Tamil News | Pudhiyaboomi News

Thursday, 7 March 2013

கொங்கதேச பட்டக்காரர்கள்

கொங்கதேச பட்டக்காரர்கள்

வரலாறு : கொங்கு மண்டலமானது பலநாள் சோழ வேந்தர்களது ஆட்சிக்குள் அடங்கி இருந்தது. சிற்றின்பப் பிரியத்தாலும், ஐக்கியக் குறைவாலும் சோழர் வலிகுன்றினர். அக்காலத்திற் பாண்டிய அரசர்களில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் ராஜாதி ராஜன் ஆனான். சோழ வம்சம்  என்னும் மலைக்குத் தான் ஒரு இடியேறு எனப் புகழ்பெற்றான். சோழ நாடு கொங்கு நாடுகளைக் கைக்கொண்டான். காரையூர் பயறகுலத்தவனான சர்க்கரை மரபினனொருவன் பாண்டி மன்னனைக் கண்டான். இவனது முன்னோர்களின் அரும்பெருஞ் செயல்களைக் கேள்வியுற்ற பாண்டியன், இவனது வீர தீரங்களைக் கண்டு உடனிலை வீரனாக வைத்துக் கொண்டான். 
 
பின்பு சில தினங்களுக்குள் இவனது ஆண்மை, எதிரியை வயப்படுத்தல், வெருட்டல் (அச்சமுறுத்தல்) முதலிய அரசியல் தந்திரம்  சொற்சாதுரியம்  முதலிய குணங்களை அறிந்து சேனாதிபதிப் பதவி கொடுத்தான். அதுசமயம்  சோழன் படையுடன் வந்து கொங்கு நாட்டைச் சூறையாடினான். இதனையறிந்த பாண்டியன் சோழனைத் துரத்தி யடிக்கும்படி ஏவினான். 
 
கொங்கு பயிரகுலத்து  வீரன் படையுடன் சென்று படையை நிறுத்திவிட்டு மிகுந்த தைரியத்துடன் சோழனிடஞ் சென்று, தன்னை அறிவித்து ஐயா, மிகுந்த அன்பாகத் தங்கள் முன்னோர் காத்துவந்த இக் கொங்கு நாட்டைக் சூறையாடுகிறீர்கள்; இது தருமமாகாது; கருணைகூர்ந்து கொள்ளைப் படையைத் திரும்பிப் போகுமாறு  கட்டளையிடுதல் வேண்டுமெனத் தெரிவித்தான்.மறுத்தான்  சோழ வேந்தன் . சோழ வேந்தர்களின் கீழ் எங்கள் முன்னோர்கள் சேனாபதிகள், வீரர்கள், நாட்டதிகாரிகளாகவும் இருந்து வந்தனர். சோழ அரசு கொடுங்கோல் ஆட்சியாகி விட்டதுமன்றி இந்நாடு கொள்ளைக்களனாகவு மாறிவிட்டது. இனிப் பொறுக்க முடியாது. பாண்டியனது கட்டளயின் பேரில் தான் படையுடன் வந்துள்ளதையும் கூறினான். எதிர்த்த சோழ மன்னனின் படையை துவம்சம் செய்து விரட்டி விட்டான்  கொங்கு நாட்டு சேனாதிபதி. என கொங்கு பிறன் குல வரலாறுகள் கூறுகின்றன .
 
 
       பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளன. தேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும். இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும் எல்லைகளாக உள்ளன. சேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளன. இவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும் உள்ளன. இவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. அன்னியர்களால் அன்னியமுறையில் அமைக்கப்பட்ட இன்றைய சர்க்கார் AC அறையில் அமர்ந்துகொண்டு தாந்தோன்றித்தனமாக இவற்றைப் பிரித்திருப்பினும், இயற்கை, பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பிரிவுகள் என்றும் நமது வாழ்க்கையின் வழியாக உள்ளன. நிலையான அமைதியான வாழ்வு (இதனையே சனாதன தர்மம் என்றும் sustainable living என்றும் ஆழைத்து வந்துள்ளோம்) இருந்திட இம்முறை பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்குப்பின் உருவானதாகும். நீர் நிலைகள் பராமரிப்பு (அணைக்கட்டுஉதாரணம் நொய்யல், அமராவதி, பவானி, திருமணிமுத்தாறு, காவேரி அணைகள் போன்றவை, ஏரிகள்உதாரணம் பூந்துறை, வெள்ளோடு, ந்சியனூர், எழுமாத்தூர் ஏரிகள் முதலியவை, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள்காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, இருட்டணை முதலானவை, கிணறுகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள்ஈரோடு, பெருந்துறை தெப்பக்குளங்கள் போன்றவை - , தடாகங்கள்) முதலியவை , பண்பாட்டினைப் பாதுகாத்தல் (தர்மங்கள்,சமுதாய கூட்டுக்குடும்ப அமைப்புகள், கலைகள், இலக்கியங்கள், கோயில், மடம், சத்திரங்களைப் பாதுகாத்தல், மரங்கள் நடுதல், கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்) - .
கொங்கதேசத்தினை 24 நாடுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் பிராமணர்களிலிருந்து சாம்புவன் வரை 18 குடிகள் உள்ளனர். ஒவ்வொரு குடிக்கும் தனித்தனியே ஊர்த்தலைவர்கள் முதல் பட்டக்காரர்கள் வரை உண்டு. இவர்கள் தத்தமாது குடிகளைக் கட்டிக்காத்து வந்துள்ளனர். இதற்கு ஜாதிப்பஞ்சாயம், சமிதி அல்லது ஆயம் என்று பெயர். இவர்களுக்கு மேல் ஒவ்வொரு நாட்டிற்கும் பெரிய வீட்டுக்காரர், நாட்டுக்கவுண்டர், பட்டக்காரர், நாட்டார், காராளர், எஜமானர் என்று அழைக்கப்படும் நாட்டுப் பட்டக்காரர்கள் இருந்து வந்துள்ளனர். இப்பெயர்கள் அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கின்றன. இவர்கள் சபை (மன்றம்) நடத்தி வந்தனர். இதனால் மன்றாடி (மன்றம் + ஆடி) என்று பெயர் பெற்றனர். இவர்கள் நாட்டு சபைக்கும், அனைத்து ஆயங்களுக்கும் தலைவர்கள். இது நிர்வாக அமைப்பாகும். துருக்கர் காலத்தில் இதனை நேரடியாக அழிக்க முயன்று தோற்றனர். பிறகு கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் இதனை அழித்தாலோ, கைபற்றினாலோதான் கொள்ளையடிக்க முடியும் என்பதனைப் புரிந்துகொண்டு இன்று வரையில் வெவ்வேறு வழிகளில் சுதேசி ஆட்சிமுறைகளை இன்றுவரை அரித்தெடுத்து வருகின்றனர்.
நாட்டார்கள் (பட்டக்காரர்கள்) புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, தீயன பேசாதிருத்தல், அறுபத்திநான்கு கலைஞத்துவம், பெண்களுக்கு சம உரிமைகள் (குதிரையேறுதல், மன்றம்சபை நாட்டாண்மை முதலியவை), குருபக்தி, தெய்வபக்தி போன்ற தனித்தன்மையுடன் உள்ளனர். இவை இவர்களை காணியாள, குடியான கவுண்டர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
குறிப்பு: இது துருக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தார், தாசில்தார், மன்சப்தார், தாலுக்தார், இனாம்தார் முறைகளல்ல, விஜயநகரத்தாரால் ஏற்படுத்தப்பட்ட பாளையக்காரர் முறையுமல்ல, வெள்ளையர்காளால் மாற்றியமைக்கப்பட்ட பாளைய பட்டக்காரர் முறையுமல்ல (feudal lords).
ஆதியில் சேரமான் ஏற்படுத்திய சங்ககால முறை. கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கைலை செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு.

 இன்றும் சேரமானது வாரிசுகள் தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர். 


நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள்:
பூர்வீகமாக நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள் பெற்று காணியிலேயே வாழ்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப் பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர். இன்றும் இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம், செல்வத்தினைவிட இப்பிரிவுகளே முக்கியமாக இருந்தன. பணம், செல்வாக்கினை மட்டுமே மணதில் கொண்டு தற்கால திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக முறிவுகள் ஏற்படுகின்றன. காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம் வேறு. 

மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.

விவரங்களுக்கு: 91 - 424 - 2274700

நாட்டார்கள் குணங்கள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவத் மரபு:
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்: பூந்துறை நாட்டார்:
 1. பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
 2. வெள்ளோடு பயிர கோத்திரம்
 3. வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
 4. நசியனூர் கன்ன கோத்திரம்
 5. நசியனூர் செம்ப கோத்திரம் 
 6. எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
தென்கரை நாட்டார்:
காங்கய நாட்டார்:

 1. கொத்தனூர் பெரிய கோத்திரம்
 2. மூலனூர் பூச கோத்திரம்
 1. காங்கயம் செங்கண்ண கோத்திரம்
 2. காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
 3. ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)
பொங்கலூர் நாட்டார்:

 1. குண்டடம் ஓதாள கோத்திரம் 
 2. கொடுவாய் ஓதாள கோத்திரம்
 3. பொங்கலூர் பொன்ன கோத்திரம் 
 4.  புத்தறச்சல் குழாய கோத்திரம் 
 5. உகாயானுர் சாத்தந்தை கோத்திரம் (செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள்எடுத்துக்கொடுக்கும் உரிமை)
வையாபுரி நாட்டார்:

 1. பழனி ஈஞ்ச கோத்திரம்
மண நாட்டார்:

 1. கூடலூர் வெண்டுவ கோத்திரம்
தலைய நாட்டார்:
 1. கன்னிவாடி கன்ன கோத்திரம்
கிழங்கு நாட்டார், வாழவந்தி நாட்டார்:

 1. வாங்கல் பெருங்குடி கோத்திரம்
 2. மோகனூர் மணிய கோத்திரம்
தட்டய நாட்டார்:

 1. புலியூர் பெருங்குடி கோத்திரம்
அரைய நாட்டார்:
 1. தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்
அண்ட நாட்டார்:

 1. பொருளூர் பூச கோத்திரம்
காவிடிக்கா நாட்டார்:

 1. ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்
காஞ்சிகோயில் நாட்டார்:
 1. காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
 2. காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
 3. காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்


நல்லுருக்கா நாட்டார், தென் பொங்கலூர் நாட்டார்:
 1. கீரனூர் பவள கோத்திரம்
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) எழுகரை (அக்கரை, மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள். இவர்கள் இன்றுவரை காணியாளர், குடியானவர்களோடு மணவினைகள் கொள்வதில்லை:
 1. மோரூர் கன்ன கோத்திரம்
 2. மொளசி கன்ன கோத்திரம்
 3. பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்  
 4. ஏழூர் பண்ணை கோத்திரம் 
 5. ராசிபுரம் விழிய கோத்திரம்
 6. வீரபாண்டி மணிய கோத்திரம்
 7. மல்லசமுத்திரம் விழிய கோத்திரம்
 8. திண்டமங்கலம் விழிய கோத்திரம்
 9. வெண்ணந்தூர் கன்ன கோத்திரம் 

கொங்கதேசத்தின் இருபத்திநாலு நாடுகள்:

 
1. பூந்துறை நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்க நாடு
7. வைகாவூர் நாடு
8. மண நாடு
9. தலைய நாடு
10.வாழவந்தி நாடு
11. தட்டய நாடு
12. பூவாணிய நாடு
13. அரைய நாடு
14. ஒடுவங்க நாடு
15. வடகரை நாடு
16. கிழங்கு நாடு
17. அண்ட நாடு
18. வெங்கால நாடு
19. காவடிக்கா நாடு
20. ஆனைமலை நாடு
21. ராசிபுர நாடு
22. காஞ்சிகோயில் நாடு
23. நல்லுருக்கா நாடு
24. குறுப்பு நாடு

 

கொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)

கொங்கதேசம்:  மஹா காமுண்ட (மகா காமிண்டன் [கவுண்டன்] , ராயர்அரசர் - சேரமான்)

|
|
நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] , ஆறுநாட்டார்)
|
|
இருபத்திநாலு நாடுகள்: ப்ரபு காமுண்ட (பிரபு காமிண்டன் [கவுண்டன்], ராஷ்ட்ரி, பெரியநாட்டார், பெரியஎஜமானர், பெரியகாராளர், பெரியபட்டக்காரர்)
|
|
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமஸ்தானங்கள்: சம்ஸ்தான காமுண்ட (சமஸ்தான காமிண்டன் [கவுண்டன்], நாட்டார், சின்னஎஜமானர், காராளர், பட்டக்காரர்)
|
|
சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாள கவுண்டர்)
|
|
காணிக்குள் கிராமங்கள்: க்ராம காமுண்ட ( கிராம காமிண்டன் [கவுண்டன்] ஊர்கவுண்டர், ஊர்கொத்துகாரர்) –
ஊர் பொருளாளர்: க்ராம மண்யகார (கிராம மணியகாரர், ஊர் மணியம்) -
ஊர் கணக்கர்: க்ராம கர்ணம் (கர்ணையம், கணக்குப்பிள்ளை) –
உதவியாளர்: க்ராம தண்டம் (தோட்டி, தலையாரி, தண்டல்காரர்)
|
|
கிராமத்துக்குள் கவுண்டர்கள்: காமுண்ட (காமுண்டன் [கவுண்டன்], பண்ணையக்காரன், பண்ணாடி)
இவருக்குக்கீழ் பண்ணையாட்கள்.
4103.
     நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
          நடுஇருக்க என்றனையே நாட்டியபேர் இறைவா
     பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
          பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
     கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
          கோவேஎன் கணவாஎன் குரவாஎன் குணவா
     நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
          நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
உரை:
     நாட்டு மக்கள் கண்டு என்னைச் சூழவிருந்து நன்கு மதிக்கும்படியாக மணிகள் இழைத்த மேடையின் நடுவே உயர்ந்திருக்குமாறு என்னை உயர்த்தி அருளிய இறைவனே! பாடுகின்ற புலவர்கள் பாடுந்தோறும் அவர்களுக்கு நல்ல பரிசுகளை நல்கும் தலைவனே! ஓதுகின்ற வேதங்களின் பாட்டாக இருப்பவனே! மெய்ம்மை சான்ற பாட்டுக்களால் எய்தும் இன்பப் பயனாக இருப்பவனே! அன்பர் கூட்டத்தை ஆள்பவனே! சிவகாமக் கொடியாகிய உமாதேவிக்குப் பொருந்திய கணவனே! எங்கள் கோவே! எனக்குக் கண் போன்றவனே! என்னைப் பெற்றவனே! எனக்கு இனிய குணங்களை யுடையவனே! நெடிய கல்வி வல்ல சான்றோர் புகழ்ந்து துதிக்க மணி யிழைத்த அம்பலத்திலே நடித்தருளும் அருளும் நிதியும் உடைய அரசனே! எனது நெடிய இப் பாட்டை ஏற்றுக் கொண்டருளுக. எ.று.

     நாட்டில் சிறப்புடன் வாழ்கின்ற பெருமக்களை நாட்டார்கள் என்று கூறுகின்றார். கல்வி அறிவால் உயர்ந்தமை விளங்க, “நாட்டார்கள் மதித்திட மேடையிலே நடுவிருக்க நாட்டிய பேர் இறைவா” என்று நவில்கின்றார். மேடையிலே நடுவிருத்தலாவது உயர்ந்தோர் அவையில் முந்தி யிருத்தல். பண் சுமந்த பாடல்களைப் பாடுவோர்க்குப் பரிசளித்து ஊக்கும் பரமன் என்பது பற்றி, “பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே” என்றும், வேத மந்திரங்களாகிய பாட்டும், பாட்டின் பொருளும், அவற்றால் விளையும் பயனும் பரம்பொருளின் உரு வென்பது பற்றி, “பன்னுமறைப் பாட்டே மெய்ப் பாட்டினது பயனே” என்றும் பாடுகின்றார். வேத மந்திரப் பாட்டுக்களை யன்றிப் பிற சான்றோர் மெய்ம்மை ஞானத்தால் பாடுகின்ற பாட்டும் அவனையே பொருளாகக் கொண்டவையாதல் பற்றி, “மெய்ப் பாட்டினது பயனே” என்று சிறப்பிக்கின்றார். மெய்யன்பர்கள் தம்பால் அன்போடு கூடி யிருந்து பரவுகின்ற கூட்டத்தில் சிறப்புடைய மெய்ம்மைப் பொருளாக விளங்குபவனாதலால், “கூட்டாளா” எனக் கூறுகின்றார். உமாதேவிக்கு மனமுவந்த கணவராதலின், “சிவகாமக் கொடிக்கு இசைந்த கொழுநா” எனவும், எல்லா உலகுயிர்களுக்கும் அருள் வழங்கும் வேந்தனாதல் தோன்ற, “கோவே” எனவும் பரவுகின்றார். கணவன் - கண் போன்றவன். தாயும் தந்தையுமாதல் பற்றி, “என் குரவா” எனக் குறிக்கின்றார். நற்குணங்கள் எல்லாம் திரண்ட திருவுருவினன் என்பது பற்றி, “குரவா” எனப் புகழ்கின்றார். கல்வி, அறிவு ஒழுக்கங்களால் நீண்ட புகழ் படைத்த பெரியோர்களை, “நீட்டாளன்” என்பர். சான்றோர்களும் முனிவர்களும் இவ்வகையில் அடங்குவது பற்றி அவர் அனைவரையும் இவ்வாறு தொகுத்துரைக்கின்றார். இறைவனது நீண்ட புகழை எடுத்தோதுவது பற்றி அவன் புகழ்பாடும் பாட்டுக்களை, “நெடு மொழி” என்று உரைக்கின்றார். நாட்டிய நூலின் விதி முறைப்படி அம்பலத்தில் ஆடுவது பற்றிச் சிவனை, “நீதி நடத்து அரசே” என்று பாராட்டுகின்றார். நீதியே உருவாகக் கொண்டு ஆடுபவன் என்பது பற்றி இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும்.5795.
     நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
          நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
     வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
          மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
     தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
          தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
     ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
          ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
உரை:
     தோழி! நான் தொடுத்தணியும் இந்த மாலையைப் பூமாலை என்று கருதி நாட்டில் வாழும் மக்கள் தங்கள் முடியில் அணிந்து கொள்ள மாட்டார்கள்; தேவர்கள் தொடுத்தணியும் வேத மந்திரங்களாகிய மாலைகளையும் ஆகம வாக்கியங்களாகிய மாலைகளையும் முறையே வைதிகர்களும் ஆகமிகளும் தத்தம் மதங்களுக்கு உரியவை என்று அணிந்து கொள்ளுவார்கள் மானிட மக்கள் தொடுக்கும் மாலைகள் எல்லாம் தாம்தாம் விரும்பும் பரத்தையர் தோளுக்கு அணியும் மாலைகளாகும்; அவர்களின் வேறுபட்டுத் தனித்தொழுகும் என்னுடைய சொல்மாலை அருள் வழங்கும் ஞான சபையின் நடுவே நின்று நடித்தருளும் சிவனுடைய ஊன்றிய திருவடிகளே அன்றி வேறு எப்பொருளையும் கருதாமல் உயர்ந்தோங்குவதாதலால் அம்மாலை அத்திருவடிகட்கு உரியதாகும் என அறிக. எ.று.

     நாட்டார்கள் என்பது இரண்டாவது அணிய மாட்டார்கள் என்ற பொருளில் வந்திருக்கிறது. வான் தொடுக்கும் மாலையாவது தேவர்கள் ஓதும் வேத மந்திரங்களின் வரிசை. ஆகமங்கள் என்பது ஆகமங்களை வோதும் ஆகமானுசாரிகளை என அறிக. அவர்கள் பலரும் பலவேறு மதக் கொள்கை உடையவராதலின் அது விளங்க, “மதத் துரிமையாலே” என்று மொழிகின்றாள். காமுகர்களாகிய மற்றவர்கள் தொடுக்கும் பூமாலையும் பாமாலையும் ஆகியவைதாம் காமுறும் பரத்தையர்க்கு ஆதலின், “தான் தொடுத்த மாலை யெலாம் பரத்தையர் தோள் மாலை” என்று சொல்லுகின்றாள். இனி மதத் துரிமையாலே தான் தொடுத்த மாலை யெலாம் பரத்தை தோள் மாலை என்பதற்கு, மதவெறி கொண்டு பாடப்படுகின்ற சொல் மாலைகள் யாவும் காமுகர் பரத்தையர்க்கு அணியும் தோள் மாலை என்று கருதப்படும் எனப் பொருள் கூறுவதுமுண்டு. ஊன்றி நின்ற சிவனுடைய திருவடிகளை, “ஊன்றெடுத்த மலர்கள்” என்று உரைக்கின்றாள். இனி ஊன்றியும் தூக்கியும் இருக்கும் திருவடிகளை ஊன்றெடுத்த மலர்கள் என உரைக்கின்றாள் எனினும் அமையும். அவற்றிற்கு எனற்பாலது சாரியை இன்றி அவைக்கு என வந்தது.
     (82)