Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 21 January 2015

ராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்

வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள். சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி

ஸ்ரீ ராமருக்கு முடி சூட்டும்போது கிரீடம் எடுத்துத் தரும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றிருந்தனர் என்பதை கம்பர் தன் ராமாயணத்தில் உணர்த்துகிறார்.

“அரியணை அனுமன் தாங்க அங்கதான் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவர் கவரி வீச
குறிசெரி குழலி வெண்ணெய்நல்லூர் சடையன் தன் மரபுலோர் கொடுக்க வாங்கி
வசிட்டன் புனைந்தான் மௌலி “



கொங்கர்களை கோசர் (கோசல தேச பின்னணி) என்றும் கங்கர் (கங்கா குலத்தவர்)  என்றும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ராமாயண காலத்தில் கொங்கதேசத்தில் பல கோயில்களும் சுனைகளும் தோன்றின. ராசிபுரம் ஸ்ரீஅழியாஇலங்கையம்மன் கோயில் (ஆயா கோயில்), பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணியம்மன் கோயில் போன்றவை இவ்வாறானதே. ஜடாயு முக்தி கொங்கம்-ஆந்திர எல்லையில் நிகழ்ந்தது.

ராமாயணத்தை தமிழுக்கு முதன்முதலில் மொழிபெயர்த்தவர் கம்பர். பாடுவித்தவர்  வெண்ணெய்நல்லூர் சடையப்ப கவுண்டர். ராமாயணம் தமிழுக்கு வந்த பின்னரே வெள்ளாள ராசாக்களாகிய சோழர்கள் அதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுக்க பரப்பினர். இன்றும் ராமாயணம் கம்போடியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்றும் ராமாயணம்  உள்ளது.

மோரூர் பட்டகாரரான நல்லதம்பிக் காங்கேயன் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயரைக் கொண்டு “தக்கை ராமாயணம்” என்னும் இசைக் காவியத்தை படைத்தார். மிகவும் புகழ் பெற்ற ராமாயண காவியம் இது. கம்ப ராமாயணத்தை பல மடங்கு சுருக்கியும் அதன் சுவையை பல மடங்கு பெருக்கியும் கொடுத்தது. தக்கை என்னும் இசைக் கருவியை கொண்டு பாடப்படுவதாகும். சங்ககிரி வரதராஜா பெருமாள் கோயிலில் அரங்கேற்றப் பட்டது.

ராமாயணம் நம் முன்னோர்களால் போற்றிப் பரப்பப்பட்ட காவியமாகும். ஒவ்வொரு ஊரிலும் அக்காலத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒழுக்கங்கள் ராமாயணம் மூலம் பால பாடமாக போதிக்கப்பட்டது.

கொங்கதேச மன்னர்கள் ராமரைப் போலவே ராமராஜ்ய ஆட்சி செய்யவே முற்பட்டதை வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. அதாவது, சொன்னசொல் தவறாமை, மூத்தோரை மதித்தல், பெற்றோர் சொல் தட்டாமை, குலகுருவை மதித்துப் போற்றல், குடிமக்களின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய துணிதல், மனுதர்மம் தவறாமை, சகோதரர்கள் ஒற்றுமை, சொத்து நாடு என எதையும் விட தர்மமே தலை என்று எண்ணுகிற மாண்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், அன்பே மையமான மனித உறவுகள், அதிகாரத்தின் மூலம் மக்களை கட்டுப் படுத்தாமல் அன்பு தர்மம் மூலம் மக்களே நல்வழியில் நடக்க வைக்கும் ஆட்சி முறை போன்றவை ராமராஜ்யத்துக்கும் கொங்கதேசத்து மன்னர்களின் ராஜ்யத்துக்கும் இருந்த ஒற்றுமைகளாகும்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பும்போது ஸ்ரீராமரை பிரிய முடியாத அவரது குடிமக்களும் அன்பர்களும் ஸ்ரீராமரோடு சேர்ந்து நதியில் இறங்கி வைகுண்டமடைவார்கள். அதே போல பல சம்பவங்கள் கொங்கதேச வரலாற்றில் நடந்துள்ளன. உதாரணமாக தலைய நாடு கன்னிவாடி பட்டக்காரர் முத்துசாமி கவுண்டர் மறைந்தபோது அவரது நாட்டில் வாழ்ந்த ஆண்டி, நாவிதர், பறையர் போன்றோர் எங்கள் கவுண்டரே மறைந்துவிட்டார் நாங்கள் மட்டும் ஏன் உயிரோடு இருக்கோணும் என்று அவர் சவத்தோடு சேர்ந்து தீயில் இறங்கி உயிர் விட்டனர். அந்த கோயில் இன்றளவும் ஏழுபடைக்கலக்காரி கோயில் என்று விளங்கி வருகிறது. இன்றும் நம் காணியாச்சி கோயில்கள் செல்லும்போது ஏதோ புராதன ராமராஜ்யத்துக்குள் நம் முன்னோர்களின் அரசாட்சிக்குள் செல்லும் உணர்வு ஏற்படுவது இயல்பு.

ராமாயணம் போன்ற தர்ம நூல்கள் ஒவ்வொரு கோயில் விழாவிலும் உபன்யாசங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அப்படி சேர்வதால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பிடிப்பும் குற்றமற்ற மனதும் இயல்பாகவே சமூகத்துக்குள் உண்டாகிறது. அப்படி இருந்த காரணத்தாலேயே கொங்கதேசம் தர்மத்திலும் மக்கள் ஒழுக்கத்திலும் பிற தேசங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.

தீரன் சின்னமலையின் முன்னோர்கள்

தீரன் சின்னமலையின் முன்னோர்கள்:
கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். ‘படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய முடிகிறது.
‘வளர் பயிரன்’, ‘நீடுபுகழ் பயிரன்’, ‘கியாதியுள பயிரன்’’என்று காணிப்பாடல்களில் புகழப்படுகின்றனர். ‘காராள ராமன்’’என்றும் புகழப்பட்டவர்கள் இக்குலத்தவர்கள். வேளாளரில் இராமனைப் போன்றவர்கள் என்பது அதன் பொருள்.
பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் உத்தமக்காமிண்டன் எனும் கௌரவப் பட்டப் பெயர் பெற்றது மிகவும் சுவையான ஒரு வீர வரலாற்றுச் செய்தியாகும். முன்பு சந்துரு சாதன பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கும் சோழநாட்டை ஆட்சிபுரிந்த உத்தமக்காச் சோழன் என்பவனுக்கும் பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த போரின் முனைகள் அனைத்திலும் சந்துரு சாதன பாண்டியன் கடும் தோல்வியடைந்தான். பாண்டியனின் படைத்தலைவர்கள் ஒருவன் பின் ஒருவராகச் சென்று சோழனிடம் தோற்று திரும்பினார்கள். இத்தோல்வியை அவமானம் எனக்கருதிய பாண்டிய மன்னன் பெரிதும் வருந்தித் துடித்தான். எதிரியைப் போர்க்களத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து நினைத்து துன்பக் கிணற்றில் வீழ்ந்தான். அப்பொழுது பாண்டியனின் படைத்தளபதியாக கொங்கு மண்ணைச் சேர்ந்த கரியான் என்கிற பிள்ளை சர்கரை முன்வந்து ‘அரசே நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களுக்காக எதையும் செய்யும் என் போன்ற படை வீரர்கள் தங்களிடம் இருக்கையில் தாங்கள் கவலைப்படுவது எதற்கு?
சோழர் படையை நான் வென்று, கொன்று, அடியோடு அழித்து வெற்றிவாகை சூடி வருகிறேன் என்று சூளுரைத்து கடைசியில் போர்க்களம் புறப்பட்டான். முதலிலில் மித்திரன் என்பானைக் கொண்டு சோழன் ஏவியிருந்த புதவலிலியைக் கரியான் அழித்தான். பின் கடும்போர் புரிந்து சோழனை வென்று அவனது சோழ நாட்டுக்கே அடித்துத் துரத்தினான். பாண்டியனின் படையில் தலைவனாக இருந்து பணியாற்றிய கரியான், உத்தமக்காச் சோழனைப் போரில் வென்றான்.
அப்போது கரியான் உறந்தைப் பாக்கம் என்னும் இடத்தில் குடியிருந்தான்.
இவனது வெற்றியை ‘உறந்தைப் பாக்கம் குடியிருந்தோர் – முன்னோர் உத்தம சோழனை வென்று வந்தார்’ ‘ஆறெல்லாஞ் செந்நீர் ரவனியெல்லாம் பல்பிணங்கள் தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு கன்னிக்கோன் ஏவலிலினாற் காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் ஓடும்பொழுது’’என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக்காச்சோழனை வென்றதால் “உத்தமக்காமிண்டன்””என்ற பட்டத்தைச் சூட்டி காரையூரை (ஈரோடு – காங்கேயத்திற்கு இடையில் உள்ள) தலைநகராகக் கொண்ட கொங்கு நாட்டிற்குத் தலைவனாக நியமித்தான். காரையூருக்குத் தென்கிழக்கில் உள்ள ஆனூர் என்ற ஊரில் அரண்மனையைக்கட்டி கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இந்த ஆனூர் அரண்மனைதான் இன்று பழைய கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
சோழனைத் தன் வீரத்தால் வென்றதற்காக கரியானுக்குப் பாண்டியன் முடிசூட்டினான். இவ்வீரச்செயலை,
‘கலிலிஇரு நூற்றதில் விளம்பியின் மீனத்தில் கார்புரந்த
மலிலிபுகழான கரியான் செயமாது வலிலிமையினால்
புலிலிதுசன் உத்தமக்காச் சோழன் ஏவிய பூதவலிலி
தொலைவுசெய்து எரிபுகச் செழியன்தன் னால்முடிசூடினனே’’
என்ற பழம்பாடல் விளக்குகிறது.
பாண்டியனின் வேப்ப மாலையையும், மீன்கொடியையும் பரிசாக கரியான் பெற்றான்.
இவ்வீர வெற்றியின் நினைவுப் பரிசாக கரியான் சர்க்கரைக்கு காரையூர், வள்ளியறச்சல், முத்தூர், மருதுறை கிராமங்களும், பாப்பினியில் பாதிக்கிராமமும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. பாண்டியனின் மகன்போல, வாரிசுகள் போல குமாரவர்க்கமாக பழைய கோட்டை மரபினர் கௌரவத்துடன் சிறப்பிக்கப்பட்டனர்.
உத்தமச் சோழன், உத்தமக்காச் சோழன் என்ற பட்டம் பெற்ற சோழனை வென்ற காரணத்தால் ‘உத்தமச் சோழன்’, ‘உத்த மக்காச் சோழன்’’என்ற பட்டப் பெயரை கரியான் பெற்றான். பின்னர் இப்பட்டம் ‘உத்தம சோழக்காமிண்டன்’’என்று மாறியதை நத்தக்காடையூர் செயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டால் அறிய முடிகிறது. காலப்போக்கில் இப்பட்டத்தில் உள்ள சோழன் என்ற பெயர் மறைந்து ‘உத்தமக்காமிண்டன்’ என்று மாறிவிட்டது. காமிண்டன் என்றால் காப்பாற்றுவதில் வல்லவன் என்று பொருள். இக்காமிண்டன் என்ற பெயரே பின்பு கவுண்டன் என்று மருவியது.
கொங்குநாடு பல ஆண்டுகளாக சோழ வேந்தர் ஆட்சியில் இருந்தது. ஆடல், பாடல்களிலும் கணிகையர் வலையிலும் வீழ்ந்து கிடந்த பிற்காலச் சோழ அரசர்களால் சோழர் ஆட்சி நலிவுற்ற காலகட்டத்தில் பாண்டிய அரசன் ஜடாவர்மன் படைத்தளபதியாக கொங்கு வேளாளரில் பயிரகுல காரையூர் சர்க்கரை என்ற துடிப்பான இளைஞன் ஒருவன் இருந்தான். அக்காலகட்டத்தில் சோழர் படைவீரர்கள் அடிக்கொருமுறை கொங்குமண்டலத்தில் படையெடுத்துப் புகுந்துகொண்டு கொள்ளையடித்தும், கொலைசெய்தும் கொங்குநாட்டு மக்களுக்குப் பெரும் துன்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தனர். கொதித்தெழுந்து இதைத்தடுத்து நிறுத்த காரையூர் சர்க்கரை குதித்தோடி முன்வந்தான். பாண்டிய மன்னனின் அனுமதியுடன் சோழமன்னனை நேரில் கண்டு “அரசே, தங்களது முன்னோர்கள் பாதுகாத்துவந்த இக்கொங்குநாட்டை உங்கள் படைவீரர்கள் கொள்ளையிடுகிறார்கள். இது தருமம் ஆகாது, இது நீதியாகாது. அன்புகூர்ந்து, கருணை கூர்ந்து கொள்ளையடிக்கும் படைகளை கொங்கு மண்ணிற்குள் நுழையவிடாமல் திரும்பிப் போக வேண்டும் என்று ஆணையிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். இதை சோழ மன்னன் ஏற்றுக்கொள்ளாமல் கடும்கோபம் கொண்டான்.
இனிப்பொறுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணி தனது படையுடன் சென்று சோழர் படையை அடியோடு விரட்டித் துரத்தித் துரத்தி அடித்தான். கி.பி. 1251ஆம் ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது. வெற்றி பெற்றுத் திரும்பிய தனது தளபதியைப் பாராட்டி வாழ்த்தி பாண்டிய மன்னர் “நல்ல சேனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் அளித்துப் பாராட்டினான். இம்மரபினர் பழைய கோட்டையில் இன்றும் ‘நல்ல சேனாதிபதி’ என்ற பட்டத்துடனும், பெரும்புகழுடனும், மக்கள் செல்வாக்குடனும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வரலாற்றுச் செய்தியை மிகவும் இனிமையான பழம்பாடலில் இருந்து தெளிவாக அறியலாம்.
கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கொங்கு 24 நாடுகளுக்கும் தலைவராக இந்த சர்க்கரை மரபினர் பட்டம் சூட்டப்பட்டனர். அதிலிருந்து சர்க்கரை மரபினருக்கு “பட்டக்காரர்””என்றும் பெயர் வழக்கத்திற்கு வந்தது.
24 நாடுகளிலும் புகழ்கொண்ட கொற்றவேல் சர்க்கரை அரண்மனையில் அன்னக்கொடியும், மேழிக்கொடியும் கட்டி ஆட்சி அதிகாரம் செலுத்தியவர். ஆனூரிலிலிருந்த பழையகோட்டை பட்டக்காரர் மரபினர் தற்பொழுது நொய்யல் நதிக்கரையில் உள்ள அரண்மனையைக் கட்டிக் குடியேறியது இவர் காலத்தில் தான். அவர் பட்டாபிடேகப் பாடல் அவர் பெருமையையும், புகழையும் காட்டுகிறது. நத்தக்காடையூர் செயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் பெரும் திருப்பணி செய்தவர். அரும்பாடுபட்டு அக்கோயிலில் சிவன் தீபத்தம்பத்தை நிறுவியர். இத்தீபத்தம்பத்தின் தென்மேற்குத் தூணில் இவர் உருவச்சிலை உள்ளது. இவர் தலைசிறந்த கவிஞர். இக்கோயில் அம்மன் நல்லமங்கை மீது இவர் ஒரு சதகம் பாடியுள்ளார். அச்சதகத்தின் சில பாடல்கள் கிடைத்துள்ளன.
சடையபெருமாள், அருணாச்சல வாத்தியார், சம்புலிலிங்க ஒதுவார், கார்மேகக் கவிஞர் போன்றவர்கள் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர் மிகச்சிறந்த பக்தர். பழநியில் இவர் மடம் இன்றும் உள்ளது. சர்க்கரை மடம் என்று அதற்குப் பெயர். ஒரே நாளில் குதிரைச் சவாரி செய்து கொங்கேழு சிவாலய தரிசனம் செய்த பெருமை உடையவர். கருவூர், வெஞ்சமாங்கூடல், கொடுமுடி, அவினாசி, பவானி, திருச்செங்கோடு, திருமுருகன் பூண்டி என்பன கொங்கேழு தலங்களாகும்.
கால்நடை மருத்துவம் இவைகளில் மிகவும் கைதேர்ந்தவர், பயிர்காப்பு மருத்துவர். மிகச்சிறந்த தத்துவஞானி, சமரசநோக்கம் உடையவர். நாட்டுப்பற்று உடையவர். ‘கொங்கதன் மண்ணே சுகம் தரும்’ என்று பாடியுள்ளார். ஆனூர் சர்க்கரை மரபில் வந்த கொற்றவேல் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் என்பவர் 1708-இல் பட்டத்துக்கு வந்தார். அப்பட்டக்காரரான இக்கொற்றவேல் சக்கரைக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் குழந்தைப் பாக்கியம் வாய்க்கவில்லை. செல்வச் செழிப்புடன் வாழ்ந்த கொற்றவேல் மன்றாடியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் பழநிக்கு சஷ்டி திருநாளுக்குச் சென்று பழையகோட்டை திரும்பி வரும்பொழுது வரும் வழியில் செலாம்பாளையம் என்ற ஊர் வழியாக வரநேரிட்டது. அவ்வூரில் தனது பங்காளிகள் முறையாகிய பயிர குலத்தவர்கள் வாழ்ந்துவந்தனர். தம் உறவினர் ஒருவர் வீட்டில் இரண்டு சிறுவர்களை நேரில் கண்டார். சுறுசுறுப்பும், துடிப்பும், புத்திக்கூர்மையும் மிக்க அச்சிறுவர் இருவரையும் சுவீகாரம் (தத்து எடுப்பதாக) செய்துகொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வேண்டிய அளவு செல்வமும் நிலமும் அளிக்கப்பட்டன. ஆகவே, நீண்ட நாளைக்குப் பிறகு பயிரங்குலத்தைச் சேர்ந்த தன் உறவினர் ஒருவரின் வீட்டில் உள்ள இரு சிறுவர்களை தத்து எடுத்துக்கொண்டார். தத்தெடுத்த தனது பங்காளி வீட்டுப் பிள்ளைகளான, ஆண் மக்கள் இருவரின் வயதுகள் முறையே 5, 3 ஆகும். அப்படி சுவீகாரம் செய்து பழையகோட்டைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கு அரண்மனை மரபுப்படி முறையாக மூத்தவனுக்கு சேனாதிபதி என்றும் இளையவனுக்கு இரத்தினம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. செல்வச்செழிப்புடன், சீரும் சிறப்புமாக இருவரும் வளர்க்கப்பட்டனர். மூத்தவர் சேனாதிபதியை மூத்த மனைவியும், இளையவர் இரத்தினத்தை இளைய மனைவியும் மிகுந்த அன்புகாட்டிச் செல்லமாக வளர்த்துவந்தனர். துவக்கக்கல்வியை படித்து முடித்தபின் அரண்மனைப் புலவர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்றுவந்தனர். அரண்மனைப் பிள்ளைகளுக்குண்டான வீர, தீர விளையாட்டுக்களிலும் தேர்ச்சிப் பெற்றனர்.
பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு முறைப்படி, மூத்தவர் சேனாபதிக்கு காங்கயம் செங்கண்ண குல பல்லவராயர் குடும்பத்திலும், இளையவர் இரத்தினத்திற்கு பெரிய ஆரியப்பட்டி ஒதாளன் குலத்து பத்துகுடி உடையாக் கவுண்டர் குடும்பத்திலும் பெண் எடுத்து மணம் செய்விக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பின்னர் அரண்மனை மரபுப்படி மூத்தவரான சேனாபதிக்கு “நல்ல சேனாபதி சக்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார்””என்ற பட்டம் சூட்டப்பட்டு பழைய கோட்டை அரண்மனைக்கு 20ஆம் பட்டக்காரராக 08.02.1731-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பட்டக்காரர் மரபில் மூத்தமகனுக்குத்தான் நாடாளும் உரிமை. அதன்படி சின்னமலையின் பெரியப்பா மூத்தவரான சேனாபதி ஆட்சியை ஏற்று அரண்மனையில் தங்கினார்.
பழையகோட்டை அரண்மனையில் மூத்த மகனுக்கே பட்டக்காரராக, சமுதாயத் தலைவராகத் தகுதியுண்டு. அரண்மனை அதிகாரமும், நிர்வாகமும், சொத்துக்களும் மூத்தவருக்கே உரியது. இளையவர்கள் வாழ்க்கைக்கேற்ற பொன், பொருள், பூமி முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு அரண்மனைக் கிராமங்கள் ஏதேனும் ஒன்றிற்கு குடியேறி விடுவது அரண்மனை மரபு.
அல்லது இளையவர்கள் பக்கத்தில் தாங்கள் விரும்பும் ஊரிலும், தங்களுக்குப் பிடித்த வசதியுடைய ஏதேனும் ஒரு ஊரில் குடியேறிவிடுவர். சிலர் தமது விருப்பப்படி தூரத்தில் உள்ள ஊர்களுக்கும் இடம்பெயர்ந்து செல்வதுண்டு. அப்படிக் குடியேறிய சிலர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, ஆலத்தூர் ஆகிய வட்டங்களில் “மன்னடியார்”’பட்டம் பெற்று இன்றும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் தமது தமிழகத் தொடர்பை இன்றும் கூட பெருமையாக நினைவு கூறுகிறார்கள்.
அதன்படி, சேனாபதி பழையகோட்டை அரண்மனைக்கு பட்டக்காரராக முடி சூடியதும், இளைய மகனான இரத்தினம் (தீரன் சின்னமலையின் தந்தை) தனக்கு தேவையான பொன், பொருள், முதலானவற்றைப் பெற்றுக் கொண்டு தன் மனைவி பெரியாத்தாளுடன், அரண்மனைக் கிராமமான காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் குடியேறினார். காங்கேய நாட்டில் மன்றாடியார் மரபினுக்கு ஆனூர், பழையகோட்டை, நத்தக்காடையூர் போல மேலப்பாளையமும் உரிய ஊராகும். ஆனூருக்கு மேற்கே இருந்தமையால் பாளையம் அது மேலப்பாளையமாயிற்று.
மேலப்பாளையம் இலக்கிய வழக்கில் மேலைநகர் என்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றுள்ள மேலப்பாளையம் என்னும் ஊர் முன்பு இவ்விடத்தில் இல்லை. ஒரு பர்லாங்கு தொலைவில் கிழக்கில் கோட்டைக்காடு, ஊர்த்தோட்டம், நடுத்தோணி, குட்டைக்காடு என்றுள்ள பகுதிகளில்தான் பழைய ஊர் இருந்தது. கீழ்பவானி வாய்க்காலால் ஊர் இடம்பெயர்ந்து கொஞ்சம் மேற்கே வந்துவிட்டது.
மிகவும் இனிமையான செயல்கள் செய்பவர்கள் சர்க்கரை என்று பெயர் பெற்றனர். பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் எல்லாப் பட்டக்காரர்களுக்கும் சர்க்கரை என்ற சிறப்புப் பெயர் இன்றளவிலும் அவர்களது பெயரின் கடைசியில் இணைந்து வருகின்றது.
சர்க்கரை என்ற பெயர் தலைவர்களின் பெயரோடு வருவதால் முன்னாளில் பழையகோட்டையில் சர்க்கரைக்குச் சர்க்கரை என்று பெயரை யாரும் சொல்லுவதில்லை. ‘இனிப்புப் பொடி’ போன்ற வேறு பெயர்களையே சொல்லுவர். ஒருசிலர் சக்கரை என்றும் கூறுவர்.
இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியருக்கு 5 ஆண்மக்களும் ஒரு பெண் மகளும் பிறந்தனர். தமிழ் தாது வருடம் சித்திரை மாதம் 9-ஆம் நாள் 17.04. 1756 -ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில், பழைய கோட்டை பட்டக்காரர் மரபில், ஆனூர் அரண்மனையில் இரத்தின சர்க்கரை கவுண்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவன் தீர்த்தகிரி. மூத்த சகோதரர் கொளந்தசாமி, இளைய சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி. ஒரே தங்கை பருவதம் ஆகியோர் உடன் பிறந்தவர்களாவர்.
சகோதரர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டு விவசாயத்தைக் கவனித்து வந்தனர். தீர்த்தகிரி, பெரியதம்பி, கிலேதார் மூவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்கள் மூவரும் தேசத்தையும், கொங்கு நாட்டையும் மணந்ததனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.
மூத்தவன் குழந்தைசாமி தாய் மாமனின் மகள் கெம்பாயியை மணம் கொண்டார். கடைசி தம்பியான குட்டிசாமிக்கு காங்கயம் சிதம்பர பல்லவராயரின் மகள் பகவதியை மணம் முடித்தார்கள். மற்றுமுள்ள மகன்கள் மூவரும் நாடு, நகரம், ஊர், உலகம் என்று சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
இவர்களின் ஒரே தங்கையான பருவதத்தை உலகபுரம் சாத்தந்தை குலத்தைச் சேர்ந்த பழனியப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இளம் பருவத்தில் தீர்த்தகிரியை தம்பாக்கவுண்டர், சின்னக்கவுண்டர் என்ற பெயராலும் செல்லமாக அழைப்பார். தீர்த்தகிரியின் தம்பிகளில் தம்பி என்பவர் மூத்த தம்பியாவார். எனவே அவர் பெரிய தம்பி என்று அழைக்கப்பட்டார். கிலேதார் என்றால் கோட்டைத் தலைவர் என்பது பெயர்.
கொங்கு நாட்டின் 19-ஆவது பட்டக்காரரான கொற்றைவேல் சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் 1708-இல் இருந்து 1731 வரை சிறப்பாக நிர்வாகம் நடத்தி நாட்டை ஆண்டார். இவர்தான் சின்னமலையின் தாத்தா. பழைய கோட்டைப் பட்டக்காரர் தம் மரபில் 19ஆம் பட்டக்காரராக விளங்கியவர் கொற்றவேல் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் ஆவார்.
காங்கயம் பகுதியில் நத்தக்காடையூர் அருகே உள்ள ஆனூர் அரண்மனைதான் இன்று பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகிறது. 5 அண்ணன்களை கொண்ட தீரனின் தங்கை பருவதம் தீரனின் மீதே அதிக பாசம் கொண்டிருந்தார்.

Friday, 11 July 2014

எச்சரிக்கைச் செய்தி..!

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்..
எச்சரிக்கைச் செய்தி..!
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'
என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...
ஆம்...!
அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்..
நன்றாக யோசித்துப் பாருங்கள்...
ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..!
தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்
இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..
ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..
(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..
அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...
அப்போதுதான் அவருக்கு உறைத்தது..
# Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..
அதன்பிறகு, உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும்மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது..
இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால்,
இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..
இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..
இதற்கு, நமது # பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது' (friendship request), அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..
ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..
அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால்,
# உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..
இதுதான் மிகச்சிறந்தவழி..
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..
இது பெண்களுக்கு மட்டுமல்ல..
எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..
பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு, இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
நன்றி - (சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)