Tamil News | Pudhiyaboomi News

Friday 25 November 2011

வேண்டியதை அருளும் காலபைரவ வடுகநாதர்



குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதர்


'காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள்காசு இல்லைஎன்றால்குண்டடத்துக்கு வாருங்கள்என்று குண்டடம்ஸ்ரீகாலபைரவ வடுகநாதரின்சிறப்பைப் பற்றிகிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார்பைரவர்என்றால்எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசிமாநகரின்காவல் தெய்வமான ஸ்ரீகாலபைரவர்தான்புராணச்சிறப்பு வாய்ந்த காசிமாநகரைஎந்த வித தீய சக்திகளும் அண்டவிடாமல் காவல் காத்துவருபவர்அங்கே குடி கொண்டுள்ளஸ்ரீகாலபைரவர்காசிக்குச் செல்லும்பக்தர்கள் திரும்பும்போது,அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்திபெறும் என்றுபுராணம் சொல்கிறது.
பொருளாதார ரீதியாக காசிக்குச் செல்வது என்பதுஎல்லோருக்கும் இயலாதஒன்றுஎனவேதான்வசதி உள்ள அன்பர்கள் பைரவரை தரிசிக்க விருப்பம்கொண்டால் காசிக்குப்போகலாம்... வசதி இல்லாத அன்பர்கள்நம்தமிழகத்திலேயேஉள்ளே குண்டடம் சென்று அங்குள்ள பைரவரை தரிசித்துபலன்பெறுங்கள் என்றார் வாரியார் ஸ்வாமிகள்.
பைரவர் என்பவர்சிவனின் அம்சம். «க்ஷத்திரங்களை இவர்காப்பதால், «க்ஷத்திரபாலகர் என்றும் அழைக்கப் படுகிறார்நான்குவேதங்களே நாய்வடிவில் பைரவருக்குக் காவலாக இருக்கின்றன. 64 வேறுபட்டவடிவங்களில் பைரவர் திருமேனிகளைப்பிரித்துச் சொல்வார்கள்.


பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கும்.பொன்னும்பொருளும்
மன அமைதியும் மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால்கிடைக்கக்கூடிய சிலசெல்வங்கள்பதினெட்டு சித்தர்களுள் ஒருவ ரானகொங்கணர்பைரவரைவழிபட்டு அட்டமாஸித்திகளைஅடைந்தார்செம்பைத் தங்கமாக்குதல்,எத்தகைய நோயையும்குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத்தயாரித்தல் போன்றபிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்துவிளங்கியதற்குஸ்ரீபைரவரின் அருளே பிரதான காரணம்!
பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு.அப்போதுபிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான்முகன் என்ற பெயர்பிற்பாடு வந்திருக்கவேண்டும்). திசைகளின் காவலனாக,படைப்புத் தொழிலின் அதிபதியாகவிளங்கியதா லும்ஐந்துதலைகளுடன் அவதரித்ததாலும் லோகரட்சகனான சிவபெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன்அதோடு,தேவர்கள்மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்கவேண்டும்என்றும் உத்தரவிட்டார்இதுகுறித்து சிவனிடம் சென்றுமுறையிட்டனர்தேவர்கள்சினம் கொண்டார் சிவபெருமான்.பிரம்மனின் செருக்கை அடக்கத்தீர்மானித்தார்தனது சக்தியால்பைரவரை உருவாக்கிபிரம்மனின்தலைகளில் ஒன்றை கிள்ளிவரும்படி ஆணை இட்டார்வீராவேசத்துடன்புறப்பட்ட பைரவர்,பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒருதலையைத்தன் நகத்தால் கிள்ளி எடுத்தார்இந்த பைரவர்அம்சமேவடுகதேவர் ('வடுகன்என்றால் பிரம்மச்சாரி).புராணத்தில் சொல்லப்பட்டதகவல் இது.



குண்டடத்துக்கு வருவோம்இங்குள்ள பைரவரின் திருநாமம்-ஸ்ரீகாலபைரவ வடுகநாத ஸ்வாமிஇங்கு உறையும் ஈசனின்திருநாமம் விடங்கீஸ்வரர்விடங்கர் என்ற முனிவர் தவம்இருந்தமையால் இந்தப் பெயர்அம்பாள் திருநாமம்விசாலாட்சி.என்றாலும் பைரவர் கோயில்வடுகநாதர் கோயில் என்றுசொன்னால்தான் பலரும் இந்தக் கோயிலை அடையாளம்காட்டுகிறார்கள்பைரவருக்கு சிறப்பான வழிபாடு நடந்துவருகிறதுகலியுகத்தில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி,பக்தர்களைத் தன்பால் ஈர்த்து வருகிறார் இந்த காலபைரவ வடுகநாதர்.
கோவைமதுரை நெடுஞ்சாலையில் குண்டடம் இருக்கிறது.கோவையில் இருந்து சுமார் 82 கி.மீ.! பல்லடம்தாராபுரம்மார்க்கத்தில் இரண்டு ஊர்க ளுக்கும் நடுவில் இருக்கிறதுகுண்டடம்பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ.! தாராபுரத்தில்இருந்து 16 கி.மீதொலைவு.


மகாபாரத காலத்திலேயே குண்டடம் சிறப்புற்று விளங்கியதாகபுராணம் சொல்கிறதுகீசகன் என்பவன்திரௌபதியின் மேல்மோகம் கொண்ட தால்அவனைக் கொன்றான் பீமன்இது நிகழ்ந்தஇடம்குண்டடம். 'கொன்ற இடம்என்பது பின்னாளில் குண்டடம்ஆகி விட்டது.
''பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது (மறைந்து வாழ்வது)குண்டடத்தில் இருந்து சுமார் 7 கி.மீதொலைவில் உள்ளருத்ராபதிக்கு வந்தனர்இங்குள்ள தொரட்டி மரத்தின்பொந்தில்தான் தனது வில்அம்பு போன்ற ஆயுதங்களை மறைத்துவைத்தான் அர்ஜுனன் (இதே நிகழ்வை வேறு சில ஊர்களோடும்தொடர்புபடுத்திச் சொல்வது உண்டு). இதனால் இந்த மரத்தின்அடியில் உள்ள விநாயகர் 'வில் காத்த விநாயகர்என்று இன்றும்அழைக்கப்படுகிறார்இந்த ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் 1950-ஆம்வருடம் கிணறு வெட்டும்போது பூமிக்கடியில் இருந்து கைப்பிடிஇல்லாத வாள்யானையின் தந்தம்குதிரை மற்றும் யானையின்எலும்பு கிடைத்ததாகத் தொல்பொருள் துறையின் ஆய்வு ஒன்றுசொல்கிறது.
தற்போது உள்ள தாராபுரத்துக்கு அந்த நாளில் விராடபுரம் என்றுபெயர்அஞ்ஞாதவாசத்தின்போது விராடபுரம் அரண்மனையில்ஒரு வருடம் பேடி யாக இருந்தான் அர்ஜுனன்ஒரு வருடம்முடிந்து திரும்பும்போது ஒரு நாள் சூர்ய உதய நேரத் தில்அர்ஜுனனின் பேடி வேஷம் நீங்கியதுஇது நீங்கிய இடம்சூரியநல்லூர் எனப்படுகிறதுஇதுதாராபுரத்துக்கும்குண்டடத்துக்கும் நடுவே இருக்கிறது.