Tamil News | Pudhiyaboomi News

Saturday 30 April 2011

திருவண்ணாமலை


திருவண்ணாமலை







சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.




திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[1] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.
இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி அவர்கள், தன் இன்னுயிர் நீங்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

கயிலை மலை


படிமம்:Kailash south side.jpg

திருக்கயிலை நாதர்



கைலை மலை இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்துஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மானசரோவர்ஏரியும் ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.

யாத்திரை செல்லும் வழிகள்

உத்தராஞ்சல் மாநிலம் வழியாக செல்லும் யாத்திரையின் வரை படம்
Route map of Kailash-Manasarovar yatra via Uttaranchal

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாம், சகல புவன ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார காரண, தேவ தேவனை, மஹா தேவனை, தோடுடைய செவியனை, விடையேறும் விமலனை, தூ‘வெண்மதி சூடும் முதல்வனை, பால் வெண்ணிறாடும் பரமனை, அன்பர் உள்ளம் கவர் கள்வனை, கபாலியாம் சிவபெருமானையும், நாயகி, நான்முகி, நாராயணி, கைநளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாயகி, மாலினி, சூலினி, மாதங்கி, கற்பகமாம் அம்பிகையையும் அவர்கள் அருளாலும், பல ஜன்மங்களின் தவத்தின் பயனாலும், அவர் உறையும் திருக்கயிலாயம் சென்று தரிசிக்க இந்திய பிரஜைகளுக்கு இரண்டு வழிகள் உள்ளன அவை எவை என்று இந்த பதிவில் காணலாம்.


திருக்கயிலாய மலையானது திபெத்தில் எல்லை கடந்த இமயத்தில் இருப்பதால் நாம் இந்தியாவிலிருந்து செல்ல வேண்டுமென்றால் இமயமலையில் உள்ள ஏதாவது ஒரு கணவாயை (pass) கடந்து தான் செல்ல முடியும். ஜம்மு காஷ்மீர் தொடங்கி சிக்கிம் வரை உள்ள கணவாய்களுள் ஏதாவது ஒரு கணவாயை கடந்து நாம் கைலாயம் செல்ல முடியும் .






ஆதியில் ஹரித்வாரிலிருந்து, பத்ரிநாத், கேதார்நாத் , வழியாக நீதி கணவாய் ( 19000 அடி) கடந்து தீர்த்தபுரி வழியாக கைலாயம்-மானசரோவரை தரிசித்து லிபு கணவாய் வழியாக ஓம் பர்வதத்தை தரிசித்து அல்மோரா வழியாக திரும்பினர் இது மஹா பரிக்ரமா என்றும் அறியப்பட்டது.






மானசரோவர் உள்ளதால் மானஸ்கண்ட் என்று அழைக்கப்படும் உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள லம்பியா தூரா, நுவே தூரா, லோவே தூரா, உண்டா தூரா, ஜெயண்டி, குங்ரி பங்ரி என்னும் கணவாய்களில் ஏதாவது ஒன்றை கடந்தும் செல்லலாம். ஆனால் இப்போது திபெத்தை ஆளும் சீன அரசு இந்திய குடி மக்களுக்கு லிபு கணவாய் (Lipu Pass) வழியாக செல்வதற்கு மட்டுமே விசா வழங்குகிறது. இவ்வாறு லிபு கணவாய் கயிலாய பூமியின் நுழை வாயிலாக விளங்குகிறது.




முந்தைய காலத்தில் இமய மலை பிரதேசத்தின் வணிக இன மக்களான பூட்டியா இன மக்கள் இந்த பாதையையே வர்த்தகத்திற்காக பயன் படுத்தினர். குளிர் காலத்தில் இந்த கணவாய் பனியால் மூடப்பட்டு விடுகின்றது. இளவேனிற் காலத்தில் பனிகட்டி உருகி வழி ஏற்படுகின்றது எனவே ஆனி, ஆடி, ஆவணி மாதங்கள் தான்( June to September) இந்த யாத்திரைக்கு ஏற்ற மாதங்கள். இந்த வருடம் (2006 ஜூலை மாதம்) சிக்கிமில் உள்ள நாதுல்லா கணவாயும் வணிகத்திற்காக திறக்கப்படுவதால் இனி மேல் அது மூலமாகவும் சீன அரசு யாத்திரிகளை அனுமதிக்கும் வாய்ப்பு உள்ளது, அவ்வழியாக செல்லும் போது நடைப்பயணம் மிகவும் குறையும் ஆனால் ஜ“ப் பயணம் அதிகமாகும்.



நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு பாலம்Beautiful bridge and park across a river

எனவே இந்திய குடி மக்களுக்கு திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள தற்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன முதலாவது இந்திய அரசு நடத்தும் யாத்திரை, இந்த யாத்திரை லிபு கணவாய் வழியாக நடைபெறுகின்றது. 28 நாட்கள் அதில் சீனப்பகுதியில் 12 நாட்கள், மேலும் மூன்று நாட்கள் டெல்லியில் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாவிற்காக தேவைப்படும் ஆக மொத்தம் 31 நாட்கள். சுமார் 200 கி. மீ து‘ரம் நடைப்பயணம் அல்லது மட்டக் குதிரையில் (pony) பயணம் செய்ய வேண்டி வரும். கடினமான பயணம்தான் ஆனால் எம்பெருமான் செம்பவள மேனி வண்ணண், கரும் பண கச்சைக் கடவுள், நச்சரவாட்டிய நம்பன், தேசன் சிவலோகன், வெண்ணிறாடி, மை நீல கண்டன் அழைத்து உடல் நலக்கோளறு ஒன்றும் இல்லாமல் இருந்தால் அவனருளால் அருமையாக யாத்திரையை முடிக்கலாம்.




அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை ஊழியர்களுக்கும் இந்த அரசு நடத்தும் கைலாய யாத்திரை மேற்கொள்வதால், கிடைக்கும் மற்றுமொரு போனஸ் 30 நாள் தனி விடுப்பு. (Special casual leave) கைலாயம் žனாவில் வருவதால், வெளி நாடு செல்வதற்கான அனுமதி யாத்திரைக்கு முன்பே பெற வேண்டும்.



ஜனவரி மாத கடைசி அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் எல்லா நாளிதழ்களிலும் திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயது நிரம்பியவர்களும் 70 வயதை தாண்டாத இந்திய குடி மக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 15 ம் தேதி இறுதி நாள். விண்ணப்பப் படிவங்களை KMVN.org அல்லது kmyatra.org என்ற இணைய தலங்களிலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். இவ்விரண்டு இணைய தலங்களிலும் இந்திய அரசின் கைலாஷ்-மானசரோவர் பற்றிய முழு விவரங்களும் உங்களுக்கு கிடைக்கும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நலம் இருப்பவராய் இருத்தல் மிகவும் அவசியம்.




திருக்கயிலாய மலையின் சுற்றுப்பாதை 5000 மீட்டருக்கு மேல் உயரமானதால் அங்கு பிராண வாயு குறைவாக உள்ளது, மேலும் காற்றின் அழுத்தமும் உயரத்தில் செல்ல செல்ல குறைவு எனவே உடல் நலம் நன்றாக இருப்பது முக்கியம். குறிப்பாக, இதய நோய், ஆஸ்த்மா, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறு நீரக கோளாறு, வலிப்பு நோய் உள்ளவர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 16 குழுக்கள் அனுப்பபடுகின்றன. ஒவ்வோரு குழுவிலும் அதிக பட்சம் 40 பேர். இதிலே 44 பேர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் 19 பேர் பெண்கள், 25 பேர் ஆண்கள். 2006 வருடத்திலிருந்து இந்த எண்ணிக்கை அதிக பட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் மருத்துவ பரிசோதனையைப் பொறுத்து குழுவினரின் எண்ணிக்கை மாறுபடும். ஏனென்றால் žனப் பகுதியில் உள்ள தங்குமிடங்களில் 30 பேருக்கு மேல் தங்குவது கடினம் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.



முதல் குழு மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் கிளம்புகின்றது. பின் ஒவ்வொரு வாரமும் அடுத்த குழு கிளம்புகின்றது. 16வது குழு செப்டெம்பர் 15 தேதி செல்கின்றது. அடியேனுக்கு 2005ம் வருடத்திய 14ம் குழுவில் செல்லும் பாக்கியம் கிடைத்தது.எங்கள் யாத்திரை ஆகஸ்ட் மாதம் 15 நாள் தொடங்கி செப்டம்பர் மாதம் 12 தேதி வரை நடை பெற்றது. விண்ணப்பித்தவர்களிலிருந்து கணணி மூலம் யாத்திரை செல்பவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அந்த எம்பெருமான், கயிலாயபதி, உமாபதி, பசுபதி, சிவகாமிபதி, கௌரிபதி, அம்பிகாபதி தன்னுடைய இல்லத்திற்கு யார் யார் வரவேண்டும் என்று தானே முடிவு செய்கிறார். பின்னர் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனே தந்தி மூலம் இந்த செய்தி அறிவிக்கப்படுகின்றது. ஆனால் இப்போதைய உலகம் இன்டெர்னெட் உலகம் எனக்கு செய்தி கிடைத்தை இ-மெயில் மூலமாக.சென்னையிலுள்ள குமான் மண்டல அபிவிருத்தி கார்ப்பரேசன் (KMVN) மூலமாக எம்பெருமானுடய அழைப்பை பற்றிய செய்தி எனக்கு வந்தது. குமான் மண்டல அபிவிருத்திக் கழகம், உத்தராஞ்சல் அரசின் சுற்றுலா நிறுவனம் யாத்திரிகளின், உணவு, தங்கும் இடம், வாகன வசதி அனைத்துயும் கவனித்துக் கொள்கின்றது. இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ITBP) யாத்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றது.



இரண்டாவது வழி நேபாள தேசம் வழியாக செல்வதுஇவ்வழியில் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை யாத்திரை செய்யலாம். இதை தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படுகின்றன. இந்த பயணம் மொத்தம் 21 நாட்கள். செலவு கிட்டத்தட்ட ரூ50000/- முதல் 60000/- வரை ஆகின்றது. சென்னையிலிருந்து பெங்களுருக்கு சென்று அங்கிருந்து காத்மாண்டுவிற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்கின்றனர். இவ்யாத்திரையில் நடை பயணம் மிகவும் குறைவு ஆனால் கிரி வலத்தின் போது நடந்தோ அல்லது யாக் , மட்டக் குதிரை மூலமாகவே செல்ல வேண்டும். இந்த யாத்திரையில் உள்ள ஒரு குறைபாடு இது தான். திடீரென்று நடை பயணம் அதுவும் 5000 மீட்டர் உயரத்தில் மேற்கொள்ளும் போது பலருக்கு துன்பங்கள் ஏற்படுகின்றன. காத்மாண்டுவிலிருந்து லேண்ட குரூசியர் எனப்படும் ஜ“ப் வாகனத்தில், ஒரு ஜ“ப்பில் 4 பேர் கொண்ட குழுவினராக அனுப்புகின்றனர். உங்களுடைய சொந்த பொருட்கள், உணவுப்பொருட்கள், தங்கும் டெண்ட்(tent) முதலிய எல்லா பொருட்களும் உங்களுடனே லாரிகளில் செல்கின்றன. காத்மண்டுவிலிருந்து ஜங்மூ, நைலம், லாலங் கணவாய் (5124 மீ உயரம் ) , பேங்தாசே , இது வரை பிரம்மபுத்திரா நதியை ஒட்டியே யாத்திரை நடைபெறுகின்றது இப்போது நதியை படகு மூலமாக கடக்கின்றனர், ஜ“ப்களும் படகு மூலமாக அடுத்த கரைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் சாகாவிலிருந்து பிரயாங், மஜோம் கணவாய் (5370 மீ உயரம் ) வழியாக மானசரோவரின் ஹோரேவை (Hore) அடைகின்றனர். பின் மானசரோவரை வலம் வந்து கைலாய மலையின் டார்சென் முகாமை அடைந்து கயிலங்கிரிவலம் முடித்து பின் மானசரோவரை சுற்றிக்கொண்டு வந்த வழியாகவே காத்மண்டு அடைகின்றனர். இவ்வழியிலும் இயற்கையின் žற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது இவர்களும் நிலச்சரிவுகளை சந்திக்கின்றனர். ஜ“ப் செல்லும் வழி தார் சாலை அல்ல வெறும் கற்களைப்பரப்பி ஏற்படுத்தப்பட்ட சாலை, தூசியும் வழியில் அதிகம். தினமும் எலும்புகளை நொறுக்கும் (bone rattling) அந்தப் பாதையில் சுமார் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி வரும். முகம் முழுவதும் தூசி நிறையும் எனவே மூக்குக் கவசம் அணிவது அவசியம். žதோஷ்ண நிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் உள்ளது, நடைப்பயணம் மட்டும் இல்லை, அதுதான் பெரிய வித்தியாசம். மற்றபடி யாத்திரை நாட்கள் குறைவு, காத்மாண்டிலுள்ள பசுபதி நாதர் கோவில், பள்ளி கொண்ட பெருமாள் கோவில் முதலியவற்றை நீங்கள் இந்த யாத்திரையில் தரிசனம் செய்யலாம். ஆனால் ஓம் பர்வதம், மற்றும் உத்தராஞ்சல் மாநிலத்தின் பல ஸ்தலங்களை நீங்கள் தரிசிக்க முடியாது. காத்மாண்டுவில் உள்ள ECO Trek Pvt International Ltd என்ற நிறுவனம் யாத்திரைக்கான அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றது.


நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் நட்புப் பாலம்
Friendship bridge connecting Nepal and China

காத்மாண்டுவிலிருந்து ஹெலிகாப்டரிலும் செல்லும் வசதி உள்ளது. ஆனால் அதற்கு ஆகும் கட்டணம் மிகவும் அதிகம் (2 இலட்சத்திற்கும் மேலாகும்). 9 நாட்கள் மற்றும் 12 நாள் யாத்திரைகள் காத்மண்டுவிலிருந்து தனியார் சுற்றுலா நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன அவர்கள் காத்மாண்டுவிலிருந்து சிறு விமானங்கள் மூலமாக நேபாள்கஞ் சென்று அங்கிருந்து சிமிகோட்வரை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஹால்சாவரை அழைத்துச் செல்கின்றனர், பின்னர் ஜ“ப் (land cruisers) மூலமாக, லாசா வழியாக மனசரோவரை அடைகின்றனர். ஹெலிகாப்டரில் செல்வதை தவிர்க்கவும், ஏனென்றால் நமது உடம்பு அந்த உயர் நிலைக்கு (high altitude) தயாராகாது என்பதால். மெல்ல மெல்ல உயரத்தில் செல்வதுதான் நல்லது. எனவே தான் அரசு நடத்தும் யாத்திரையில் செல்வது நல்லது. எந்த வழியாக சென்றாலும் இந்த யாத்திரையை வெற்றிகரமாக முடிக்க மனம், உடல், தனம் மூன்றும் வேண்டும்.