந்தர் பகை தொடர்ந்தது . பாண்டியன் தோற்றான் . காரையூர் சர்க்கரைப் பாண்டியனுக்கு உதவியாகப் போர் மேல் சென்றான் . சோழன் தோற்றான் . அதனால் மகிழ்ந்த பாண்டியன் கரியான் சர்க்கரைக்கு `உத்தமக் காமிண்டன் ` என்ற பட்டம் கொடுத்தான் . காரையூர் , வல்லியரைச்சல்,முத்தூர் , மருதுறை ஆகிய ஊர்களை ஆளும் உரிமை நல்கினான் . வேப்ப மாலை சூட்டினான். மீன் கொடி தந்து காங்கேய நாட்டுப் பட்டக்காரர் ஆக்கினான். `நல்லசேனாபதி ` என்ற விருது அளித்தான் , அதுமுதல் 29 வழிமுறையினர் பாண்டி மன்னர்களின் படைத் தளபதிகளாக இருந்தனர். திறை செலுத்தினர் . பாண்டியர்கள் சார்பில் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தார்கள் . `பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்கள் ` பேரும் புகழும் பெற்று கொங்கினத் தலைவர்களாகவும் இருந்தனர் . பயிரன் குலக்காளியண்ணக் கவுண்டர் சிவபெருமானையே வணங்கினர். மேல் பூந்துறை நாட்டிற்கும் , காங்கேய நாட்டிற்கும் முல்லைப் போர் இருந்தது . காங்கேய நாட்டாரும் , பூந்துறை நாட்டாரும் வஞ்சியங் குளம், சேனாபதி பாளையம் அருகில் சண்டை  நடந்தது. பயிரன் குலத்தார் போரிட்டு காங்கேயத்தை தக்க வைத்தனர் . ஆனூர் , பவுத்திரம் , பாலத்தொழுவு , பழையக்  கோட்டை , பரஞ்சேர்வழி , வெள்ளோடு வெள்ளியணை, கொன்றையாறு , கொடுமணல் , நாமக்கல் ஆகியன பயிரன் குலத்தாரின் காணி ஊர்களாம் .

38 . பதுமன் குலம் :

                       கொங்கு 24 நாடுகளில் ஒன்று வையாவி நாடு. திருஆவின் குடிநாடும் இதுவே கொங்கு வேளாளக் கவுண்டன் பதுமன் என்பவன் இதனை ஆண்டான். சேரர்களுக்கு இவன் தன் மகளைக் கொடுத்தான். என்று பதிற்றுப் பத்து கூறும். உதியன் சேரலாதவனுக்கும் வெளியன் வேண்மாள் நல்லினிக்கும் இமயவரம்பன் பிறந்தான் . இமயவரம்பன் வேளாவிக் கோமான் பதுமன் தேவியை இரண்டாம் மனைவியாகப் பெற்றான் . அவன் தம்பியும் , வேளாவிக் கோமான் பதுமன் தேவியை மணந்தான் . பல்யானைச் செல்கேழுக் குட்டுவன் அவன். (பதிற் - 111 )  பல்யானைச் செல்கேழுக் குட்டுவன் மக்கள் இருவர் . நார்முடிச்சேரல் , ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் . ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குச் செல்வக் கடுங்கோ பிறந்தான் . செல்வக்கடுங்கோவிற்கும் வேளாவிக் கோமான் பதுமன் மகன் பதுமன் தேவிக்கும் பெருஞ்சேரலிரும் பொறை பிறந்தான். ( பதிற் - 111 )  பெருஞ்சேரலிரும் பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள்  அந்துவன் செல்லைக்கும் இளஞ்சேரல் இரும்பொறை பிறந்தான் ( பதிற் - 111 ) . எனவே ஐந்து சேரமன்னர்கள் வெள்ளாளக் கவுண்டர் பெண்களின் பிள்ளைகள் ஆகின்றனர்.

                    சங்க காலப் புலவர்களில் பதுமனார், பெரும் பதுமனார் ஆகிய இருவர் பதுமன் கூட்டத்தினரே என அறிகிறோம் . காங்கேய நாட்டிற்கு , பதுமன் குலத்தாரும் காணியாளர்களாம் . காணிப்பாடல் பதுமனை நான்காவதாகக் கூறுகிறது . காங்கேயத்தை முதல் காணியாக்கிக் கொண்ட பதுமந்தன் வையாவி நாட்டில் அமர்ந்தனர். ஆயி அம்மன் , செல்லியம்மன் , அண்ணன்மார் , நாட்டராயன் ஆகிய தெய்வங்களை வணங்குகின்றனர்.

39 . பனையன் குலம் :

                             கொங்கு நாடெங்கும் பனைமரங்கள் ஆளுமை செய்கின்றன. அதனை வளர்பவர்கள் வெள்ளாளர்கள் . அதை அடக்கி , கல்லும், நுங்கும் தருவோர் சாணார்கள் . இது இல்லாத காணிகளே இல்லை . பண்ணை பாராதவன் பனையைப் பார்ப்பானாம் . கொங்கு நாட்டுப் பழமொழி இது . பண்ணை பயன்தராத போது பனை பயன் தந்து காக்கும் . ஆணைப்பாழி பனையன் குலத்தாரின் முதற்காணியூர் , அருங்கரை , பாலமேடு , மொஞ்சனூர், பழைய பாளையம் , சாணார்பாளையம் , இவர்களின் பிற காணியூர்களாம் .

40 . பாண்டியன் குலம் :

                                பண்டு , தொன்மை குறிக்கும் சொல், பாண்டு என்பது ஒரு நோய் . கொங்கு நாட்டுக் கொடுங்கூர். கொடுமுடி திருப்பாண்டிக் கொடுமுடி எனப்படுகிறது . பண்டி - வயிறு , பண்டிதர் நோய், தீர்ப்போன் புலவன் என்று பொருள் தரும். பாண்டியன் செய்வான் என்ற கலித்தொகைத் தொடர் எருது பூண்டி வண்டி ஓட்டுவான் என்று பொருள் தரும் . கொங்கவள் பாண்டியஞ் செங்கதிர் என்று பெருங்கதை கூறும். மாலையணிந்த மணித் தொழில் பாண்டியம் என்றும் கைபுனை பாண்டியன் கட்டளை பூட்டி  என்றும் கொங்குவேள் கூறுகின்றார் . வேப்பம்ப்பூ மாலை அணியும் பாண்டியர் வேறு. பாண்டு பூட்டி உழுகின்ற பாண்டியர் வேறு . இது இடுகுறிப்பெயர் காரணம் தேட வேண்டாம் பொள்ளாச்சி , சத்தியமங்கலம் ,நசியனூர் , புன்னம் , கொடுமணம் , கொங்கணாபுரம், பாலமேடு ஆகிய ஊர்கள் பாண்டியர் குலத்தினர் காணியூர்களாம் .

41 . பில்லன் குலம் :

                        பல்லான் நன்னிரை புல்லரும் துகள் (பதிற் - 89 -5 ) பசும்புல்வளர்ந்து கானம் முழுதும் கவினுற அதனை ஆர மேய்ந்த ஆனினம் தருக்கி விளையடுகின்றனவாம் . இதனால் புல்லெருதுகள் என்றார் . பல்லான் நல்நிறை புல்லிடம் மேய்ந்து செருக்குடன் விளையாடுகின்றன . புல் என்பது தான் பில் ஆயிற்று . புல்லன் குலம் என்பதே சரி பில்லைக் கூட்டம் என்றும் கூறுவர் .

                      பழைய கோட்டை மன்றாடியார்களுக்கு உதவி செய்த புல்லன் கூட்டத்தினர் `தொண்டை மன்றாடி` என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் . `வள்ளியறைக்கல் பில்லர்களிலே தொண்டைமான் மன்றாடிக் கவுண்டன் ` என்று பழையக் கோட்டைப் பட்டயம் கூறுகிறது . மாந்தரஞ் சேரலுக்கு இந்தப் புல்லன் கூட்டத்தினர் படை உதவி புரிந்தனர் . மாந்தை புகி என்ற ஊரை உண்டாக்கி சாத்தன் கோயில் கட்டுவித்தான் . இந்த நாட்டராயன் கோவில் முதன்மைக் காணியாளர்கள் புல்லன் கூட்டத்தினரே , ஈரோடு தொண்டீசன் கோவில் கல்வெட்டு விக்கிர மன்னன் என்ற பில்லன் கூட்டத்தான் நிலக்கொடை அளித்தானாம் . புல்லன் குலத்தார் வீரபாண்டியன் காலத்தில் பல அறச்செயல்கள் செய்தார்கள் என்றும் கல்வெட்டு உள்ளது. வள்ளியறைச்சல் , சத்தியமங்கலம் , சேமூர் ,அனுமன்பள்ளி , இளம்பிள்ளை , கொன்றையூர் ஆகியன புல்லன் குலத்தார் காணியூர்களாம் .

42 . பவழக்குலம் :

                      தாமரை புரையும் காமாசேவடி, பவழத்தன்ன மேனி வேலங் கொடியோன் முருகனுக்கு, பவழத்தன்ன செம்மையான குணத்தைக் கொண்டவர்கள் பவழக்கூட்டத்தினர் . தாராபுரம் இவர்களது முதன்மைக் காணி. பழனி நறையனூர், கீரனூர் ஆகியனவும் காணி ஊர்களாம் . வானவராயர் சிறப்பினை இவர்கள் பெற்றனர் . வானவராயர் கொங்கு நாட்டின் சிலப் பகுதிகளை ஆட்சி செய்தனர் . 13 ஆம் நூற்றாண்டின் விஜய நகரப் பேரரசு தமிழகத்தை ஆண்டது. பழனிப் பகுதியை ஆண்டவாலராசா கீரனுரை வென்றான் . போரில் தோல்வியுள்ள பவழக்குலத்தினர் . கொங்கெங்கும், பரவினர். அங்கித் தொழவு இரண்டாவது காணியூராகும் . காளியம்மனை வணங்கும் இவர்கள் வேட்டுவப் போரில் செல்லங்குலத்து செம்பொறிச்சிக் கவுண்டருக்கு உதவி செய்து வெற்றி பெற்றனர். பொங்கலூர் நாட்டில் குடிபுகுந்த பவழக் கூட்டத்தினர் அங்கும் காணி கொண்டனர் . கொடு வாயிலில் பவழக் குலத்து வீரன் மாண்ட செய்தியைக் கல்வெட்டுக் கூறுகிறது . சர்க்கார் சாமக் குலத்தில் பவழக் குலத்தினர் காணி கொண்டனர் . பொன் வானவராயக் கவுண்டர் பெயர் கோயில் பாளையத்துக் கல்வெட்டில் இருந்தது. அன்னூர் கல்வெட்டு வானவராயநல்லூரைச் சிவனுக்குப் பவழக் குலத்தான் கொடுத்ததாகக் கூறுகிறது. அங்கித் தொழுவு , கொடுவாயில் , சாமக்குளம், கீரனூர் பேரூர் , கோட்டை மேடு , பழனி தென்பள்ளி , ஆகிய ஊர்கள் இவர்களின் காணிகளாகும்.

43 . பூசன் குலம் :

                   பூசல் என்பதே பூசன் ஆனது , போர் செய்வதையே பூசல் என்றனர். புறத்துறையில் `வெட்சி நிரை கவர்தல் ` என்று வெட்சித் திணை கூறும் .   இதில் பூசல் மாற்று என்ற துறை உள்ளது . ஆநிரை கவர்ந்தார் பூசல் செய்கின்றனர். இதை மாற்றி ஆநிரை மீட்போர் பூசல் செய்வர் . மீட்டல் கரந்தைத் துறையாகும் .`புலம் பெயர்ந்தொளித்த கலையாப்பூசல்` (பதிற் - 44 -12 ) மோகூர் மன்னன் பூசலை செங்குட்டுவன் அடக்கினான் .


                           `கை சுமந்தாலும் பூசல் மாதிரத்து ` (பதிற் - 31 - 3 )
                           `சிறை பொள் பூசலில் புகன்ற ஆயம் ` (பதிற் - 30-19 ) சிறுபோர் பூசல். பெரும்போர் அமர் ` என்கிறது இலக்கியம் .

                போரில் வல்லவர்கள் பூசன் குலத்தினர். மாதிரத்துப் பூசல் செய்பவர் .களப்பிரர் தொண்டை மானை சிறை வைத்தனர் .பூசன் குலத்தினர் போரிட்டுச் சிறைத் தகர்த்து விடுதலை செய்தனர் . தொண்டைமான் என்ற பட்டத்தை பெற்றனர் வாலச்சந்திர கவி இதனைக் கூறினார். வேணாவுடையாக்க கவுண்டர் தென்கரை ஆண்டபோது அச்சுதராயன் மகன் வண்டியில் வந்தான் . காடை , பூச, சேரன் ஆகிய கூட்டத்தினர் எதிர்த்தனர் . 12 ஆண்டுகள் சிறை வைத்தான் .பூசன் குலத்தார் எதிர்த்துக் கேட்டனர் . ராயர் வீரத்தைப் பாராட்டி `மேதகு ` என்ற பட்டம் அளித்தான் . சொல்லாண்மை திகழ் பூசர் என்று அழகுமலைக் குறவஞ்சி கூறும். மூலனூர் பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை அளித்தார்களாம் . ஆவணம் கூறுகிறது . மூலனூர் , புதுப்பை, பகுவாய், அழகாபுரி பெற்றப்பள்ளி , தொண்டாம் முத்தூர் ஆகியன பூசன் குலத்தாரின் காணியூர்களாம். பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம் .

44 . பூந்தந்தைக்குலம் , பூந்தன் குலம் :

                        பூந்தன் குலத்தின் பிரிவுதான் பூந்தந்தைக்குலம் . பூதந்தகுலம் இது காங்கேயக் காணிப்பாடல், சிங்களப் பூந்விதயை என்கிறது. வள்ளியங்காவில் காணி பெற்ற பூந்தை குலத்தினர். காங்கேய நாட்டில் பல ஊர்களுக்கும் சென்றனர். துடுப்பதில் வாரனாசிக்கவுண்டர் செய்த வீரசாகசச் செயல்கள் அவ்வூர் கல்வெட்டு கூறும். பேராற்றல் மிக்க வீரனுக்குப் பெயர் பூதருதல் வழக்கம். பூந்தந்த குலத்தினர் அவ்வாறு பூ பெற்ற சிறப்பினை பெற்றதால் பூந்தன் குடி எனப்பட்டனர். முத்தூரும் இவர்களது காணி.

45 . பெரியன் குலம் :

                         செயற்கரிய செய்வர் பெரியர் என்பது குறள் . கொங்கர்களில் செயற்கரிய செயல் செய்த காரணத்தால் இவர்கள் பெரியன் கூட்டத்தினர் ஆயினர். கவுண்டர்களில் முதன்மையானவர்கள் . மன்றாடியார் மரபு வழி குறிப்பில் ஒரு செய்தி உள்ளது . கொங்கு 24 நாட்டுக்கும் வேணாடர் பெரிய வீட்டுக்காரனாக இருந்த படியினாலே  என்று குறிப்புக் கூறுகிறது .காலிங்கராயன் குறிப்புரையில் இதேபோல் குறிப்புண்டு . "கங்கா குலதிலகன் , காதாள சிரோன்மணி , மேழிக் கொடியோன் , மாளிகை மார்பன் 48 ஆயிரம் கோத்திரத்திற்கும் , முதன்மையாயிருக்கும் பெரிய குலத்தான் " என்று இவர் புகழ் கூறுகிறது . வேணாவுடையார் மரபியல் , " 48 ஆயிரம் கோத்திரத்துக்கும் பெரிய கோத்திரம், தொண்டை மண்டலம் ,79 வளநாடு 24 கோட்டத்துக்கும் பெரிய வீடு " என்று கூறுகிறது .

                       பெரிய குலத்தாரின் முதற்காணி குளித்த நலசிவன் மலையாகுமி பெரிய குலத்தலைவன் கரிகாலனை வளர்த்து அரசனாக்கிய நாமக்கல் வட்டத்து இரும்பிடாத் தலைவர் . பெரிய குலத்தலைவராம்.இரத்தின மூர்த்தி பாடிய விறவிடுதூது. மூவேந்தர் கூடி முதல் வீடன் ஆம் எனவே சீரார் முடிசூட்டி என்று பெரிய குலத்தைப் பாராட்டுகிறது . சோழன் கரிகாலன் தன் மகள் ஆதிமந்தியை அத்திபாளையம் சேரன் ஆட்டன் அத்திக்குப் பெண் கொடுத்தான் . தன் மாமன் இருப்பிடம், தலைவரையும் , பெரியகுலத்தானையும் அனுப்பினான் . பெரிய குலத்தினர் , கொங்கு நாட்டில் ஆதிக்கம் செய்தனர். காங்கேய வெள்ளக்கோயில் , கொடுமுடி , தாராபுரம், மூன்றும் அடங்கிய முத்தூர் கோட்டத்துக் தொண்முதிர் வேளிர்கள் ஆட்டன் அத்தி மீது போர் தொடுத்தனர். கரிகாலனும், இரும்பிடர்த்தலையனும் துணைப் படை அளித்து அத்தியை வெற்றிபெறச் செய்தனர். இரும்பிடர்த் தலையரை வேணாட்டிற்கு அரசனாக்கினான் சேரன். அவன் மரபினர் வேணாடர் என்று அழைக்கப்பட்டனர் . பொறோர் ஏறும் உரிமை நல்கினான் சோழன் . மகளிர்க்கு பொன்னூஞ்சல் ஆடும் உரிமை அளித்தான் . சங்காராண்டம்பாளையம் வேணாவுடையார்கள் இந்த வழி முறையினரே .இவர்களின் மெய்கீர்த்திகள் சிறப்பானவை. காகம், விளக்கேற்றி, கொற்றநூர், முருங்கைத் தொழுவு, சோழ மாதேவி, மேகர மாதேவி, சிவியம்பாளையம் ஆகியன இவர்களின் தொன்மையான காணி ஊர்களாகும். ஊதியூர், பாலத்தொடு, குளுகமன்குடி, குறிச்சி, பெருமாநல்லூர் ஆகிய ஐந்தும் ஆம்.

46. பெருங்குடிக் குலம்:

                     கொங்கு குடியில் பெருமைக்குரிய குடியினர் இவர்கள் என்பதால் பெருங்குடி எனப்பட்டனர். செயற்கரிய செய்தவர்கள் என்பதால் பெருங்குடியர் ஆயினர். பெருங்கலம், பெருங்கிளை, பெருஞ்சிறப்பு பெருமகன் , பெருமான், பெருவிரல் ,பெரும் பெயர் என்ற தொடர்கள் பெருமைபற்றி வந்தனவாம் . கொங்கு நாட்டுக் குடிமக்களில் பெருங்குடியர்களே மிகையாவர்.

47 . பொன்னர் குலம் :

                        பொன்குறை நாட்டிற்கும் கொங்கு வேளாளர்களுக்கும் தொடர்பில்லை . பொன் அமராவதி , பொன் பரப்பு, பொன் களத்தூர் ,பொன்னம்மாபுதூர், பொன்னேரி , இவைகள் எல்லாம் கொங்கு  நாட்டு வேளாளர்கள் காணியூர்கள்தாம். சின்ன பொன்னான், பெரிய பொன்னான் ,பொன்னுசாமி , பொன்னம்மாள் , பொன்னாச்சியம்மன் என்ற பெயர்களை அறியுங்கள் . பொன்னர் குலத்தினர் கொங்கு நாட்டு வேளாளர்களே .நெல்லைப் பொன்னாகக் கருதி விளைவிப்பார்கள் பொன்னங்குலத்திலர் நலமிகு கடம்பநகரில் வாழ் பொன்னகுல பெரியண்ணமால் என்ற செய்தியை அழகு மலைக்குறவஞ்சி கூறும் .

                          " பொங்கலூர் போற்றும் பொன்னர் தம்குலம்வாழ் "

என்பதால் இவர்கள் பொங்கலூர் நாட்டின் காணி பெற்றவர்கள் என்று அறிகிறோம் .


                            " மருவிலா வாலை மன்றாடியாம் பட்டம்"

பெற்றிடும் பொன்னர் என்று அக்குறவஞ்சி கூறுவதால் இவர்கள் மன்றாடிப் பட்டமும் பெற்றார்கள் என்று அறிகிறோம் . நீலகாண்டி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டனர். தாராபுரம் அருகில் பொன்னபுரம் அமைத்தனர். பொன்னகுலத்து முத்து நல்லாக் கவுண்டர் சிவனுக்கு முடிசூட்டினானாம். மாதப்பூர் , பொங்கலூர் , பொன்னபுரம் இவர்களின் காணியூர்கள்தாம்.


48 . பொடியன் குலம் :

                          பொள்ளாச்சி , கொடுமுடி, சாலைப்புதூர் , மாயனூர், மதுக்கரை ஆகியன பொடியன் குலத்தாரின் காணி. பொடி நடை என்பதை அறிக . வெள்ளாளர் கூட்டத்தில் மிகக் குறைந்த அளவே உள்ள பொடியன் குலத்தினர் காரணப் பெயரையே பெற்றனர். பொடி மன்னர் பொடியர் சொற்களை அறியவும் .

49 . பொருள்தந்த குலம் :

                           கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது . செத்தும் கெடுத்தான் சீதக்காதி . இவனும் பொருள் தந்தவன்தான் . கடையேழு வள்ளல்கள் பொருள் தந்தவர்களே . ஆய், நள்ளி, பேகன் , ஆகியோர் மாரியன்ன கொடை கொடுத்தவர்கள் . பசித்து வந்தவர்களுக்கும் , யாசித்து வந்தவர்களுக்கும் வரையாது கொடுத்த வள்ளல்கள் பொருள் தந்த குலத்தினர் . ஆந்தை குலம் பிறழந்து பிரிந்து வந்ததென்பதெல்லாம் கற்பனைக்கதை .பொருள்தந்த குலத்தினர் பலபிரிவாகப் பிரிந்து போயினர் . பிறழந்தை, பொருளந்தை, புறளந்தை என்பதெல்லாம் திரிந்தசொல் மரபுகள் . கரூர் அமராவதிக்கரையில் வாழ்ந்த பொருள்தந்த குலத்தினர் தோட்டக்குறிச்சி மலையம்மனை வழிபட்டனர் . ஏழூரில் உள்ள பண்னையம்மனை பொருள்தந்த குலத்தினர் வழிபட்டனர் . கட்டி, நல்லகட்டி, கட்டியண்ணன் ஆகிய பெயர்களைப் பெற்றவர்கள் பொருள்தந்த குலத்தினரே, கட்டிபாளையம் உள்ளதை அறிக. கருமாபுரம் , பிடாரியூர், காடையூர், முத்தூர், தோட்டக்குறிச்சி , கீரைமடை, விசயமங்களம், கள்ளிப்பட்டி , ஆறுதொழு, ஆலம்பட்டி , பரமத்தி, புன்னம் , பவுத்திரம் , தென்பள்ளி , ஆகியன பொருள் தந்த கூட்டத்தாரின் காணி ஊர்களாம்.

50 . மணியன்
குலம் :
                          கரூரைக் காணியாகக் கொண்ட மணியங்குலத்தார் கொங்கெங்கும் பரவினர். மணியன் குறிச்சியில் காணி பெற்றவர்கள். மணிமாலை ,மணிமந்திரம், மணியாச்சி , மணியம் என்ற சொற்களை அறியவும் .துணிமணி , அணிமணி, சொல்லாட்சி அறிக . ஊரை ஆள்வோர் மணியக்காரர்கள். நாட்டை ஆள்வோர் நாட்டார் . ஊர் மணியக்காரர் மரபுவழியாக ஊரை ஆழ்பவர்கள் . மணியம் ஆளுமை செய்வோர் மணியம் குலத்தினர் ஆயினர். மோகூர் பழையன் கொங்கு வேளாளன். இவனையும் பிற ஏழு வேளாளர்களையும் செங்குட்டுவன் வென்று களவேள்வி செய்தான் என்று பதிற்றுப்பத்து கூறும். நாமக்கல் வட்டத்தில் மணியன் குலத்தினர் . மிகுதியும் உள்ளனர். மோகூர்தான் இன்றைய மோகனூர் . மோகனூர் மணியன், முத்தூர் மணியன் என்று பிரிவு படுத்தினர். காங்கேயம் காணிப்பாடல், அரசர் புகழ் தென் காணியூர் அதில் வரும் மணியனை என்று புகழ்கிறது. கரூர் , மோகனூர், முத்தூர், கோடத்தூர் , இடையாறு , துக்காச்சி , மணியனூர், நல்லிபாளையம் , முத்துக்காபட்டி, நாமக்கலில் மணியன் குலத்தினர் உள்ளனர்.

51 . மயிலர் குலம்:

                       கொங்கு கவுண்டர்களில் குயில், காடை, செம்பூத்து , ஆந்தை ஆகிய பறவைகளைக் கொண்டது போலவே மயிலையும் குலப்பெயராகக் கொண்டனர் . பூத்தவேங்கை வியன் ஏறி மயிலினம், அகவும் நாடர்கள் வேளாளர்கள் குறிஞ்சி வளமுடையது கொங்கு . கொங்கில் குயில் கூவி துயில் எழுப்பும் , மயில் ஆடி மகிழ்வூட்டும் . கொங்கு வேளாளப் பெண்கள் தாம் மயிலின் சாயலில் இருப்பர். நடப்பர் மயிலுக்குப் போர்வை கொடுத்தானே கொங்கு வேளாளன் பேகன் . கொங்கு நாடு பாடிய கபிலர் மயிலாட்டத்தை வியந்து பாடாத இடமில்லை . கரூர், தாராபுரம், மூலனூர் , நடையூர், மணியனூர், தருமாபுரம் , இவர்களின் காணியூர்களாம் .

52 . மாடைக்குலம் :

                         மாடு செல்வம், மாடல்ல மற்றைய உழவர்களின் செல்வமாடு . மாடு + ஐ - மாடை . அழகிய மாடு வளர்த்தவர்கள் . அதனைச் செல்வமாகக் கொண்டவர்கள் . வெள்ளாளர்கள் மாட்டை உயிராக மதித்துப் போற்றும் உழவர் திருநாள் . பொங்கல் மாட்டுப் பொங்கல் வேளாளர்களின் முதன்மையான நாள். மாட்டைச் செல்வமாகப் போற்றியே காங்கேய மக்கள் மாடைக் குலத்தினர் ஆயினர் . காங்கேய நாட்டு வைத்திய நாதசாமி ஆலயக் கல்வெட்டு வெள்ளாளமாடை என்கிறது . வெள்ளக்கோயில் காணிப்பாடல் பிரபு மாடை என்கிறது. குறவஞ்சி பதிமாடை என்கிறது . சிவன்மலை குறவஞ்சியும் மாடைக் குலத்தை அறிவிக்கிறது . காங்கேயம் , வெள்ளக்கோயில், தளிகை , பிள்ளைப்பதி,முத்தாண்டி பாளையம் , பள்ளப்பாளையம் , ஆகியன மாடைக் குலத்தாரின் காணியூர்களாம் .

53 . முத்தன்குலம் :

                       வெள்ளாளர்களில் முத்தாக முதன்மையாக வாழ்ந்தவர்கள் முத்தன் குலத்தினர் ஆயினர் . முத்தனூர் , முத்தூர், முத்துக்காப்பட்டி , முத்துக்காளிப்பட்டி , முத்தாலம்மா , முத்துசாமி , முத்தம்மாள் , முத்தண்ணன் , முத்து என்ற பெயர்களை அறிதல் வேண்டும். முத்தூர்க்காணிப் பாடல் முத்தன் , மணியன் என்று கூறுகிறது . முத்தூர் செல்லாண்டியம்மனும் , முத்தூர் நாச்சியம்மனும் இவர்களின் குலதெய்வங்களாகும். முத்தூர் முத்தன் குலத்தினர் பல்லடம் ,அன்னூர் , கோபி , பொள்ளாச்சி மோகூர், கண்ணபுரம் , உப்பிலியாபுரம் , சோமனூர் , ஆகிய ஊர்களை இவர்கள் காணியூர்களாகப் பெற்றனர் .

54 . மூலன்குலம் :

                     மூலம் - வேர் பஞ்சமும் , ஐந்து மருந்தாகும் மூலிகைகளைக் குறிக்கும் . திருமூலர் கொங்கு வேளாளக் கவுண்டர்தான் .அந்த மரபிலே வந்தவர்கள் மூலம் குலத்தினர் என்பர். மூலவர் சன்னதி என்பர். முதற்கடவுளை மூலவர் என்போம் . மூலநூல் முதல் நூல். ஆகவே வெளிரில் மூலவர்கள் மூலன் குலத்தினர். தென்கரை நாட்டு மூலனூர் ,மூலக் குலத்தாரின் முதற்காணியாகும். பழையக் கோட்டை பட்டக்காரர்கள் மூலனூரைக் கவர்ந்தனர் . அதனால் தான் மூலன் குலத்தார் பெருமாநல்லூர் , பெரும்பழனம் , அவிநாசி , புகல்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் சென்று குடியேறினர் .

55 . மேதிக்குலம் :

                    வெள்ளாளர்களின் துணைத் தொழில் ஆநிரை மேய்த்தல் பான்மடை பெருக்கல் என்றது இலக்கியம் . பான்மடை பெருக்கல் என்றது இலக்கியம் . பான்மடை பெருக்குவோர் மேதி - எருமை மாடுகளையே மிகையாக வளர்த்து பெரும் பண்ணையர்கள் ஆயினர். எருமை நாட்டை ஆண்டவன் எருமையூரன் . பிற்காலத்தவர் மேதி என்றனர். தலையாலங் கானப்போரில் போரிட்ட ஐந்து வேளிருள் எருமையூரன் ஒருவன் . மேதிக் குலத்தார் நாமக்கல் , திருச்செங்கோடு , பெருந்துறை , வெள்ளக்கோயில் , படைவீடு இவர்களின் காணியூர்களாம் எருமப்பட்டி , நாமக்கல் அருகில் ஊராகும் . மைசூர் - எருமையூர் தான் .

56 . வெளியன் குலம் :

                      புல்வெளி , மந்தைவெளி , வீட்டிற்கு வெளியே ,வெளியேபோ ஆகிய சொற்களை அறியவும் , வெளி என்பதற்கு பரந்த இடம் , புறத்திடம் என்று பொருள் . பரந்த உள்ளங்கொண்ட வெள்ளாளர்கள் வெளியன் குலத்தினர் . பரந்து கிடக்கும் வெளியை வெட்டி வெள்ளத்தை விட்டு வெண்மணி விளையும் இடமாக ஆக்குவோர் வெளியர்கள். வெள்ளாளர் வெளரிய உள்ளங் கொண்டதால் வெளியன் என்றனர் . இவர்களது காணியிடம் காங்கேயந்தான் . பெரும்பகுதி குலத்தார்க்கு இந்தக் காங்கேயம் காணி ஆகிறது . கரிய காளியம்மன் இவர்களின் குலதெய்வமாகிறது. சங்க காலத்தில் வெளியன் வேண்மான் சேரனுக்குப் பெண் கொடுத்ததைப் பற்றி பதிற்றுப் பத்து கூறும் . ராசிபுரத்தில் வெளியன் குலத்தார் நிறைந்துள்ளனர் .வெளியன் வேண்மான் ஆய் எயினன் ( அகம் 208 ) வேண்மான் வெளியன் தித்தன் (நற் - 58 ) வெளியன் தித்தன் ( அக - 168 ) எனவே வெளியர்களும் சங்க காலத்து வெள்ளாளர்கள் தாம் என அறிகிறோம் .தித்தனது மரபினன் கரிய பெருமாள் ( 1443 ) வீரப்பிரதாப தேவராயர் ஆண்ட போது இராசிபுரம் கைலாச நாதர் கோவிலுக்கு அத்தனூரை வேதமானியமாக அளித்தானாம் . 18 இல் ராசிபுரம் துளுக்கண்ண கவுண்டர் நீரியினள் இறந்த வணிகன் இறந்தான் . அதற்கு 70 வேளாளர் தீயில் மூழ்கினர். பாவம் கழிய கங்கையில் குளித்தானாம் . இதனை வால சுந்தரக் கவி கூறுகிறார் . வெளிய குலத்தினரை ராசிபுர நாட்டுக் கவுண்டர்கள் ஆயினர் . சாசனங்களும் , பருத்திப்பள்ளியும் இந்த நாட்டார்கள் காணி கொண்டனர் . அத்தனூர் பத்திர காளியம்மனும் ,கைலாச நாதரும் வெளியகுலத்தாரின் தெய்வங்களாம் . வெளிய குலத்தார் பாச்சலூரன் , செண்பகராயன், துளுக்கண்ணர், ஆலத்தூரன் என்று பிரிந்தனராம். தொண்டைமான் கவுண்டன் இறந்ததும் மனைவி திருமணி முத்தாறில் தீயில் புகுந்ததிறந்தாளாம். தீப்பாய்ந்தம்மன் கோயில் கட்டப்பட்டது . இது நாமக்கல்லில் உள்ளது .செல்லாண்டியம்மன் வெளிய குலத்தாரின் குலதெய்வமாம்  . தீண்ட மங்கலத்தாருக்கும் இந்த அம்மன் குலதெய்வமாகிறாள். பரஞ்சேர்வழி , ராசிபுரம் , கீரனூர் , மல்லசமுதித்திரம், காக்காவேரி , ஆகியன இவர்களின் காணியூர்களாம் .

57 . வெண்ணைக்குலம் :

                        வெள்ளாளன்  ஆ, எருமை பால் , வெண்ணெய் , நெய்களுக்கு மேலாண்மை உடையவன் . வெண்மைக்கு எடுத்துக் காட்டு  வெண்ணைதான் . வெண்ணை போல் வெள்ளை உள்ளமும், பதமான குணமும் கொண்டதால் இவர்கள் வெண்ணை குலமாயினர். வெண்ணை நல்லூர் , வெண்ணெய் மலை , ஊர்ப் பெயர்களை அறிக . ` பண்ணை நிறைந்தால் வெண்ணை பெருகும் ` பழமொழி இது. காங்கேயம் , கரூர், புதுப்பாளையம் , பொள்ளாச்சி , கோபி , இவர்களின் காணியூர்களாம் .

58 . வேந்தன் குலம் :

                         காங்கேய நாட்டுக் காணிப்பாடல் பெருங்குடி , வேந்தன் , செங்கண்ணன் என்று பட்டியலிடும் . காங்கேயம் இவர்களின் தலைமையிடம் பொள்ளாச்சி காணியிடமாகும். "வேந்தன் மேயத்தீம்புனல் உலகம் " என்கிறது தொல்காப்பியம் . தீம்புனல் உலகம் மருதநிலம் .மருதநிலத்தின் வேந்தர்கள் . அரசர்கள் வெள்ளாளர்கள் தாம். வெள்ளத்தை அடக்கிப் பயிர்த் தொழில் புரிந்தவன் கவுண்டன் தான் மக்களை ஆள்பவன் வேந்தன் ஆனது போல் வெள்ளத்தை ஆள்பவன் வேந்தன் ஆகியுள்ளான் . மூவேந்தர் , பாவேந்தர், நாவேந்தர் போல ஆவேந்தர் இந்த வேந்தன் குலத்தினரே .

59 . வெளையன் குலம் :

                          இது விளையன் குலம் ஆகும். விலையன் குலம் ஆகாது . வெள்ளாளன் தன் உழைப்பால் நவ தானியங்களையும் விளையவைக்கின்றானே . அதனால் தான் விளையன் குலம் என்றனர் . பிற விளக்கம் தேவையில்லை . விலைபோகாத வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை. அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை . அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர்  விலை போக மாட்டார்கள் . மானத்தைக் காக்க உயிரை விலையாகக் கொடுப்பர். தலைய நல்லூரை முதற்காணியாகக் கொண்ட விளையன் குலத்தார் கொங்கு எங்கும் பரவினாலும் நாமக்கல் , திருச்செங்கோடு , பகுதியில் நிறைந்துள்ளார் . முத்துகாபட்டியில் அனைவரும் விளையங் குலத்தார்கள் .சிலர் மட்டும் செம்பூத்து மணியன் குலத்தார் . செல்லாண்டியம்மனை வணங்கினாலும்  குல தெய்வமாக அண்ணன்மார் சாமிகளையே வைத்துள்ளனர் . மின்னாம்பள்ளி ஆத்தூர் , மன்மங்கை , ஆரியர், குமாரமங்கலம் , பஞ்சமாதேவி , சென்னிமலை , சேலம், இடைப்பாடி ,கொன்றையாறு , சாத்தனூர் , துத்திக் குளம், பொங்கலூர் , ஆகிய ஊர்கள் இவர்களின் காணியூர்களாம் .

60 . வில்லிக்குலம்:
                     
வில்லாற்றல் மிக்கவர்கள் வில்லிக் குலத்தார் . பொன்னர் , சங்கர்,  தீரன் ஆகியோரும் வில்லாற்றல் மிக்கவர்கள்தாம். வில்லி பாரதம் ,பாடியவர் வில்லிக்குலத்து வெள்ளாளரே . வெள்ளக்கோயில் காணிப்பாடல், வரிசை திகழ் வில்லியை என்கிறது . வள்ளி நகர் வில்லியை என்ற தொடரும் சான்றாகும் . நாமக்கல் வட்டத்தில் வில்லிபுரம் என்ற ஊர் உள்ளது . வில்லிக் குலத்து வேலக்கவுண்டர் பற்றி குமாரமங்கல ஆவணம் கூறும் . கொங்குகெங்கும் பரவியுள்ளனர் .

                     தொன்மையான குடிப் பெயர் 60 தான் . 13 ஆம் நூற்றாண்டில் சதக நூல்கள் படி 96 குடிகள் . இன்றைய கணக்கில் 142  குடிப் பெயர்கள்  வருகின்றன . 60 குலப்பெயர்கள் பெருகிய மக்கள் தொகையால் 142 ஆக உருவாயின . அதன் அடிப்படையிலேயே மாறியும் , சிதைந்தும் , விரிந்தும் அமைந்துள்ளன . புதியன புகுதலை ஏற்பது நல்லது .
 
 
 
61.நச்சந்தை:
            சாத்தன் தந்தை சாத்தந்தை குலத்திலிருந்து பிரிந்து வந்தது . இது நலச்சந்தை ஆகி நச்சந்தை ஆகி விட்டது . காலத்திற்கேற்ப சொல் சிதைவடைந்து மாறிவிடுகிறது . கோயம்புத்தூர் கோவை ஆனது குரூர் நசியனர் நாகம்பள்ளி குன்றத்தூர் இவர்களின் காணிகளாகும்.

62.ஒழக்கன்குலம் :

             ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார் வள்ளுவர் . உழுகின்றவன் எதிலும் நேராக உழவு செய்தல் போல் ஒழுக்கம் உடையவனாக இருப்பான் உழவோன் ஒழக்கன் ஆவதில்லை . ஒழுக்கமுடைய உழவர் ஒழக்கர் குடி ஆகின்றான் . தாராபுரம் , பொள்ளாச்சி , உடுமலை , பழனி , ஆத்தூர் , வட்டங்களில் காணி கொண்டவர்கள் இவர்கள் .

63.படுகுன்னி
குலம் :
               உன்னுதல் என்பதற்கு நினைத்தல்என்று பொருள் . எதையும் எண்ணிப்பார்த்து செய்கின்றவர்கள் படுகுன்னியர் படு மிகுதிப்பொருள் தரும் உரிச்சொல்லாக்கும் கொங்கு எங்கும் பரவி உள்ளனர் .

64.சங்கர்
குலம் :
           பொன்னர் சங்கர் உடன்பிறந்தோர் பொருங்குடியில் இருந்து பிரிந்த காணியாளர்கள் பொன்னர் சங்கர் பெருங்குடி மக்களின் காணிகளே இவர்களுக்கும் உரியது .

65.காடர் குலம் :
           காடுறை வாழ்நர் காடர் எனப்பட்டனர் . முல்லை நிலத்து வேளாளர்கள் காடர் எனலாம் . காடெல்லாம் கழனியாக்கிய பெருமை இவர்களுக்குண்டு . குன்றுடையான் போல காட்டை கழனியாக்கியவர்கள் காடர் எனப்பட்டனர் காடை கழனியாக்கியவர்கள் காடர் எனப்பட்டனர். காடை குலத்தவர் வேறு , காடர் வேறு .

66.கோவர்
குலம் :
            கோ அரசன் கொங்கில் அரசாண்ட குறுநில மன்னர் வழியினர் கோவர் எனப்பட்டனர் கோனூர் காணியில் வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள் .

67.பாவலர் 
குலம் :
            ஆ கெழகொங்கர் பாவேந்தராகவும் இருந்தனர் . பாவலர் பலதைக்கண்டது கொங்கு பாவலர் வழிமுறையினர் இவர்கள் இவர்கள்தாம் திருமணத்திற்குபடபின் புலவராக வாழ்த்து கூறுவோர் .

68.நாரைக்குலம் குலம் :
            நாரை கொங்கு பறவை மருதநிலத்துப் பறவை ஆந்தை , செம்போத்து போல நாரை பெயரை ஏற்றவர்கள் இவர்கள் நாராய்நாராய் செங்கல் நாராய் என்று புறம்பாடும் நாரை என்பது நாடை என்று மாறியுள்ளது .

69.வாச்சர்குலம்
குலம் :
             உழவுத் தொழிலையே வாய்ப்பாகக் கொண்டு வாழுவோர் வாச்சர் எனப்பட்டனர் . வாய்ச்சர் என்ற சொல்லே வாச்சர் எனப்பட்டது . வாச்சான் போச்சான் என்ற தொடர் கொங்கில் உள்ளது உழவுத்தொழிலில் செல்வம் பெறுதல் வாச்சன் போச்சான் தான் வரும் அல்லது போகும் .

70.சேகர்குலம்
குலம் :
          சே என்றால் காளை கலித்தொகை செம்மை நிறக்காளையே சே என்றே கூறுகிறது . முல்லை நில மக்கள் சே அடக்கி மணஞ்செய்தல் உண்டு .

71.புத்தன் குலம் :
           கொற்றன் கொத்தன் ஆயினான் புற்றன் புத்தன் ஆயினான் புல்லை நீக்கி நெல்லை வ்ளைவித்தன் புத்தன் ஆனான் .புத்தனை வணங்கியவன் புத்தன் ஆகவில்லை .

72.சிலம்பர்
குலம் :
              செலம்பன் கூட்டத்தினர் சிலம்பர் ஆயினர் . கொழிசிலம்பர் என்பர் மணிவாசகர் . மோழி சிலம்பர் சிலம்பும் கொங்கு கெங்கும் செலம்பன்குலத்தினர் .

73.கண்ணந்தை
குலம் :
             ஆந்தை குலத்தினரும் கண்ணன் குலத்தினரும் இணைந்து தோன்றியகுலம். கண்ணந்தை  அமராவதி ஆற்றங்கரையோர ஊர்களைக் காணிக் கொண்டவர்கள் இவர்கள் .

74.அழகன் குலம் :
            அழதுநாட்சியம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அழகன் கூட்டத்தினர் . பொத்தனூர் செட்டிபாளையம் பாலத்துறை  ஆகிய ஊர்களில் காணி கொண்டவர்கள் இவர்கள் அழகுமலை குறவஞ்சி பாடியவர் இக்குலத்தினரே.

75.வரிவழி
குலம் :
          விழியன் கூட்டத்தின் பிரிவினர் தாம் வரிவிழி கூட்டத்தினர் தண்டல் நாயகர்களாக இருந்தனர் . வரிவிளிப்போர் இவர்கள் வரி விழி ஆனது .

76.பனையன்
குலம் :
          தினையளவு நன்றி செய்தாலும் பனையளவாக மதிப்பவர்கள் இவர்கள் . திணை விளைவிக்க பனையாக உழைப்பவர்கள். பனங்காடர் குலத்தின் பிரிவினர் இவர்கள் .

77.பூந்தாரன்
குலம் :
         பனம்பூமாலை சேரர்க்குரியது. சேரனுக்கு முடிசூட்டும் பெண் கொடுக்கும் உரிமையும் பெற்றவர்கள் இவர்கள் . பூந்துறை நாட்டினர் இவர்கள் .

78.கணக்கர்
குலம் :
           நாட்டாண்மை செய்தவர்களிடம் கணக்கு பார்த்தவர்கள் கணக்கர்கள் . கணக்கிட்டு என்னி விதைப்பவர்கள் இவர்கள் . கண்ணந்தை குலத்தோடு தொடர்புடையவர்கள் .

79.சூழகுலத்தான்
குலம் :
             சூல் கொண்ட மேகம் மழை நோக்கி வாழ்பவன் சூழ குலத்தோன் சூல் கொண்டு அவினைப்புரந்து செல்வம் சேர்ப்பவன் இவனே சூலாயுதம் கொண்டவனை வழிபடும் இவர்கள் சூழகுலத்தான் ஆயினர் .

80.மீனவன்
குலம் :
            வெள்ளி முளைத்திட வெள்ளாமை செய்தவன் மீனவன் . மீன் கண்டு உழவு செய்ய இறைக்கச் செல்பவர்கள் மீனவன் ஆயினர் . மீன்பிடிப்போர் அல்லர் .

81.பைதரி
குலம் :
            காங்கேய நாட்டில் அகிலாண்டரம் உள்ளது . அங்குள்ள பதிரியர் ஆயி அம்மனை வழிபடுவர் . பதரிகுலத்தின்  வழியினர் . இந்த பைதிரியர்கள் காங்கேய நாடு இவர்களுக்கும் காணி நாடாகும் .

82.பிறழந்தை
குலம் :
             பொருள்தந்த குலத்தினர் வழியில் வந்தவர்கள் பிறழந்தை குலத்தினர் . பிறழந்தை குலத்தினரும் இவர்களுக்கும் ஒருவழி முறையினர் ஆந்தை குலத்திலிருந்து பிரிந்து வந்தவர்கள் இவர்கள் . மோரூர் காங்கேயம் இவர்களின் காணிகளாகும்  .

83.கோரக்கர்
குலம் :
            சித்தர்களின் கோரக்க முனிவர் ஒருவர் . பதினெண்சித்தர்களில் இவர் ஒருவர் இந்த வழியில் வந்தவர்கள் கோரக்கர் எனப்பட்டனர் .

84.குனியன்
குலம் :
            குனிந்ததலை நிமிராது காணியில் உழைத்தும் பயன்பெறாது குணித்த புருவமும் கொவ்வை செவ்வாயும் உடையாளை வணங்கி வாழ்க்கை நடத்தியவர்கள் இவர்கள் . குணியக் குணிய கதிரவன் கதிரவன் குட்டினாலும் பணிந்து பயிர் செய்பவர்கள் இவர்கள்.

85.நேரியன்
குலம் : 
             நேரிய வழி நடந்து ஏரினை நம்பி வாழ்பவர்கள் நேரியர் எனப்பட்டனர் . நேரியத்தொழில் ஏரினைப் பூட்டலே.

86.சோதியர்
குலம் :
             கதிரவன் சோதிகண்டு வணங்கி ஏரிடை உழைப்போர் சோதியர் ஆயினர் . சோதியாய் சுடராய் சுடரொளி விளக்காய் இருப்பவனை வழிபடுகின்றவர்கள் .
87.எண்ணெய் குலம் :
               நன்செய் நிலத்தில் பணியற்ற போது புன்செய் நிலத்தில் எள்ளினை விதைப்பவர்கள் இவர்கள் ஆ நெய் கிட்டாதபோது எள்நெய் பயன்படுத்துவோர் இவர்கள் .

88.வாணர்
குலம் :
            காடுறைவாழ்நர் வானரப்படை ஆயினர் சேரர்வானவர் எனப்பட்டனர் சேரங்குலத்தார் வானவர் ஆயினர் . கொங்கு நாடெங்கும் பரவலாக வாழ்பவர்களுக்கு காணி சொல்லப்படவில்லை

89.ஆதினர்
குலம் :
            ஆதி அந்துவன் குலத்தினர் போல ஆதியிலே கொங்கு மண்ணில் காணி கொண்டவர்கள் இவர்கள் . ஆதிக்கம் செய்பவர்களையும் ஆதினம் என்பர் .

90.களிஞ்சி குலம் :
           கழஞ்சு களிஞ்சி ஆனது நெற்களஞ்சியம் சமைத்தவர்கள் களிஞ்சியர் ஆயினர் . கழனி உழவர் களஞ்சியம் வளர்ப்போர் ஆவர் .

91.நீலன் குலம் :
          நீலமணி மிடற்று ஒருவன் சிவன் . நீல நிறம்முடையவன் திருமால் . கொங்கு வேளாளர் இருவரையும் வணங்குவோர் ஆவர் . நீலவன் என்று கூறுவோர் .

92.கடுந்துளி
குலம் :
         
தளிரன்னபயிருக்கு மழைத் துளி வேண்டும் விசும்பின் துளிவிழின் அல்லால் பசும்புல் தலையும் காணமுடியாது வானோக்கி வாழும் குடியினர் கடுந்துளியினர் .

93.மாதங்கள்
குலம் :
            வான்மழை பெய்யாது ஆதங்கப்படுபவன் இந்த மாதங்கள் பொன்மனிசிறக்க நெல்மணி விளையவைப்பவன் மாதங்க குலத்தினன் .

94.குண்டரி குலம் :
            நெல்லரி கொண்டுதான் வீட்டில் அடுப்பு எரியும் . அறியும் சிறப்படைவான் . வானம் வறக்கும் மேல் வானோர்க்கும் ஈண்டு சிறப்போடு பூசனை செல்லாது குண்டரியோர் நல்லரி சிறக்கவைப்பர் .

95.சூரியன் குலம் :
            உழவனுக்கு சூரியன் கன் கண்ட தெய்வம் சூரியவழிபாடு பொங்கல் . காக்கும் சூரியனுக்கு நன்றி காட்டவே சூரியன் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைக்கின்றனர் முதன்மை குலத்தினர் இவர்கள் .

96.தேவேந்திரன் குலம் :
             உழவான் உலகுக்கு உயிர் . தேவர்களுக்கு தலைவன் தேவேந்திரன் கொங்கு நாட்டின் மேட்டு நிலங்களை உழுதுண்டு வாழ்வதையே உயிர் மூச்சாக கொண்ட குடிமக்கள் தேவேந்திரர்களாக மதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரர் ஆகினர் . கோ - பசு - கோவேந்தர்களும் இவர்கள் தான் . சேர அரசனுக்கு படைத்தலைவர்களாகவும் பாண்டிய அரசனுக்கு தளபதிகளாகவும் இருந்த இவர்கள் நாமக்கல் மாவட்டத்தையே முதற்கானியாக கொண்டு வாழ்ந்தார்கள் . திருச்செங்கோட்டிற்கு  தெற்கே பரமத்திக்கு வடக்கே பரமத்திவட்டம் கபிலர்மலைக்கு அருகில் மணியனூர் , கந்தம்பாளையம் , தாண்டி சுள்ளிபாலையத்தில் ஸ்ரீ கவுண்டச்சி அம்மன் ஆலயம் உள்ளது . பெருங்குறிச்சியில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டத்தில் இரண்டாயிரம் குடும்பமும் இந்த அம்மன்களுக்கு குடிப்பாட்டு மக்கள் ஆவார்கள் .
                வெள்ளக்கோயில் தொட்டாம்பட்டி முத்துசாமி கோவில், தேவேந்திரகுல காணிக்கோவிலாகவும் உள்ளது . நாட்ராயன் கோவிலுக்கு அருகில் இது அமைந்துள்ளது . குன்றத்தூர் கல்வெட்டிலும் பெருமாநல்லூர் கல்வெட்டிலும் தேவேந்திரர் குலம் குறிக்கப்பட்டுள்ளது . வீரபாண்டிய தேவருக்கு பாரிச நாட்டு பெரும்பழனம் வேளாளர் தேவேந்தைகளான என்று கல்வெட்டு கூறும் . வீரபாண்டியனது தளபதிகளாக இவர்கள் இருந்தனர் என்பர். ஆண்குறிச்சி , பெண்குறிச்சி   அழகான பெருங்குறிச்சி என்று ஒரு ஆங்கிலேயன் சிறப்பித்த பெருங்குறிச்சியில்  பொன்காளியம்மன் கோவில் உள்ளது. 18 ஊர் மக்கள் 1350 குடும்பங்கள் பொன்காளியம்மனை குல தெய்வமாக  வழிபடிகின்றனர்  .
                     நல்லூர், கவுண்டிபாளையம் , மணியனூர் , சித்தம்பூண்டி , குன்னமலை , சுள்ளிபாளையம் , பெருங்குறிச்சி , திடுமல், இராமதேவம் , தேவனாம்பாளையம் , குப்புரிக்கா பாளையம் , சித்தாளந்தூர் , உஞ்சனை , மேட்டுப்பட்டி , வசந்தபுரம் , பெரியசோழிபாளையம், வெடியரசம்பாளையம், ஊத்துக்காடு , மோழிப்பள்ளி, ஏரிக்காடு , நல்லிப்பாளையம் , நாமக்கல் , ஆரியூர், வெள்ளக்கோயில் , இளம்பிள்ளை ,தோட்டம்பட்டி, ஆகிய ஊர்களில் எல்லாம் தேவேந்திர குலமக்கள் வாழ்கின்றனர்.

97.மாதுரி
குலம் :
         மாதரி கேள் இம்மடந்தை தன் கணவன் என்று கண்ணகி கோவலனை அடிகளார் அறிமுகப்படுத்தினார். மதுரையில் இடைக்குல மடந்தை அவள் . முல்லை நிலத்து வேளிர் மாதிரியை போற்றிகுலப்பெயர் அமைத்தார்களோ ?

98.விரவுளன்
குலம் :
           விரைவு உள்ளான் எர்தொழிலில் விரைந்து தொழில் கேட்டும் ஞாலம் விரைந்து உழுவார் சோம்பி உழவினார் கைமடங்கின் உலகில் எதுவும் இல்லை .

99.சுவரியன்
குலம் :
             உவரியன் சுவரியன் ஆனது நத்தம் புறம்போக்கெல்லாம் உவர்மண்ணது அதில் காணி கொண்டவர்கள் சுவரியர்கள் .

100.குங்கலி குலம் :
            கொங்கனி குலத்தான் மருவி குங்கலி ஆனது கொங்கு கவி குங்கலி ஆகுவதும் உண்டு . கொங்கனி வழியினர் எங்கும் பரந்து வாழ்பவர்கள் இவர்கள் .

101.பரமன்
குலம் :
          பரமனை குல தெய்வமாக ஏற்றவர்கள் இவர்கள் . இக்குலத்தினர் பரமன் என்றே பெயர் வைத்துக்கொள்வர் . வழி வழியாக இப்பெயரை வைப்பவர்கள் இவர்கள்.

102.தந்தமன் குலம் :
          தந்துமன் என்பதே துந்துமன் ஆனது மன் நிலைப்பது தந்தை கொடுத்த நிலத்தை செல்வத்தை நிலைக்கவைப்பேன் என்ற உறுதி அளிப்பவர்கள் இவர்கள் . செயலால் குலப்பெயர் கொண்டவர்க்கள் இவர்கள் .

103.புன்னை
குலம் :
           புன்னை அரும்பேயப்ப என்ற தொடர் இலக்கியத்தில் வருகிறது புன்னை மரம் குறிஞ்சி நில மரம் கொங்கு குறிஞ்சி வளமுடையது  பண்ணை குலத்தினர் வேறு , புன்னை குலத்தினர் வேறு.

104.கம்பகுலம் குலம் :
           சடையப்ப வள்ளல் கம்பனை ஆதரித்தான் கம்பர் கொங்கு வேளாளர்களுக்கு மங்கல வாழ்த்து அளித்தான் சடையப்ப வள்ளல் வெள்ளாளக் கவுண்டரே அவர்மரபினர் கம்பப் குலத்தினர் ஆயினர்.

105.கொண்டிரங்கி
குலம் :
           இரக்கம் கொண்டவர்கள் கொண்டிரங்கி கூட்டத்தினர் கொண்டியைக் காணியாகாக் கொண்டவர்கள் .

106.பாலியன்
குலம் :
           ஆ புரந்து எருமை மேய்த்து பான்மடை பெருக்கியவர்கள் பாலியர்கள்.

107.கட்செவி குலம் :
           உழவையை கண்ணாக செவியாகக் கொண்ட குலத்தினர் இவர்கள் .

108.அனகன்
குலம் :
           ஆனகன அனகன் ஆயிற்று ஆவினை அகத்து வைத்துக் காத்தவர்கள் அனகன் குலத்தினர் .

109.கும்பன் குலம் :
         கொம்பாகிமரமாகி கிளைத்த கூட்டத்தின் மக்கள் கொம்மன் ஆயினர் கொம்பன் என்பதற்கு கெட்டிக்காரன் என்று பொருள் .

110.முக்கண்ணன் 
குலம்:
            முக்கண்ணன் சிவபெருமான். சிவபெருமானையே குலதெய்வமாகக் கொண்டவர்கள் முக்கண்ணன் கூட்டத்தினர் .

111.சவுரியன் குலம் :
             
சவுரிகாளி என்ற பெயரை வழி கொண்டவர்கள் காளியம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் .

112.பஞ்சமன் குலம் :
           ஐந்துபேர் பஞ்சபாண்டவர்கள் போல் வாழ்ந்தவர்கள் பஞ்சம் வந்த காலத்தும் பஞ்சை நூற்று வாழ்ந்தவர்கள் இவர்கள் பஞ்சமரபினர் என்போரும் இவர்களே .

113.விரதர்
குலம் :
        
ஆறுகுலத்தினர் ஒரு கூடிவாழ்ந்த இவர்கள் அறுகுலவிரதர் எனப்பட்டனர் விரதம் இருந்து பட்டினிகிடந்தும் வெள்ளாமை செய்தவர்கள் இவர்களே .

114.சோமன் குலம் :
         
சோமசுந்தரனை வழிபடும் சுட்டத்தினர் . சோமன் ஆயினர் சோமு என்ற பெயர் வைத்துக் கொள்பவர்கள் .

115.உவணன் குலம் :
           உவந்தளிப்போர் விருந்தளிப்போர் உவணர் ஆயினர் உவவனம் மருங்கில் என்ற தொடர் இலக்கியத்தில் உண்டு.

116.கொட்டாரா
குலம் :
           
ஒரே இடத்தில் பயிர்செய்யாது கொட்டாரம் குடிசை அமைத்து அங்காங்கே பயிர் செய்பவர்கள் இவர்கள் .

117.தேமான் குலம் :
           
தொமான் குலத்தினர் தேமான் குலத்தினர் ஆயினர் . தேமாங்கனி வைத்து புரந்த நன்னன் குடியினர் இவர்கள் .

118.மொய்யன்
குலம் :
            
திருமணத்தில் மொய்வைப்போர் உண்டு மொய் மொய்த்தல் பலரும் சேர்ந்து ஒன்றுகூடி மொய் வைப்பதால் மொய் பணம் உற்றுழி உதவு பாங்கினர்.

119.வேந்தன்
குலம் :
           
அரசன் என்ற பொருளுடைய சொல் இது வேந்த புரந்தந்த கொற்றவேந்தே என்று சேரர் சிறப்பிக்கப்படுவர் சேரவழியினர் வேந்தன் ஆயினர் .

120.கருங்கண்ணன் குலம் :
           
கண்ணங்குலத்திலிருந்து பிரிந்து வந்தவர் கருங்கண்ணன் ஆயினர் . கருங்கண் காளைக்கு உரிமையாளர்கள் . உறுப்பால் பெயர் அமைத்தவர்கள் .

121.அக்கினி குலம் :
          
அக்கினி நெருப்பு திருவிழாக்காலங்களில் வேண்டுதல் பெயரில் அக்கினி சட்டி எடுப்பார்கள் மாரியம்மன் பண்டிகையில் அக்கினி மிதிக்கும் உரிமை பெற்றவர்கள் இவர்களே . அக்கினிவலம் வருதலும் தீ மிதித்தலும் வழிபாட்டு முறைகளாகும் .

122.தக்கவர் குலம் :
           தக்கவர் தகவிலர் என்று குறள் கூறும் . ஏர்த்தொழிலுக்கு தக்கவராக இருப்பவர்கள் ஊரில் மதிப்புடைமைக்கும் சிறப்புக்கும் தக்கவர்களாக இருப்பவர்கள் தக்கவர்களே .

123.நெய்தலி 
குலம் :
          
நெய்தல் நிலத்து உழவர்கள் நெய்தலி எனப்பட்டனர். மீனவர் வேறு இவர்கள் வேறு . எந்த நிலத்திற்கும் கொங்கு வெள்ளாளனே காணியாளர்களாம் .

124.நீலவினோசலன்
குலம் :
           
நீலன் வேறு வினோசலன் வேறு . நீலம் பண்புப் பெயர் , வினோசலன் வினைப்பெயர் , இவை இரண்டையும் இணைத்து இந்த இருமரபுவழியில் வந்தவர்கள் இவர்கள் .

125.சனகன் குலம் :
           
சனகன் மகள் ஜானகி இராமயணத்தின் கதாநாயகி சனகன் உழதொழில் வேந்தன் அவனது பெயரை சிறப்பிற்காக ஏற்றவர்கள் இவர்கள் 

126.முனை வீரன் குலம் :
            
வெள்ளாளன் வீரமறவன் முனைமுகத்து நில்லேல் என்றார் அவ்வை . முனைப்போர் முனை ஒளிருவாள் . அருஞ்சமம் முறுக்கிளிர் எறிந்து வெற்றி பெறுதல் ஆண் மகன் கடமை என்றார் பொன்முடியார் .
 
    வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.

இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “முழுக்காதன் குலத்தவர்கள்” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.