Tamil News | Pudhiyaboomi News

Thursday 30 June 2011

27 கோடி வசூல்........

அம்மா !! அரசின் லஞ்ச வேட்டை!!!







     தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான கல்குவாரிகள் 27 மாவட்டங்களில் உள்ளன.  சில மாவட்டங்களில் இருபது முப்பது குவாரிகளும், பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கிலும் இவை நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு குவாரிக்கும் பத்து வருடம் கல் உடைக்க மட்டுமே அனுமதி... மீண்டும் தேவையென்றால் அவர்களுன் லைசென்ஸ்ஐ நீடிக்க வேண்டும்.  அப்போது அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில் நடத்த அனுமதி கிடைக்கும்.  அதேபோல் ஒவ்வொரு மாதமும் லாரிகளுக்கு பர்மிட் வாங்கவேண்டும்.  ஜல்லி, கிரஷர் கற்களை லாரிகளில் விற்பனைக்கு அனுப்ப பர்மிட் அவசியம்.  இதை ஒவ்வொரு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் என்ற அதிகாரிதான் வழங்குவார்.  இது தான் இத்தொழிலின் நடைமுறை.  இந்த மாதம் பர்மிட் வாங்கப் போன கிரஷர் உரிமையாளர்களிடம் ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் 'அமைச்சரைப் போய் பார்த்துவிட்டு வாங்க அப்புறம்தான் பர்மிட் வழங்கப்படும்' என கூற, அந்த சூட்சுமம் பிறகுதான் வெளிப்பட்டுள்ளது.

     இனி நடந்தவற்றை நாம் சந்தித்த பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிர்வாகிகள் 'பெயர்', புகைப்படம் எதுவும் வேண்டாம்.  உண்மை இதுதான்' என விரவாகக் கூறினார்கள்.


     "அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருப்பவர் உடுமலைப்பேட்டை சண்முகவேல்.  நல்ல மனிதர் எளிமையானவர் என்ற பெயரெல்லாம் இவருக்கு உண்டு.  அப்படித்தான் நாங்களும் நம்பினோம்.  ஆனால் அவரைச் சந்தித்தபோது மிக கறாராகவும் மிரட்டும் தொனியிலும் நடந்துகொண்டார்.  'கிரஷர், குவாரி தொழிலைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்.  ஏன்னா நானே மடத்துக்குளத்தில் குவாரி வைச்சு 
20 X 10 மிஷின் போட்டுள்ளேன்.  என்ன வருமானம் என்பது எனக்கு நல்லா தெரியும்.  ஒவ்வொரு மாவட்டத்திலேயும் கிரஷர் உரிமையாளர் அசோசியஷன் வெச்சிருக்கீங்க.  நீங்களே வசூல் செஞ்சு ஒரு மாவட்டத்துக்கு இரண்டு கோடி கொடுத்துடுங்க.  நீங்களும் பொழைக்கணும் நாங்களும் பொழைக்கணும்' என ஒரே பேச்சில் முடித்துக்கொண்டார்.
     
     'ரொம்ப அதிகமா கேட்கறீங்க, அவ்வளவு முடியாதுங்க' என நாங்க கெஞ்சிக்கேட்டபிறகு, இறுதியாக ஒரு கோடி என தலா ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முடிவானது.  குவாரிகள் அதிகம் உள்ள இருபத்தி ஏழு மாவட்டத்திற்கும் இருபத்தி ஏழுகோடி. 'பணம் தரமுடியாது என கூறும் கிரஷர் உருமையாளர்களின் பர்மிட்டை ரத்து செய்யச் சொன்னதாக' அமைச்சர் கூறியதை மாவட்ட அதிகாரிகளும் எங்களிடம் கூறிவிட்டனர்.  எங்க தொழிலை பொறுத்தவரை நூறு சதவீதம் சரியா செய்யமுடியாது.  பாறைகளை உடைக்க வெடிமருந்து பயன்படுத்த வேண்டும்.  அதிகாரிகள் பார்த்து தடை செய்யப்பட்ட அல்லது அனுமதி பெறாமல் வெடிமருந்து வைத்துள்ளதாக எங்களை கைது செய்யவும் முடியும்.  லாரிகளுக்கு பர்மிட் பொறுத்தவரை நூறு லோடு, இருநூறு லோடு என பர்மிட் வாங்குவோம்.  ஆனால் தொள்ளாயிரம் லோடு, ஆயிரம் லோடு அனுப்புவோம்.  இதுவெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான்.  பரமிட் இல்லையென்று ஆர்.டி.ஓ, தாசில்தாரை விட்டு லாரியை பிடித்துக் கொண்டு போவார்கள்.  இப்படி பல பிரச்சினைகள் இத்தொழில் உள்ளன.  இதனால் தான் அமைச்சரின் உத்தரவுக்கு நாங்கள் அடிபணிய வேண்டியுள்ளது.

     சரி, ஒருமுறைதான் கேட்கிறார் என நாங்கள் நினைத்தோம்.  தென்மாவட்டத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் அமைச்சரை சந்தித்தபோது, பத்து வருடம் லைசென்ஸ் எனபதை இருபது வருடமாக நீடித்து தாருங்கள் என கேட்டுள்ளனர்.  'அதையெல்லாம் அம்மாவிடம் பேசி நான் முடித்து தாரேன்.  நீங்கள் இப்போது போல ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாவட்டத்திற்கு 'ஒன் சி' கொடுத்து விடுங்கள்' என கூறியுள்ளார்.  இனி ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு மாவட்டமும் ஒரு கோடி கொடுக்க வேண்டுமாம்" -என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக கூறினார்கள் கிரஷர் உரிமையாளர்கள், அசோசியேஷன் நிருவாகிகளாக உள்ள அ.தி.மு.க. ர.ர. மற்றும் தி.மு.க. உ.பி.க்கள்.



     சின்ன சின்ன அளவில் குவாரி நடத்தும் கிரஷர் உருமையாளர்கள் முதல் பெரிய அதிபர்கள் வரை தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கனிம வளத்துறை அதிகாரியே ஒரு நிறுவனம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளார்.  அதன்படி சிறு கிரஷர் நிறுவனங்கள் 35 ஆயிரம், அடுத்து 50 ஆயிரம், தொடர்ந்து 1 லட்சம்... பெரிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று, நான்கு லட்சங்கள் என பங்குத்தொகை போல பிரித்து ஒரு மாவட்டத்திற்கும் ஒரு கோடிக்கும் குறையாமல் வசூல் செய்யும் கொறுப்பை அந்தந்த மாவட்ட அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளார் கனிமவள அதிகாரி.

     கடந்த ஒருவாரமாக தமிழ்நாடு முழுக்க கிரஷர் நிறுவனங்களிடம் வசூல் மிக தீவிரமாக நடந்து வருகிறது.  சில மாவட்டங்களில் அமைச்சரிடம் செட்டில் மெண்ட் முடிந்து விட்டது.  இம்மாத இறுதியில் 30-ந்தேதிக்குள் எல்லாம் ஒப்படைத்துவிடவேண்டும் என கெடு வைத்துள்ளனர்.  தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சண்முகவேல் அலுவலகத்தில் ஒருவாரமாகவே கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமாக உள்ளது.  27-ந்தேதி வரை இருபது மாவட்டங்கள் தங்கள் கணக்குகளை ஒப்படைத்து விட்டனர்.

     இவ்வளவு கஷ்டப்பட்டு 'உழைத்த' தொழில் அமைச்சர் சண்முகவேலு திங்களன்று ஊரகத் தொழில் அமைச்சராக மாற்றப்பட்டு விட்டார்.  

Monday 27 June 2011

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி


இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.  
 
தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.
 
எனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.  
 
பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.  
 
பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
 
இதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.  
 
இதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.
 
கோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

Wednesday 22 June 2011

சரிகிறது மாறன் சகோதரர்களின் சாம்ராஜ்ஜியம்


தயாநிதி மற்றும் கலாநிதி மாறனை இத்தனை நாளாக தழுவியிருந்த அதிர்ஷ்ட தேவதை சுத்தமாக கைகழுவி விட்டதாக தெரிகிறது.

2004 பாராளுமன்றத் தேர்தலின் போது, முரசொலி மாறனின் மறைவால், மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு, கருணை அடிப்படையில் நியமிக்கப் பட்டவர்தான் தயாநிதி மாறன். அந்தப் பதவியே கனிமொழி போட்ட பிச்சைதான்.   முதலில் அந்தத் தொகுதிக்கு கனிமொழியை வேட்பாளராக நியமிக்கலாம் என்று, கருணாநிதி எடுத்த முடிவு, கனிமொழி அரசியலில் இறங்க அப்போது மறுத்ததால் தயாநிதிக்கு அந்த யோகத்தை அளித்தது.
 mk_kanimozhi_20110509
அதற்குப் பிறகு, மாறன்களின் நடத்தையால் தான் அவர்கள் சிஐடி காலனியின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.   எம்.பி பதவியை பெறுவதற்கு முன்பாக, ராசாத்தி அம்மாளின் தயவு வேண்டி, அவர்கள் வீட்டிற்கு நடையாக நடந்தவர்கள், பதவி கிடைத்து மந்திரியானதும், சிஐடி காலனியை சுத்தமாக புறக்கணித்ததாக தெரிகிறது.   இந்தப் புறக்கணிப்பும் உதாசீனப்படுத்தலுமே, ராசாத்தி அம்மாளை கனிமொழிக்கும், அரசியல் அதிகாரம் இருந்தால் தான், குடும்பத்தில் கவுரவமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும், வெறுமனே கருணாநிதியின் பாசம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது.
 rajathi_ammal._3
2004ல் தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு, கணிசமான செல்வாக்கை பெற்றுத் தந்ததும், தொலைத் தொடர்புத் துறையை கேட்டுப் பெற்றால் தங்களின் தொழில்களுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று மாறன்கள் உணர்ந்தே, அந்தத் துறையை பெற வேண்டும் என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.   மாறன் சகோதரர்களின் உள்நோக்கத்தை அறியாத கருணாநிதியும், அவர்கள் விருப்பத்தின் படியே, தொலைத் தொடர்புத் துறையை மத்திய அரசோடு மல்லுக் கட்டி பெற்றுத் தந்தார்.
 dayanidhi_maran2
தொலைத் தொடர்புத் துறை தங்களது கையில் வந்த நாள் முதலாகவே, மாறன்கள், அந்தத் துறையை தங்களின் தனிப்பட்ட தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.   எப்.எம் லைசென்ஸ், நேரடியாக வீட்டுக்கு வரும் டிடிஎச் சேவை, ஆகியவற்றில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல கோடிகளை சம்பாதித்தது கருணாநிதிக்குத் தெரியும் என்றாலும், இப்போது வெளியில் வந்திருக்கும் அளவுக்கு சம்பாதித்திருப்பார் என்று அவரே நினைக்கவில்லை.

மத்திய அமைச்சராக தயாநிதி ஆன பிறகு, அவர்களின் சொத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மாறன்களின் வாழ்க்கை முறையும் மாறத் தொடங்கியது.   2006ல் அதிகாரத்துக்கு வந்த பின்னால், அழகிரி மற்றும் ஸ்டாலினிடம் ஏராளமான அதிகாரம் இருந்தாலும், மாறன்களின் லைப் ஸ்டைலைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சலே வந்தது. மிக மிக பகட்டான வாழ்க்கை முறை, ஏழு பென்ஸ் கார்கள் என்று ஆடம்பரமும், பகட்டும் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

2006க்கு முன்பாக, கருணாநிதி குடும்பத்தினர் சன் டிவியில் வைத்திருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு தொகையை அளித்தனர். அது வரை சன் டிவி பங்குச் சந்தையில் வெளியிடப்படவில்லை என்பதால், உத்தேசமாக ஒரு விலையை நிர்ணயித்து, தயாளுவுக்கும், கருணாநிதிக்கும் ஒரு பத்து கோடியை அளித்ததாக நினைவு.

ஆனால், பங்குச் சந்தையில் ஆகஸ்ட் 2006ல் மாறன் சகோதரர்கள் சன் டிவியின் பங்குகளை வெளியிடுகிறார்கள். வெறும் பத்து சதவிகித பங்குகளை வெளியிடுகிறார்கள்.   இந்த 10 சதவிகித பங்குகள் மொத்தம் 68 லட்சத்து 89 ஆயிரம் பங்குகள். இந்தப் பங்குக்கு மாறன் சகோதரர்கள் நிர்ணயித்த விலை 875 ரூபாய்.   இவ்வாறு சந்தைக்கு வந்த சன் டிவியின் பங்கு, சந்தையில் வெளியிடப் பட்ட அன்று, 1466 ரூபாய்க்கு முடிந்தது.
 suntv-logo
இவ்வாறு மாறன் சகோதரர்கள் இந்தப் பங்கு வெளியீட்டில் சம்பாதித்த பெரும் தொகை, கருணாநிதி குடும்பத்தினரை கடும் கோபம் கொள்ளச் செய்தது. அப்போது முதலே, மாறன்கள் மீதான கோபம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.

நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபம், தினகரன் நாளேட்டில் சர்வே வெளியானதும் வெளிப்படையாக வெடித்தது.   அந்நாளேட்டில் பணியாற்றிய 3 ஊழியர்கள் எரித்துக் கொல்லப் பட்டாலும், அது, மாறன் சகோதரர்களின் கொட்டத்தை அடக்க ஒரு வாய்ப்பாக கருணாநிதி குடும்பத்தாரால் பார்க்கப் பட்டது.

அப்போது ஏற்பட்ட பிரிவால் உருவானதுதான், கலைஞர் டிவி உதயம். பிரிந்து போன மாறன் சகோதரர்கள், மீண்டும் கருணாநிதியோடு இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து, மோதிப் பார்த்து விடலாம் என்ற வழியையே தேர்ந்தெடுத்தனர்.   சன் டிவி மூலமாக தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான செய்திகளை போட்டுத் தாக்கினர்.   ஸ்பெக்ட்ரம் விவகாரம் அரசல் புரசலாக கசியத் தொடங்கியதும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கண்ணாடி போல தெளிவான முடிவுகள் எடுத்ததாகவும், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து நீக்கியதாலேயே ஊழல் நடைபெற்றது என்றும், தவறாக எடுக்கப் பட்ட அனைத்து முடிவுகளுக்கும் ராசாவே காரணம் என்றும் வளைத்து வளைத்து செய்தி போட்டனர்.

சன் டிவியின் வளர்ச்சி என்பது, திமுக தொண்டனின் ரத்தத்தில் கிடைத்தது. திமுக தொண்டனின் போராட்டத்தாலும் திமுக வின் ஆட்சி அதிகார பலத்தாலும், அந்தக் கட்சியின் சொத்தான அறிவாலயத்திலும் வளர்ந்தது. அப்படிப் பட்ட வளர்ச்சியை மொத்தமாக மறந்து விட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சன் குழுமத்தின் தினகரன் நாளேட்டில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டார்கள் மாறன் சகோதரர்கள். இதுதான் இவர்களின் மனசாட்சி.

திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் கிடைத்த அதிகாரத்தை கட்சியின் வளர்ச்சிக்கும், ஓரளவுக்கு தங்கள் சுயலாபத்திற்கும் பயன்படுத்தினார்கள் என்றால், மாறன் சகோதரர்கள் முழுக்க முழுக்க தங்களது, சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள்.

பேரப்பிள்ளைகள் ஏதோ தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கருணாநிதிக்கு, 2006ல் சன் டிவி பங்கு வெளியிட்ட போதுதான், நூற்றுக்கணக்கான தொழில்களை நடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.   இத்தனை தொழில்களை மாறன்கள் நடத்தி வருவது தெரிந்ததும் தான், தனது சொந்தப் பிள்ளைகளுக்கு எதுவுமே சேர்த்து வைக்கவில்லையே என்பதை கருணாநிதி உணர்ந்தார். இந்த விரக்தியின் வெளிப்பாடே, மகன்களையும், மகள்களையும் கண் மண் தெரியாமால் சம்பாதிக்க விட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
 sunfinal_Page_115
sunfinal_Page_186
ஏற்கனவே, மாறன்கள் மீது பொறாமையில் இருந்த அழகிரி, தயாநிதி மற்றும், மந்திரியானதும் தங்களை கண்டுகொள்ளமால் ஒதுக்கி உதாசீனப்படுத்தினார்கள் என்று எரிச்சலில் இருந்த ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழி ஆகியோர், அவர்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கும் மாறன்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டுமென்றால், உழைத்தா சம்பாதிக்க முடியும் ?

அப்போது கிடைத்த வரப்பிரசாதம் தான், தொலைத் தொடர்புத் துறை என்ற அட்சயப் பாத்திரம்.   இந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஆ.ராசா, தயாளு, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெகதரட்சகன், காமராஜ், ஜாபர்சேட், போலிப் பாதிரி என்று அள்ளித் தின்னாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு, அந்த அட்சயப் பாத்திரம் அள்ளிக் கொடுத்தது.

மாறன்கள், தொடர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்படுவதை கவனமாக கூர்ந்து கவனித்துக் கொண்ட வந்தார் கருணாநிதி. ஆரம்பத்தில், ஏமாற்றி விட்டார்கள் என்று மாறன்கள் மேல் இருந்த கடும் கோபம், நாளுக்கு நாள், அவர்களின் பலத்தைப் பார்த்ததும் அச்சமாக மாறத் தொடங்கியது.   மற்றவர்களுக்கு ஸ்பெக்ட்ரத்தில் என்ன நடந்தது என்று அப்போது தெரியாமல் இருந்தாலும், கருணாநிதிக்கு தெரியுமல்லவா ?

இது தவிரவும், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்தவர் செல்வி.   இந்த செல்வி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்வித் தொடரில் வருபவர்களை விட, அபாரமாக நடிக்கும் திறமை படைத்தவர். இரண்டு குடும்பங்களும் மோதலில் இருந்த காலத்தில், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றது போல, நடித்தவர் இந்த செல்வி.  
selvie
சொந்த மகள் இறந்தாலும், தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதவர் தான் கருணாநிதி. ஆனாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டால், கட்சிக்கு ஆபத்து, தனக்கும் ஆபத்த என்பதை உணர்ந்ததாலேயே, மாறனை மந்திரிப் பதவியை விட்டு நீக்க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியவர், இணைப்புக்கு கோபாலபுரம் குடும்பத்தோடே முடித்துக் கொண்டு, “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்றார்.   ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்” என்று பதிலளித்தார்.

அதற்குப் பிறகு, மாறன்களோடு இணைந்தது போல வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும், உடைந்த பானை ஒட்டாது என்பது போலவேதான், கட்டாயம் மற்றும் வசதியின் அடிப்படையிலான உறவாக (Relationship of convenience) அந்த உறவு தொடர்ந்தது.

ராசா மீது வட இந்திய ஊடகங்களில் குற்றச் சாட்டுகள் மெள்ள எழுந்த போதெல்லாம் கோபம் கொள்ளாத கருணாநிதி, மாறன்களுக்கு மிக மிக நெருக்கமான விகடன் குழுமமே, ராசாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் கடுமையாக எழுதியதிலும், மாறன்களைப் பற்றி அமைதி காத்ததிலும் கடும் கோபம் அடைந்தார்.   இதன் பின்னணியில் இருப்பது மாறன்களே என்று கருணாநிதி சமீப காலத்தில் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

திமுக மிக மிக பலவீனமாக இருக்கும் இந்தச் சூழலில், மாறன்களை கட்சியை விட்டு நீக்குவது என்ற கடினமான முடிவு, கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று கருணாநிதி உணர்ந்தாலும், மந்திரி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லலாமா என்று ஆலோசித்துள்ளார். ஆனால், திடீர் திருப்பமாக, அழகிரி, மாறன்களுக்கு ஆதரவாக, ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எந்நேரம் வேண்டுமானாலும் சிறை செல்லலாம் என்ற அச்சத்தில், மந்திரி பதவியும் இல்லாவிட்டால், குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் போய் விடும் என்று அழகிரி நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் காரணத்தாலேயே அழகிரி, இப்போதைக்கு ஆதரவு வாபஸ் வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.
 DSC_9069
ஒரு சர்வே வெளியிட்டதால், மாறன் சகோதரர்கள் மேல் கடும் கோபம் கொண்டு, மூன்று பேரை எரித்துக் கொன்று, அந்தக் கோபத்தை தணித்துக் கொண்ட அழகிரியும், மாறன்களும், இன்று ஒரே அணியில் இருப்பது காலத்தின் கோலமே…

ஆனால் இது போல எந்த நெருக்கடிகளும் இல்லாத ஸ்டாலின் மாறன்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தயாநிதி மாறனிடம், தேவையின்றி வீட்டுக்கு வர வேண்டாம் என கடுமையாக சொல்லியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.   கருணாநிதியை தயாநிதி சந்தித்த போது கூட, “தாத்தா என்னை திஹாருக்கு அனுப்ப நிறைய பேர் வேலை செய்யிறாங்க தாத்தா” என்று சொன்னதற்கு “போயிட்டு வாப்பா” என்று சொன்னதோடு கருணாநிதி நிறுத்திக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

மற்ற ஊடகங்கள் நெருக்கடி கொடுத்ததையெல்லாம் தங்கள் பண பலத்தால் சமாளித்த மாறன்கள், திமுக தலைவர் கருணாநிதியும் அவர் குடும்பத்தின் ஆதரவும் விட்டுப் போனதில், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், பிரதமர் சிபிஐக்கு தயாநிதி மாறனை விசாரிப்பதற்கான அனுமதி கொடுத்து உள்ளதை அடுத்து, எந்நேரமும் தயாநிதி பதவி விலக வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.
ஈழப் போரின் போது, கருணாநிதி கூட ஒரு சமயத்தில் ஏன் ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று யோசித்த போது கூட, மாறன்களே கருணாநிதியை அம்முடிவிலிருந்து தடுத்ததாகவும், இதற்கு அவர்களின் வணிக நோக்கங்களே காரணமாக இருந்துள்ளன என்றும் திமுக வில் உள்ள சில மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
 karuna_fish_tank
மனசாட்சி என்பது துளி கூட இல்லாத இந்த மாறன்களின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியிருக்கிறது.   விரைவில் தயாநிதி மாறன் திஹார் சிறையில் அடைக்கப் படும் போது, நமக்கு அல்ல… கருணாநிதிக்கு “இதயம் இனிக்கும். கண்கள் பனிக்கும்”

Saturday 18 June 2011

தீரன் சின்னமலை வரலாறு


வரலாறு


தீரன் சின்னமலை ஓடாநிலை மணிமண்டபம்
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம்அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமிகவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி,சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாகமைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம்சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம்பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின்மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின்கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான்போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்துஓடாநிலைஎன்னும் ஊரில் கோட்டைகட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவேஏப்ரல் 18,1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில்பிரெஞ்சுக்காரர்துணையோடுபீரங்கிகளும்தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராகஅறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர்,வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும்இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி

மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரத்ருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
சின்னமலையின் பிற வெற்றிகள்
திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். பின்னர், கி.பி 1799ல் தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801ல், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
தூக்கிலிடப்படல்
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்துசங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.
சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.
நினைவஞ்சலி
தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.
ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் ‘தீரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, ‘தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை’ வெளியிட்டது.
காலவரிசை
1756: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1782: டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைந்ததால், அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
1799: நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
1799: தனது படைகளைப் பெருக்கினார்.
1800: ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார்.
1801: பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார்.
1802: சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார்.
1803: அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
1805: ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற அவரையும், அவரது தம்பிகளையும், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.

Thursday 16 June 2011

இலங்கை தமிழின படுகொலைகள் குறித்து பிரிட்டிஷ் சேனல் 4 வெளியிட்டுள்ள ஆதார வீடியோ

லண்டன்: இலங்கையில் சிறை வைக்கப்பட்ட தமிழர்கள் மீது, சிங்கள ராணுவ வீரர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய, "இலங்கையின் போர்க் களங்கள்' என்ற புதிய வீடியோவை, பிரிட்டனின் "சேனல் 4' நேற்று முன்தினம் வெளியிட்டது. இதையடுத்து, "போர்க்குற்றம் பற்றி இலங்கை விசாரிக்க வேண்டும் அல்லது சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்' என, பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

           இலங்கையில், கடந்த 2009ல் ஏப்ரல், மே மாதங்களில், விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இருதரப்பும் பல்வேறு போர்க் குற்றங்களை செய்துள்ளதாக சமீபத்தில் ஐ.நா., வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.சிங்கள ராணுவத்தின் அட்டூழியத்துக்கு ஆதாரமாக பிரிட்டனில் செயல்படும் "சேனல் 4' செய்தி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ காட்சியை சுட்டிக் காட்டியிருந்தது. அந்த வீடியோவில், நிர்வாணமாக நிற்கும் தமிழ் ஆண், பெண்களை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தும் காட்சி இடம் பெற்றிருந்தது.இலங்கை அரசு தரப்பில் அந்த வீடியோ போலியானது என்று மறுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் "சேனல் 4' செய்தி நிறுவனம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


             "இலங்கையின் போர்க் களங்கள்' என்ற பெயரிலான இந்த வீடியோவில், சிறைப்பட்ட தமிழர்களை ராணுவத்தின் சுட்டுக் கொல்லுதல், ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் நிர்வாணமாகக் கிடத்தல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் செயல்பட்ட மருத்துவமனைகள் மீது சிங்கள ராணுவம் குண்டுமழை பொழிந்ததை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஒன்றாகக் கட்டி, அவர்களின் தலைகளில் சுட்டுக் கொல்லுதல் போன்ற கொடூரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

              பிரிட்டன் எச்சரிக்கை: இந்நிலையில், இந்த வீடியோ குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டெய்ர் பர்ட் கூறியதாவது:இந்த வீடியோவை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மீறப்பட்டதற்கு இது ஒரு உறுதியான ஆதாரம்.இதுகுறித்து இலங்கை நடவடிக்கை எடுப்பதற்கு, சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு, பிரிட்டன் தயாராக உள்ளது. போர்க்குற்றம் குறித்து இலங்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால், அந்நாட்டு எதிரான சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.இவ்வாறு பர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மறுப்பு: இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வீடியோ போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழின படுகொலைகள் குறித்து பிரிட்டிஷ் சேனல் 4  வெளியிட்டுள்ள ஆதார வீடியோ தமிழ்  மக்களை கொலை செய்வதை உலகநாடுகள் அனைத்தும் எதிர்த்து வரும் நிலையில் , தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் இலங்கையின் போக்கை எதிர்த்து பொருளாதார தடையை கொண்டுவர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் . ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவக்கியுள்ளது வருத்தமளிபதாக உள்ளது ........ இதன் மூலம் இந்தய அரசு மறைமுகமாக இலங்கைக்கு ஆதரவு அளித்துவருவது மீண்டும் உறுதியாகி  உள்ளது ......

Tuesday 14 June 2011

காலிங்கராயன்





                   கொங்கு மண்டலத் தலைவர் காளிங்கராயன் அவர்களின் இயற்பெயர் லிங்காய கவுண்டர். இவர் கிபி 1240 ம் ஆண்டு பிறந்தார்.  இவர் கொங்கு வேளாளர் இனத்தை சார்ந்த சாத்தாந்தை என்னும் கூட்டத்தை சேர்ந்தவர்.

‘வெள்ளோடு’ என்னும் ஊர் ஈரோட்டிலிருந்து பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை செல்லும் வழியில் உள்ளது. இவ்வெள்ளோட்டின் அருகில் உள்ள கனகபுரம்’ எனும் சிற்றூரில் பிறந்தவர்தான் காலிங்கராயன்.

       20 வயது ஆனதும் அப்பொழுது கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் (1265-1280) படையில் சேர்ந்தார். தனது செயலாற்றலால் விரைவில் தலைமைப்பதவியை அடைந்தார். பாண்டிய மன்னன் இவரை உத்திர மந்திரி (தலைமை அமைச்சர்) ஆக்கினார். வீரமும் விவேகமும் இணைந்து விளங்கப் பெற்ற லிங்கையன், பிரதான அமைச்சருக்கு நிகராக மன்னராலும் மக்களாலும் மதிக்கப்பட்டவர். வீரபாண்டியன், சுந்தர பாண்டியன்,குலசேகர பாண்டியன் என்ற மூன்று கொங்குப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் சுமார் நாற்பது ஆண்டுகள் அரசியல் தலைவராக விளங்கிய பெருமை பெற்றவர்.





ஏராளமான சிறப்பியல்புகளைக் கொண்ட லிங்கையனுக்கு ‘காலிங்கராயன்’ என்ற சிறப்புப் பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தார் பாண்டிய மன்னர். ‘உத்தர மந்திரி’ என்று அழைக்கப்பட்ட காலிங்கராயன் ‘வெள்ளோடு’ என்ற ஊரை தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டை நிர்வகித்து வந்தார். இவரின் சிறப்பை இன்றளவும் சொல்லுவது இவரின் பணிகளே. பவானியையும் நொய்யலையும் இணைத்து இவர் வெட்டிய பாசன கால்வாய் காளிங்கராயன் வாய்க்கால் எனஅறியப்படுகிறது. காளிங்கராயன் வாய்க்கால் கொங்கு மண்டலத் தலைவர் காளிங்கராயன் அவர்களால் 1271ஆம் தொடங்கப்பட்டு 1283ஆம் முடிக்கப்பட்டது. 

        இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல்கள் (90 கிமீ). பவானி காவிரி ஆற்றுடன் கூடுவதற்கு சற்று முன் அணை கட்டி பவானி ஆற்று நீர் காளிங்கராயன் வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டது. 56 மைல்கள் பயணித்து நொய்யல் ஆற்றில் ஆவுடையாபாறை என்னும் இடத்தில் இவ்வாய்க்கால் சேர்கிறது. இவ்வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டம் சிறப்பாக பயனடைகிறது.  இவ்வாய்க்கால் தொடங்குமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 534 அடியாகும், முடியுமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 412 அடியாகும். இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்திலிருந்து முடியுமிடம் வரையில் 36 மைல்கள்தானெனினும், இயற்கையாய் அமைந்த சிறுசரிவின் முழுப்பயனைப் பெறவேண்டியும் மிகுதியான நிலப்பகுதிகள் பாசனம் பெறவேண்டியும், இதனை வளைவுகளுடன் 56 மைல்கள் ஓடுமாறு செய்தார் காளிங்கராயர். இவ்வாய்காலை அமராவதி ஆற்றுடன் இணைக்க இவர் முடிவெடுத்து அத்திபாளையம் அருகே அணை கட்டினார். எனினும் அவரின் இத்திட்டம் நிறைவேறவில்லை. அத்திபாளையத்தில் உள்ள அணை ஓடை அணை என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.




கொங்கு நாட்டில் ஆதிக்க சக்திகள் வாழ்ந்த சில பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் கால்களில் செருப்பணிந்து செல்லக்கூடாது. அவர்களின் வீடுகளின் மங்கள காரியங்களோ, தீய காரியங்களோ நடந்தால் மங்கள வாத்தியங்கள், பேரிகை முதலியன வாசிக்கக் கூடாது. இந்தத் தடையுத்தரவுகளை தவிடுபொடியாக்கி, அத்தனையையும் ரத்து செய்து, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவித்தவர் காலிங்கராயன். இதைக் கல்வெட்டில் தானே உத்தரவாய்ப் பதித்ததோடு, “தேவைப்படும் இடங்களிலெல்லாம் இந்த உத்தரவை கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொள்க” என்றும் உத்தரவிட்டார் காலிங்கராயன். இந்த உத்தரவு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை கொங்கு நாட்டு கோயில்களில் இன்றும் ஏராளமாகக் காணலாம்.




காளிங்கராயன் வாய்க்கால்

Sunday 12 June 2011

தமிழினம் ஒழிக ..

இலங்கை .......ராஜபக்ஷே........... இந்தியா.........

மிழக மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அதிபருடன் 
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 
சிவசங்கர் மேனன் மற்றும் உயர் அதிகாரிகள்  இலங்கை சென்றனர்

இலங்கை சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், கொழும்பில், 
அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசினார்.உடன், இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்.

ராஜபக்ஷே அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கட்டும் ..........  எஞ்சியுள்ளவர்களை துன்புறுத்தி ரசிக்கட்டும் ........ 
இந்திய அரசாங்கம் எட்டநின்று வேடிக்கைதான் பார்க்கும் ....
அதன்பிறகு அவனை விருந்துக்கு அழைக்கும் ...

இந்தியாவிலிருந்து பேச்சுவார்த்தை என்று சில அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கபடுவார்கள் அவர்கள் ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி விருந்துண்டு பரிசுபொருட்களை வாங்கிக்கொண்டுவந்து ......
இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை ரெண்டு கொசுவை  மட்டுமே அடித்தார்கள் அந்த சத்ததை குண்டு வீசியதாக தவறாக கூறிவிட்டார்கள் ... இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று அறிக்கை தாக்கல் செய்வார்கள் ......

Tuesday 7 June 2011

கலைஞர் : நேற்று ,இன்று, நாளை ...




















ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை 


நேற்று: 








இன்று 












நாளை 










கடைசியில் 












கொசுறு