Tamil News | Pudhiyaboomi News

Sunday, 31 July 2011

திருமலை-திருப்பதியில் சேவை செய்ய விருப்பமா?

நீங்கள் கடக ராசியில் பிறந்தவராக இருந்தாலோ, அல்லது உங்களுக்கு சந்திர தசை நடந்து கொண்டிருந்தாலோ, நீங்கள் ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் - நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலோ  - நீங்கள் ஒரு முறை திருப்பதி சென்று Volunteer சேவை செய்து வந்தால் உங்களுக்கு - மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும். சேவை செய்யும் போது - இடையில் பௌர்ணமி தினம் வந்தால் , இன்னும் விசேஷம். 

செல்வத்தின் அதிபதி ஸ்ரீவெங்கடாஜலபதியின் இருப்பிடம் திருப்பதி.அங்கு குறைந்த பட்சம் திங்கள் முதல் ஞாயிறு வரை தங்கி பக்தர்களுக்கு சேவை செய்ய விருப்பமா? ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரம் சேவையில் ஈடுபட வேண்டும்.மேலும் சனிக்கிழமையன்று சேவையில் ஈடுபடுவோருக்கு சிறப்பு தரிசனம் உண்டு.tirupati,lord venkateswara,basara saraswati,kondagattu,hanuman,


ஸ்ரீவாரி சேவா உறுப்பினராகுங்கள்.சரி! எப்படி உறுப்பினராவது?

குறைந்தது 10 பேர் கொண்ட குழுவை பின்வரும் முகவரிகளில் ஏதாவது ஒன்றில் பதிய வேண்டும்.அப்படிப் பதிந்தால் திருப்பதியில் நாம் விரும்பும் ஏதாவது 10 நாளுக்கு சேவை செய்யச் செல்லலாம்.இதற்கு கட்டணம் கிடையாது.திருப்பதியில் சாப்பாடு,தங்குமிடம் இலவசம்.அதுவும் தேவஸ்தான ஊழியராக அந்த 10 நாட்களில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.நீங்கள் சேவா ஊழியர் என்பதற்கு அடையாளமாக கழுத்தில் காவித் துண்டு அணிந்திருப்பீர்கள்.

ஸ்ரீவாரி சேவா:திரு.கண்ணபிரான் 94431-36763.0431-27822887.
ஸ்ரீவாரி சேவா அமைப்பு:திரு.ஏ.பி.நாகராஜன்
திருப்பதி தேவஸ்தான கோவில்,
வெங்கட்நாராயணா சாலை,தி.நகர்,சென்னை-17.
044-24343535.
ஆங்கில மாதத்தின் முதல் சனி மதியம் 2 முதல் 4 மணிக்கு இங்கு வருக!

ஏ.பி.என். குரூப்
புதிய எண்:16,டி.டி.கே.சாலை,
முதல் கிராஸ் தெரு,ஆழ்வார்பேட்டை,சென்னை-18.
044-24334700,24331776.


சேவா சதர்ன் ஹால்,மேல்திருப்பதியில் பஸ் நிலையம் அருகில் உள்ளது.இங்கும் தொடர்பு கொள்ளலாம்.

PUBLIC RELATION OFFICER,
THIRUMALA THIRUPATHI DEVASTHANAM,
KABILA THEERATHAM ROAD, THIRUPATHI.
0877-226456.

திரு.வி.எஸ்.சுந்தரவரதன் 044-22232526,9444221661.

Friday, 29 July 2011

108-ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோகம்


தமிழகம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டுவரும், தமிழக அரசின் 108 அவசர உதவி வாகனத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக சொல்லி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் மனு கொடுத்துவிட்டு வந்தார்கள் 108 ஆம்புலன்சை ஓட்டும் பைலட்டுகள்.
என்ன உங்களின் பிரச்சனை..? என்று கேட்டோம்.
ஒன்னா... இரண்டா சார்....., தினம் தினம் பிரச்சனை தான் கொஞ்சம் கேளுங்க சார் என்றார்கள்.
2008-ல் இந்த திட்டம் துவங்கப்பட்டபோது எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஐந்தாயிரம், மற்றும் வருடத்திற்கு ஒருமுறை இருபது பர்சென்ட் இன்கிரிமெண்ட் தருவதாக சொன்னாங்க சார்.

சத்யம் கம்பியுடர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ நிறுவனம்  தான் எங்களை வேலைக்கு சேர்த்தது. ஒரே ஆண்டில் அந்த நிறுவனம் மூடப்பட்டதால், அந்திராவில் உள்ள ஜி.வி.கே என்ற நிறுவனம் இப்போது 108 ஆம்புலன்ஸ் சேவையை செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசிடமிருந்து வாங்கும் பணத்தில் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது.காலை எட்டு மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் நங்கள் டியூட்டி மாத்திக்கணும், எங்க வீட்டுல இருந்து வண்டி நிக்கற எடத்துக்கு போக நாங்க ஒரு மணிநேரம் முன்னாலையே கிளம்பவேண்டும், அப்ப எங்களுக்கு காலை மதியம் என இரண்டு வேலைச் சாப்பாடும் கடையில் தான் சாப்பிட வேண்டும்.

இரவு பணிக்கு போகிறவர்களுக்கும் இதே போல இரண்டு வேலை கடை சாப்பாடு கடையில்தான்.   அனால், எங்களுக்கு சம்பளம் ஆறாயிரம் ரூபாயும், மருத்துவ உதவியாளர்களுக்கு ஏழாயிரம் ரூபாயும் கொடுக்கிறார்கள். இதில எப்படி சார் இரண்டு வேலை கடையில சாப்பிடமுடியும்.

உலகத்துல எல்லா நாட்டிலேயும் எட்டு மணி நேரம்தான் வேலை. ஆனால், எங்களுக்கு மட்டும் 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். அந்த நான்கு மணி நேரத்துக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தால் பரவாயில்லை. அதுவும் தருவதில்லை.

மற்ற எல்லா இடங்களிலும், வேலை ஆட்களுக்கு, அரசு விடுமுறை நாட்கள், பொங்கல், பண்டிகை போன்ற விசேச நாட்களில் வேலை செய்யும் போது இரு மடங்கு சம்பளம் கொடுகிறார்கள். எங்களுக்கு அப்படி எந்த சலுகையும் கொடுப்பது இல்லை.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்டது, ஆனால், ஆம்புலன்ஸ் வண்டி நிறுத்த இடமில்லை, எங்களுக்கு உட்கார இடமில்லை;  தண்ணி குடிக்க இடமில்லை, வெய்யில் அடித்தாலும், மழை பெய்தாலும் வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டியது தான்.

அதிலும் எங்களுடன் பணியாற்றும் பெண்களின் நிலைமை மிகவும் மோசம். போலிஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து ஆபிஸ் இப்படி பல எடத்துல நாங்க வண்டிய நிப்பாட்டிட்டு உக்காந்திருக்கிறோம்.

சாலை விபத்து ஏற்பட்டால், நாங்க அடிபட்டவர்களை எடுத்து போகும் போது  வண்டிக்குள்ள இரத்தம் பட்டுட்டா அதை கழுவிவிட தண்ணி எங்களுக்கு கிடைப்பதில்லை.

கொண்டலம்பட்டி காவல் நிலையத்திலும், அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் தண்ணீர் வசதியில்லை. அங்கு வேலை செய்யும் போலிஸ் காரர்களே தண்ணியில்லாமல் இருக்கும் போது எங்களுக்கு வண்டி கழுவ தண்ணீருக்கு எங்கே போவது.

மல்லூர் காவல் நிலையத்தில் இருந்த வண்டியை ஒருமுறை போலிஸ் இன்ஸ்பெக்டர் அவசரத்துக்கு கூப்பிட்டிருக்கிறார், அந்த நேரம் வண்டி சேலம் போய்விட்டது.

 எங்களுக்கு உதவாத வண்டியை இங்க நிப்பாட்ட வேண்டாமுன்னு சொல்லி துரத்திவிட்டார்கள். இப்போது கெசல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நிறுத்தியுள்ளோம்.

இது எல்லாத்தையும் விட சமயத்தில் பொது மக்கள் வேறு விதமாக பிரச்சனை செய்கிறார்கள். தண்ணியை போட்டுவிட்டு கிடப்பவர்களை பார்த்துவிட்டு 108க்கு  தகவல் சொல்லிட்டு போயிடறாங்க.
நாங்க போய் குடிகாரன தூக்கிக்கிட்டு போய் மருத்துவமனையில் போட்டால் அங்க இருக்கறவங்க எங்களை திட்டுறாங்க..

சில இடங்களில் போதையில வாந்தி எடுத்திருப்பர்கள், இன்னும் மோசமா, சில இடத்துல படுத்தபடியே “மோசன்” போய் கிடக்குற கேசையெல்லாம் பார்த்துட்டு, எங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.

ராத்திரி இரண்டு மணிக்கு போன் பண்ணி எம் புருசனுக்கு  மாரடைப்புன்னு சொல்லறாங்க.....   சரியா அட்ரசும் சொல்லமாட்டாங்க... தெருவில் வந்து நிக்க சொன்ன அதையும் செய்யமாட்டாங்க, தட்டு தடுமாறி நாங்க அவங்க வீட்ட கண்டுபிடுச்சு அங்க போனா, வீடு மூணாவது மாடியில இருக்கும்.    எங்களை வந்து தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்லுவாங்க...

கிராமத்துல பரவயில்லை யாரவது துணைக்கு வருவாங்க... ஆனா  நகரத்துல யாரும் உதவிக்கு வருவதில்லை. சில இடங்களில், தண்ணிய போட்டுட்டு அடிதடி போட்டுக்கிறாங்க...  108 அம்புலன்சுல போனாத்தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னுவங்கன்னுட்டு எங்களுக்கு போன் போட்டு அய்யோ அய்யோன்னு... கத்துவாங்க கடைசியில நேருல போய் பார்த்தால் ஒரு சின்ன காயம் கூட இருக்காது. ஆனா நெஞ்சு வலிக்குது... உயிரே போகுதுன்னு கத்துவாங்க வேற வழியில்லாம நாங்க தூக்கிகிட்டு போகணும்.

முன்ன கொடுத்திருந்த வண்டிகள் டெம்போ டிராவலர் வேன்கள் கொஞ்சம் சிறிதாகவும் இருந்தது, புது வண்டியாக இருந்ததால் வேகமாகவும் போக முடியும்.    ஆனால் இப்போது முன்பு ஹெல்ப் லைன் 1056-க்கு ஓடிக்கொண்டிருந்த பழைய சுவராஜ் மஸ்தா வண்டியை பெயிண்ட் அடித்து கொடுத்து விட்டார்கள். இது பெரிதாக இருப்பதால் வண்டியை திருப்புவது சிரமம், சின்ன தெருவுக்குள், சந்துக்குள் எல்லாம் போக முடியாது.

ஆனால், பல இடங்களில் பொதுமக்கள், ஏன்டா போகமுடியாதுன்னு சொல்ரீங்கன்னு எங்களை அடிக்க வருவாங்க... பல இடங்களில் அடியும் வாங்கியிருக்கிறோம்.

 பழைய சுவராஜ் மஸ்தா வண்டிக்கு ஏழு முதல் எட்டு கிலோ மீட்டர் தூரம் தான் ஓட்ட முடியும், அனால் ஒன்பது கிலோமீட்டருக்கு மேல் ஓட்டனும், மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர வேகத்துக்கு மேலே போகக்கூடாது, 40 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டவேண்டிய டயர்களை 80, ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டவேண்டும் என்று சொல்கிரார்கள் எங்கள் உயர்  அதிகாரிகள்.

அவசரத்துக்கு ஓட்டும் ஆம்புலன்சுக்கு மைலேஜ் கேட்ட எப்படி சார் கொடுக்க முடியும். ஏதாவது எதிர்த்து கேட்டால் எங்களை மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு தூக்கியடிக்கிறாங்க... இந்த சம்பளத்துக்கு எப்படி போய் வெளியூரில வேலை  செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் 108,ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.

களப்பணிக்கு வராமல், உட்கார்ந்த இடத்திலேயே, இவர்களுக்கு மேலே வேலை செய்யும்,  பிளிட், டி.எம், ஆர்.எம் போன்ற அதிகாரிகள் சாதரணமாக அறுபது ஆயிரம் என்பது ஆயிரம் என்று சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், தொழிலாளர் சேமநிதி பணம் எங்களுடைய கணக்கில் கட்டப்படுகிறதா..? என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை, பணி நீக்கம் செய்யப்படும் உளியர்களுக்கு உத்தரவுகூட போன் மூலமே சொல்லப்படுகிறது. இழுத்து மூலமாக கொடுப்பதில்லை.

பல இடங்களில் நாங்கள் அடிவாங்கியுள்ளோம் அப்போதுகூட எங்களின் நிர்வாகம் எங்களுக்கு ஆறுதல் சொன்னது கிடையாது. போலீசில் புகார் கொடுக்க வழியில்லை.

செல் போன் மூலம் இயங்கும் நாங்கள் தேவையில்லாத போது போன் இணைப்பை போல  துண்டிக்கப்படுகிறோம். பொது மக்களின் உயிரை காக்கும் ஒரு உன்னதமான பணியை செய்கிறோம் என்ற சமூக அர்ப்பணிப்பில் பல சிக்கல்களை சமாளித்துக்கொண்டு பணியாற்றும் எங்களுக்கு மூன்று வேலையும் சாப்பிட தகுந்த அளவு ஊதியமாவது கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம் என்றார்கள்.

இவர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்குமா அரசு....?

Wednesday, 27 July 2011

என் அம்மாவின் எட்டு பொய்கள் --மஹிமா

27-07-2011 புதன் 


நான் ஏகிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள்.
அவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, “இந்தா! இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” என்பாள்.
இது அம்மா அடிக்கடி சொல்லும் முதல் பொய்...


அம்மா தன் ஓய்வு நேரங்களில் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வாள்.
ஒரு தடவை அவள் இரண்டு மீன்களைப் பிடித்து வந்து அதை சூப் செய்தாள். நான் சூப்பை அருந்தும் போது என் அருகில் அமர்ந்து கொண்டாள். நான் சாப்பிட்டுவிட்டு, தட்டில் மீதமிருந்ததை எடுத்து உண்டாள். அந்தக் காட்சி என் இதயத்தைத் தொட்டது.
மற்றொரு முறை நான் ஒரு மீனை அவளுக்குத் தந்தபோது, அவள் உடனே மறுத்து, “மகனே! நீயே சாப்பிடு! எனக்கு மீனே பிடிக்காது” என்றாள்.
இது அவளது இரண்டாம் பொய்....


பிறகு, என் படிப்பிற்காக அவள் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். வீட்டுக்குத் திரும்பி வரும்போது காலித் தீப்பெட்டிகளையும் அவற்றில் அடுக்குவதற்காகத் தீக்குச்சிகளையும் எடுத்து வருவாள். அதன் மூலம் கிடைத்த பணத்தால் குடும்பத் தேவைகளை ஓரளவுக்குச் சமாளித்தோம்.
ஒரு குளிர்கால இரவு. தூக்கத்தின் நடுவில் நான் விழித்துப் பார்த்தேன். அம்மா தீக்குச்சி அடுக்கிக் கொண்டிருந்தாள். நான், “படும்மா, காலையில் மீதி வேலையைப் பார்க்கலாம்” என்றேன்.
அவள் சிரித்துக் கொண்டே, “நீ போய்த் தூங்கு. எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை” என்றாள்.
இது அவளது மூன்றாம் பொய்.....


நான் எனது பள்ளி இறுதித் தேர்வை எழுதச் சொல்லும்போது, அம்மா என்னுடன் வருவாள். கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் எனக்காகக் காத்திருப்பாள்.
பரீட்சை முடிந்ததும் வெளியே வரும்போது, தான் கொண்டு வந்திருந்த தேநீரை எனக்குத் தருவாள்.
அம்மாவின் அன்புக்கு முன், தேநீர் எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் கொஞ்சம் குடித்துவிட்டு, அம்மாவையும் குடிக்கச் சொன்னேன்.
“நீயே குடி! எனக்குத் தேவையில்லை” என்பாள்.
இது அம்மாவின் நான்காம் பொய்......


என் அப்பா திடீரென்று இறந்தபின், அம்மாவே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றாள். எங்கள் வாழ்வு மிகவும் சிக்கலானது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தோம்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் நிலை கண்டு, என் அம்மாவிடம் மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அதற்கு அவள், “எனக்கு அப்படி ஓர் உறவு மறுபடியும் தேவையே இல்லை” என்று மறுத்துவிட்டாள்.
இது அவளுடைய ஐந்தாவது பொய்.......


படிப்பை முடித்த பிறகு, எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அப்போது அவள் சந்தையில் காய்கறிகள் விற்று வந்தாள்.
நான் அவளுக்கு அனுப்பிய பணத்தை, எனக்கே திருப்பி அனுப்ப ஆரம்பித்தாள். காரணம் கேட்டபோது, “என்னிடம் தேவையான பணம் உள்ளது” என்றாள்.
இது அவள் சொன்ன ஆறாவது பொய்........


நான் பெற்ற முதுநிலைப் பட்டம் என் சம்பளத்தைப் பெரிய அளவில் உயர்த்தியது.
அம்மாவை என்னுடன் அமெரிக்காவில் வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்தச் சுகபோக வாழ்வை விரும்பாத அம்மா என்னிடம், “இங்கு கிராமத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறேன்” என்றாள்.
இது அவளுடைய ஏழாவது பொய்.........


முடிவில் புற்றுநோயால் அவதிப்பட்ட அம்மா ஆஸ்பத்திரியில் சேர்ந்தாள். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த நான், சிகிச்சை செய்து கொண்ட அம்மாவைப் பார்க்கத் தாய் நாட்டுக்குத் திரும்பினேன்.
என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், “அழாதே மகனே! எனக்கு வலிக்கவே இல்லை” என்றாள். இதயம் சுக்கு நூறாய் நொறுங்கினாற்போல் இருந்தது எனக்கு. இது அவளது எட்டாவது பொய்..........


அம்மாவின் ஒவ்வொரு பொய்யும் அவள் என்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகள். என் அம்மா கூறிய பொய்கள். ‘தாய்மையின் உண்மையை’ எனக்கு உணர்த்தும் உபதேசங்கள் – மொத்தத்தில் ‘அம்மா’ என்பதில் இந்த அகிலமும் அடங்கும்.

நன்றி !! மஹிமா..................


அன்பார்ந்த சொந்தங்களே ....  உங்கள் படைப்புகள் எதுவாக இருந்தாலூம் konguianm@gmail.com  என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் ... வரும் நாட்களில் உங்கள் படைப்பு பெயருடன் ... பிரசுரிக்கப்படும் .....  உங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் குறைகளை வரவேற்கிறோம் .... நன்றி !!! ...........கொங்குஇனம் 

Tuesday, 26 July 2011

அண்ணன்மார் கதையை முப்பரிமாண ஒலி-ஒளி காட்சிகளாக்கும் -பிரண்டா பெக்

27-07-2011 செவ்வாய் 


செம்மொழி மாநாடு கண்ட கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வாங்கியிருக்கிறார் பிரண்டா பெக்.  அத்தோடு நின்றுவிடாமல் கொங்கு மக்களின் வரலாறுகளை -அவர்களின் பாரம்பரிய பெருமைகளை ஆவணப்படுத்தும் பணியிலும் கடந்த 7 ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்,  கனடாவில் பிறந்த வெள்ளை இன பெண்மணியான பிரண்டா... கொங்கு மக்களையும், அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காதலிப்பதாக சொல்கிறார். தமிழ் பேசவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.
""என்னுடைய 13 வயதில் முதல்முதலாக என் பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தேன். அப்போதே எனக்கு கோயம்புத்தூர் மீதும், கொங்கு மண்டல மக்களின் மீதும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. அதனால் என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக கொங்கு மண்டல மக்களின் வரலாறை எடுத்துக்கொண்டேன்.  1965-ம் ஆண்டு என்னுடைய 22 வது வயதில் இதற்காக மீண்டும் கோவைக்கு வந்து தங்கினேன். காங்கேயம் அருகில் உள்ள ஓலப்பாளையம் கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களின் கதையை நாட்டுப்புறப் பாட்டாகவே பாடிக்காட்டினார்கள். 44 மணி நேரம் அவற்றை பதிவு செய்தேன்.  அதுதான்  ‘அண்ணன்மார் கதி''’ என்று கொஞ்சு தமிழில் பேசும் பிரண்டாவிடம் அத்தனை உற்சாகம்.""தமிழும், குறிப்பாக கொங்கு தமிழும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். தமிழ் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.  என்னை பெரிதும் ஈர்த்த மொழி தமிழ். தமிழில் உச்சரித்தால் உற்சாகம் வருகிறது. தமிழ் கற்றதன் மூலம்  இந்த உலகத்தை இரண்டு விதமாக என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பட்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தபோது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்.  உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது எனத் தெரிந்ததும் மிகுந்த உற்சாகத்தோடு இங்கு வந்திருக்கிறேன்'' என்கிற பேராசிரியை பிரண்டா, இதற்கு முன்பு கோலாலம்பூரிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். 

அண்ணன்மார் கதையை முப்பரிமாண ஒலி-ஒளி காட்சிகளாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்." 26 பகுதிகள் கொண்டதாக அண்ணன்மார் கதையை காட்சிகளாக்கி வருகிறோம்.  7 வருடமாக இதற்காக ஒரு குழு வேலை செய்துவருகிறது.  இன்னும் சில மாதங்களில் முடித்துவிடுவோம்.  இந்த காட்சிகளுக்கு நடிகர் சிவக் குமார் குரல் கொடுத் திருக்கிறார். கொங்கு மண்டலத்தின் வரலாறை பதிவு செய்யும் உங்கள் முயற் சிக்கு நான் செய்யும் உதவி என்று சிவகுமார் இலவசமாகவே செய்து கொடுக்கிறார்'' என்கிறார் பேராசிரியை பிரண்டா பெக்.

45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழோடும், தமிழகத்தோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பிரண்டா, "அண்ணன்மார் கதை எனக்கு கிடைத்த அட்சய பாத்திரம்" என்கிறார்.  பிரண்டாவின் எண்ணங்களை முப்பரிமாணக் காட்சிப்படுத்தும் பணியை செய்யும் கனடா தமிழரான ரவிச்சந்திரன், "கொங்கு மக்களின் வரலாறு பிரமிப்பு தருவதாக இருக்கிறது. இதை ஆவணப்படுத்தும் பணியில் பங்கேற்பது நிறைவு தருகிறது'’என நெகிழ்கிறார். 

அண்ணன்மார் கதையை தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட பிற மொழி களிலும் பதிவு செய்யும் திட்டத்திலும் இருக்கிறது பேராசிரியை பிரண்டா பெக் குழு.பொன்னர்சங்கர் வரலாற்றை சரியாக ஆராய்ந்து உண்மையை ... முப்பரிமாண ஒலி ஒளி காட்சிகளாக கொடுத்தால் ........ நன்று .... அப்படியின்றி கொலைஞர் (கலைஞர் )  எடுத்த பொன்னர்சங்கர்... படம் போல் நமது இனத்தையும் வரலாற்றையும் கொசைப்படுத்துவதாகவோ மிகைப்படுத்தப் பட்டதாகவோ இருந்தால் கொங்குஇனம் இனி பொறுக்காது .......... 


'வீசப்படும் கணைகளைக் கேடயம்கொண்டு தடுப்பதா​லேயே... நம்மிடம் வில்லும் அம்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்துவிடப்போவதும் இல்லை. வில்லுக்கும் அம்புக்கும் வேலை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்றால்... உடன்பிறப்பே! அப்போது நாம் கோழையாக இருக்கப்போவதில்லை!’  (நான் எழுதலைங்க .. நம்ப கலைஞர் அய்யா 1974 ல் முரசொலியின்வாயிலாக எழுதிய கடிதத்தில் சுட்டது ....  யார் சொன்னா என்ன மேட்டர் நல்லா இருக்கில்ல ........... அதான் சுட்டேன் தவறென்றால் பொருத்தாழ்க........)Monday, 25 July 2011

எம்.ஜி.ஆர் தொடங்கிய 108 ஆம்புலன்ஸ் திட்டம்

25-07-2011 திங்கள்

லவச ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததே எம்.ஜி.ஆர் தான்.என்கிறார் பத்திரிக்கையாளர் அன்பு.எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த திட்டத்துக்கு கலைஞர் சொந்தம் கொண்டாடுவது நகைப்புக்குரியது..ஆமாம்..பழைய டப்பாவுக்கு புது பெயிண்ட் அடித்துவிட்டு நான்தான் நான்தான் என்று தம்பட்ட அரசியல் செய்து,சொந்தம் கொண்டாடுகிறார்கள்.30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5 ஆம் தேதியே இந்த திட்டத்தை கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர் .அதன் பிண்ணனி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்..
டாக்டர் நடராசன் ,அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவை திட்டம் தொடர்பாக வரைவு திட்டத்தை தமிழக அரசின் திட்ட குழுவிடம் ஒப்படைத்தார். .உடனே திட்டக்குழுவும் இதற்கு ஒப்புதல் அளித்தது.இதை தொடர்ந்தே இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார்,அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் முராரி.டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி,அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத்திட்டம் என்று இதற்கு பெயரும் சூட்டப்பட்டது

இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.முதல் கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ர விதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன.கூடவே உயிர்காக்கும் கருவிகளும் மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன..1980 ல் உள்துறை செயலாளராக இருந்த எச்.எம்.சிங்,திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார்.திட்டம் சிறப்பாக செயல்படுவதற்காக காவல்துறை ஆணையர் ஸ்ரீபால் ,மெட்றாஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன்,மருத்துவ கல்வி இயக்குனர் லலிதா காமெஸ்வரன் ,சென்னை மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன் டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கண்காணிப்பு குழு ஒன்றியும் எம்.ஜி.ஆர் அமைத்தார்..


ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன..குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேர மும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன..மேலும் 30 தனியார் மருத்துவமனைகளும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு ,புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழிவகை செய்யப்பட்டன..இந்த ஆம்புலன்ஸ்களில் பணி செய்வதற்கு புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்பட்டது...அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவை திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு 7 வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்த திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் எம்.ஜி.ஆர் இயற்கை எய்த,ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது..1989 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி,முதல்வேலையாக அந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்தினார்.ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிட்டார்.ஆக,எம்.ஜி.ஆர் கொண்டுவந்த இலவச ஆம்புல்ன்ஸ் திட்டத்தை திட்டம் போட்டு ஒழித்துகட்டியது தி.மு.க.


ஆனால் இப்போது அதே திட்டத்தை 108 ஆம்புலன்ஸ் என்று பெயர் மாற்றி வைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
நன்றி ...   சதீஷ் குமார் அவர்கள் ... www.astrosuper.com

திருப்பூரின் சாயம்போன கனவுகள் ........

25-07-2011 திங்கள்      வந்தோரை வாழவைக்கும் நகரம் திருப்பூர் என்றால் அது மிகையாகாது இந்தியாவில் எங்கு ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ இங்கு ஒற்றுமை என்றுமே உண்டு . எந்த மாநிலத்தவராக இருந்தாலும் எந்த நாட்டினராக இருந்தாலும் எல்லா பிள்ளைகளையும் அரவணைக்கும் தாயைப்போல அனைவருக்கும் வேலை தந்து பிழைக்கவைப்பது திருப்பூரே ...  படித்தவர் , படிக்காதவர், ஏழை ,  பணக்காரன் , மொழி , இனம் எதுவுமே முக்கியமில்லை , உழைப்புமட்டுமே தேவை .


தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் திருப்பூரில் பணிபுரிகிறார்கள் , தமிழ்நாடு மற்றுமின்றி கர்நாடகா,  கேரளா (கேரளாவும்  ,கர்நாடகாவும்  தண்ணீர்  தராவிட்டாலும் அவர்களையும் திருப்பூர் வாழவைத்தது ), ஆந்திரா , ஒடிசா ... போன்ற இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் , நைஜீரியா, ஆப்ரிக்காபோன்ற வெளிநாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வாழ்கிறார்கள்.  ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிற நகரமாக விளங்குகிறது திருப்பூர்.  குட்டி ஜப்பான் ,டாலர் சிட்டி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் இல்லாமலே போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது ...   

திருவிழா , தீபாவளி , பொங்கல் காலங்களில்  மகிழ்வோடு சொந்த ஊருக்கு செல்லும் ..   மக்கள் வாடிய முகங்களுடனும் ... கலங்கிய கண்களுடனும் ... கூட்டம் கூட்டமாய் .... லாரிகளிலும், பஸ்களிலும், வேன்களிலும் முட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் சொந்த ஊருக்கு செல்லும் மகிழ்வில்லை மாறாய் எதிர்கால வாழ்வு ... குழந்தைகளின் படிப்பு ... இவையெல்லாம் என்னாகுமோ?? என்ற ஏக்கம் !   மட்டுமே தெரிகிறது ..........  கூடவே கண்ணீரும் ...........  

சில ஆண்டுகளுக்கு முன்னால்  அப்துல் கலாம் திருப்பூர் வந்திருந்தார். அப்போது அவருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சார்பில் ஒரு படோடாபமான வாக்குறுதி தரப்பட்டது. பத்தாயிரம் கோடியாக இருக்கும் ஏற்றுமதியை இருபதாயிரம் கோடியாக உயர்த்துவோம் எனும் அறிவிப்புதான் அது.  அப்போது சாயக்கழிவுப் பிரச்சனை இல்லையா என கேட்காதீர்கள். எப்போதும்போல அப்போதும் அது பெரிய பிரச்சனையாகவே இருந்தது. கூடுதலாக அப்போது விவசாயிகள் மீதான அலட்சியம், அரசு நடவடிக்கையை தள்ளிப்போடும் சாமர்த்தியம் மற்றும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பணம் பார்த்துவிடும் ஆசை ஆகியவையும் இருந்தன. 

சாயத்தொழில்  நொய்யலாற்றுப் பாசனப்பரப்பிலும் ஒரத்துப்பாளையம் அணை வட்டாரத்தையும் மட்டும் பாதிக்கவில்லை. திருப்பூரில் பிறந்து வளர்ந்த மூத்த தலைமுறையினரைக்கேட்டால் இங்கு நடைபெற்ற விவசாயம் பற்றி சொல்வார்கள். ஏரளமான முகவரிகள் இங்கு இன்னும் தோட்டம் எனும் பெயரை தாங்கி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இப்போது அவை ஏறத்தாழ காணாமல் போய்விட்டன. இடத்தை கம்பெனிக்கு விற்றுவிட்டுப் போவது எனும் பழக்கத்தால் மட்டும் இங்கு விவசாயம் அழியவில்லை.

சாய ஆலைகளின் பெரும் தேவைப்பாட்டுக்குரிய தண்ணீர் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்டது. 2003 ம் ஆண்டுவாக்கில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் உறிஞ்சி ஆலைகளுக்கு கொண்டுவரும் நடைமுறை உச்சத்தில் இருந்தது. ஏதேனும் ஒரு கிராமத்தில் தண்ணீர் லாரி மறிக்கப்பட்ட செய்தி தினசரி வெளியாகும். காரணம் நகரத்தில் உறிஞ்ச தண்ணீர் தீர்ந்துவிட்டிருந்த சமயம் அது.  நகரின் பெரும்பாலான பகுதிகள் ,மற்றும் சுற்றுவட்டரங்களில் தண்ணீரை காசுக்கு வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். 

தண்ணீர் அசுரத்தனமாக உறிஞ்சப்பட்டதால் விவசாயம் செய்வோருக்கு ஆழ்குழாய் கிணறு தோண்டுவது அவசியமாகி பிறகு அதை ஆழப்படுத்துவது என தொழிலே செலவுமிக்கதானது. அதேவேளையில் சாயஆலைகளின் கழிவுநீர் அருகிலிருக்கும் ஓடைகளிலும் பாறைக்குழிகள் மற்றும் குளங்களிலும் கலக்கப்பட்டது. இது பெரிதாக கவனிக்கப்படாத ஒரு பிரச்சனை, ஆனால் இதுதான் திருப்பூர் வட்டாரத்தில் விவசாயத்தை லாபமில்லாத மற்றும் “முட்டாள்தனமான” தொழில் என்று கூறப்பட்டது , விவசாயம் அந்தநிலைக்கு தள்ளப்பட்டது . இது ஏன் பரவலாக அறியப்படவில்லை என்றால் விவசாயத்தை துறந்த விவசாயிகள் ஏதோ ஒரு தொழிலை தொடங்கவோ அல்லது நிலத்தை நல்ல விலைக்கு விற்கவோ முடிந்தது. நிலமில்லாதோர் செல்ல ஏதேனும் வேலை வாய்ப்பு இருந்தது.ஆகவே பனியன் தொழில் ஈரோட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முன்பே திருப்பூர் விவசாயத்தின் சுவாசத்தை நிறுத்திவிட்டது.

திருப்பூரின் வளர்ச்சியோடு தொடர்புடைய இன்னொரு விவசாய வீழ்ச்சி தலைகீழானது. இங்கே சாயத்தொழிலால் விவசாயம் வீழ்ந்ததென்றால் தஞ்சை மற்றும் மதுரை வட்டார விவசாயம் நிராதரவாக்கப்பட்டதால் இங்கு பனியன் தொழில் வளர்ச்சியடைந்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பிழைப்புக்காக திருப்பூர் வந்ததால் தொழில் விஸ்தரிப்பு மிக சுலபமாகியது. என்பது மற்றும் தொன்னூறுகளில் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிலாபகரமான தொழில். அப்போது கள்ளநோட்டு அடிப்பதற்கு அடுத்ததாக குறைவான முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் தொழில் எக்ஸ்போர்ட்தான் என சில ஆடைத்துறை அரக்கர்கள் (ஜெயண்ட்டுங்க) சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வேறெந்த தொழிலையும்விட இங்கு ஆட்களின் தேவை அதிகம். சிறு நிறுவனத்தில் தொழிலாளருக்குத் தரும் ஒரு வாரச் சம்பளம் ஆலையின் மொத்த முதலீட்டில் மூன்றிலொரு பங்கு. 

வெளிமாவட்ட விவசாயிகளின் இடப்பெயர்வு இங்கு தொழிலை வளர்க்க பேருதவி செய்ததென்றால் மறுபுறம் அந்தந்த மாவட்டங்களில் விவசாயத்தொழிலின் நசிவை பெரிய மக்கள் பிரச்சனையாகாமல் பார்த்துக்கொண்டது. ஒருவேளை திருப்பூர் எனும் வாய்ப்பு இல்லாதிருந்தால் காவிரிப் பிரச்சனையும் முல்லைப்பெரியாறு விவகாரமும் இன்னும் வீரியமான போராட்டங்களை மக்களிடம் உண்டாக்கியிருக்கும். அதற்காக இப்போதைய திருப்பூரின் வீழ்ச்சி மக்களை வீதிக்கு வரவைக்குமா என அறிவாளித்தனமாக நாம் யோசிக்கக்கூடாது. ஏனெனில் மக்களின் சிந்தனைக்கு வாசக்டமி செய்வதற்கென்றே டிவியும் டாஸ்மாக்கும் மாநிலமெங்கும் பரவியிருக்கின்றன.

கடைசியாகத்தான் இப்போது சாயஆலைகளை மூடவைத்த ஈரோட்டு விவசாயிகளின் பிரச்சனை வருகிறது. நொய்யல் பாயும் வட்டாரங்களில் வயல்வெளிகளை நாசம் செய்த சாயக்கழிவு ஒரத்துப்பாளையம் அணையின் புண்ணியத்தால் ஓரிடத்தில் தேங்கி ஒரு நிரந்தர கருப்பு பிராந்தியத்தை இங்கு உருவாக்கிவிட்டிருக்கிறது. அணைக்கு அருகில் உள்ள நிலங்கள் இப்போது எதற்கும் லாயக்கற்ற நிலங்களாகிவிட்டிருக்கின்றன. அணையைத் திற என அங்குள்ள மக்கள் போராட திறக்காதே என காவிரிப் பாசன விவசாயிகள் போராட (கரூர் வட்டார விவசாயிகள்) ஒரு வினோதமான சிக்கலாக இது உருமாறி சில ஆண்டுகளாகிறது. விவசாயிகளின் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகான நீதிமன்றத்தின் செயல்பாட்டை சுருக்கமாக இப்படி சொல்லலாம் “சாவுக்காவது வந்திருக்க வேண்டியவர்கள் பாலுக்கு வந்திருக்கிறார்கள்”.சாய ஆலைகளின் மூடல் எந்த மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?   திருப்பூருக்கு வரும் விறகு லோடுகளின் வரத்து தொன்னூறு சதவிகிதம் குறைந்துவிட்டது (சாய ஆலைகளின் எரிபொருள் விறகுதான்). சாயமிடும் வேலை இல்லையானால் பின்னல் துணி உற்பத்தி உற்பத்தி நிறுத்தப்படும். தையல் வேலை செய்யும் ஆலைகளுக்கு தைக்க துணி இருக்காது. சாதாரணமாகவே ஆடை உற்பத்தியின்முக்கியப் பகுதியாக   சாயமிடல்தான் இருந்தது. இப்போது அது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால் ஏறத்தாழ திருப்பூரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதாகவே கருதலாம்.

நீதிமன்ற நடவடிக்கையை ஒரு அற்புதமான சுற்றுச்சூழல் நடவடிக்கை எனக் கருதுவது முட்டாள்தனமானது. நீதிமன்றம் மிகவும் சாவகாசமாக பல அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருந்துவிட்டு இப்போது ஆலைகளை மூடவைத்திருக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை இவர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருக்க முடியும். எதிர் சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கும் முறை எந்த அளவு வெற்றிகரமானது மற்றும் எந்த அளவு நடைமுறைக்கு சாத்தியமானது என்பதை ஆய்வு செய்ய அரசை பணித்திருக்க முடியும். நீதிமன்றம் ஆரம்பத்திலேயே கடுமையாக நடந்துகொண்டிருக்கும் பட்சத்தில் இங்கு ஆலைகளும் பெருத்திருக்காது நிலங்களும் இவ்வளவு அதிகமாக பாழடைந்திருக்காது.

இப்போதும் கோவை, கரூர் மற்றும் ஈரோட்டில் சாய ஆலைகள் இயங்குகின்றன. ஈரோட்டு ஆலைகள் நேரடியாக சாயக்கழிவை காவிரியில் கலக்கின்றன. ஒருவேளை நமக்கு அடுத்த தலைமுறையில் காவிரி விவசாயிகளின் வழக்கு வெற்றிபெற்று ஈரோட்டு ஆலைகள் மூடப்படலாம். 

அதற்குள் பல சுடுகாடுகள் தஞ்சை வட்டாரத்திற்கு தேவைப்படும். அனேக பெருநகரக் கழிவுகள் அருகிலிருக்கும் ஆற்றில்தான் கலக்கின்றன. ஆறுகள் உருவாகுமிடங்களிலேயே பல ஆலைகள் முளைக்கின்றன. கடலூர் இப்போது அபாயகரமான ரசாயனக் கழிவுகளால் நிறைந்த நகராக சுட்டிக் காட்டப்படுகிறது. எங்கேனும் ஓரிடத்திலாவது எதிர்கால நலன் கருதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால்  நாம் திருப்பூர் சாய ஆலை பிரச்சனையை ஒரு நல்ல ஆரம்பமாகக் கொள்ளலாம். ஆனால் இப்போதைய செயல்பாடுகளை  தேவை முடிந்த கருவியை கைகழுவும் நடவடிக்கையாகவோ அல்லது  உள்நோக்கமுடைய நடவடிக்கையாகவோ கருதுவதற்குத்தான் அதிக முகாந்திரமிருக்கிறது.

திருப்பூர் விவகாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலும் அரசின் நடவடிக்கை பூஜ்ஜியமே. சாயக்கழிவுகளை கையாள நமக்கான தனிப்பட்ட தொழில் நுட்பங்களை உருவாக்கும் முயற்சி ஏறத்தாழ இல்லை. இதற்காக மற்ற நாடுகளை நாம் சார்ந்திருக்கவும் முடியாது, காரணம் அவர்களது சூழலைப்போல நமது சூழல் சாதகமானது அல்ல. ஆறுகளின் நீர் இருப்பு மிக அதிகமாக இருக்கையில் சாயக்கழிவை வெளியேற்றுவது மிக சுலபம், ஓரளவு சுத்திகரித்து ஆற்றில் விட்டால் பாதிப்பு பெரிதாக இராது. நம் நொய்யலைப்போல ஓடைகளோ அல்லது காவிரியைப்போல ஆறுமாத (அல்லது மழைக்கால) ஆறுகளோ சாயக்கழிவை தாங்குவன அல்ல. இன்றுவரை பயன்பாடில் இருக்கும் சாயமிடலுக்கான வேதிப்பொருட்கள் பல தடைசெய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது (பயன்பாட்டுத்தடை அல்ல உற்பத்தியே தடை செய்யப்பட்டது). ஆகவே நமக்கிருக்கும் ஒரேவழி மூலப்பொருட்களை ஆபத்தில்லாதவையாக உருவாக்குவதும் அதன் பயன்பாட்டின் அளவைக் குறைப்பதும்தான். எனக்குத் தெரிந்து இது ஒரு கருத்துருவாகக்கூட எங்கேயும் விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை (அனேக மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுபவை.). ஆகவே இந்தப் பிரச்சனையில் அடுத்ததாக எடுக்கப்படும் நடவடிக்கை சமரசமாகத்தான் இருக்குமேயன்றி நிச்சயம் ஒரு தீர்வாக இருக்காது.

இவ்விவகாரத்தின் பெரிய பொறுப்பாளி அரசுதான். டாலர் வரவுக்காக அரசே மறைமுகமாக ஊக்கப்படுத்தியதுதான் இந்த தொழில். இப்போது டாலருக்கு மாற்று வழிகள் கிடைத்தாயிற்று. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு நம்மைக் காட்டிலும் மலிவாக ஆடை உருவாக்க வங்காள தேசம் வந்துவிட்டதால் நம் அரசுக்கு இப்போது எஜமானர்களுக்கு ஆடை அனுப்பவேண்டிய கட்டாயமும் கிடையாது.  விவசாயத்தை வேலைக்காகாத தொழிலாக்கியது முதல் சூழலியல் விதிகளை காற்றில் பறக்க விட்டதுவரை எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்துவிட்டு இப்போது ஆடைத்தொழில் காலியாகும் நிலையில் தனக்கேதும் பொறுப்பு இல்லாதது போல விலகி நிற்கிறது அரசு.

இந்த நீர்வள மாசு முந்தாநாள் திடீரென முளைத்தது அல்ல இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்ததுதான் நொய்யல், ஆகவே அரசின் மறைமுக ஒப்புதலோடுதான் இந்த மாசுபாடு நடந்திருக்கிறது என்பது தெளிவு.. இந்த சிக்கலை சமாளிக்க என்ன வழி எனக்கேட்டால் என்னிடம் விடையில்லை. ஆனால் இது திருப்பூர்காரர்களால் மட்டும் தீர்க்க முடிகிற பிரச்சனை அல்ல என்பது மட்டும் புரிகிறது…


 திருப்பூர் பனியன்கள் சாயம் போனதில்லை .... ஆனால் திருப்பூரின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கின்றது...

திருப்பூரை காப்பற்றப்போவது 
மக்களின் கண்ணீரா?... 
கோடிகோடியாய் சம்பாதித்த 
சாயப்பட்டறை அதிபர்களா ?.... 
நாங்கள் ஜெயித்தால் ..........!!!!!!! 
என்று பொய் வாக்குறுதி கொடுத்த
அரசியல்வாதிகளா ?....... 
அதிகாரிகளா?......  
இல்லை கடவுளா ?.............
யார்????? ....   கூறுங்கள் ?   

Sunday, 24 July 2011

பிரபாகரனின் பெயர் மாற்றப்பட்டது .... அதிரடி தகவல் ..........


பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு பிரபாகரன் என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பெயர் சில காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை படத்தின் தலைப்பாக வைக்க வேண்டாம் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியதால் இந்த பெயர் மாற்றம் எனத் தெரிகிறது. 


பிரபாகரன் எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படம் இனி வெடி என மாற்றப்பட்டுள்ளது. இப்படம் வெடி என்று பெயரிடப்பட்டதாலோ என்னவோ, தீபாவளி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இப்படத்தில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன் என்பதால் அதையயே தலைப்பாக வைத்திருந்தனர். இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மோகன் நடராஜன் தயாரிப்பில், பூபதி பாண்டியன் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் படத்திற்கு வெடி என்று பெயரிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விக்ரம் தனது வலைத்தளத்தில் முன்பே தகவல் வெளியிட்டிருந்தார். இது என்ன ஆகுமோ தெரியவில்லை.

இலங்கை தமிழர்களின் அவல நிலை

24.07.2011  ஞாயிறு

இலங்கையில் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து தீவிரமடைந்துள்ள போரினால் பலவிதமான கேள்விகளும், யோசனைகளும் முன்வைக்கப் படுகின்றன.

தேசியம் மற்றும் தேச பக்தி என்பது தேவையானதா, எல்.டி.டி ஒரு தீவிரவாத இயக்கமா அல்லது விடுதலைக்குப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுவா போன்ற சர்ச்சைகள்  நடை பெறுகின்றன. மேலும் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த போருக்கு எதிரான தமிழர்களின் கொந்தளிப்பின் காரணம்  "மூலப் படிம உணர்வா" (உயிரோசையில் தமிழவன் எழுதிய "தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு" நினைவிருக்கலாம்) என்ற விவாதம் நாகர்ஜுனன் அவர்களின் வலைத்தளத்தில் ஓர் உயர் தளத்தில் (higher dimension)  நடக்கிறது. இதைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு உகந்த நேரம் இது தான். கட்டாயமாக ஓர் அறுபடாத நூலிழை போல் தமிழ் உணர்வு என்ற சக்தி உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே இழையோடுகிறது. ஆனால் இந்த சக்தியை ஒருங்கிணைத்து ஒரு குறிக்கோளை நோக்கி நகர்த்திச் செல்ல தன்னலமற்ற, வியாபார நோக்கமில்லாத தலைமை தேவைப்படுகிறது. அப்படி ஒரு தலைவர் இன்று இல்லை. எதிர் காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது. காலம் பதில் சொல்லும். இந்தியாவின் ஆங்கில இதழ்கள் மற்றும் விடுதலிப் புலிகளை கடுமையாக எதிர்க்கும் என்.ராம், சோ, ஜெயலலிதா, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை அரசியல் பிரச்சனையாக மட்டுமே கருதுகிறார்கள். இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை. எனவே அதனை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம். அதற்கு நேர்மாறாக முழுமையாக சமூகப் பிரச்சனையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் அணுகுகிறார்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஆனால் எல்லோரும் ஓத்துப் போகும் ஒரே அம்சம் இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் எல்லா உரிமைகளுடனும் நலமாக வாழ வேண்டும் என்பதுதான். இதற்கு இரண்டே தீர்வுதான் உள்ளது. ஒன்று தமிழ் ஈழம். இன்றைக்கு இது சாத்தியமா?

பல இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி இலங்கை தமிழர்களுக்காகவும், தனி ஈழம் கேட்டும் போராடிய நிலையில், விடுதலிப் புலிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளனர். நீண்டகால போர், தவறான அணுகுமுறை, எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்த நடவடிக்கைகள், தீவிரவாத குழு என்ற முத்திரை, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற சுமை, கிழக்குப் பகுதியில் புலிகளின் மத்தியில் ஏற்பட்ட பிளவு  போன்ற காரணங்களினால் இன்று வலுவிழந்து நிற்கின்றனர் விடுதலைப் புலிகள். அதே நேரத்தில் இராணுவம் பெரிய அளவில் வெற்றி அடைந்து வரும் இன்றைய நிலையில் இலங்கை அரசு இறங்கிவந்து தமிழ் ஈழம் வழங்குவது ஒரு கனவாகத்தான் இருக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தேவைப்படும் ராஜ தந்திரம் இல்லாமல் ஆயுத போராட்டத்தை மட்டும் வைத்து தனி நாடு அடைந்து விடலாம் என்ற புலிகளின் எண்ணம் மிகவும் தவறானது. 2000ம் ஆண்டு நடந்த போரில்  புலிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றும், இலங்கை ராணுவமும், அரசும் பின்னடைவில் இருந்த நேரத்தில் நார்வே மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் குறைந்த பட்சம் இலங்கையில் ஒன்றிணைந்த (fedaral) தனி தமிழ் மாநிலம் பெற்றிருக்க வாய்ப்பிருந்தது. அதையும் தவற விட்டார்கள். உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் துணை இல்லாமல் தனி நாடு அடைவது என்பது கனவாகவே முடிந்து விடும் என்று புலிகளின் தலைமை உணர வேண்டும். அதற்கான தீவிர அரசியல் முயற்சியில் ஈடுபடுவதுதான் புலிகளுக்கு இன்றுள்ள ஒரே வழி.  முதற் கட்டமாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற அடையாளத்தை உடைத்து, இந்திய அரசு அங்கீகரிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். புலிகளின் இன்றைய செயல் பாடுகளில் பெரிய அளவிற்கு மாற்றம் இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது. இதற்கு தமிழ் நாட்டில் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பாலமாக இருந்து உதவலாம். ஆனால் அதற்கு முன்பாக புலிகள் தங்கள் இயக்கத்தின் மேல் மற்றவர்களுக்கு உள்ள நம்பகத்தன்மையை மேம்படுத்தவேண்டும்.


தமிழர்களின் விவகாரத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டை எழுதுவதற்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது. பண்டாரநாயக இலங்கையின் சுதந்திரத்திற்கு பிறகு சிங்கள இன வெறி என்ற விஷ விதையை விதைத்ததின் பலன், இன்று ஆயிரக்  கணக்கில் அப்பாவித் தமிழர்கள் மற்றும் சிங்கள ராணுவத்தினரின் உயிர்கள் அறுவடையாகின்றன. அதற்கு பிறகு இலங்கையில் இருந்த ஆட்சியாளர்கள் மறைமுகத் திட்டத்தை M.S.S. பாண்டியன் என்ற சமூகவியல் அறிஞர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இன்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் போல் முரட்டுப் பிடிவாதம் கொண்டிருக்கிறார்.தமிழர் பிரச்சனை போரினால் தீர்க்கப் பட முடியாத ஒன்று என்று இன்னும் அவருக்கு உறைக்கவில்லை. இவருடைய குறிக்கோள் போரில் வெற்றி பெற்று(?) அரசியல் தீர்வு என்ற பெயரில் கிழக்குப் பகுதியில் வெள்ளையன் தலைமையில் ஏற்படுத்தியது போல இலங்கையின் வடக்கில் பெயரளவில் ஒரு பொம்மை அரசாங்கத்தை உண்டாக்குவதுதான். புலிகளை வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் ஆதரவற்ற தமிழர்கள் மேல் அடக்குமுறையை ஏவி விட ராஜபக்சே நினைத்தால், அது வரலாற்றில இலங்கை அரசு இழைத்த மிகப் பெரிய தவறாகிவிடும். தமிழர்கள் எதிர் பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் அமையாவிட்டால், இனப் பிரச்சனை மீண்டும் தலை தூக்க நீண்ட நாள் ஆகாது. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக 30% பணவீக்கத்துடன் திணறிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் இந்த போர் தொடர்ந்தால் ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள இலங்கை மக்களின் வாழ்க்கை சீரழிந்து விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். புலிகள் ஆயுதத்தை கைவிட வேண்டும் என்று கோரும் ராஜபக்சே அதே சமயத்தில் ஒரு பரந்த, தமிழர்கள் ஏற்கத்தக்க, தமிழர்களுக்கு சம அந்தஸ்து அளிக்கக் கூடிய ஜனநாயகத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.  இந்த போரினால் மீறப் பட்டுள்ள மனித உரிமைகள் மனித சமுதாயத்தையே தலை குனிய வைக்கும் அளவிற்கு உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழக மனித உரிமை சங்கம் (UTHR-J) அக்டோபர் 28ம்  தேதி வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல் போர் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நிலை உள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் தங்கள் தாய் மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை. இதைப் பார்த்து கண்ணீர் வடிக்க தமிழ் உணர்வு தேவையில்லை. மனிதாபிமானமே போதுமானது. இந்த நேரத்தில் இந்திய அரசின் கடமை மிகவும் முக்கியமானது. இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன? 

என்னதான் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா கருதினாலும், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடவேண்டும். விடுதலைப் புலிகளின் பின்வாங்குதலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி அவதியுறும் இலங்கைத் தமிழர்களின் நல் வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் தனக்குள்ள நல்லுறவைப் பயன்படுத்தி உலக நாடுகளின் மூலமாக இந்த இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கு  கடுமையான நெருக்கடி கொடுக்க இதுதான் சரியான தருணம்.மேலும் இந்திய அரசாங்கம் எப்போதுமே இருதரப்பு பேச்சு வார்த்தையைத் தான் வெளிநாட்டுக் கொள்கையில் கடைபிடிக்கிறது. ஆனால் புலிகளுடன் நேரடி தொடர்பு வேண்டாம் என்ற பட்சத்தில், பல தரப்பு பேச்சு வார்த்தை (multilateral talks) நடத்த முன் வரலாம். சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் கொண்ட ஒரு குழு அமைத்து சிங்கள மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயலலாம். அதில் "தமிழ் ஈழமா அல்லது ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றிணைந்த தமிழ் மாநிலமா?" என்ற தீர்வுக்கு வரலாம். அதை விட்டு இந்தியா இலங்கைக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை போருக்குத் தீர்வாகாது. இந்தியா ஆயுதம் தரவில்லை என்றால் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வாங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் உளவாளிகள் அதிக அளவில் இலங்கையில் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இறுதியாக, போரினால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதை இலங்கை அரசும், புலிகளும் உடனடியாகக் கை விட வேண்டும். மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். மூன்று லட்சம் தமிழ் மக்கள் குறைந்த பட்சத் தேவையான உணவு, உடை,இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாமல் அவதிப் படுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது நாம் 21ம்  நூற்றாண்டில் இருக்கிறோமா அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோமா என்று தெரியவில்லை. உலக நாடுகள் மற்றும் குறிப்பாக இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் தலையிட்டு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் இன்று இருந்தால் இந்த அல்லல்படும் தமிழ் மக்களைப் பார்த்து என்ன பாடியிருப்பாரோ?


இலங்கைக்கான நிதியுதவி ரத்து: அமெரிக்கா முடிவு....

இலங்கையில் 2009ல் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால், அந்நாட்டிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது. இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரில், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகவும், போர்க் குற்றங்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் "சேனல் 4' செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகள், இக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவளித்தன. இந்நிலையில், 2010ம் நிதியாண்டில் இலங்கைக்கு 13 மில்லியன் நிதியுதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டது. அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகம் வந்த போது, முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரம் குறித்த, தனது கவலையைத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அமெரிக்கா உதவும் என, ஹிலாரி உறுதியளித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி, மனித உரிமை மீறல் விவகாரத்தின் அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான ஓட்டெடுப்பு நடந்த போது, "சேனல் 4' வெளியிட்ட வீடியோ காட்சிகள் எம்.பி.,களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.
இந்தத் தடையை வரவேற்றுள்ள பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, 2009 போர் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு தான் பொறுப்பு என, திட்டவட்டமாகத் தெரிவித்தது. இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்; பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்; காணாமல் போன பத்திரிகையாளர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும். இவற்றில் இலங்கை அரசின் நேர்மையான செயல்பாடுகளை ஒபாமா அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அமெரிக்கா தனது நிதியுதவியை மீண்டும் வழங்கும். போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்பட மாட்டாது, என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது ...

நன்றி!! ... மீண்டும் நாளைய பதிவில் சந்திப்போம் 

Saturday, 23 July 2011

பிரதோஷத்தின் பலனும் மகிமையும்


23.07.2011 சனிக்கிழமை 

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.   
"நற்றவா உனை நான் மறக்கினும்   சொல்லும் நா நமசிவாயவே."     
 பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து  சகல நலனும் பெறுவோமாக 
     பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.
எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.
எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.
120 பிரதோஷ சிவன் கோவிலுக்குச் சென்று மாலை 4.30 - 6.00 மணிக்குள் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து ஓம் நமசிவாய என்று 108 முறை எழுத்தாலோ அல்லது மனதாலோ பிரார்த்தனை செய்து சகல செல்வங்களும் பெற்று மறு பிறவி இல்லாமல் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை பெருங்கள்
                                                       
"திருச்சிற்றம்பலம்"
                     பிரதோஷ  தினம்  நாள்காட்டி 

               01.01.11 சனி மஹா                     28.06.11 செவ்வாய்
               17.01.11 திங்கள்                            12.07.11 செவ்வாய்
               31.01.11 திங்கள்                            28.07.11 வியாழன்  
               16.02.11 புதன்                                11.08.11 வியாழன்
               02.03.11 புதன்                                26.08.11 வெள்ளி
               17.03.11 வியாழன்                        09.09.11 வெள்ளி
               31.03.11 வியாழன்                        25.09.11 ஞாயிறு
               15.04.11வெள்ளி                            09.10.11 ஞாயிறு
               30.04.11 சனி மஹா                      24.10.11 திங்கள்
               15.05.11  ஞாயிறு                          08.11.11 செவ்வாய்
               30.05.11 திங்கள்                             23.11.11 புதன்
               13.06.11 திங்கள்                             07.12.11 புதன்                             
                                                                       22.12.11 வியாழன்


  சிவனை நினை- சிவனை துதி- சிவயொகம்பெறு 

முருகாசரணம் திருச்சிற்றம்பலம்

உங்கள் மேலான கருத்துக்களையும் செய்திகளையும் தெரிவியுங்கள் ... செய்திகளை konguinam@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் நீங்கள் அனுப்பிய செய்திகள் தளத்தில் பிரசுரிக்கப்படும் ... 
நன்றி...  நாளைய பதிவில் இலங்கையை பற்றி பேசுவோம் .....

Friday, 22 July 2011

அழகிரி உத்தரவின் படியே தா.கிருஷ்ணன் கொல்லப் பட்டார்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011அழகிரி உத்தரவின் படியே தா.கிருஷ்ணன் கொல்லப் பட்டார் என்று நாம் சொல்லவில்லை. அழகிரியின் கண்ணுக்கு கண்ணாக, இருந்த எஸ்ஸார் கோபி தான் இப்படிச் சொல்கிறார்.

ARV_ALAGIRI_4489e
நேற்று முன்தினம், நில அபகரிப்பு மோசடிக் புகாரில் சிக்கியுள்ள பொட்டு சுரேஷ் மற்றும் எஸ்ஸார் கோபியின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த சோதனையின் போது, பொட்டு சுரேஷ் வீட்டில் இருந்து எஸ்ஸார் கோபி அழகிரிக்கு எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி, உளவுத்துறையால் பத்திரிக்கைகளுக்கு லீக் செய்யப் பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே வாசர்களுக்கு அளிப்பதில் கொங்குஇனம்   பெருமை கொள்கிறது

Letter_02

Letter_01

Letter_03


Letter_04

  நான் உயிராக நினைத்து இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கு, உங்களின் உண்மை விசுவாசி தம்பி எஸ்ஸார் கோபி எழுதிக் கொள்ளும் உள்ளத்தின் வெளிப்பாடு.

முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். எதற்காக என்றால் நான் தீவிர அரசியலுக்கு வரக் காரணம் பணம் சம்பாதிப்பதற்காகவோ பதவி வாங்குவதற்காகவோ அல்ல. என் குடும்பமே லீலாவதி கொலை வழக்கில் சம்பந்தப் படாமலே சிக்கியதால் மருதுவையும் மாமா முத்துராமலிங்கம் அவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

அதனால்தான் ஒரு வெறியுடன் தங்கள் கட்டளைகளை செய்ய முடிந்தது. உதாரணம் அருப்புக் கோட்டைத் தொகுதி இடைத் தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெறச் செய்தோம். அந்த வழக்குக்காக ஏழு வருடம் அலைந்து வெற்றி பெற்றேன். அடுத்து மிசா பாண்டியன் கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் தங்களின் விசுவாசி என்ற ஒரே காரணத்துக்காக 50 ரூபாய் வழிப்பறி செய்ததாக வழக்கு போட்டார்கள். அதுவும் நம்முடைய ஆட்சியில். அந்த வழக்குக்காக இரண்டு வருடம் அலைந்து அந்த வழக்கை முடித்தேன். அடுத்து தங்களை கட்சியை விட்டு நீக்கிய நேரத்தில், என்னுடைய ஏரியாவில் தான் முதன் முதலாக பஸ் எரித்தோம். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. அதே போல் வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ விஷயங்களைச் சொன்னீர்கள். சீனிவேல் MLA அலுவலகத்தை எரித்தது. அக்னி ராஜ் வீட்டில் காரை எரித்தது. PTR அலுவலகத்தில் கண்ணாடி உடைத்தது. இவை எல்லாமே நீங்கள் சொல்லி நான் செய்தது. கடைசியாக தா.கி கொலை. இந்த வழக்கில் நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு போலீஸ் காரனும் கேட்ட கேள்வி இருக்கிறதே.. சொல்லவே நா கூசுகிறது. அவ்வளவு கேவலமாக பேசினார்கள். உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். உன் மனைவியிடம் எப்படி படுப்பாய் செய்து காமி என்று S.I. ஜெயக்குமார் என்பவன் கேட்டான். இதை விட கேவலமாக ஒரு மனிதனை அசிங்கமாக கேட்பதற்கு வார்த்தைகள்  இருக்கிறதா ? இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதைப்பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று இப்போது நினைக்கிறேன். நண்பர் சுரேஷ் அவர்கள் என்னிடம் பேசும்போது என் உடன் உள்ள ஒவ்வொருவருக்கும் பதவி கொடுத்தாகி விட்டது. உங்கள் தம்பி சேர்மேன், கார்த்திக் ஒன்றிய செயலாளர், சேட் நகர் செயலாளர், சீனி வட்டச் செயலாளர் அப்புறம் எனக்கு தலைமை செயற்குழு உங்கள் கோட்டா முடிந்தது என்று சொன்னார். என் தம்பியை சேர்மேன் ஆக்கும் எண்ணம் சத்தியமாக எனக்கு கிடையாது. கார்த்திக்கைத் தான் நான் சேர்மேன் ஆக்குவேன் என்று சொன்னேன். ஆனால் என் குடும்பமே அதை எதிர்த்து என் தம்பிக்கு வாங்கிக் கொடுக்க என்னை நிர்பந்தித்தார்கள். அதனால் தான் நான் என் அம்மாவிடம் இன்று வரை பேசாமல் இருக்கிறேன். அந்த சேர்மன் பதவியை கைப்பற்ற 30 லட்ச ரூபாய் வரை செலவு செய்துதான் சேர்மன் ஆக்கினேன். கார்த்திக், சீனி, சேட் போன்றவர்களுக்கு பதவி கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் ஒன்றும் சும்மா வாங்கவில்லை. அவர்களும் வழக்கில் சிக்கி சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்கொள்ளப் பட்டார்கள். நமக்காக கஷ்டப்பட்டவர்களுக்கு…..

எதற்கு எடுத்தாலும் நண்பர் சுரேஷ் சொல்வது உங்கள் குடும்பத்திற்கு ஒரு பதவி கொடுத்து விட்டாகி விட்டது என்று. திரும்ப திரும்ப நான் பதவி கேட்கும் போதெல்லாம் இதையே சொல்வார். அப்படி பார்த்தால் தளபதி தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு MLA சீட், அதில் தோற்ற பின்பு நகர் மாவட்டச் செயலாளர் பதவி, கவுஸ் பாட்ஷாவிற்கு துணை மேயராக இருக்கும் போதே அதை ராஜினாமா செய்து விட்டு MLA பதவி. இவர்கள் எல்லாம் அப்படி உங்களுக்காக என்ன தியாகம் செய்தார்கள். நான் செய்த தியாகத்தில் 1% ஆக விசுவாசத்துடன் நடந்து இருப்பார்களா ? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன், ஆவின் சேர்மேன் கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா ? ஏன் கொடுக்கவில்லை என்ற காரணமும் எனக்கு தாங்கள் சொல்லவில்லை. எல்லாரையும் போல எனக்கும் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்காதா   அப்படி நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டேன் அண்ணன் அவர்களே..

துரோகம் என்பது எங்கள் வம்சத்திற்கே தெரியாது. மனதில் பட்டதை பேசுவேன். ஒருவரைப் பற்றி போட்டுக் கொடுப்பதோ, பொய் சொல்லவோ எனக்குத் தெரியாது. பத்து ஆண்டு காலம் உங்களின் விரல் அசைவிற்காக காத்திருந்து ஒவ்வொரு வேலையையும் மன நிறைவோடு செய்திருக்கிறேன். மத்திய தொகுதி இடைத் தேர்தலில் ராஜன் செல்லப்பாவையும், முன்னாள் அமைச்சர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தேன். அதிமுக கரை வேட்டியே தெரியாத அளவுக்கு அந்த தேர்தல் நடத்தி வெற்றி பெற்றோம். நீங்கள் பதவி கொடுத்த யாராவது இப்படி செய்தார்களா ? நாளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னை சும்மா விடுவார்களா ? இதை ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை. யாரோ ஒருவரை திருமங்கலத்தில் வேட்பாளராக நிறுத்தப் போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள். எனக்கு என்ன தகுதி இல்லை ? இன்று (16.12.2008) உங்கள் வீட்டிற்கு வந்தேன். வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பினீர்கள். அதற்கு நீங்களே கூப்பிட்டு, இப்ப வேண்டாம் எஸ்ஸார் பின்னாடி பார்ப்போம் என்று சொன்னால் நான் என்ன கேட்காமலா போய் விடுவேன். இவ்வளவு கஷ்டப்பட்ட போதும் எங்காவது உங்களைப் பற்றி விமர்சனம் பண்ணியதுன்டா, ஒரு வார்த்தை கூட உங்களை குறைத்துப் பேசியிதில்லை. நான் பதவி கேட்கும் போதெல்லாம் என்னை தட்டி கழித்தால் நான் என்ன செய்வேன். யாரிடம் தான் போவேன். எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. நீங்களே பதவி கொடுக்கவில்லை என்றால் எனக்கு யார் பதவி கொடுப்பார்கள். இன்று உங்களால் பதவிக்கு வந்த எல்லோரும் உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் தான். என்னை மட்டும் ஏன் ஒதுக்கி வைத்துள்ளீர்கள். இப்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் எல்லோருமே பணம் பதவிக்காக அரசியல் பண்ணுகிறார்கள். நான் வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்து நானும் வழக்கில் சிக்கி பல இன்னல்களை சந்தித்து விட்டேன். இப்போது எல்லா பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் தான்.     அதற்கு என்னுடைய நன்றி.
இனிமேல் ஆவது நிம்மதியாக என் மனைவி குழந்தைகளுக்கு ஆக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மனதில் பட்டதை எழுதி விட்டேன். நான் எழுதியதில் ஏதாவது அண்ணன் மனம் புண்படும்படி எழுதியிருந்தால் என்னை மன்னித்து விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் தங்கள் நலம் விரும்பும்
எஸ்ஸார் கோபி
17.12.2008

தொடர்ந்து ஆதரவுக்கரம் அளித்துவரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள் ... பலகாரணங்களால் தொடர்ந்து எழுத முடிவதில்லை இன்றுமுதல் தினமும் எழுத முயற்சிக்கிறேன் ... நன்றி!! ... மீண்டும் நாளைய பதிவில் சந்திப்போம் 

Thursday, 21 July 2011

கடலுக்குள்ளே ஒரு கோவில்

கடலுக்குள்ளே ஒரு கோவில்.  மதியம் சுமார் ஒரு மணி அளவில் கடல் வற்ற ஆரம்பிக்கும். கொஞ்ச நேரத்தில் முழுவதுமாக கோவில் தெரிகிறது. நடந்தே மக்கள் கடல் கரையிலிருந்து செல்கிறார்கள். சாமி தரிசனம் , பூஜை, பஜன் எல்லாம் நடக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த கோவிலாம். பொழுது சாய , கடல் மீண்டும் உள்ள வர, கோவில் முழுவதும் மூழ்கி விடுகிறது.  கோலியக்  கோவில் -குஜராத் மாநிலம், பாவ் நகரில் இருந்து வெகு அருகில் உள்ளது.
நேற்று சன் TV யில் , திரும்பவும் ஒளி பரப்பு செய்தார்கள். கீழேவுள்ள சொடுக்கியை க்ளிக் செய்யவும். முழுவதுமாக ரசிக்கலாம். தமிழ் வர்ணனையில்!


ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியவர்களுக்கு தூக்கு தண்டனை !!


கொங்கு மண்டலத்தில் கொடி கட்டி பறந்த இன்ஸ்பெக்டர் பல கோடி மதிப்பு சொத்து சேர்த்த அம்பலம்


தமிழக போலீசாரின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டு, சர்ச்சைக்கு உள்ளாகி, சஸ்பெண்டில் உள்ள இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பில் கொங்கு மண்டலத்தில் சொத்து இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பாய்ச்சல் கிராமத்தில் பிறந்தவர் லட்சுமணன். 1997ல் போலீஸ் துறையில் எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். பயிற்சிக்கு பின், முதன் முறையாக கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக ஆறு மாத காலம் பணியாற்றினார்.

கடந்த 1998 டிசம்பரில் சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போது, ஓமலூரைச் சேர்ந்த சங்கர் என்பவரை திருட்டு வழக்கில் கைது செய்த இவர், அவரை வாயில் துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின், 1999 செப்டம்பர் முதல், 2000 செப்டம்பர் வரை இவர் சஸ்பெண்டில் இருந்தார்.

ஒரு ஆண்டுக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, அப்போதைய வேளாண் அமைச்சரின் ஆதரவு, கருணையால் மீண்டும் இவருக்கு போலீஸ் துறையில் பணி வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டராக பதவி உயர்வையடுத்து, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். 2006 மே மாதம் தேர்தலுக்கு பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, ஜூன் மாதம் சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.
பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இவர் பணியில் இருந்தபோது, இவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து, ஏ.டி.ஜி.பி., விஜயகுமார், சேலத்தில் நேரடியாக முகாமிட்டு, விசாரணை மேற் கொண்டார். இந்த விசாரணையில், லட்சுமணன் மீதான புகார்கள் நிரூபணமானது. லட்சுமணன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, போலீஸ் வட்டாரங்களில் நிலவியது. ஆனால், மீண்டும் அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கருணையால், இவர் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.

அமைச்சரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு மாற்றப்பட்டதால், அவரின் அடாவடிகளும், அதிரடி வசூல்களும் அதிகரித்தன. அத்துடன் வீரபாண்டி ஆறுமுகத்தை, "அப்பா' என்றே அழைக்கத் துவங்கினார். கடந்த 2008ல் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிக்கு வந்த இவர், 2011 பிப்ரவரி வரை இங்கு பணியாற்றினர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இவர் தர்மபுரி மாவட்டத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியில் சேர்ந்த இவர், தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு, சேலத்தில் முகாமிட்டு வீரபாண்டி ஆறுமுகத்துக்கு தேர்தல் பணிகளை செய்து வந்தார்.

இது குறித்து, சேலம் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் சந்திரகுமார், தேர்தல் கமிஷனுக்கு தொடர்ந்து சென்ற புகார்களை அடுத்து லட்சுமணன், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார் .அங்கு, இரண்டு நாள் மட்டுமே பணியாற்றிய லட்சுமணன், மருத்துவ விடுப்பை பெற்றுக் கொண்டு, சேலத்தில் முகாமிட்டார். இது குறித்து, தென்மண்டல ஐ.ஜி., விளக்கம் கேட்டார். போதிய விளக்கம் தெரிவிக்காததால், இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


ஜாதி சாயத்தை பூசிக் கொண்டு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மீண்டும் தன்னை காத்துக் கொள்ளும் வகையில், தமிழக வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட கவுண்டர் இன அமைச்சர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றார். ஆனால், இவரை முழுமையாகத் தெரிந்து கொண்ட அமைச்சர்கள், இவருக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இவர் மீது அதிகப்படியான புகார்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, 2006 முதல், 2011 வரையிலான தி.மு.க., ஆட்சியில் இவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, கடந்த ஆட்சியில் புகார் அளித்தவர்கள் மீண்டும் புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர்.

சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரம், பிரிமியர் ரோலர் மில் வழக்குகளில் இவர், 12வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட்டில் இவர் மீது மட்டுமின்றி, தமிழக போலீஸ் துறை மீதும் வழக்கு பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

இவர் தன் மீது மட்டுமின்றி, தன் உறவினர்கள் பெயர்களிலும், 14 ஆண்டு போலீஸ் துறை பணி மூலம், பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பதாக புகார்கள் சென்றுள்ளன.
கொங்கு மண்டலத்தில் கொடி கட்டி பறந்து, கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்துள்ள இவர் மீது, காவல் துறையும், அரசும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி தான், போலீசார் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.


ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியவர்களுக்கு தூக்கு தண்டனை 


சீனாவில் லஞ்ச ஊழலில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 19-07-2011 அன்று அதிகாரிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஹாங்ஷு நகர துணை மேயராக இருந்தவர் ஸமியாங். பதவியில் இருந்தபோது அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறான முறையில் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலை அதிபர்களுக்கு வழங்கினார். அதற்காக, அவர்களிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், ரூ.250 கோடி கையாடல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதே போன்று சுசோ நகரில் துணைமேயராக இருந்தவர் ஜியாங் ரெஞ்சி. இவரும் இதேபோன்று ரூ.60 கோடி லஞ்சம் பெற்ற தாக புகார் கூறப்பட்டது. இவர்கள் மீது சுப்ரீம் மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் 19-07-2011 அன்று  தூக்கிலிடப்பட்டனர். கடந்த ஆண்டு லஞ்சம் வாங்கியதாக போலீஸ் தலைமை அதிகாரி வென் குயாங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதுபோன்ற தண்டனைகள் இந்தியாவிற்கு வந்தால் நம்ம அரசியல்வாதிகள் முக்கால்வாசிபேர் இறந்து போயிருப்பார்கள் ... மீதிபேர் திருந்திவிடுவார்கள் அல்லது அரசியலையே விட்டு விலகியிருப்பார்கள் ...