Tamil News | Pudhiyaboomi News

Wednesday 28 September 2011

நண்பர்களே வணக்கம் ........................



நமது கொங்குஇனம் வலைபூவானது நண்பன் என்ற பெயரில் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .  மேலும் புதிய தகவல்களை அறிய http://wikileek.blogspot.com/

என்ற முகவரிக்கு வாருங்கள் ................  தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வேண்டும் உங்கள் நண்பன் 


கொங்குஇனம்  
முகவரியும் தொடர்ந்து செயல்படும் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . கொங்குஇனம் இனி கொங்கு சம்பந்தமான செய்திகளை மட்டுமே தங்கிவரும் மற்ற பொது செய்திகள் அனைத்தும் உங்கள் நண்பனில்............

Monday 26 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 5



எந்த ஒரு நாட்டுக்கும் மிக முக்கியமான, பிரதான, தலையாய, உயிர்நாடியான இப்படி பலவகையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் அதன் பாதுகாப்புத் துறை. அவற்றின் ஆவணங்களை அப்படியே விருந்து வைப்பதென்பது கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் தெளித்து விளையாடுவதை போல கிளுகிளுப்பானது. அதிலும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை உலகிலேயே சக்திவாய்ந்தது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் மிக முன்னோடி என்று பலராலும் வாய்பிளந்து பார்க்கப்படும் ஒரு துறை. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் தன் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது. இதே போன்ற வெளியீடுகளுக்கு இந்தியா போன்ற நாடுகள் ஆளாகியிருந்தால் 'நீ என்னத்த பெரிசா பண்ணிட்ட, போன வருசம் அவன் எப்படி அடிச்சான் தெரியுமா, போன வாரம் கூட எத்தன பேரு.. ' என்று கமுக்கமாகிப் போயிருக்கும் என்பதற்கு சில தினங்களுக்கு முன் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் இந்திய சி.பி.ஐ இணையத்தளம் பாகிஸ்தான் பங்காளிகளால் ஹேக் செய்யப்பட்டது ஒரு உதாரணம்.



ஜூலியனுக்குத் தான் செய்யப் போகும் காரியத்தின் வீரியம் நன்கு புரிந்தே இருந்தது. அமெரிக்காவிற்கு எதிரான தனது ஆப்கான் போர்க் குறிப்பு வெளியீடுகளுக்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை விக்கிலீக்ஸ் தளத்தின் பலத்தை, சட்டரீதியானப் பாதுகாப்பினைப் பரிசோதித்து உறுதி செய்து கொண்டே களமிறங்கினார். கேக் சாப்பிடும் போது சுற்றிலும் கடித்து சாப்பிட்டு விட்டு பின்பு கடைசியாக நடுவிலுள்ள செர்ரிப் பழத்திற்கு பாய்வதைப் போல, ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடுகள் சோமாலியா, கென்யா, ஸ்விஸ், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவின் தேவாலயக் குழுமம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சாரா பாலின் ;) தொடங்கி அமெரிக்காவின் ஈராக் இராணுவ நடவடிக்கைகள் வரை ஒத்திகை பார்த்து விட்டே ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியிடப்பட்டன.


ஜூலியனின் வாழ்க்கை குறித்துக் கேள்விப் படும் போது தொழில்நுட்ப கில்லாடியே, அசகாய சூரனே, உலகத்தையே அதிர வைக்கும் இணைய இடியே, உண்மையின் உறைவிடமே என்று வைரமுத்து, வாலி வகைக் கவிதைகள் எழுதத் தோன்றினாலும் ஜூலியனின் வாழ்க்கை மிக கடினமானது, மன அழுத்தம் நிறைந்தது. ஜூலியனுக்கென்று சொந்த வாழ்க்கை ஏதுமில்லை. எந்த விமான நிலையத்தையும் ஒரு சாதாரணப் பயணியாகக் கடந்ததில்லை, ஒவ்வொரு முறையும் பலமணி நேரச் சோதனையும், அவரது மடிக்கணினி முழுதும் பிரதியெடுக்கப்படுதலையும் தவிர்க்க முடிந்ததில்லை. ஜூலியன் சாதரணமாக தொலைபேசியில் பேசுவது கூட மிக மெல்லிய குரலில், சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று எச்சரிக்கையுடன் பேசுவது போல மிகுந்த இடைவெளி விட்டு, மிகக் குறைந்த வார்த்தைகளைப் பய்னபடுத்தியே பேசுவது வழக்கம். இது வரை யாருமே ஜூலியனை, ஒருமுறைத் தொடர்பு கொண்ட எண்ணில் மறுமுறை தொடர்பு கொண்டதில்லை. எவற்றையெல்லாம் மாற்றாவிட்டால், மாட்டிக் கொள்வோம் என்பது ஜூலியனுக்கு அத்துப்படி.


முதல் பரிட்சார்த்த முயற்சியாக சோமாலியாவின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர், தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு நம்பிக்கையான விவசாயக் கூலிகள் வேண்டி எழுதியக் கடிதம் வெளியிடப்பட்ட போது அது உண்மையா, பொய்யா என்ற விவாதமே மேலோங்கி நின்றது. சோமலியாவின் பதிலோ, மெளனம் சம்மதம். இதுவே பின்னாட்களில் தனது வெளியீடுகளோடு பெரிய பத்திரிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கான காரணம். ஊழலில் நமக்கே சவால் விடும் அளவுக்கு முன்னோடியான கென்ய அரசாங்கத்தின் ஊழல் தகவல்களை அம்பலப்படுத்துவதற்காக கென்யாவின், நைரோபியில் வாசம் செய்து கொண்டிருந்த ஜூலியன் ஒரு அதிரடியான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிட்டது. ஊழல் ஆவணங்கள் வெளியிடப்பட்ட மிகச்சரியாக ஒருவாரத்தில் ஜூலியன் தங்கியிருந்த ஒரு ரகசிய வீட்டில், நள்ளிரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட ஆயுதக் குழு ஒன்று தீபாவளி கொண்டாட முயற்சி செய்த போது, கென்யாவின் தரத்தை எடைபோட்டு ஜூலியனின் பாதுகாப்புக்காக முன்பே ஏற்பாடு செய்திருந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் துரத்தி விட்டனர். அன்றிரவுக்குப் பிறகு யாரும் ஜூலியனைக் கென்யாவில் பார்க்கவில்லை.

அடுத்து ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வங்கிகளின் முறைகேடுகள், முறையற்ற நிதி கையாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் குய்யோ, முறையோவென தங்கள் வேட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூப்பாடு போட்டன. ஸ்விஸ் வங்கி அமெரிக்காவிலுள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விக்கிலீக்ஸ் தளத்தின் அமெரிக்க வழங்கிகளைச் செயலிழக்கச் செய்தது. ஒரு தளத்திற்கு வழங்கியென்பது ஒரே நேரத்தில் எத்தனை வேண்டுமானாலும் மாற்று ஏற்பாடாக செய்து வைக்கலாம். உலகமெங்கும் இணைய வல்லுநர்களை ஆரவலர்களாகக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் தளத்திற்கு கண்ணசைவில் அடுத்தடுத்த வழங்கிகள் தயாரான நிலையிலிருக்குமென்பதால் ஜூலியன் இதையெல்லாம் சட்டைச் செய்யவில்லை. இணையக் கோப்புகள் வழங்கிகள்(file servers), இணைய முகவரி வழங்கிகள்(dns servers) குறித்தும், அவை செயல்படுவிதம் குறித்தும் தனி பதிவு போடவேண்டும் ... அதை பின்பு பார்க்கலாம் ......

இப்படி அமைதியாக, மிகப் பொறுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஜூலியனையும் சீண்டிப் பார்த்து, சீற வைத்த சம்பவங்களும் நடந்தது.. அடுத்த பகுதியில்.



"சன்ஷைன் பிரஸ் (sunshine press) குழுமம் என்பது எங்களது வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர்களால் சேர்ந்தமைக்கப்பட்ட தளம். விக்கிலீக்ஸ் என்பது நாங்கள் செயல்படும் களம்." - ஜூலியன்

Saturday 17 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 4





ஜூலியனுடன் கைகோர்த்த நண்பர்களில் ஒருவர் இந்த Tor வலையமைப்பில் relay எனப்படும் தொடர்புப்புள்ளியாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜூலியன் யதார்த்தமாக அதன் வலைப்போக்குவரத்தை உளவு பார்க்க, அதில் பதார்த்தமாக நிறைய சீன வலையமைப்பு எண்கள் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. கடுமையான இணையக் கட்டுப்பாடு கொண்ட சீனாவில் இருந்து Tor வலையமைப்பினை உபயோகிப்பது நிச்சயம் வில்லங்கமான நபர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு கொக்கிகள் அமைக்கப்பட்டு அந்த நண்பரின் relay தொடர்பின் முழுப் போக்குவரத்தும் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் அந்த வலைப் போக்குவரத்தின் சொந்தக்காரர்கள் சீன ஹேக்கர்கள். கடந்த காலங்களில் சீன மொழியில் பின்னூட்டங்கள் பெற்று, அது என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்குள் மொத்தமாக இழுத்து மூடப்பட்ட வலைப்பதிவுகள் ஏராளம் என்பது உபதகவல். திரைப்படங்களில் அதுவரை சாதரணமாகக் காட்டப்படும் கதாநாயகன், வில்லனின் அடியாட்கள் வரும் காட்சியில் திடீரென கராத்தே சாம்பியன் என ஒரு அவசரக் கதம்பம் மொத்தமாக சுற்றப்படுவதைக் கண்டுகளித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே போல் ஒரு தருணம் தான் ஜூலியனுடன் இணைந்திருந்தவர்களுக்கு.



ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியைப் போல் ஜூலியனும் சங்கேதக் குறியீட்டு முறை வித்வான் என்று அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது, மேலும் Tor வலையமைப்பிற்கான் மென்பொருள் கட்டமைப்பிற்கான மென்பொருளில் சில தொழில்நுட்ப பள்ளங்கள் இருந்ததும் காரணம். தேர்ந்த வித்வானாகிய ஜூலியன் அந்த பள்ளங்களில்லாம் நீக்கமற நிறைந்தார். சில வாரங்களில் சுமார் 1.2 மில்லியன் கோப்புகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவும் புதையல். அதில் மொத்தமாக என்னெவெல்லாம் சிக்கியதென்பது ஜூலியனுக்கும் அவர் சகாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். 1.2 மில்லியன் கோப்புகள் என்பது அளவுகளில் டெராபைட்களில் இருக்குமென்பதால் மொத்தத்தையும் வலையேற்றுவதற்கு பொருளாதரம் கெட்டியாக இருக்க வேண்டும், மேலும் கொஞ்சம் கஷ்டமும் கூட. ஜூலியனுக்கு அப்படி கிடைப்பதையெல்லாம் வலையேற்றுவதில் விருப்பமில்லை. அதுவும் அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெளியீடு, ஒரே நாளில் உலகம் முழுதும் அத்தனை இடங்களில் தீப்பிடிக்க வேண்டுமென்பதே ஜூலியனின் கனவு.


நம்மூரில் 12 பேர் கொண்ட குழு அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளுக்கு வாசகங்கள் எழுதுவது போல விக்கிலீக்ஸ் தளத்திற்கு நான்கு பேர் கொண்ட ரகசியக் குழு இருக்கிறது. அவர்கள் தான் கிடைக்கும் கோப்புகளையெல்லாம் சரிபார்த்து, மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் மொழிபெயர்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, பொய் வேஷத்தினைத் தோலுரிக்கும் கோப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. கிடைத்த 1.2 மில்லியன் கோப்புகளில் இவ்வாறு தேறியது சில ஆயிரங்கள் மட்டுமே. அவையனைத்தும் ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. உண்மையில் அந்த ஆவணங்களை உஷார்ப் படுத்திக் கொண்டிருந்த சீனர்கள் " நாங்க திருடிட்டு வரும் போது, அவன் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டான்' என்று சொல்ல முடியாமல் கமுக்கமாகிப் போயினர்.

வெறும் நாடகத்தன்மையான, நிருபர்களால் வடிவமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட, ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ கோபப்படுத்துமோ என்றெல்லாம் யோசித்தே எழுதப்பட்ட செய்திகளையே பெரும்பாலும் படித்து வந்த உலகத்துக்கும் சரி, சக ஊடகங்களுக்கும் சரி, விக்கிலீக்ஸ் தளத்தின் அட்டகாசமான ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்துவிட்டது. சிலர் விக்கிலீக்ஸ் குறித்து நம்புவதா, வேண்டாமா என்றும் குழம்பினார்கள். இதனை முன்கூட்டியே கணித்த ஜூலியனின் ஏற்பாடு தான் முக்கியப் பத்திரிக்கைகளில் வெளியிட வைத்த சாமர்த்தியம். அமெரிக்க அரசாங்கத்தின் "நேர்மையான' போர் தந்திரங்கள், செலவீனங்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தகவல்களும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே போட்டுத் தள்ளியதும் அடக்கம். வட அமெரிக்காவில்அரசியல் உஷ்ணம் அதிகமானது.


நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நிலைமை அமெரிக்காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்கக் ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக்கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. 'இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை ' இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது', இல்லை இல்லை 'அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருத்திவிட்டோம், இல்லை இல்லை 'அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை, அவர்களாகவே தோட்டாக்களின் மேல் பாய்ந்து உயிரை விட்டு விட்டார்கள்' என்றெல்லாம் உளறிக்கொட்டியது. அப்படி உளறிக் கொட்டினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா.

ஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் மூர்க்கங்கொண்டாலும், ஆதரவாளர்களும், பாராட்டுத் தெரிவிப்பவர்களும் எக்கச்சக்கமாகிப் போகினர். ஏகப்பட்ட ஆர்வலர்கள் விக்கிலீக்ஸ் மூலம் தங்களிடம் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, ஜூலியனின் தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்வந்தார்கள்.

பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ஜூலியனைத் தேடித் தேடி உலகமெங்கும் பயணித்துச் சோர்ந்தன. இவற்றுக்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை, அடுத்தடுத்த வெளியீட்டுத் தொகுப்புகளுக்கான ரகசிய இடத்தில் உழைப்பில் ஈடுபட்டிருந்தார். விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களை அனுப்பு விரும்பும் ஆர்வர்லர்களுக்கென்று சிறப்பு மாற்றங்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Tor மென்பொருள் அனுப்பி வைக்கப்பட்டது (அதற்கான் சுட்டி இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D). தனது ஒவ்வொரு வெளியீடுக்கும் ஜூலியன் சந்தித்த மிரட்டல்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடக வரலாற்றின் தங்கத் தருணங்கள். இவை அனைத்தையும் புறந்தள்ளி ஒரு குற்றச்சாட்டும் ஜூலியனை நோக்கி முன்வைக்கப்பட்டது, அவை அடுத்த பகுதியில்.

ஓவ்வொரு வாரமும் கூட ஒரு பெண்டகன் ஆவணத்தை எங்களால் வெளியிட முடியும் - ஜூலியன் ..

Thursday 15 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 3



Tor - The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க MediawikiFreenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள்.


முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படும். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.

Tor - The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் 'இலவச மென்பொருள்' என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது '.


Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்:http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் 'Relay' என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய, குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.

இப்படி மசாலாப் படத்தின் கதாநாயகனைப் போல் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படும் Tor வலையமைப்பில் கொக்கி போடப்பட்டுத் தான் முதல் விக்கிலீக்ஸ் ரகசியத் தொகுப்பு வெளியிடப்பட்டது!!!. இருந்தும் விக்கிலீக்ஸ் ஏன் இன்னும் Tor வலையமைப்பினைப் பரிந்துரைக்கிறது?. அடுத்த பகுதியில்.

ஜூலியனின் அட்டகாசங்கள் தொடரும்...

Sunday 11 September 2011

குருசேத்திரப் போர்


பாண்டவர்களின் ஒப்பந்தப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தர்மரும் சகோதரர்களும் காட்டில் வாழ்ந்தார்கள்.ஓராண்டு காலம்
 எவரும் அறியாமல் மாறு
 வேடத்தில் வாழ்ந்தார்கள்.இவ்வித கஷ்டங்களை சகித்து ஒப்பந்த காலமும் முடிவானது.தங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராச்சியத்தை உரிமையுடன் பெற்றுக் கொள்ள வந்தார்கள்.
அவர்களுடைய நியாயமான வேண்டுகளை பங்காளி துரியோதனன் கொடுக்க மறுத்துவிட்டான்” பாதி ராச்சியயமாவது?ஊசிமுனை நிலம் கூடக் கொடுக்கமுடியாது. முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று ராச்சியத்தை பெற்றுக்கொள்ளட்டும்  என்று அறுதியிட்டுக் கூறிவிட்டான்.
கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.
போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?
அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது
தர்மரும் சகோதரர்களும் தாய் குந்திதேவியிடம் நிலமையைத் தெரிவித்தார்கள்.” உரிமையைப் பெறப் போராடவும் தயங்க வேண்டாம்” என்றாள் தாய்.தாயின் உத்தரவு பெற்றதும் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள்.சமாதானத் தூதுவர்களாக பல அறிஞர்கள்,அரசர்கள், பெருமக்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை.ஆணவமும் அகம்பாவமும் கொண்ட துரியோதனன் எல்லோரையும் அலட்சியம் செய்து விட்டான்.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பலமுறை தூது சென்றும் தோல்வி கண்டார் அவரையும் துரியோதனன் மதிக்கவில்லை.காரணம் பிள்ளைப் பருவத்தில் கண்ணன் இடையர் குலத்தில் வளர்ந்தவன்.இடையர்களோடு கூடிப் பசுக்கூட்டம் மேய்த்தவன்.இதனல் கண்ணனைப் பற்றி எதுவும் அறியாமல் ஏளனமாய் எண்ணிக் கொண்டான்.அத்துடன் துரியோதனன் ராஜமாளிகையில் அரசயோகத்தில் வாழ்ந்தவன்.அர்ச்சுனன் கன்ணனனை தன்னுறவினனாகவும் தோழனானகவும் உயிருக்குயிரான நண்பனானகவும் ஓர் அவதார புருஷனானகவும் எண்ணி இதயத்தை பறி கொடுத்திருந்தான்.அதனால் அர்ச்சுனன் கண்ணனுக்கு கெளரவம் கொடுத்தான்.
போரே முடிவானது
போருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும், அன்பர்களையும், நண்பர்களையும் ,அபிமானிகளையும், ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக்  கொண்டார்கள்.
போருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர், குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு , ஈட்டி, வாள்,சூலம்,வேல், பறைகள்( மேளங்கள்) சங்குகள், ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள், நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.
ஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும்  ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதனன் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.
அச்சமயம்  ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.
ஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.
பாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியா? ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா! எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம்  எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.
இதைக்கேட்ட அர்ச்சுனன் ஆயுதம்
 ஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா!” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு  ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா! நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இருந்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்.
எங்கு இறைவன் இருக்கிறானோ
அங்கு வெற்றி நிச்சயம் என்பது தத்துவம்
பெரியப்பா,சித்தப்பா, பிள்ளைகளான  பாண்டவர்களுக்கும் ( ஐவர்) கெளரவர்களான ( நூற்றியொருவருக்கும்) போர் நடப்பது முடிவாயிற்று.இருதரப்பாரிற்கும் பாட்டானார் மகரிஷி வேதவியாசர் .101 பிள்ளைகளுக்குத் தந்தையான மகராஜா ,திருதாட்டினர்,இவர் பிறவியிலே குருடர்.இவருடன் வேதவியாசர் மிகவும் பாசம் கொண்டவர்.அதனால் அவரிடம் வந்து மகனே ( திருதாட்டினர்) பெரும்போர் தொடங்கப்போகிறது.இதனால் பேரழிவு நிச்சயம்.இனியாராலும் தடுக்கவே முடியாது.இந்தப் போரை நீ பார்க்க விரும்பினால் உனக்கு நான் “திவ்விய திருஷ்டி ( அருட்பார்வை) தருகிறேன். இதன் உதவியால் நீ இங்கிருந்த படியே போர்க்களக் காட்சிகளைத் தெளிவாக பார்க்க முடியும்.என்றார். இதைக்கேட்ட திருதாட்டினன் என் புதல்வர்களும் என் தம்பி பாண்டுவின் புதல்வர்களுமாக நம்குலத்தவர்கள் தாமே. தமக்குள் போரிடுவதை நான் விரும்பவில்லை .ஆனால் போர் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அப்படியானால் உன் உதவியாளன் சஞ்சயனுக்கும்  திவ்விய திருஷ்டி அளிக்கிறேன்.அவன் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போராளிகளின் மனப்போக்கையும் நன்கு தெரிந்து உடனுக்குடன் சகல தகவல்களையும் தெரிவிப்பான் என்று கூறினார். அதனால் சஞ்சயனும் அருள்நோக்கைப் பெற்றான்.போர் தொடங்கியதிலிருந்து முடிவுவரை சகல நிகழ்ச்சிகளையும் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியான கண்ணபிரானின் செயல் திறன்களையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனனின் கேள்விகளையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனன் கேள்விகளையும் விபரமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.
சஞ்சயன் ( காவல்க்கணர்) என்ற தேரோட்டியின் மகன். தேரோட்டிகளில் சஞ்சயனுக்கு மட்டுமே அக்காலம் தனிமதிப்பும் மரியாதையும் இருந்தது.இவன் அமைதியானவன்,அடக்கமானவன்,நல்நடத்தையானவன்,நல்லஞானமுள்ளவன்.பரமாத்மா கிருஷ்ணனுடைய பக்தன்.அவருடைய மகிமையை உண்மையான சொரூபத்தை பூரணமாக அறிந்தவன்.அக்காலம் அர்ச்சுனனும் சஞ்சயனும் இளமைமுதல் இணைபிரியாத நண்பர்கள்.சஞ்சயனுக்கு பகவான் வேதவியாசர் அளித்த தெய்வீக பார்வையால் அவனிருந்த இடத்திலிருந்தே திருதாட்டினருக்கு குருஷோத்திர போர் நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்தான்.
போர்முனை
அநுமான் கொடி பறந்து கொண்டிருக்க அழகான கம்பீரமான வெண்நிற புரவிகள்( குதிரைகள்) பூட்டிய கம்பீரமான ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாரதியாக அமர்ந்திருக்கிறார்.அவருக்கு பின்னால் காண்டீபதாரியாய் அர்ச்சுனன் அமர்ந்திருக்கிறான்.குறித்த நேரத்தில் ரதம் போர்க்களம் புகுந்தது.

இருபடையணிகளிலும் தம் உறவினர்களையும் , நண்பர்களையும் மற்றும் வேண்டியவர்களையும் கண்டான்.அர்ச்சுனன் போரில் இவர்கள் எல்லாம் இறந்து போவார்களே என்ற எண்ணமும் உண்டானது.சோகத்தால் மனம் தளர்ந்தான்.கண்ணா இருசேனைகளுக்கும் நடுவில் நம் ரதத்தை கொன்டுபோய் நிறுத்துங்கள்” என்றான்.அர்ச்சுனனுக்கு போர் ஆயத்தங்களை குறிக்கும் முரசங்கள் முழங்கியதும் அவனுக்கு உற்சாகம் பொங்கியது.ஏன் அர்ச்சுனா அவ்விதம் கேட்கிறாய் ? கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனா!இதோ உன்னுடன் போர் புரிய வந்திருக்கும் உறவினர்களான குருவம்சத்தவர்களை பார் என்றார்.
அர்ச்சுனன் இடுபக்கப் படைகளையும் அவதானித்தான்.எதிர் அணியிலுள்ள  சகலரையும் பாட்டனர்களான பீஷ்மர், தூரோணச்சாரியார், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் யாவரையும் கண்டான்.மேற்கொண்டு இப்போர்க்களத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கும் வீரப்பெருமக்களை நான் பார்க்க வேண்டும் அல்லாமலும் எவர்களோடு நான் போரிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்யும் நோக்குடன் வந்திருக்கும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.
அதேசமயம்( கெளரவர்) துரியோதனன் படையின் பிரதம தளபதி பீஷ்மர் சிங்கம் கர்சிப்பதுபோல் சங்கொலி எழுப்பினார்.தொடர்ந்து அவர் படையினர்களும் போர் முரசங்கள் மற்றும் வாத்தியங்களை முழங்கினார்கள்.வஞ்சகன் துரியோதனன் அங்குமிங்குமாக ஓடி வியாசரிடமும் துரோரணச்சாரியரிடமும் வஞ்சமான முறையில் உரையாடி அவர்களை உசுப்பி உசார்ப்படுத்தி வைக்க பல அரசியல் தந்திரங்களை கையாளுகிறான்.காரணம் பெரியவர் பீஷ்மர் இருபகுதியாருக்கும் பாட்டனார்.ஆனால் தனது படைக்கு தலைமைத் தளபதி. இது இவனுக்கு ஓர் சந்தேகம்.அவர் இருதரப்பாரிடமும் பாசம் கொண்டவர்.அவனே தீர்மனிக்கிறான் அவர் தலைமை தளபதியாக இருந்தாலும்கூட பாண்டவர் படையை வெல்வது சந்தேகம். பாண்டவர் படைக்கே மிகப்பெரும் பலவானும் வல்லவனுமாகவிருக்கும் பீமசேனனின் படை எனது கெளரவர் படையை வென்றுவிடமுடியும் என்பதும் அவனை உறுதிப்படுத்தி மனதை உறுத்தியது.போர்முனையில் கெளரப்படையினரின் முழங்கக்கேட்டதும் பாண்டவர் படையும் போர் தொடங்க வாத்தியங்களை முழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதற்குரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை.அதேசமயம் வெண்நிறப்பிரவிகள் பூட்டிய சிறந்த ரதத்தில்  அர்ச்சுனனோடு அமர்ந்திருந்த கிருஷ்ண பரமாத்மா தனது ” பஞ்சஷன்னியம்” என்னும் சங்கை எடுத்து எங்கும் பேரொலியாக கேட்க முழங்கினார்.
தொடர்ந்து அர்ச்சுனனும் தேவதத்தன் என்னும் சங்கை முழங்கினான்.தொடர்ந்து பீமன்,தர்மர்,நகுலன்,சகாதேவன் முறையே “பெளண்டிரம்”" அனந்த விசயம்”"சுகோஷம்”"மணீ புஷ்பகம்”ச்ங்குகளையும் முழங்கினார்கள்.வீறுகொண்டெழுந்த பாண்ட்வர்களின் சங்கநாதம் எல்லா திசைகளிலும் பரவி எதிரொலித்தது.முறைகேடாக ராச்சியத்தை அபகரித்துக் கொண்ட கெளரவர்களின் நெஞ்சங்களை நடுநடுங்க வைத்தன.
எதிர் அணியிலும் தன் அணியிலும் போரிடக் காத்திருக்கும் மாவீரர்களான பாட்டனார், ஆசாரியர், மாமா,சகோதர்கள், அண்ணன்,தம்பிகள்,புதல்வர்கள்,மாமனார்கள்,தந்தைக்கு ஒப்பான பெரியவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,அரசர்கள் இவர்களை எல்லாம் பார்த்ததும் அர்ச்சுனன் தைரியமிழந்து கோழையைப் போல் வருந்தி பேசத்தொடங்கினான்.
“ஹே கிருஷ்ணா!என் நெருங்கிய உற்றார் உறவினர்களை போர்புரியும் நிலையில் எதிரே பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன.முகம் வாடுகிறது,உடல் நடுங்கிறது.மயிர்க்கூச்சு எழுகிறது.என் கையிலிருந்து காண்டீப வில் நழுவுகிறது.சர்மம் முழுவதும் எரிச்சல், மனம் தத்தளிக்கிறது. தடுமாறுகிறது.என்னால் நிற்கக்கூட முடியவில்லையே கண்ணா!”
கண்ணன்: அர்ச்சுனா!இதைத்தவிர வேறெதெல்லாம் தெரிகிறது?
 அர்ச்சுனன் கேசவா! தீய சகுனங்களை காண்கிறேன்.போரில் இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு என்ன இலாபத்தை அடையப்போகிறேன்? எனக்கு எதுவும் கிட்டாது. (31)
கண்ணன்: அர்ச்சுனா! இவர்களையெல்லாம் வதம் செய்யாமல் உங்களுக்கு உரிமையோடுரிய ராச்சியம் எப்படிக் கிடைக்கும்?
 அர்ச்சுனன் :கிருஷ்ணா! எனக்கு வெற்றியும் வேண்டாம்.இந்த அரசாட்சியும் வேண்டாம்.அரசர் பதவி தரும் சுகங்களையும் நான் விரும்பவில்லை.கோவிந்தா! எங்களுக்கு ராச்சியத்தாலோ சுகபோகங்களாலோ அல்லது வாழ்வதனாலோ என்ன பயன் கிட்டப்போகிறது.                                                               (32)
கண்ணன்:  வில்லாளி வீரனே! அர்ச்சுனா! நீ வெற்றியையும் அரசாட்சிகளையும் விரும்பவில்லையா?
அர்ச்சுனன்: கண்ணா! நாங்கள் எவர்களுக்காக வேண்டி இந்த ராச்சியம் ,சுகபோகம் எல்லாம் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தம் உயிர் பொருள் சார்ந்த பற்றுதல்களை துறந்து போர்புரிய போர்முனையில் வந்து நிற்கிறார்களே?    (33)
கண்ணன்:  அர்ச்சுனா! இவர்கள் எல்லோரும் உனக்கு யார்?
அர்ச்சுனன்: எந்து குருதேவர் , தந்தைமார்கள், புதல்வர்கள்,பாட்டனார்கள்,மாமா, ,மாமன்மார்கள், பேரப்பிள்ளைகள்,மைத்துனர்கள் மற்றும் பல உறவினர்கள். (34)
கண்ணன்:  தம்பி ! இவர்களே உன்னைக் கொல்ல முன் வருவார்களேயானால்?
அர்ச்சுனன்: இவர்கள் என்னைக் கொல்லட்டுமே.மதுசூதனா! எனக்குத் தேவலோகம், பூலோகம், பாதளலோகமென்னும் மூவுலகங்களும் கிடைப்பதானாலும் நான் இவர்களைக் கொல்ல மாட்டேன்.வெறும் பூவுலக அரசாட்சிக்காகவா கொல்லவிரும்புவேன்.                                  (35)
கண்ணன்:  தம்பி ! ராச்சியம் ஆளுவதற்கு கிடைத்தால் உனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஏன் இதை நீர் விரும்பவில்லை .இது உங்களுக்கு உரிமையான ராச்சியம் அல்லவா?
அர்ச்சுனன்: ஜனாத்தனா! பெரியப்பா திருதராஷ்டிராரின் மக்களையும், உறவினர்களையும் கொன்றுவிடுவதில் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?அவர்கள் எனக்கும் உறவினர்கள் தானே?இந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவா!இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமா?      ( 36,37)
கண்ணன்: அர்ச்சுனா! எதிரணியிலிருக்கும் உன் உறவினர்கள் உன்னையே கொல்லக் காத்திருக்கிறார்கள்.நீ மட்டும் ஏன் அவர்களை கொல்லப் பின் வாங்குகின்றாய்?
அர்ச்சுனன்: பெருமானே! பேராசை காரணமாக இவர்களுடைய பகுத்தறிவு பாழடைந்து விட்டது.அதனால் குலநாசம்,மித்ர தூரோகம் ஆகியவையால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் இவர்கள் கவனிக்கவில்லை.இப்பாவத்தை உணர்த்தும் பகுத்தறிவு படைத்த நாங்களாவது இக்குற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்.குலம் அழிந்தால் என்ன ஆகும்?   ( 38, 39)
கண்ணன்:  குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.
அர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்? 
கண்ணன்:  குலம் முழுவதிலும் அதர்மம் பரவும்.  (40)
அர்ச்சுனன்: கண்ணா! குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்?
கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.                                     (44)
போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?
அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது.  (45)
கண்ணன்:  இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்?
அர்ச்சுனன்: நான் ஆயுதங்களைத் துறந்து யுத்ததிலிருந்து விலகிவிட விரும்புகிறேன்.நிராயுதபாணியான என்னை துரியோதனன் முதலானவர்கள் கொன்றாலும் அது எனக்கு நல்லது.                      (46)இப்படியே மனம் வருந்திப் பேசியபின் காண்டீப வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவிடு ரதத்தின் நடுவில் மனசோர்வுடன் உட்கார்ந்து விட்டான்.       (47)
படையினரின் விபரம்
பாண்டவர் படை: பாண்டவர் படையைச் சேர்ந்த சிறந்த வில்லாளிவீரர் காசிராஜர்,மாவீரர் சிகண்டி,திருஷ்டத்மனன்,வீராடமன்னன்.வெல்லவே முடியாத வீரசாத்தயகி, ராஜா துருபரர்,துரோபதியின் ஐந்து வீரப்புதல்வர்கள்,சுபத்திரையின் வீரப்புதல்வன் அபிமன்யு இவர்கள் யாவரும் படையில் போர் புரிகிறார்கள்.
துரியோதனின் படை: வீரமிக்க பாட்டனார் பீஷ்மர் தலைமைத்தளபதி,மாவீரன் கர்ணன்,வெற்றி வீரர் கிருபாசாரியார்,அசுவத்தாமா, விகர்ணன்,சோமதத்தரின் புதல்வர் பூரிசிரவர் இவர்களோடு சிறந்த போர் வீரர்களும் போராடுகிறார்கள்

Thursday 8 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 2




 உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் 

ஜூலியன் பால் அசாங் (julian paul assange), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, 'ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?' என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது 'விக்கிலீக்ஸ்'.


விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.

16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே "It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police" என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D.


இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே 'ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்' என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே 'சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்' என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். 'வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள்.


விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் 'ஓ..ஒரு தெய்வம்... படி தாண்டி வருதே..' என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் 'விக்கிலீக்ஸ்'.

ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக மாறிவிட்டது.

விக்கிலீக்ஸ் தளத்தின் இன்றைய வழங்கி (ப்ரான்ஸ்) தகவல்கள்.

பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.

எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே?, எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.

அடுத்த பகுதியில் சந்திப்போம் ..........