Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 31 August 2011

முழுக்காதன் குல வரலாறு


வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.

இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “முழுக்காதன் குலத்தவர்கள்” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.

இந்தக் குலத்திற்கு குலதெய்வம் வெள்ளையம்மாள் ஆகும். இந்தத் தெய்வத்திற்கு திருப்பூர் மாவட்டம் காங்கயம் பக்கத்திலுள்ள காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி இருக்கிறது. ஒவ்வொரு இனத்தவர்களின் குல தெய்வங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். இந்த வரலாறுகள் கர்ண பரம்பரையாய் வருவன, பல குல வரலாறுகளுக்கிடையே பல சமயங்களில் ஒரே கருத்து காணப்படும். அதே மாதிரி ஒரே குல தெய்வத்தின் வரலாற்றிலும் பல பேதங்கள் இருக்கும். இந்த வரலாறுகளுக்கெல்லாம் ஆதாரம் என்னவென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கயத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். அந்தப் பெண் பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று அழைத்தார்கள். (மகாபாரதத்தில் பாண்டு மன்னன் பிறக்கும்போதே வெளுத்திருந்தான் என்று படித்திருக்கிறோம்). இன்றும் இவ்வாறான குழந்தைகள் பிறக்கின்றன. அவைகளை “அல்பினோ” என்று கூறுவார்கள். அந்தப் பெண்ணிற்கு மணப்பருவம் நெருங்கியது. பெற்றோரும் உடன் பிறந்தோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.


அவர்கள் பண்ணையில் மாடு மேய்ப்பதற்காக தூர தேசத்திலிருந்து வந்த ஒருவன் வேலையில் இருந்தான். அவனும் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவனே. ஆனால் ஏழை.


வெள்ளையம்மாளின் தந்தை அந்த மாடு மேய்ப்பவனுக்கே தன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். 


அவனுடைய ஊருக்குச் சென்று அவனுடைய பெற்றோர்களின் சம்மதம் பெற்றார். திருமணமும் நடந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.


அவளுடைய தமையன்களுக்கும் திருமணம் நடந்து எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். இந்நிலையில் வெள்ளையம்மாளின் தந்தைக்கு அந்திம காலம் நெருங்கியது. அப்போது அவர் தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொடுக்கும்படி கூறிவிட்டு காலமானார். 


வெள்ளையம்மாளின் அண்ணிகளின் துர்ப்போதனையைக் கேட்ட அண்ணன்மார்கள் வெள்ளையம்மாளின் புருஷனை வஞ்சகமாக தனியாக கூட்டிக்கொண்டு போய் கொன்றுவிட்டார்கள். அவன் எங்கோ காணாமல் போய்விட்டான் என்று சொல்லி, வெள்ளையம்மாளின் பேரிலும் பல அவதூறுகளைக் கூறி அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.


வெள்ளையம்மாள் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் மனம் போன போக்கில் போகும்போது, ஒரு சர்தார் (அந்நாளைய அரசாங்க உயர் அதிகாரி) குதிரைமேல் வருவதைக்கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள். சர்தார் இவளைப்பார்த்தவுடன் நின்று விசாரித்து இவளுடைய அனாதை நிலையைக் கண்டு இரங்கினான். “நான் இப்போது வரி வசூலுக்காக அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய துயர் தீர்க்கிறேன். அதுவரை பக்கத்தில் இருக்கும் கோட்டையில் பத்திரமாக இருப்பாயாக” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடுகள் செய்து விட்டு, வரி வசூலிக்கப் போய்விட்டான்.

சர்தார் திரும்பி வருவதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காவது மகனும் பிறந்துவிட்டான். சர்தார் வந்த பிறகு வெள்ளையம்மாளைக் கூட்டிக்கொண்டு அவளுடைய அண்ணன்மார் ஊருக்கு வந்தான். அவர்களுடைய அண்ணன்மாரைக் கூப்பிட்டு விவரங்கள் விசாரிக்கும் போது அவளுடைய அண்ணிமார்கள் வெள்ளையம்மாள் பேரில் அடாத பழிகளைச் சுமத்தினார்கள். விபசாரி என்றும் ஏசினார்கள். அவளுடைய அண்ணன்மார்கள் வாய்மூடி மெளனமாக இருந்தார்கள். சர்தார் அவர்களைப் பார்த்து உங்கள் தகப்பனார் வெள்ளையம்மாளுக்கு காணி நிலம் கொடுக்கச் சொன்னது உண்டா இல்லையாவென்று கேட்க, அவர்கள் எங்கள் தந்தை அவ்வாறுதான் கூறிவிட்டு இறந்தார். ஆனால் இப்போது வெள்ளையம்மாள் சாதி கெட்டு வந்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது என்று வாதிட்டனர்.

இதைக்கேட்ட வெள்ளையம்மாள் நான் கடவுள் சாட்சியாக எந்தத் தப்பும் செய்யவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அப்போது அவளுடைய அண்ணன்மார்கள் தங்கள் பெண்டாட்டிகளின் பேச்சைக் கேட்டு, வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம், அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள் என்னவென்றால்:

1.   காளைகளை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு வெடத்தலாமரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பார்கள். இது நன்கு முற்றி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்.
2.   அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்கு தண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கனைக்கவேண்டும்.
3.   இதற்கு வேண்டிய தண்ணீரை சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.
இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே ஒரு நுகத்தடி நடப்பட்டது. பச்சை மண் குடமும் கொண்டுவரப்பட்டது. வெள்ளையம்மாள் கோவில் குளத்திலிருந்து அந்தக் குடத்தில் நீர் கொண்டு கொண்டு வந்தாள். குடம் கரையாமல் நின்றது. அந்தக் குடத்தில் இருந்து தண்ணீரை நுகத்தடிக்கு ஊற்ற அந்த நுகத்தடியில் தளிர்கள் துளிர்த்தன. மீதம் இருந்த தண்ணீரை அங்கிருந்த மண் குதிரை மேல் தெளிக்க, அந்தக் குதிரை தலையை ஆட்டி கனைத்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிசயப்பட்டுப் போனார்கள். வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து முழுவதையும் வெள்ளையம்மாளுக்கே கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு ஊரைவிட்டே போய்விட்டார்கள். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு தன் ஊருக்குப் போனார்.

வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின் தெய்வமானாள். அவளுடைய வம்சாவளிதான் தற்காலத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

                         

Tuesday, 30 August 2011

தமிழினமே தலை வணங்குகிறது .........

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 11-ந் தேதி நிராகரித்தார். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் வேலூர் ஜெயிலில் செப்டம்பர் 9-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் செய்தனர். ஆனால் இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சிகள், வக்கீல்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் 3 பேரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து, போராட்டங்களை நடத்தினார்கள்.

காஞ்சீபுரத்தில் செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்.   இந்த நிலையில் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தடா சந்திரசேகர் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 3 பேரின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஏற்றுக் கொண் டார். அவசர சூழல் கருதி மனுக்கள் மீது உடனடியாக இன்று விசாரணை தொடங்கவும், அவர் ஒத்துக்கொண்டார். 

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தங்கள் மனுவில், தங்களுக்கான தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை தொகுத்து கூறி இருந்தனர். 11 ஆண்டுகள் கழித்து கருணை மனு மீது முடிவு எடுத்ததும், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தண்டனை கொடுப்பதும் சட்ட விரோதமானது. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் மற்றும் தமிழ் இன ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஐகோர்ட்டு நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. 3 பேர் சார்பில் பிரபல மூத்த வக்கீல்கள் ராம்ஜெத்மலானி, காலின் கான்சிலேஸ், வக்கீல் வைகை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்மனுதாரர்களின் கருணை மனுக்களை பைசல் செய்வதற்கு 11 ஆண்டுகள் 4 மாதம் ஆனதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சட்ட கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மனுதாரர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரை தூக்கில் போட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து 8 வாரத்தில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பை அறிந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் , பல  இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் , மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய முன்றுபேரின் இருண்ட வாழ்வில் , விளக்கேற்றி வைத்த நீதியரசர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை கூறி , கொங்கு இனம் தலை வணங்குகிறது .............      மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து விடை பெறுகிறேன் ........... நன்றி .........
Monday, 29 August 2011

ராஜீவ் கொலை வழக்கு மர்மம்....யார் உண்மையான குற்றவாளிகள் ???

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய விசாரணை சரியான போக்கில் விசாரிக்கப் படவில்லை .............. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ.இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய திரு.மோகன்ராஜ் அவர்கள் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் தான் விசாரணையில் ஈடுபட்டிருந்த பொது நேர்மையான விசாரணையில் குறுக்கிட்டவர்களையும், விசாரணையில் தப்பிய குற்றவாளிகளையும் , ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களையும் உண்மையான கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்பது பற்றியும் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் விரிவாக கூறியிருந்தார் . அவரின் உள்ளக்குமுறல் களையும் , ராஜீவ் கொலையின் சில நெருடல் களையும் கீழே உள்ள வீடியோ வில் காணுங்கள் ..........
Sunday, 28 August 2011

குலுக்கல் முறையில் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தூக்கிலிடும் நேரம்: செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


மனித உயிர் என்ன அத்தனை மலிவா ?  ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட மூன்றுபேரையும் . கைதுசெய்த சில மாதங்களில் விசாரணை முடித்து, தூக்கு மேடை ஏற்றியிருந்தால் கூட பரவாயில்லை , எப்போது தூக்கு வருமோ என்று எண்ணி 20 ஆண்டுகளாக துடித்த மனதை எண்ணி பாருங்கள் மக்களே ...... ராஜீவ் காந்தி ஒருநிமிடத்தில் செத்து விட்டார் . ஆனால் இவர்கள் ஒவ்வொரு நிமிடங்களும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் . என்னை பொறுத்தவரை காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி மட்டுமல்ல தண்டனையும் அநீதிக்கு சமமானதே ............  ஆயுள் தண்டனையே 14 வருடங்கள் தான் இவர்களோ 20 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார்கள் . இதற்குமேல் ஒருதண்டனையா ? அன்றே மரணதண்டனை வழங்கியிருந்தால் இருபதுவருடங்களுக்கு முன்பே இறந்திருப்பார்கள் , அதைவிடுத்து சாவை விட கொடிய தண்டனை சாவை எதிர்நோக்கும் தண்டனை கொடுத்துவிட்டீர்கள் இனியும் மரண தண்டனை தேவையில்லை என்றே மக்களும் கருதுகிறார்கள் , தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் பிரச்சாரங்களும் உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது . விலங்கு வதைப்பை கூட தடுக்க கூட ப்ளூ கிராஸ் போன்ற  அமைப்புகள் செயல் படுகின்றன . ஆனால் மனித உயிர்களை கொள்வதை தடுக்க முடியாமல் மக்கள் கண் கலங்குகிறார்கள் . ஜனாதிபதி நினைத்திருந்தால் காப்பற்றி இருக்கலாம் அவரும் கைவிரித்துவிட்டார் , காரணம் காங்கிரஸ் என்றே எண்ண தோன்றுகிறது. இவர்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்கு மனிதாபிமானமும், சட்டமும், நீதியும் கூட வளைக்கப் படுகிறதோ என்றே நம் எண்ணம் மேலோங்குகிறது ....  இன்னும் இவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது !! ஆம் ஒருவர் நினைத்தால் மூவரின் மரணம் தடுக்கப்படலாம் , யார் ? அவர் ? அவர்தான் மாண்புமிகு.தமிழக முதல்வர். ஜெயலலிதா அவர்கள் . சட்டத்திலும் அதற்கு ஒரு வழி உள்ளதாக நாம் அறிகிறோம் . அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு எண் 161 ன் படி, மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி மாநில அரசு தூக்கு தண்டனையை ரத்துசெய்ய முடியும். அந்த நம்பிக்கையில் தான் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் உள்ளனர் , அத்துடன் நாமும் .....   


ஒட்டு மொத்த ஆறுகோடி தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் புரட்சிதலைவி அம்மா அவர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா? 

Saturday, 27 August 2011

இலங்கை தான் முக்கியம் , தமிழினமல்ல : காங்கிரஸ்

அன்பு நண்பர்களே வணக்கம் ...


         ஈழ விடுதலைப் போரில் , இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், விடுதலை புலிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தது இந்திய காங்கிரஸ் அரசு. அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவிக்கும் நோக்குடன் செயல்பட்ட சிங்கள அரசுக்கு ராணுவ உதவி மற்றும் பயிற்சி அளித்து மக்களை கொல்வதற்கு காங்கிரஸ் பேராதரவு புரிந்தது என்று பல்வேறு அமைப்புகளும், பல உலக நாடுகளும் குற்றம் சாட்டி வந்தன, இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படவில்லை இந்திய ராணுவம் இலங்கை செல்லவில்லை என்ற எந்த வித அறிக்கையும் அரசு தரவில்லை . இதன்மூலமே உண்மை தெளிவாக விளங்குகிறது. மேலும் அதை உறுதிபடுத்தும் விதமாக இலங்கை அரசுக்கு பலநாடுகள் ஐ . நா .சபை மூலம் நெருக்கடி கொடுத்தபோதும் இந்திய அரசு மௌனமாக இருந்தது மட்டுமில்லாது இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தது , இந்தநிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதியின் குடும்ப ஆட்சி நீக்கப்பட்டு ஆ.இ.அ.தி.மு. க அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா அவர்கள் மாண்புமிகு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது, இருப்பினும் காங்கிரஸ் அதைபற்றி கவலைபடாமல் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை புதிதாக தொடங்கி தமிழகத்தையும், தமிழ்நாடு சட்டசபையையும் , மக்களையும் அவமரியாதை செய்ததாகவே கருதப்படும். சோனியா காந்தி அரசு (மண்ணு மோகன் சும்மா டம்மி பீசு ..) இப்பொழுதாவது ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். 
இலங்கைத் தமிழர் விவகாரம், பார்லிமென்டில் நேற்று முன்தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரண்டு அவைகளிலுமே, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. பெரும்பாலும், இதுகுறித்து தமிழக எம்.பி.,க்கள் மட்டுமே பேசிவந்த நிலையில், இம்முறை வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சிகளுமே இந்த விவாதத்தில் பங்கேற்று, தங்களது கருத்துக்களை நேற்று பதிவு செய்தன. தனது பதிலுரையின் போது, மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: இலங்கை இந்தியாவின் அண்டைநாடு என்பதோடு மட்டுமல்லாது, நட்புறவுடன் கொண்ட நாடு. அந்த நாட்டுடனான உறவை, எந்தக் காரணத்திற்காகவும் கெடுத்துக் கொள்வதற்கு, இந்தியா தயாராக இல்லை. மாறாக, இலங்கையுடனான இந்தியாவின் உறவை, மென்மேலும் பலப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறோம்.கச்சத்தீவு விவகாரம் என்பது, முடிந்து போன ஒன்று. சர்வதேச ஒப்பந்தம் மூ லம், அதை இலங்கைக்கு அளித்துவிட்ட பிறகு, அதை மீண்டும் பரிசீலிக்க இயலாது. 

இலங்கையில், தற்போது நடந்து முடிந்த போரின் போது அத்துமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. போர்க்குற்றங்கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளது. அந்த விசாரணை, நியாயமாக இருக்கும் என்று இந்தியா நம்புகிறது. போர் குற்றங்களுக்காக, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், இந்தியாவின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. முதலில் அதுபோன்ற ஒரு சூழ்நிலை வரட்டும். அப்போது, அந்த தீர்மானத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்பதே இந்தியாவின் நிலை. தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.அந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு, இந்தியா அனைத்து உதவிகளையும். 
வழங்கிடும். இதில், இந்தியா ஆர்வமாக உள்ளது. இவ்வாறு, கிருஷ்ணா பேசினார்.இந்த அறிக்கை குற்றவாளியே குற்றத்தை பற்றி விசாரணை நடத்துவான் , போலிஸ் விசாரணை செய்ய கூடாது என்று வாதாடுவது போல... கொலைகாரனை  பற்றி அவனே எப்படி விசாரணை நடத்த முடியும் ?? இவர் கூறுவது கேலி கூத்தாக உள்ளது. தமிழினம் முக்கியமில்லை இலங்கையுடனான உறவுதான் முக்கியம் என்கிறார் இவர் .

இதிலிருந்தே காங்கிரஸ் அரசின் லட்சணம் தெரிகிறது .லட்சக்கணக்கான மக்களை கொன்றுகுவித்ததை இலங்கைஅரசே விசாரிக்குமானால், ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட மூவரை கோர்டில் எதற்காக விசாரித்தார்கள்?, இந்திய ஜனாதிபதி எதற்காக கருணை மனுவை ரத்து செய்தார்? நீங்களே விசாரியுங்கள் என்று சொல்லி அவர்களை வெளியில்  விட வேண்டியது தானே !! சோனியாவின் கணவரை கொன்றால் (கொன்றதாக கூறப்படுபவர்கள் ) அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டியவர்கள் , லட்சக் கணக்கான மக்களை கொன்ற ராஜபக்ஷே , சோனியா , மன்மோகன் , இவர்கள் நல்லவர்கள் ??? அவர்களே விசாரித்து எந்த குற்றமும் நடைபெறவில்லை, ஒருவேளை போரே நடக்கவில்லை எங்களிடம் இராணுவமே இல்லை அமைதிப்படை மட்டுமே உள்ளது எண்டு அறிக்கை கொடுத்தாலும் கொடுப்பார்கள் . மதசார்பற்ற நாடு , அமைதியான நாடு , காந்தி தேசம் என்று கூறிவரும் இந்திய அரசாங்கம் சிங்களர்களுக்கு ஆதரவாகவும் தன சொந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதையும் நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது... தன்சொந்த காரணங்களுக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையே கருவறுக்க  நினைத்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த சோனியா போன்றோரும் போர் குற்றவாளிகளே  ,  மிகச்சிறிய இலங்கை அரசு புலிகளை எதிர்த்து வெற்றிபெறுவது என்பது நடக்காத காரியம், புலிகளின் வீரத்திற்கும் போர் தந்திரங்களுக்கும் , இலங்கையினால் ஈடுகொடுக்க முடியாது என்பது நாம் அறிந்ததே ஏனென்றால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது . அதனாலேயே சிங்கள ராஜபக்ஷே ... இந்த ஈனப்பிறவிகளை (தாயை கூட்டி கொடுத்தவனும் தாய்நாட்டை காட்டி கொடுத்தவனும்.... ஈனப்பிறவிகளே) நாடியிருக்கிறான் . பாகிஸ்தானையே கார்கிலில் வெற்றிகொண்ட இந்திய ராணுவம் புலிகளை வெற்றிகொள்வது ஒரு பெரிய விசயமில்லை, ஆனால் இதை புலிகள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அதனால் தான் இவ்வளவு சேதம். புலிகளுக்கு எதிரான போரில் சீனாவிற்கு முக்கிய பங்கு இருக்கும் என்பது நம் கணிப்பு. விடுதலை புலிகள் அமைப்பு தீவிரமாக இருந்தவரையில் அன்னியர்கள் எவரும் இலங்கையில் முக்கியமாக தமிழர்கள் பகுதியில் நுழைய முடியாது . இப்பொழுது சீனா, தற்போது தன் நாட்டு மக்களை பல்லாயிரக்கணக்கில் அங்கு இறக்கி விட்டுள்ளது. ஏற்கனவே ஹம்பன் தோடா துறைமுகத்தை நவீனப் படுத்தி, தன் ராணுவத்தை அங்கு களம் இறக்கும் வகையில் வசதிகளை சீனா செய்து விட்டது. தற்போது கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தி கண்டெய்னர் டெர்மினல் ஒன்றை அமைக்கும் பணியையும் சீனா பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது இந்தியாவே !! ( ஆபத்தில் .... இந்தியா!!! ... கூட்டுச் சதியில் அண்டை நாடுகள் .......  என்ற தலைப்பில் விரிவாக வெளியிட்டு இருந்தோம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும் ).

தெரு நாய் கூட தான் சொந்த இடத்திற்கு சென்றால் குலைக்கும் , எதிர்க்கும் ஆனால் நாம் அதைவிட கேவலமாய் எதிரிகளுடன் கைகோர்த்து சொந்தமக்களியே கொன்று குவித்த சோனியாவை இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் ...............  


 மண்டியிட்டு வாழ்வதை விட ... நின்றுகொண்டே சாவது மேல் ... என்ற கருத்தை வலியுறுத்தி 

தமிழின விரோதிகளை நாட்டைவிட்டே துரத்தியடிப்போம் .............  வாழ்க தமிழினம் .... மலர்க தமிழீழம் ..............

Wednesday, 24 August 2011

அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படுகிறதா ?

அன்னா ஹசாரே போராட்டம் தொடர்பாக தொலைக்கட்சி சேனல்களில் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள்,

அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா ?

இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டும் தானே ?
நடுத்தர வர்க்கம் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதிகளா ?

அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா ?

15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?

சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலையில்லையா ?

120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இந்தப் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா என்பதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை.

ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்குகளை நிர்ணயிப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அந்த நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் இந்த ஊடகங்கள் புறக்கணிக்க முடியாது. டெல்லி விமானநிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது, ஏசி வகுப்பில் கட்டணம் குறைக்கப் பட்டுள்ளது, மல்டி ப்ளெக்சுகளில் சுகாதாரம் இல்லை, கேஎப்சி சிக்கனில் கொழுப்பு அதிகமாக உள்ளது, ஐஐடியில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளது போன்ற விபரங்கள், இந்த ஊடகங்களால் செய்தியாக்கப் படுவதற்கான காரணம் இதுதான்.

ஆனால் இந்த ஊடகங்களால்தான் இந்தப் போராட்டமே நடக்கிறது என்கிறா வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை தகவல்களுக்காக பார்த்துத் தெரிந்து கொண்டு, தன்னெழுச்சியாக வரும் கூட்டமே அதிகம். மும்பையில் வேலை நிறுத்தம் செய்யும் டப்பாவாலாக்கள் அர்னாப் கோஸ்வாமியைப் பார்த்துத்தான் போராட்டத்தில் குதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் போராட்டத்தை லைவாக கவர் செய்வதால், தங்கள் டிஆர்பி ரேட்டிங் கூடும் என்ற சுயநல நோக்கத்தாலேயே இப்படி லைவ் கவரேஜ் செய்கிறார்கள்.

இதே புதுதில்லியில், நாட்டின் பல மூலைகளிலும் இருந்து, பல்வேறு மலைவாழ் மக்கள், விவசாயிகள், போன்றவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அந்தப் போராட்டங்கள் இந்த தொலைக்காட்சிகளின் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரணம், நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு, மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை.

இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டுமே என்றால் இருக்கலாம் அதில் என்ன தவறு என்றுதான் கூற முடியும். ஏழை மக்களை விட நடுத்தர மக்கள், இந்த ஊழலால் மிக அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். கிராமப்புரங்களில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஏழை விளிம்பு நிலை மக்களை, ஊழல் பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஏனெனில், ஊழலை அவன் நேரடியாக சந்திக்கும் நேர்வுகள் குறைவு. ஆனால் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள், லஞ்சத்தை நேரடியாக பல நேர்வுகளில் சந்திக்கிறார்கள். பைக்குகள், கார்கள் வாங்குகையில் ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, வீட்டு மனை மற்றும் வீடுகள் வாங்குககையில் பல்வேறு அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுப்பது வரை, இவர்கள் நேரடியாக லஞ்சத்தை சந்திக்கும் நேர்வுகள் அதிகம் என்பதால், இவர்கள் போராட்டத்தில் குதிப்பதில் வியப்பில்லை.ஏழை விளிம்புநிலை மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரலாமா என்ற கேள்விக்கு தர வேண்டும் என்பதே பதில். ஏனெனில், விளிம்புநிலை மக்கள் நேரடியாக பாதிக்கப் படாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பாதிக்கப் படுவது, பன்னாட்டு நிறுவனங்களால். உதாரணமாக, காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடக்கையில், டெல்லியிலிருந்து 20 ஆயிரம் ஏழை மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர். சென்னையில், உயர் விரைவு பாலம் கட்டும் விவகாரத்தில், ஆயிரக்கணக்கான சேரி மக்கள் அப்புறப் படுத்தப் பட்டார்கள். இந்த இரண்டு விவகாரங்களிலுமே, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் காரணமாக நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏழை மக்களே. இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும், புதிய லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் படுவார்களேயானால், அதனால் பயனடையப் போவது ஏழை விளிம்பு நிலை மக்கள் தானே…. ? இது தவிரவும், சுற்றுச் சூழலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறு தொழிற்காலைகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் பட்டால், அதனால் சுற்றுச் சூழல் பாதிக்காமல் தடுக்கப் பட்டால் அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் தானே பலனடைவார்கள் ?

நடுத்தர மக்கள் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியா என்றால், நடுத்தர மக்களும், இந்தியாவின் பிரதிநிதிகளே…. நடுத்தர மக்களை ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால், விளிம்பு நிலை மக்களை மட்டும் இந்தியாவின் பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகளாக ஏற்றுக் கொள்வார்களா என்ன ? ஏழை விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று உள்ளார்களா என்ன ? குறைந்தபட்சம் அந்த மக்களின் வறுமையைக் கூட போக்கவில்லையே இந்த அரசியல்வாதிகள்…!!!!இது நடுத்தர மக்களின் போராட்டம், ஆனால் நடுத்தர மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், எதற்காக காங்கிரஸ் அரசாங்கம் அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது ? நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை, ஆகையால் நாங்கள் உங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று எளிதாக சொல்லியிருக்க முடியுமே …..

சரி, நடுத்தர வர்க்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், இன்று பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகளா என்ன ? பிரதமர் மன்மோகன் சிங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இல்லையே ? மக்களவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் அவர்கள் மட்டும் என்ன 120 கோடி மக்களின் பிரதிநிதிகளா என்ன ?

இவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்றார்களா என்ன ? தேர்தலில் வாக்குப் பதிவே 60 சதவிகிதம் தானே… ? அதிலும் பாதியைத்தானே பெற்றிருக்கிறார்கள் ? இவர்கள் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதியா ?அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா ?

இதை தலைகீழாக அல்லவா பார்க்க வேண்டும் ? அண்ணா ஹசாரே குழுவினர், ஆயுதம், அரசு அதிகாரம் ஏதும் இல்லாமல், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அரசு அல்லவா டெல்லி போலீசை வைத்து அன்னா ஹசாரே குழுவினரை மிரட்டப் பார்த்தது ? இந்தியா முழுவதையும் ஆளும் ஒரு கட்சி, காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்கலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா ? எங்களுக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை என்று இரண்டு மணி நேரம் பேசினாரே ப.சிதம்பரம் ? சரி. மிரட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி மிரட்டியே இந்த அரசு, பணியாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறதென்றால், மிரட்டாமல், கோரிக்கை மனு கொடுத்தால் செவி சாய்த்து விடுவார்களா என்ன ? மேலும், இந்த பிரச்சினை இப்போது தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம், ஏப்ரலில் வலுப்பெற்றது. அதன் பிறகு, அன்னா ஹசாரே குழுவினரோடு ஏறக்குறைய 100 மணி நேரத்துக்கும் மேல் இந்த அரசின் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களே… இப்போது காட்டும் இந்த வேகத்தை ஏப்ரல் மாதம் முதல் காட்டியிருந்தார்களேயானால், இன்று இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே…

15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?


மனமிருந்தால் மார்க்கமுண்டு. 15 நிமிடங்களில் 17 சட்டங்களை நிறைவேற்றியது இதே பாராளுமன்றம் தான். அதற்காக லோக்பால் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப் பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லையே….. விவாதித்து நிறைவேற்ற இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் போதாதா ? மேலும், அரசு நினைத்தால், பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட இயலுமே… இத்தனை நாள் செய்யாததை இப்போதாவது செய்யுங்கள் என்று எழுந்துள்ள கோரிக்கை நியாயமற்றது அல்லவே.

சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை இல்லையா ?

சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை என்பதை யாருமே மறுக்கவில்லையே.. அந்த வேலையைச் செய்யுங்கள் என்றுதானே கேட்கிறார்கள். 40 ஆண்டுகளாக ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே துருப்பிடிக்க வைத்த காரணத்தாலே தானே இன்று போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே…. மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 15 ஆண்டுகளாக சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே… இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் லட்சணம்.

120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக மஹாத்மா காந்தியை பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளவில்லையா ? அவ்வாறு ஏற்றுக் கொண்டுதானே காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ? மேலும், ஏற்கனவே கூறியது போல, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பிரதிநிதி அல்லவே !! உதாரணமாக ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் வாக்களிப்பவர்கள் 6 லட்சம். சராசரியாக, அன்றைய தேர்தல் நிலைமைகளைப் பொறுத்து, இந்த 6 லட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றதில்லையா ? அவ்வாறு வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றாலும் அவரைத்தானே அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக கருதுகிறார்கள். வெறும் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்ட ப.சிதம்பரம் இன்று அமைச்சராக இல்லையா ?

சோனியா காந்தி தலைவராக உள்ள தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) கூட பல்வேறு சட்டங்களின் வரைவுகளை தயாரித்துத் தருகிறதே… அந்த அடிப்படையில் உருவான சட்டம் தானே ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ? அந்த தேசிய ஆலோசனைக் குழு 120 கோடி மக்களின் பிரதிநிதியா என்ன ?

இன்று நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது, கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல்களை செய்து விட்டு, அதை மறைக்க கடும் முயற்சிகளை எடுத்த இந்த அரசாங்கத்தின் மீதானது. ராசா தவறே செய்யவில்லை, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு ஜீரோ லாஸ் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு, கூச்சமில்லாமல் லோக்பால் மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி மக்கள் நம்புவார்கள் ? ஊடகங்கள் எழுதும் வரை, அரசாங்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஊழலே நடைபெறவில்லை என்றுதானே சாதித்துக் கொண்டு இருந்தது ? இந்த அன்னா ஹசாரே பிரச்சினை எழுவதற்கு முன்பு கூட, ஷீலா தீக்ஷித்தைக் காப்பாற்றத் தானே காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து கொண்டு இருந்தது. தயாநிதி மாறனை கடைசி வரை காங்கிரஸ் காப்பாற்றவில்லையா ?சோனியாவின் குடும்ப நண்பர் ஒத்தாவியோ கொட்டரோச்சியை காப்பாற்றி, பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டீசை சத்தம் போடாமல், நீக்கி, முடக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய வெளிநாட்டு வங்கிக் கணக்கை சத்தமில்லாமல் ரிலீஸ் செய்து, சோனியாவின் நண்பரை காப்பாற்றியது அத்தனையும் சிபிஐ தானே ?

எதை வைத்து நம்பச் சொல்கிறார்கள் இந்தக் காங்கிரஸ் அரசை ?

நன்றி : சவுக்கு 

Saturday, 20 August 2011

மத்திய அரசியலில் மாற்றம் தேவையா ?

வணக்கம் நண்பர்களே ...


மத்திய அரசு இப்பொழுது சர்ச்சைக்குரிய மற்றும் கேலிக்குரிய அரசாக செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட காங்கிரஸ் ஆட்சி நீடிக்க வேண்டுமா ? அல்லது அதன் நடவடிக்கைகள் சரியானவையா? மக்களின் நிலைமை என்ன ? என்பதை பற்றி ஒரு அலசல் ......   


ஆரம்பம் முதலே பல்வேறு பிரிவுகளையும் , கோஷ்டிகளையும் கொண்டிருந்தாலும் இந்தியாவின் பலம்பொருந்திய கட்சியாகவே திகழ்கிறது காங்கிரஸ். நேரு , இந்திரா , ராஜீவ் , சோனியா , ராகுல் என தொடர்ந்து ஒருகுடும்பத்தின் சொத்தாகவே காங்கிரஸ் இருக்கிறது , சொல்லப்போனால் குடும்ப ஆட்சியை இந்தியாவில் வித்திட்டதே காங்கிரஸ் தான் ... வடமாநிலங்களில் வலுவான கட்சியாக இருந்தாலும் தென்மாநிலங்களில் பெரிய அளவில் பெயரில்லை   காமரசருக்குபின் காங்கிரஸ் தெனிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அழிந்துவிட்டதாகவே கூறலாம். தமிழ்நாட்டில் டம்மி கட்சியாக இருந்தாலும் கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லை தங்கபாலு , சிதம்பரம் , இளங்கோவன் என்று பல கோஷ்டிகள் உண்டு . (இவனுகளுக்கு ஒருத்தருக்கு ஒருத்தன் ஆப்பு வைக்கறதுதான் வேலை ). மன்மோகன் சிங் பெயருக்கு பிரதமராக செயல்பட்டாலும் அணித்து அதிகாரங்களும் அம்மையார் கையிலேயே உள்ளது என்ற ரகசியம் (???) ஊருக்கே தெரியும் ..(இனி சுத்த தமிழ் ஆகாது நம்ப தமிழ்ல சும்மா புகுந்து வேலாசுனாதான் சரிப்பட்டுவரும் )  இப்படி கூட்டமும் கோஸ்டியுமா இருக்கும் காங்கிரஸ் ஒழுக்கமா இருந்தா பரவாஇல்ல அவன் அவன் கோடிகோடியா குவிக்கிறான் காலேஜ்  கட்டறான். சரி அதுதான் போனாபோகட்டும்னு பாத்தா சோனியா என்ன பண்ணறாங்க அவுங்க வீட்டுகாரர விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் கொன்னுபோட்டங்க அப்படிங்கற ஒரேகாரணத்தை வெச்சுக்கிட்டு சிங்களவனுக்கு ஆதரவா நம்ம ராணுவத்த இலங்கைக்கு அனுப்பி அங்கிருக்கற ஒவ்வொரு தமிழனையும் கொல்லசொல்லி ஆடர் போடறாங்க , அவங்களே சொன்னதுக்கப்பறம் என்ன நம்ம ராணுவத்தினரும் இலங்கைக்கு போய் காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டு வந்தர்றாங்க,  இதெல்லாம் பார்த்த மக்கள் செம கடுப்பில் இருக்கறாங்க அதோட மட்டுமில்லாம உலகமே இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிச்சும் மண்ணு மோகன் சிங் எதுவுமே சொல்லல ....  
இந்த நிலையில் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரபல காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 16-ந்தேதி அவரது போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த போதும், அவர் திட்டமிட்டப்படி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கார் ஜெயிலில் 3 நாட்களை கழித்த போதும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.   ஜெயிலில் இருந்து நேற்று வெளியில் வந்த அவர், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்று (சனிக்கிழமை) 5-வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடித்தது. அவருடன் ராம்லீலா மைதானத்தில் தற்போது சுமார் 8 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அன்னா ஹசாரேயின் போராட்டம் நாடு முழுவதும் பரவத் தொடங்கி உள்ளது. முக்கிய நகரங்களில் ஏராளமானவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். சில நகரங்களில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

மத்திய அரசு வரையறுத்துள்ள லோக்பால் மசோதாவுக்கும், அன்னாஹசாரே குழுவினர் தயாரித்துள்ள மக்கள் லோக்பால் மசோதாவுக்கும் 10 முக்கிய அம்சங்களில் கருத்து வேறு பாடுகள் உள்ளது. குறிப்பாக லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகளை கொண்டு வர வேண்டும் என்பதில் அன்னாஹசாரே முழு தீவிரமாக உள்ளார். ஆனால் லோக்பால் வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதில்லை என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.இந்த நிலையில் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் அன்னாஹசாரே குழுவினர் புதிய நிபந்தனைகளை அறிவித்து வருகிறார்கள்.   உண்ணாவிரதப் போராட்டத்தை 15 நாட்களுக்குள் முடிக்க இயலாது என்று கூறியுள்ள அன்னாஹசாரே ஆதரவாளர்கள், பாராளுமன்றத்தில் மக்கள் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றும் வரை ஓயப்போவது இல்லை என்று கூறி உள்ளனர்.ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளால் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள மத்திய அரசுக்கு அன்னாஹசாரே போராட்டம் தலை மீது விழுந்த சம்மட்டி அடியாக மாறியுள்ளது.மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஒரு வி.ஐ.பி.யை ரகசிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு நாடியுள்ளது. அந்த நபர் ஹசாரே குழு வினருக்கும் நன்கு நெருக்கமானவர். அவர் மூலம் சமரசம் ஏற்படுத்தி விடலாம் என்று மத்திய அரசு நம்புகிறது.


இவ்வளவு ஆட்டம் ஆடுரானுகளே இவனுகள அடக்க ஆளுகளே இல்லையா ? எதிர்க்கட்சி என்ன பண்ணுது ? எதிர் கட்சின்னு சொன்னதுக்கப்பறம் தான் யோசனை வருது பி.ஜே.பி. அது ஒரு டம்மி எதிர்க்கட்சி ஆனதுதான் இத்தனைக்கும் காரணம் ! இதுவும் தென் இந்தியாவில் டுபாகூர் கட்சி ...  தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்ல .. (இதே கம்பேர்  பண்ணும் பொது காங்கிரஸ் எவ்வளவோ பரவா இல்ல )  மக்கள் தாக்குபிடிக்க முடியாமல் வேற வழியே இல்லாம தான் பி.ஜே.பி. க்கு ஓட்டு போடறாங்க, வாஜ்பாய் பிரதமர் வேட்பாளாரா நின்னா இன்னைக்கும்
 பி.ஜே.பி. ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஏன்னா ? அவரு நல்லா ஆட்சி செஞ்சாரு அதோட மட்டுமில்ல நல்லா திட்டங்கள கொண்டுவந்தார் ஏன் கன்னியாகுமரி  முதல் காஷ்மீர் வரி நான்குவழி சாலை திட்டம் கொண்டுவந்ததே அவர்தான். சரி அதெல்லாம் முடிஞ்சுபோச்சு இப்ப இந்தியாவ காப்பாத்த என்ன வழி....முதல்ல இந்த ரெண்டு கட்சிகளையும் ஓரம் கட்டிட்டு மூன்றாவது அணி வலுவான எதிர்கட்சியா உருவாகணும். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசுக்கு எதராக உள்ள கட்சிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி காங்கிரசுக்கு எதிரான வலுவான கூட்டணியாக அமைத்தால் நிச்சயம் வெற்றிபெறு மென்பது என் கருத்து ...  மூன்றாவது அணி யார்தளைமையில் அமைவது?  யார் பிரதமர் வேட்பாளர் ? என்று முடிவில்லாத காரணத்தால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது.  மூன்றாவது அணியில் வலுவான மற்றும் பொதுவான தலைமையின் கீழ் மற்ற கட்சிகள் இணைந்தாலே ஒழிய அணி அமைய வாய்ப்பில்லை . பிரதமர் பதவிக்கான குடிமிபிடி சண்டை ஓய்ந்தால் 3 வது அணி அமையலாம். அப்படி நடந்தால் மட்டுமே ஓரளவு இந்தியா உருப்படும் என்பது என் எண்ணம் ........   
Friday, 19 August 2011

ஓ.பி.சி., மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


புதுடில்லி : "மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர்களைசேர்க்கும் போது, இதர பிற்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.,) மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண், பொதுப் பிரிவு மாணவர்களை விட 10 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பல்கலைக் கழகங்களில், மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு நடைமுறை தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு: மத்திய பல்கலைகளில் மாணவர்களை சேர்க்கும்போது, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண், பொதுப் பிரிவு மாணவர்களை விட, 10 சதவீத அளவில் குறைவாக இருக்க வேண்டும். இது தொடர்பாக, டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்கிறது. பொதுப் பிரிவு மாணவர்களில் கடைசி மாணவர், எந்த தகுதி மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யப்பட்டாரோ, அதை அடிப்படையாக வைத்து, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதி மதிப்பெண்ணை முடிவு செய்யக் கூடாது. எனினும், இந்த கல்வி ஆண்டில், ஏற்கனவே நடந்த சேர்க்கைக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. இனிமேல் நிகழும் மாணவர் சேர்க்கைக்கு, கோர்ட் கூறிய உத்தரவை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு விவரம்: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு நடைமுறை தொடர்பாக, டில்லி ஐகோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில்,"இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண், பொதுப் பிரிவு மாணவர்களை விட, 10 சதவீத அளவில் குறைவாக இருக்க வேண்டும்' என, கூறியிருந்தது. சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் பேராசிரியர் இந்திரேசன், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,"பல்கலைக் கழங்கங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், ஒவ்வொரு பல்கலைக் கழகமும் வேறுபட்ட விதிமுறைகளை கையாளுகின்றன. இந்த முரண்பாட்டை களைய வேண்டும்' என, கூறியிருந்தார். இவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது தான், சுப்ரீம் கோர்ட் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியது.இந்த அதிரடி தீர்ப்பு ஓ.பி.சி மாணவர்களுக்கு சிறந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது .  இந்த தீர்ப்பு இன்னும் பல மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது , சிறந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளை கொங்குஇனம் பாராட்டுகிறது ............

Thursday, 18 August 2011

தடம்மாறி போகிறது... நம் தேசத்தின் அறப்போர்...இந்தியாவில் பிரபலமடைய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களால்  கண்டறியப்பட்ட தற்போதை புதிய வழிதான் உண்ணாவிரதம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முழு பலத்தை அரங்கேற்றியப்பிறகு, எதிர்த்து கேட்க இனி இந்தியாவில் யாரும் இருக்ககூடாது என்று எண்ணிய காலத்தில்,  புதிய  ஆயுதங்கள் கண்டுப்பிடிப்புகள் காரணமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய போர் முறைகள் நம்முடையதை விட படுபயங்கரமானதாக இருந்தது. அதற்க்கெல்லாம் மேலானதாக ஒரு போர்முறை இருக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட நவீன ஆயுதம்தான் “அஹிம்சை” என்கிற “அறப்போர்“

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்து தன்னை சுதந்திர போராட்டத்தில் இணைத்துக்கொண்டப்பிறகு தன்னுடைய புதிய அறவழிப்போராட்டமான உண்ணாவிரதத்தை 1917-ல் பீகாரில் சம்ப்ரான் என்ற இடத்தில், ஜரோப்பிய அவுரிச்செடி பண்ணையர்களுக்கெதிராக ஒரு போராட்டத்தை அறிவித்து அங்குதான் “சத்தியாகிரகம்” வழியில் முதன்முதலாக உண்ணாவிரதம் என்ற மிகப்பெரிய போர் முறையை அறங்கேற்றினார்.

நாம் துப்பாக்கி தூக்கியிருந்தால் ‌ஆங்கிலேயன் பீரங்கி தூக்கியிருப்பான், நாம் பீரங்கி பயன்படுத்தியிருந்தால் அவர்கள் அதை விட பயங்கரமான ஆயுதத்தை எடுத்திருப்பார்கள்.  நாம் பயன்படுத்தியதோ அஹிம்சை அஹிம்சைக்கு எதிராக எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்று தெரியாமல் விழிப்பிதுங்கிய ஆங்கிலேயன் நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.

நல்ல நோக்கத்திற்க்காகவும், கண்டிப்பாக பலன் அளிப்பதாகவும், போர்முறையின் உச்சக்கட்ட ஆயுதமாகவும் இருந்த அஹிம்சைப்போரான உண்ணாவிரதம் இன்று தடம்மாறிப் சென்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டில் எதற்க்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற நிலைக்கு இன்று நாடு வந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்ட ‌விதம் அந்த பிரச்சனைகளை முடித்து வைப்பதாக இருந்தது. இறுதிக்கட்ட ‌ஆயுதமாக இருந்த இப்போராட்டம் தற்போது முதற்கட்ட ஆயுதமாக உறுமாறிவிட்டது. ‌ எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற போக்கால் அந்த உண்ணாவிரதம் என்ற வார்த்தை கலையிழந்துப்போயிருக்கிறது.

 20 நாட்கள் 30 நாட்கள் கூட உண்ணா‌நோம்பிருந்து தலைவர்கள் நாட்டின் பிரச்சனைக்காக போராடினார்கள். ஆனால் தற்போது 2 மணிநேரம்  3 மணிநேரம் கூட  இப்போராட்டம் அரங்கேருகிறது. தற்போதைய அரசியல் வாதிகளுக்கு இது தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்க்காக இப்போராட்‌டத்தை தற்போது பயன்படுத்திக் கொண்டுவருகிறார்கள்.

டெல்லியில் சமீப காலத்தில் கருப்பு பணம், லோக்பால் போன்ற பிரச்சனையை மையப்படுத்தி ராம்தேவ், அன்னா ஹசாரே, போன்றோரும், ஆந்திராவில் தெலுங்கான பிரச்சனையை மையப்படுத்தியும், தமி‌ழகத்தில் இலங்கைப்பிரச்சனை, காவிரிப்பிரச்சனைகளை முன்வைத்தும் அதிரடியாய் உண்ணாவிரதம் ஆரம்பித்து தன்னுடைய பிரபலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.
லோக்பால் சரியில்லை என இந்திய பாராளுமன்றத்தையே அவமதிப்பதுபோன்று அன்னா ஹசாரே அவர்கள் நேற்று (17-08-2011) தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை  ஆரம்பித்து கைதும் செய்யப்பட்டார். இது வெற்றிப்பெறுமா அல்லது தோல்வியுறுமா என்று எனக்கு தெரியவில்லை. அவருடைய எண்ணம் சரியானதாகவும், கொண்ட போராட்டத்தில் இருந்து விலகாதவரை இப்போர் நன்மையிலே முடியும்.

உலகமே பார்த்து வியந்த ஒரு அறப்போரை கௌவரப்படுத்தி  காப்பது நாம் ஒவ்வோருவருடைய கடமையாகும். அப்போது தான் உலக அளவில் தன்னை தனித்துவம் கொண்ட நாடாக அடையாளப்படுத்திக் கொண்டுருக்கும், உலகின் சுருக்கமான இந்தியா  தன் கிரீடத்தை கழட்டாமல் இருக்கும்.


நன்றி :  kavithaiveedhi.blogspot.com

Friday, 12 August 2011

எம்.ஜி.ஆர்., கோவிலில்14ம் தேதி கும்பாபிஷேகம்


எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் ஒருவர், சென்னையில் அவருக்கு கோவில் கட்டியுள்ளார். அக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்க உள்ளது.சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன், 50; வாரப் பத்திரிகையின் முகவராகவும், விற்பனையாளராகவும் பணிபுரிகிறார். சிறுவயது முதலே, எம்.ஜி.ஆர்., மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அது நாளடைவில் பக்தியானது.பக்தியை வெளிப்படுத்தும் வகையில், சொந்த செலவில், எம்.ஜி.ஆர்., படம் போட்ட சாவிக்கொத்து, பிளாஸ்டிக் ஸ்டிக்கர் போன்றவற்றை, பார்ப்பவர்களிடம் கொடுத்து வருகிறார்.

எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.மனைவியின் நகையை விற்ற பணம், சேமிப்பு என தேறிய மூன்று லட்சம் ரூபாயை கொண்டு, திருநின்றவூர், நத்தம்மேட்டில், முக்கால் கிரவுண்டு இடம் வாங்கி, அதில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டினார். அக்கோவிலினுள் முன் மண்டபத்தில், ஆறடி உயரத்தில் எம்.ஜி.ஆரின் பளிங்கு சிலை வைத்துள்ளார். அதற்கு முன்பாக, அபிஷேகத்திற்காக, இரண்டு அடி உயரத்தில் கிரானைட் கல்லால் ஆன உற்சவர் சிலையையும் அமைத்துள்ளார்.இக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கிறது. "அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, செல்லியம்மன் சாலை, திருநின்றவூர்' என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 10 August 2011

இந்தியர்களின் சுவிஸ் பேங்க் அக்கவுன்ட் ..விவரங்கள்..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

இந்தியாவின் கருப்பு அத்தியாயம் 


விக்கி லீக்ஸ் இணைய தளம், இந்தியர்களின் சுவிஸ் பேங்க் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களின் பட்டியலின் முதல்  லிஸ்ட் வெளியிட்டு  உள்ளது .
மேலும் அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல அரசியல் வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் மேலும் பல அரசியல் புள்ளிகளின் தலையை உருட்டப் போவதில் சந்தேகமில்லை ...விரைவில் நம் இந்தியர்கள் 859 பேர் லிஸ்ட், எவ்வளவு பணம், எந்த பேங்க் -ல் உள்ளது என்ற  பட்டியல்..வெளியிடப் போகிறார்கள் . முதல் பத்து இடங்களில் நீராராடிய முதல் இடத்தை பிடித்தார். ராஜீவ் காந்தி மூன்றாவது இடத்திலும் (அப்பவே எக்கச்சக்கமா அடிச்சிருக்கான் பார்யா ...)  , அய்யா கலைஞர் ஏழாவது இடம் பிடித்துள்ளார் , சிதம்பரம் எட்டாவது இடம் ,லல்லு பிரசாத் யாதவ் ஒன்பதாவது இடத்தை பிடித்தார் ,   கலாநிதிமாறன் பதினான்காம் இடத்தில் தமிழனின் பெயரை காப்பாற்றினார் (???!!!) , ஸ்டாலின் பதினாறாவது இடத்தை பிடித்து மிகச்சிறந்த முறையில் தமிழனின் மானத்தை கப்பலேற்றினார் ( ஸ்டாலின் : என்னப்ப்பா அழகிரி, லிஸ்ட்ல பேரையே காணோம், நீ தலைவர் பதவிகெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே நான் பாத்துக்கறேன் நீ இன்னும் வளரனும் தம்பி ... போ..போ ...  )(அழகிரி : இவனே கம்பி என்ன போறான் அதுக்குள்ள பேச்சை பாரு ராஸ்கல் ... நான் தலைவராவது உறுதி .)  , ஆ.ராசா இருபதாவது இடம் , பழனிமாணிக்கம் இருபத்திரண்டாவது இடம் . 
                                    வாழ்க தமிழ் !  வாழ்க தமிழ்நாடு !!


சில தினங்களில் இந்திய கொள்ளை கூட்டத்தின் லிஸ்ட்கள் மிகப் பெரிய சர்ச்சையை சந்திக்கப் போகிறது ... இந்திய அரசில்யலிலேயே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் .... கலைஞர் அய்யா இதற்கு என்ன சொல்லபோகிறார் என் பெயரே கருணாநிதி இல்லைன்னு சொல்லுவாரோ? ஆரியர்களின் சதி என்று பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார் ........  என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி நண்பர்களே .... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ....  

ஆபத்தில் .... இந்தியா!!! ... கூட்டுச் சதியில் அண்டை நாடுகள் ....... இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சீனா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதியிலும் சீனா ஆதிக்கம் காட்டும் முயற்சிகளை தொடங்கி உள்ளது.


இதன் முதல் படியாக வங்கதேசத்தில் 111 கிலோ மீட்டர் தொலைக்கு சீனா ரெயில்பாதை அமைக்க உள்ளது. இந்த ரயில் பாதை வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தை தலைநகர் பீஜிங்குடன் இணைக்கும் வகையில் இந்த ரெயில் பாதை வர உள்ளது. சிட்டகாங் துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் வங்க கடலின் பெரும்பகுதி சீனாவின் பிடிக்குள் போய் விடும். சிட்டகாங் துறைமுகத்துக்கும் சீன கடற்படை வந்து விட்டால் இந்தியாவுக்குள் 30 நிமிடத்துக்குள் வந்து விடும் அபாயம் உருவாகும்.

  

இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு கடிவாளம் போட சீனா துடிக்கிறது. இதற்காகவே இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தையும் சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.


பாகிஸ்தானுடன் சுமூக உறவு வைத்திருக்கும் சீனா, சமீப காலமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தன் ராணுவத்தை அனுப்பி தளம் ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஓசையின்றி ரயில் பாதையையும் சீனா அமைத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அறிவியல் மேம்பாட்டுக்கும் சீனா கோடிக்கணக்கில் வாரி இறைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக வலுவான ஒரு அரணை பாகிஸ்தானில் சீனா உருவாக்கி விட்டது.

பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இலங்கையில் சீனா முழு கவனத்தையும் காட்டி வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் வலுவாக இருந்தவரை இலங்கை பக்கமே வராத சீனா, தற்போது தன் நாட்டு மக்களை பல்லாயிரக்கணக்கில் அங்கு இறக்கி விட்டுள்ளது. ஏற்கனவே ஹம்பன் தோடா துறைமுகத்தை நவீனப் படுத்தி, தன் ராணுவத்தை அங்கு களம் இறக்கும் வகையில் வசதிகளை சீனா செய்து விட்டது. தற்போது கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தி கண்டெய்னர் டெர்மினல் ஒன்றை அமைக்கும் பணியையும் சீனா பெற்றுள்ளது. இந்த பணிக்கு இந்திய நிறுவனங்கள் எதையும் இலங்கை பரிசீலனை கூட செய்யவில்லை. இதன் மூலம் தனது நாட்டில் இந்தியா கால் ஊன்றுவதை விட சீனா கால் ஊன்றுவதையே இலங்கை அதிகம் விரும்புவதாக தெரியவந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இலங்கையில் சீனா ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தென்இந்தியாவில் கைக்கு எட்டும் தொலைவில் இந்தியா அச்சுறுத்தலை சந்தித்துள்ளது. 


சீனா இருக்கும் தைரியத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையே இலங்கை முடக்கி வருகிறது.இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர். 

ஜூலை மாதம்  , 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம், விசாரித்து வருகின்றனர்.

கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 இதனால் இலங்கையில் சீனர்கள் ஊடுருவலை எல்லோரும் அச்சத்துடன் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மியான்மர் நாட்டுடன் சீனா ராணுவ ஒப்பந்தம் செய்து தன் படைகளை நிறுத்தி உள்ளது. இந்தியாவை சுற்றி நன்கு திட்டமிட்டு சீனா வலை விரித்துள்ளது. ஆனால் இதற்கு பதிலடி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இந்தியா மவுனமாக உள்ளது. 

இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக இருந்த போதிலும் இலங்கை சீனாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. சீனா உட்பட 6 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இலங்கையில் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கை மற்றும் பிற நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு சீன அதிகாரிகள் பயிற்சி அளிக்கிறார்களா என்பது தெரியவில்லை, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், இலங்கையில் உள்ள சபுகஸ்கந்த முகாம் மற்றும் கூட்டுப்படைகளின் முகாம் ஆகியவற்றில் பயிற்சி பெற்று வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நாடுகளில் சூடான் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் தெற்காசிய நாடுகள்,. சூடான் பங்கேற்காமல் இருந்திருந்தால் இது தெற்காசிய நாடுகள் அமைப்பின் சார்பில் ஏதோ கூட்டுப்பயிற்சி நடைபெறுவதாகக் கருத இடமுண்டு.


வெளிநாடுகளைச் சேர்ந்த 80 பேர் தற்போது இலங்கையில் ராணுவப் பயிற்சி பெற்று வருவதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் இணையயதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Saturday, 6 August 2011

108 ஒரு அரசு நிறுவனமா? வெளி வராத உண்மைகள் ஓர் அலசல் ...

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சோகங்கள் என்ற தலைப்பில் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கஷ்டங்களைப் பற்றி முந்தய பதிவில் பார்த்தோம் ...108  பற்றி மேலும் சில உண்மைகளை ஆராய்ந்து வெளியிட்டு உள்ளோம் .....
 • விபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.
 • 108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார். தற்போதைய ஜெயாவோ, இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கப் போவதாக, அதாவது தானே வீடுவீடாகச் சேவை செய்யப்போவது போலக் கூறியிருக்கிறார்.
 • ஆனால், இந்த மகத்தான சேவைகளை மக்களுக்குத் தரக்கூடிய 108-ன் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படுகின்ற துயரமும், இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்கிற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் யாரும் அறியாதது.
 • அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Emergency Management and Research Institute- EMRI) என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 411 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. நாளொன்றுக்கு  சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது.
 • திடீரென நடைபெறுகின்ற சாலைவிபத்துக்கள், மாரடைப்பு, தீக்காயங்கள், நோய்களினால் உருவாகின்ற ஆபத்துக்களுக்கான அவசர உதவிகள் மற்றும் பிரசவகால அவசரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசரஉதவிகளை 108-ன் ஊழியர்கள் செய்கிறார்கள்.
 • விலை உயர்ந்த நவீனக்கார்கள் எதிலும் இல்லாத; வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனை ஆம்புலன்சிலும் இல்லாத; அவ்வளவு ஏன், பெரும்பாலான தனியார் மருத்துவக் கிளினிக்குகளிலும் இல்லாத, அதி நவீன மருத்துவக்கருவிகள்; உயிர் காக்கும் மருந்துகள்; மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108- வாகனங்கள் இயங்கி வருகின்றன.
 • ஒரு 108- வாகனத்தில் ஒரு ஓட்டுனர்(pilot), மற்றும் ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் (Emergency Medical Technician) ஆக, இரண்டு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் (shift) வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலான பனிரெண்டு மணி நேரமாகும். ஷிப்ட் முடியப்போகும்போது ஏதேனும் ஒரு கேஸ் வந்தால் அதையும் முடித்துவிட்டுத்தான் இவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் கூடுதலான வேலைக்கான கூடுதல் சம்பளம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும் இதற்கான நேரத்தை இவர்கள் அடுத்த ஷிப்ட் வரைக்குமான ஓய்வு நேரத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக அடுத்த ஷிப்டிற்கு மீண்டும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள்.
 • மிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்.
 • வேலைக்கு வந்ததும் இ.எம்.டி யாக வேலை பார்ப்பவர்  முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோல ஓட்டுனரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வண்டியை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடியிலும், மோசமான சாலைகளிலும் சிரமங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் வாகனங்களை  ஓட்டக்கூடிய இளைஞர்கள்தான் இப்பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முறையான பராமரிப்பு எதுவும் வாகனங்களுக்கு நடைபெறுவது இல்லை. டயர், பிரேக் உள்ளிட்ட முக்கியப் பாகங்கள் கூட பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.
 • 108 வாகனமானது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள  போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, ஒரு பொதுவான இடம் ஆகிய ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 108-ன் ஊழியர்கள் எப்போதும் வண்டியின் உள்ளேதான் இருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடோ கிடையாது. இதனால்ஈ.எம்.டி-க்களாக வேலை செய்கின்ற பெண்கள் படும்பாடு தனித்துயரம்.
 • வேலை நேரத்தினிடையே, தேனீர் நேரமோ, உணவு இடைவேளையோ கிடையாது. வண்டியினுள்ளேயே அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடத்துவங்கும் போது, அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்திற்குள் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த முப்பது நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே கூடியிருக்கிற உறவினர்களைச் சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். ஒடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள்.  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கோ, அல்லது தகுந்த மருத்துவமனைக்கோ, அல்லது பாதிக்கப்பட்டவர் அல்லது அவருடைய உறவினர்களின் விருப்பப்படியான மருத்துவமனைக்கோ சென்று சேர்க்கிறார்கள். இதற்குள் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பதிவேடுகளில்  பதிவு செய்கிறார்கள். மொத்தம் 22 பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தினில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், மூத்திரம், மற்றும் பிரசவமேற்பட்டால் உண்டாகும் அதன் கழிவுகள் ஆகிய அனைத்தையும் இவர்களே சுத்தம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு சுமாராக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களைக் கையாளுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளோ, மருந்துகளோ வழங்கப்படுவதில்லை. ஒருமுறை கழட்டி மாட்டினால் கிழிந்துவிடுகிற அளவிற்கு மட்டரகமாகத் தயாரிக்கப்பட்ட கையுறையைத்தான் இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.
 • இப்படி கூடுதலான பணிச்சுமையிலும், பொறுப்பாகப் பணிசெய்யும் இவர்களுக்கு மிகவும் துயரத்தைக் கொடுப்பது இவர்களின் வேலைப்பளு அல்ல, மாறாக, இவர்களைக் கொடுமையாகச் சுரண்டுகிற நிர்வாகம்தான்.
 • 108-எனும் இந்த அவசரகால மருத்துவச் சேவையைச் செய்வதற்காக தமிழக அரசு ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது சாதாரண ஒப்பந்தமல்ல, நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படிக்கிறோமே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான்? விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி  சேவை செய்ய முன் வந்தார்? 108-ற்காக சேவை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளவர் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்னும் நிறுவனத்தின் முதலாளியான  ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டி என்பவர்.
 • இந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி. இது தவிர, பிரசவம் நடந்தால் இரண்டாயிரம் ரூபாயும், மற்ற பிரச்னைகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் பெற்றுக் கொள்கிறார். சரி, மொத்தமாக ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் வரவு, செலவு எவ்வளவு?
முதலில் செலவைப் பார்ப்போம்.
ஒரு மாதத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஆகும் செலவு:
எரிபொருள்                                                                     ரூ. 20,000
பராமரிப்பு                                                                       ரூ.    5,000
2 பைலட்டுகள் சம்பளம்                                          ரூ.   11,400
2 இ.எம்.டி. களுக்கான சம்பளம்                            ரூ.   13,000
வார விடுமுறையில் மாற்றம் செய்யும்
பைலட் மற்றும் இ.எம்.டிக்கான சம்பளம        ரூ.     5,000
மருந்து மற்றும் கருவிகளுக்கான செலவு     ரூ.     2,000
இதர செலவுகள்                                                          ரூ.     3,600
ஆக, மொத்தம்                                                               ரூ. 60,000
400 வாகனங்களுக்கு, 400 X 60,000 =                ரூ. 2,40,00,000.
ஒரு ஆண்டிற்கு, 12 X 2,40,00,000 =                 ரூ. 28,80,00,000.
இனி வரவாக அரசிடம் பெறும் கட்டணத்தைப் பார்க்கலாம்.
மொத்தமுள்ள 411 வாகனங்கள் மூலமாக, ஒரு நாளைக்கு வரும் மொத்த கேஸ்கள் சுமார் 3,000.
ஒரு கேஸுக்கு அரசிடம் பெறும் கட்டணம் ரூபாய் குறைந்தபட்சமாக ரூபாய் 1,500 என வைத்துக் கொண்டால்
ஒரு நாளைக்கு 3,000 X 1,500= 45,00,000 ரூபாய்
ஒரு மாதத்திற்கு 30 X 45,00,000= 13,50,00,000 ரூபாய்.
அப்படியானால் ஒரு ஆண்டிற்கு 12 X 13,50,00,000= 162 கோடி ரூபாய்
ஆக, ஒரு ஆண்டிற்கான மொத்த வரவு, செலவு விவரம்:
வரவு         = 162.00 கோடி.
செலவு     =   28.80 கோடி.
ஆக, ஆண்டொன்றிக்கு நிகர லாபம் 133 கோடியே 20 லட்ச ரூபாய்கள். இது குறைந்த பட்சத்தொகை என்பதை மறந்துவிடக்கூடாது.
இவ்வளவு லாபம் அடைகின்ற முதலாளி, ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான். இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரவு செலவுப் பின்னணி. உள்ளூர் புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த லட்சணமென்றால் மாதத்திற்கொன்றாக பன்னாட்டுக் கம்பனிகளிடம் போடப்படுகின்ற மத்திய, மாநில அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் என்ன யோக்யதையில் இருக்குமென நாமே யூகித்துக்கொள்ளலாம்.

108 ஒரு அரசு நிறுவனமா?

108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் 108 ஒரு அரசு நிறுவனமென்றும், 108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அப்படி நம்பித்தான் அதில் வேலைக்கும் சேருகிறார்கள். ஆனால், 108 வேலை ஒரு தனியார் நிறுவன வேலைதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளில் 108 சேவை தொடங்கப்பட்டபோது, மிகப்பிரபலமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. பின்னர் சத்யம் போண்டியாகிப்போய் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததால் சத்யம் முதலாளியின் மச்சானான ஜி.வி. கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட மொத்தம் 18 மாநிலங்களிலே ஜி.வி.கே இது போன்ற சேவைகளை நடத்திவருகிறான்.

ஊழியர்களின் பரிதாப நிலமை:

பணியில் சேரும் ஊழியர்களை முதல் ஒரு வருட காலத்திற்குப் பல மாவட்டங்களிலும் அதன் பின்னர் சொந்த மாவட்டத்திற்கும் பணியாற்ற  அனுப்பப்படுகிறார்கள். ஆனால், வாகனங்களில் எதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் முதலில் நிர்வாகம் செய்வது ஊழியர்களை இடம் மாற்றுவதுதான். ஊழியர்களை அதிகாரிகளுக்கு அடிமைகளாக்கவே நிர்வாகம் நிர்ப்பந்திருக்கிறது. வேலையில் முறையாக இருந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொன்னாலோ, அல்லது அவசியமான கேள்விகள் எதையும் கேட்டாலோ, உடனடியாக மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கிறார்கள். தானே தவறு செய்ததாக நிர்ப்பந்தம் செய்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இனிமேல் தவறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கிறார்கள். இவ்வாறு மூன்று எச்சரிக்கைக் கடிதங்கள் பெறுகின்ற ஊழியரை வேலையை விட்டு நீக்குகிறார்கள்.

அதிகாரிகளின் அயோக்கியத்தனம்:

இப்படியெல்லாம் ஊழியர்களிடம் கெடுபிடியாகவும்  கறாராகவும் நடந்து கொண்டு, 40,000 முதல் 50,000 ரூபாய்களுக்கும் கூடுதலாகச் சம்பளம் வாங்கி, ரெட்டியிடம் நல்லபேரை எடுக்கிற ஜி.வி.கே அதிகாரிகளின் அசல் சேவையுள்ளத்தைச் சிறிது பார்க்கலாம்.
1) வாகனங்களுக்கு மாதாமாதம் வழங்குகின்ற மருந்து மற்றும் கருவிகளைக் குறைந்த எண்ணிக்கைகளில் வாங்கி அதிமான எண்ணிக்கையில் வாங்கியதாகப் பில் எழுதிப் பணம் திருடி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.
2) அப்படியே வாங்கப்படும் மருந்துகளில் காலாவதியான மற்றும் காலாவதித் தேதிக்கு மிக அருகில் இருக்கும் மருந்துகளே மிக மிக அதிகமாக இருக்கிறது. இதன் மூலமாகவும் பணம் சுருட்டுகிறார்கள்.
3) வாகனங்களில் ஏற்படும் சிறு சிறு குறைபாடுகளுக்கும் பல ஆயிரக்கணக்கான தொகைக்கு பில்எழுதி ரெட்டியை ஏமாற்றுகிறார்கள்.
4) ஊழியர்களின் சம்பளங்களில் பிடித்தம் செய்யப்படுகின்ற பிராவிடண்ட் தொகை மற்றும் ஈ.எஸ்.ஐ-த் தொகைகளை வேலையிலிருந்து நின்று விட்ட எந்த ஊழியர்களுக்கும் இதுவரை வழங்கியதில்லை.அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் எந்த ஊழியர்களையும் வேலை செய்யவும் விடுவதில்லை.
இந்தப் புரிந்துணர்வுக்குப் பிறந்த அதிகாரிகள்
பிரசவக்காரியங்களுக்கு அதிகக் கட்டணம் கிடைக்கிறது என்பதால் பிரசவக் கேசுகளாக ஏத்துங்கள் என மானங்கெட்டதனமாக ஊழியர்களை  நிர்ப்பந்திக்கிறார்கள்.
 • திருச்சி டோல் கேட் பகுதியில் 108 பைலட் ஒருவர் வேறு வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஜி.வி.கே ரெட்டி எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. ஆனால், அவரது குடும்பத்திற்காக, பிற ஊழியர்கள் திரட்டிக் கொடுத்த தொகையான 3,25,000 ரூபாயைத் தானே கொடுத்ததாக ஜி.வி.கே ரெட்டி பத்திரிகைகளில் செய்தி கொடுத்தார். அவ்வளவு யோக்கியமான ரொட்டி அவர். சொந்த விமானத்தில் மாநிலம் மாநிலமாகப் பறக்கிற அவரது யோக்கியத்தனமும் அப்படித்தான் பறக்கிறது. சரி, ரெட்டியின் யோக்கியதையே இப்படி இருக்கும் போது, அவனைத் தாஜா செய்து வேலை பார்க்கின்ற அதிகாரிகள் மட்டும் யோக்கியனாக இருப்பானா என்ன?
 •  சமச்சீர்க் கல்வித் திட்டம் போன்ற கருணாதியின் சிறந்த பல திட்டங்களை ஜெயலலிதா காழ்ப்புணர்வோடு ரத்து செய்வதாக பல நடுத்தட்டுகள் தமிழகத்தில் அங்கலாய்த்துக் கொள்கின்றன. இதோ, ஜிவிகே ரெட்டியென்னும் கொள்ளையனுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளி ,அள்ளிக்கொடுக்கிறது கருணாநிதி போட்ட 108 புரிந்துணர்வு ஒப்பந்தம். அதை ரத்து செய்வாரா ஜெயலலிதா? மாட்டார். ஆனால் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? குழந்தைகளுக்கான 108 என்று அதை விரிவாக்கி இன்னும் கூடுதலாக இரண்டு வண்டிகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதைத் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இதுவரை 108-ன் பின்னால் மறைந்துகிடக்கிற ஊழியர்களின் துயரத்தையும், ஜிவிகே ரெட்டி நிறுவனம் அடிக்கிற கொள்ளையையும் பார்த்தோம்.
 • 108-ன் ஊழியர்களின் துயரங்களுக்கு ஜெயலலிதா முடிவுகட்டுவாரா? சென்ற ஆட்சியின் போது சாலைப் பணியாளர்களையும், அரசு ஊழியர்களையும் நடத்தியதைப் பார்க்கும் போது, அவர் எதை முடிவு கட்டுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆக, 108-ன் பணியாளர்கள் தங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
 • உயிரைப் பயணம் வைத்து பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற வாகனம் ஓட்டும் பைலட்டுகளும், பாதுகாப்பு வசதியில்லாததால், பாதிக்கப்பட்டவர் மூலமாக, தனக்கு ஏதேனும் நோய் தொற்றுமோ எனக் கவலைப்படாமல் பணியாற்றுகின்ற ஈ.எம்.டிக்களும் ஆக, ஒட்டுமொத்தமாக 108-ன் பணியாளர்களும் எப்படி இந்த பிரச்சினையைப் பார்க்கவேண்டும்?
 • 108 ஊழியர்களின் பிரச்சினை அவர்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல. என்று இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டதோ, அன்றிலிருந்து  விவசாயிகள், தொழிலாளிகள், நெசவாளர்கள், சிறுவியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள், என பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பல்வேறு மக்கள் பிரிவினரின் பிரச்சினையோடு இணைந்ததுதான், 108 ஊழியர்களின் பிரச்சினை. இதை 108 -ன் ஊழியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே 108-ன் ஊழியர்களாக இருந்து போராடுகிற அதே வேளையில், இதே காரணத்தினால், பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும் அவர்கள் இணைந்து போராட வேண்டும். அப்போது மட்டுமே நிரந்தரமாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டமுடியும். அதற்கு முதலில் சரியானதொரு சங்கத்தை அவசியம் நீங்கள் உண்டாக்கியாக வேண்டும்.
 • அந்தச்சங்கம் 108 ஊழியர்களின் துயரங்களை, கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய அதே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நடத்தப்படுகின்ற பிற போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.
108-ன் ஊழியர்களாகிய உங்கள் மீது மக்கள்   கொண்டிருக்கும் நல்லெண்ணமும் மதிப்பும் நீங்கள் அவர்களுக்காகப் போராடும்போது உங்களது போராட்டங்களுக்கான ஆதரவாக அது வெளிப்படும்.
சங்கமாகுங்கள்!
மக்களிடம் செல்லுங்கள்!
மக்களுக்காக நில்லுங்கள்!