Tamil News | Pudhiyaboomi News

Thursday 28 November 2013

உத்தமசோழக்காமிண்டன்

உத்தமசோழக்காமிண்டன்( தீரன் சின்னமலையின் முன்னோர்கள்) 953 A.D- கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலி ல் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். ‘படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய முடிகிறது. ‘வளர் பயிரன்’, ‘நீடுபுகழ் பயிரன்’, ‘கியாதியுள பயிரன்’’என்று காணிப்பாடல்களில் புகழப்படுகின்றனர். ‘காராள ராமன்’’என்றும் புகழப்பட்டவர்கள் இக்குலத்தவர்கள். வேளாளரில் இராமனைப் போன்றவர்கள் என்பது அதன் பொருள். 953 A.D: பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் உத்தமக்காமிண்டன் எனும் கௌரவப் பட்டப் பெயர் பெற்றது மிகவும் சுவையான ஒரு வீர வரலாற்றுச் செய்தியாகும். 


முன்பு சந்துரு சாதன பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கும் சோழநாட்டை ஆட்சிபுரிந்த உத்தமக்காச் சோழன் என்பவனுக்கும் பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த போரின் முனைகள் அனைத்திலும் சந்துரு சாதன பாண்டியன் கடும் தோல்வியடைந்தான். பாண்டியனின் படைத்தலைவர்கள் ஒருவன் பின் ஒருவராகச் சென்று சோழனிடம் தோற்று திரும்பினார்கள். இத்தோல்வியை அவமானம் எனக்கருதிய பாண்டிய மன்னன் பெரிதும் வருந்தித் துடித்தான். எதிரியைப் போர்க்களத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து நினைத்து துன்பக் கிணற்றில் வீழ்ந்தான். அப்பொழுது பாண்டியனின் படைத்தளபதியாக கொங்கு மண்ணைச் சேர்ந்த கரியான் என்கிற பிள்ளை சர்கரை முன்வந்து ‘அரசே நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களுக்காக எதையும் செய்யும் என் போன்ற படை வீரர்கள் தங்களிடம் இருக்கையில் தாங்கள் கவலைப்படுவது எதற்கு? சோழர் படையை நான் வென்று, கொன்று, அடியோடு அழித்து வெற்றிவாகை சூடி வருகிறேன் என்று சூளுரைத்து கடைசியில் போர்க்களம் புறப்பட்டான். முதலிலில் மித்திரன் என்பானைக் கொண்டு சோழன் ஏவியிருந்த புதவலிலியைக் கரியான் அழித்தான். பின் கடும்போர் புரிந்து சோழனை வென்று அவனது சோழ நாட்டுக்கே அடித்துத் துரத்தினான். பாண்டியனின் படையில் தலைவனாக இருந்து பணியாற்றிய கரியான், உத்தமக்காச் சோழனைப் போரில் வென்றான். அப்போது கரியான் உறந்தைப் பாக்கம் என்னும் இடத்தில் குடியிருந்தான். இவனது வெற்றியை ‘உறந்தைப் பாக்கம் குடியிருந்தோர் – முன்னோர் உத்தம சோழனை வென்று வந்தார்’ ‘ஆறெல்லாஞ் செந்நீர் ரவனியெல்லாம் பல்பிணங்கள் தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு கன்னிக்கோன் ஏவலிலினாற் காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் ஓடும்பொழுது’’என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.


 இதனால் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்காச்சோழனை வென்றதால் “உத்தமக்காமிண்டன்””என்ற பட்டத்தைச் சூட்டி காரையூரை (ஈரோடு – காங்கேயத்திற்கு இடையில் உள்ள) தலைநகராகக் கொண்ட கொங்கு நாட்டிற்குத் தலைவனாக நியமித்தான். காரையூருக்குத் தென்கிழக்கில் உள்ள ஆனூர் என்ற ஊரில் அரண்மனையைக்கட்ட ி கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இந்த ஆனூர் அரண்மனைதான் இன்று பழைய கோட்டை என்று அழைக்கப்படுகிறது. சோழனைத் தன் வீரத்தால் வென்றதற்காக கரியானுக்குப் பாண்டியன் முடிசூட்டினான். இவ்வீரச்செயலை, ‘கலிலிஇரு நூற்றதில் விளம்பியின் மீனத்தில் கார்புரந்த மலிலிபுகழான கரியான் செயமாது வலிலிமையினால் புலிலிதுசன் உத்தமக்காச் சோழன் ஏவிய பூதவலிலி தொலைவுசெய்து எரிபுகச் செழியன்தன் னால்முடிசூடினனே’’ என்ற பழம்பாடல் விளக்குகிறது. பாண்டியனின் வேப்ப மாலையையும், மீன்கொடியையும் பரிசாக கரியான் பெற்றான். இவ்வீர வெற்றியின் நினைவுப் பரிசாக கரியான் சர்க்கரைக்கு காரையூர், வள்ளியறச்சல், முத்தூர், மருதுறை கிராமங்களும், பாப்பினியில் பாதிக்கிராமமும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. பாண்டியனின் மகன்போல, வாரிசுகள் போல குமாரவர்க்கமாக பழைய கோட்டை மரபினர் கௌரவத்துடன் சிறப்பிக்கப்பட்டனர். 


உத்தமச் சோழன், உத்தமக்காச் சோழன் என்ற பட்டம் பெற்ற சோழனை வென்ற காரணத்தால் ‘உத்தமச் சோழன்’, ‘உத்த மக்காச் சோழன்’’என்ற பட்டப் பெயரை கரியான் பெற்றான். இப்பட்டம் ‘உத்தம சோழக்காமிண்டன்’ ’என்று நத்தக்காடையூர் செயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டால் அறிய முடிகிறது. காலப்போக்கில் இப்பட்டத்தில் உள்ள சோழன் என்ற பெயர் மறைந்து ‘உத்தமக்காமிண்டன்’ என்று மாறிவிட்டது. காமிண்டன் என்றால் காப்பாற்றுவதில் வல்லவன் என்று பொருள். இக்காமிண்டன் என்ற பெயரே பின்பு கவுண்டன் என்று மருவியது.